Showing posts with label தொடரும் விவாதம். Show all posts
Showing posts with label தொடரும் விவாதம். Show all posts

Tuesday, February 25, 2020

இன்று பார்த்தவை! #சுவாரசியமானவிவாதங்கள் #கார்டூன்கள்

டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்ததனால் இந்தியாவுக்கு என்ன கிடைக்கப்போகிறது? கேள்வி என்னமோ சிம்பிளாகத்தான் தோன்றும்! ஆனால் இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருப்பதும், கொஞ்சம் கவனமாகக் கேட்பதுடன் சுயமாக சரிதானா என டோதித்துப் பார்க்கவும் தெரியாவிட்டால் வண்டிவண்டியாக காதில் பூவை ஏற்றிவிடுவார்கள் என்பதையும் எச்சரிக்கையாக முதலிலேயே சொல்லி விடுகிறேன்!


முதலில் சேகர் குப்தா! சூட்டோடு சூடாக ஒரு 33 நிமிட வீடியோவை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் நேரலையில் ஒளிபரப்பி முடித்திருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் வருகையினால் இந்திய அமெரிக்க உறவுகளில்  மாற்றம் வந்துவிட்டதா என்று ஒரு அசட்டுத்தனமான கேள்வி வேறு! ராஜீய உறவுகள் இந்தமாதிரியான அரசு முறைப்பயணங்களால் மட்டுமே தீர்மானிக்கப் படுவதில்லை என்பது அனுபவமுள்ள பத்திரிகையாளருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! இங்கே பூடகமாகச் சொல்ல வருகிற விஷயத்தை ஆகர் படேல் என்கிற Amnesty Indiaவின் தலைவர், இதுமாதிரி NGOக்கள் வெளிநாட்டு நன்கொடைகளில் கொழுத்துக் கொண்டிருந்ததற்கு நரேந்திர மோடி ஆப்பு வைத்ததில் செம காண்டுடன்  தொடர்ந்து கடித்துக் குதறிக் கொண்டிருப்பவர்தான்! நேற்றைக்கே காங்கிரசின் National Herald  இதழில் வாந்தியெடுத்துவிட்டார்!

The last thing is that Trump may or may not be president at this time next year. The US elections are in November, and it is possible that we may have a Democrat in the White House. If that is the case, then we will have to write off all the personalised investment in the Trump-Modi chemistry. A Democrat in the White House will mean greater scrutiny of our actions in Kashmir and over the CAA and National Register controversy. The best thing that Modi can hope for in this visit is that he is able to mobilise Indians in America to vote Republican and try and help Trump return to power. இப்படி ஆரூடம் வேறு!

காந்தி பிறந்த மண்ணில் வன்முறையா? சோனியா கண்டனம் என்கிறது செய்தி. ஒரிஜினல் காந்தியைப் பற்றிக் கொஞ்சமும் தெரியாத டூப்ளிகேட்டுகள் இப்படிப் பொங்குவதைப் பார்க்கையில் சிரிப்பதன்றி வேறென்னதான் செய்ய முடியுமாம்?

      
சதீஷ் ஆசார்யாவுக்கும் கவலை வந்துவிட்டது! தூரிகை ட்ரம்பை நக்கல் செய்வதாக நினைத்துக் கொண்டு ஒரிஜினல் காந்தியை நக்கலடிக்கிற மாதிரி! சரிதானா?

  
தேசப்பிதா என்று ஒரிஜினல் காந்திக்கு அபிமானிகள் தான் பெயர்வைத்தார்கள்! மாமா நேரு என்பதையும்! இந்திரா,சோனியா இருவருக்கும் அன்னை பட்டம் சூட்டியவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை ட்ரம்ப் கேட்பதாக சதீஷ் ஆசார்யா வரைந்திருப்பது சும்மா வெறும் கொழுப்பல்ல! அசல் சோனியா காங்கிரசு கொழுப்பு! சரிதானே!

