டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் நான் தெரிந்து கொள்ள விரும்பிய விஷயங்களில் IPAC பிரசாந்த் கிஷோர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு என்னமாதிரி image makeover செய்து விடுவார் என்பதும் ஒன்று! ஏனெனில் அரவிந்த் கேஜ்ரிவாலுடைய இமேஜ் என்னைப் பொறுத்தவரை, மிகவும் கேலிக்குரியதாகவே எப்போதும் இருந்திருக்கிறது. அன்னா ஹஸாரேவுடன் கூட இருந்து தன் மீது அதிகவெளிச்சம் படுகிற மாதிரி பார்த்துக் கொண்ட நாட்களில் இருந்தே அவரை ஒரு சீரியசான அரசியல்வாதியாகப் பார்க்க முடிந்ததில்லை. ஒரு டிராமா பார்ட்டியாகவே தான் இப்போதும் அரவிந்த் கேஜ்ரிவால், மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்துவருவதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
தேர்தல் முடிவுகளில் வாக்காளர் மனோநிலை எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் அதிக விவரங்கள் தேவைப்படுவதில், ஆம் ஆத்மி கட்சியின் ரிப்பீட் வெற்றியைப் பற்றி என்னென்ன முதற்கட்ட கருத்து, விவாதங்கள் வருகிறது என்பதைப் பொறுமையாக கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
வீடியோ 25 நிமிடம்
உள்ளூர் அரசியல் விமரிசகர் ரவீந்திரன் துரைசாமி ஒருவர்தான் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்கிற மாதிரி எடுத்துக்கொண்டு தன்னுடைய கருத்தைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். தெளிவான பதில் இருந்ததா என்றால் கொஞ்சமும் இல்லை!
இந்தப்புள்ளிவிவரம் ஆனந்த் ரங்கநாதனுடைய ட்வீட்டர் செய்தியில் இருந்து எடுக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் தளத்தில் சரிபார்க்க வேண்டும்.
இப்படி உள்ளூர் விமரிசகரே 25 நிமிடம் பீட்டர் விடுவாரென்றால் காங்கிரஸ் சார்புள்ள சேகர் குப்தா எப்படி வானத்துக்கும் பூமிக்குமாகத் தவ்விக் குதிப்பார்?
வீடியோ 39 நிமிடம்
சேகர் குப்தா சொல்வதில் சிலபகுதிகளுடன் உடன்பட முடிந்தாலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை. மாநிலத்தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கையோ மக்களவைத் தேர்தல் அடுத்துவரும்போது அவரது வெற்றி வாய்ப்பையோ பாதிக்காது என்றும் சொல்வதில், சொல்ல விடுபட்ட அல்லது நாம் புரிந்து கொள்ளத் தவறும் வேறுசங்கதிகளும் இருக்கின்றன.
இந்திய அரசியல்களம், அதில் எத்தனை குற்றம் குறை சொல்லமுடிந்தாலும், ஆச்சரியமூட்டும் பல அம்சங்களையும் கொண்டது என்பதாலேயே அரசியல் என்னை மிக அதிகமாக ஈர்க்கிறது. எழுத வைக்கிறது.
அரசியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை விடுங்கள்! இங்கே என்ன காரணம் என்று இருவர் ட்வீட்டரில் ஆராய்கிறார்கள்! இதற்கு என்ன சொல்வீர்கள்?
மீண்டும் சந்திப்போம்.