   
ஆதன் தமிழ் மாதேஷுக்கு தமிழக அரசியலே புரியாது! ரவீந்திரன் துரைசாமியிடம் தொடர்ந்து குட்டு வாங்கிக் கொண்டும் இருக்கிறவருக்கு மோடி-ட்ரம்ப் உறவால் இந்தியாவிற்கு பலன் இருக்கா?  இந்தக்கேள்விக்கு பானு கோம்ஸ் பொறுமையாகப் பதில் சொன்னால் மட்டும் புரிந்துவிடப் போகிறதா? வீடியோ 21 நிமிடம் 

ஆக டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்தார். மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றார். இந்தியக் கடற்படை வலிமையைப் பெருக்கும் 24 ரோமியோ MH 60, மற்றும் 6 அப்பாச்சே ஹெலிகாப்டர்களை 21600 கோடிரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதுடன் 3 புரிந்துணர்வ் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கின்றன. H1B விசாபிரச்சினை உட்பட விரிவான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடக்கும் என்ற அளவோடு ட்ரம்ப் விஜயம் நிறைவுபெற்று இன்றிரவே ஊர் திரும்புகிறார்.

மீண்டும் சந்திப்போம். 

Monday, February 17, 2020

வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது? -2

வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது? ஒரு பத்துநாட்களுக்கு முன்னால் இந்தப் பக்கங்களில் எழுதியது ஞாபகமிருக்கிறதா? இடது சாரிகள் சொல்லிவைத்தமாதிரி உலகின் பெரும்பாலான நாடுகளில், இந்தியாவிலும் தேய்ந்து வழக்கொழிந்து போய்க்கொண்டிருப்பதும், வலது சாரிகள் குறிப்பாக வலதுசாரி தேசியவாதம் எல்லா இடங்களிலும் வளர்ந்துகொண்டிருப்பதும் தற்செயலானது அல்ல. வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது என்ற கேள்வியைக் கொஞ்சம் ஆழமாகப் பரிசீலிப்பது, இடதுசாரிகள் எல்லாக் காலங்களிலும்  மாற்றம் முன்னேற்றத்துக்கான அடையாளமாக இருப்பதில்லை என்பதோடு வலதுசாரி தேசியவாதம் என்பது இடதுசாரிகள் கூவுவதுபோல ஃபாசிச பூச்சாண்டியுமல்ல என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.


இந்த 77 நிமிட விவாதத்தைப் பொறுமையாகப் பார்க்க முடியுமானால், வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது என்ற கேள்வியை இந்தியச் சூழ்நிலையோடு பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.

பதிவுகள் எழுதுவது ச்ச்சும்மா ஜாலிக்கு, ஜஸ்ட் டைம் பாஸ், இப்படி அரட்டை மடமாக மாற்றுவதில் எனக்கு சிறிதும் வல்லமை இருந்ததில்லை. இங்கே எழுதுவது கொஞ்சம் உரத்த சிந்தனையாகத்தான் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!

கேள்வியின் பரிமாணமும், உதவியாகக் கொடுத்திருக்கும் வீடியோவும் பெரியது என்பதால் பதிவை சுருக்கமாக இங்கே முடித்துக்கொண்டு .....

மீண்டும் சந்திப்போம்.       

 

Thursday, February 13, 2020

தெளிவாகப்பேசும் பானு கோம்ஸ்! தெளிவில்லாத தந்தி டிவி!

பிரசாந்த் கிஷோருடைய உத்தி டில்லி தேர்தலில் எடுபடவில்லையா? என்று அந்தப்பக்கங்களில் இரண்டு நாட்களுக்கு முன்னால் எழுதிய பதிவு, சில பயனுள்ள பின்னூட்ட விவாதமாக ஆரம்பித்ததில் ஒரு மனநிறைவு! பதிவுகள் வெறும் அரட்டைகளாக குறுகிப் போய்விடாமல், வாசிப்பதில்  கொஞ்சம் பயனுள்ள உரையாடலாகவும் இருக்கவேண்டும் என்கிற என் ஆசை எப்போதாவது இதுமாதிரி நடந்து விடும்!


அரவிந்த் கெஜ்ரிவால் இந்துத்துவ அரசியலை கையில் எடுக்கிறார் -பானு கோம்ஸ் இதுதான் யூட்யூப் தளத்தில் இருக்கும் தலைப்பு! ஆனால் மேலே பார்த்தால் பாஜக செஞ்ச தப்பு,  - பானுகோம்ஸ் என்றிருப்பதன் உள்நோக்கம் என்னவென்று புரிந்துகொள்ள முடியாதா என்ன? அதை விடுங்கள்! ஆனால் பானு கோம்ஸ் இந்த 39 நிமிட நேர்காணலில் டில்லி தேர்தல் முடிவுகளைக் குறித்து மிகத்தெளிவாகத் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். நண்பர் ஜோதி ஜிக்குப் பரிந்துரை செய்யத்தகுந்த வீடியோ இது. யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவுக்கு வந்த கமென்டுகளில் விஜய் சந்திரன் என்பவர் பிஜேபி தன்னுடைய ஆதரவு வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வருவதில் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டது என்கிறார். 8 தொகுதிகளில் :100 ஓட்டுக்கு குறைவான வித்தியாசத்தில், 19 தொகுதிகளில் :100 - 1,000 ஓட்டு வித்தியாசத்தில் 9 தொகுதிகளில் :1,000 - 2,000 ஓட்டு  வித்தியாசத்தில், ஆக மொத்தம் 36 (8+19+9) தொகுதிகளில் 2,000 ஓட்டுகளுக்கு குறைவான வித்தியாசத்தில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது என்கிற அவரது ஆதங்கம், பின்னூட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் புள்ளிவிவரம் தவறானது என்று சொல்கிறார்கள் இங்கே 

 


இன்னொரு விவாதம், தேசியக்கட்சிகள் வெர்சஸ் மாநிலக்கட்சிகள் என்ற தலைப்பில் தந்திடிவி ஆயுத எழுத்து நிகழ்ச்சியை நேற்று நடத்தியிருக்கிறது.ஒரு சரியான தலைப்புதான்! ஆனால் பங்கேற்றவர்கள் தலைப்பை சரியாகப்புரிந்து கொண்டுதான் விவாதம் செய்தார்களா என்பது சந்தேகம் தான்! வீடியோ 42 நிமிடம். முதல்வரியில் சுட்டி கொடுத்திருக்கிற பதிவில் நண்பர் பந்துவுக்கு பதிலாகச் சொன்னது இது: 


டில்லித் தேர்தல் முடிவுகளை தேசியக்கட்சி வெர்சஸ் மாநிலக்கட்சி என்று குறுக்கிப்பார்ப்பதற்கு முன்னால் இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்னென்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டால், நடப்பு அரசியலின் கோளாறுகளை உள்ளது உள்ளபடி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். கொஞ்சம் பார்க்கலாமா? 1962களில் தேசியப்பிரச்சினைகளில் மட்டுமே அக்கறை காட்டிய நேரு மாதிரியே மாநிலங்களிலும் ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசுகளும் செயல்பட்டதற்கான எதிர்வினையாக மாநிலக் கட்சிகள் உருவாகி வளர்ந்தன. ஆக மாநிலக்கட்சிகள் ஒரு தேசியப்பார்வை இல்லாமலேயே வளர்ந்தன என்று பொதுமைப்படுத்தலாம். தேசியக்கட்சிகள் , மாநிலக்கட்சிகளுடைய வருகைக்குப் பின்னராவது மாநிலப் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தினவா என்றால் இல்லை. இந்திரா காலத்தில், மாநிலத்தில் நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குத் தோள்கொடு என்பதாகக் குறுகிப் போனது. 1977 இல் இந்திராவின் சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜனதா கட்சி என்று ஒன்றிணைந்த மாநிலக் கட்சிகள், ஒரு சரியான தேசியப்பார்வை இல்லாத ஒரே காரணத்தால் சிதறி, 1980 இல் மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வர உதவுகிற மாதிரி ஜனதா கட்சி பரிசோதனை தோல்வியடைந்தது.

அப்புறம் மாநிலக்கட்சியாக ஆட்சியைப் பிடித்தவை என்ன சாதித்தன என்பதைக் கொஞ்சம் பட்டியலிட்டால், சாதனைகள் கொஞ்சம்! வேதனைகள் நிறைய என்று பார்க்க வேண்டும்! உதாரணத்துக்கு, இங்கே இலவசங்களை வாரியிறைப்பதற்கு முன்னால் அதற்கான நிதியாதாரங்களை எப்படித் திரட்டுகிறார்கள் என்பதைப்பற்றி, அவர்களும் கவலைப்படுவதில்லை, இலவசங்களில் மயங்குகிற ஜனங்களும் கவலைப்படுவதில்லை. கருணாநிதி 3000-3500 பெறுமானமுள்ள இலவச டிவி கொடுத்தார். சுமங்கலி கேபிள் விஷன் வழியாக மாறன் குடும்பத்தினர் வருடாவருடம் 2400 வரை கேபிள் கட்டணமாக சம்பாதித்துக் கொண்டார்களே! அதற்கு பதிலாக வீட்டுக்கொரு கழிப்பறை கட்டித்தர எந்தமாநிலக்கட்சியாவது யோசித்ததுண்டா? இலவசங்களுக்கு பதிலாக கிராமத்தில் சோலார் மின்விளக்கு, பொதுக் கழிப்பிடங்கள், குடிநீர்வசதி இவைகளைப் படிப்படியாகச் செய்திருக்கலாமே!, செய்தார்களா? இப்படி யோசித்துப் பாருங்களேன்!

இலவச மின்சாரம் கொடுத்தார் கேஜ்ரிவால்! சந்தோஷம்! ஆனால் மின்சாரம் இலவசமாகக் கிடைப்பதில்லையே! யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ஜனங்களைத் தயார்ப்படுத்த வேண்டியது ஒரு அரசின் கடமை. கேஜ்ரிவால் அதைச் செய்தாரா? ஒரு மாநிலக் கட்சியாக இருப்பது, பொறுப்பில்லாத்தனத்துக்கு கொடுக்கப்படும் லைசன்சாகவே இந்தியச்சூழலில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறதா?

கொஞ்சம் விரிவாகப்பேச வேண்டிய விஷயம் இது.           

மீண்டும் சந்திப்போம்.  

Monday, February 3, 2020

அண்ணா வழியில் இன்றும் நடப்பது அதிமுகவா? திமுகவா?

அண்ணா வழியில் இன்றும் நடப்பது அதிமுகவா? திமுகவா? இப்படி ஒருதலைப்பில் நியூஸ் 7 சேனலில் 
விவாத அக்கப்போர் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. சி என் அண்ணாதுரைக்கு அப்படி என்ன கொள்கை, வழி என்றெல்லாம் இருந்ததாக சும்மா கூவிக் கொண்டிருக்கிறார்கள்? இதுமாதிரி நிறைய போலித்தனங்களை காலமே கழித்துவிடும் என்பதில் ஈவெரா அண்ணாதுரை போன்ற அரசியல் பிம்பங்கள் காலாவதியாகிப் போய்விட்டன என்பது இன்னமும் இவர்களுக்கெல்லாம் தெரியாதா? தெரியாத மாதிரி நடிக்கிறார்களா?


     
என்னதான் இணையத்தில் அதிகநேரம் இயங்கி கொண்டே இருந்தாலும் இப்படி ஒரு மாத இதழ் வெளிவருகிற செய்தி எனக்கு இன்றைக்குத் தான் தெரியவந்தது. அட்டைப்பட நையாண்டி பற்றித் தனியாக எதையும் சொல்வதாக இல்லை! ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி அரசியல் செய்த மாதிரியே இனிமேலும் செய்தால், முதல்வர் நாற்காலி எப்போதுமே கிடைக்காது என்ற ஞானம் வந்து விட்டதால் தானே பாவம், இசுடாலினுக்கும், பிரசாந்த் கிஷோர் மாதிரியான data manipulation செய்யத் தெரிந்த வித்தைக்காரரிடம் போய், ஒண்ட வேண்டி வந்ததே! 


CAA குறித்த இந்தப்பகிர்வைப் படித்ததும், Robert Frost  கவிதை ஒன்றை இங்கே பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது. மேலே உள்ள பகிர்வு இன்னும் செப்பம் செய்யப் படவேண்டும்.


முதலில் ஆரம்பித்த தலைப்புக்கே வருவோம்! அண்ணா வழியில் இன்றும் நடப்பது அதிமுகவா? திமுகவா? 

இரண்டுகட்சிகளும் இல்லை! அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தும் ஆம் ஆத்மி கட்சி தான்!

எதனால் சொல்கிறீர்கள்?

அண்ணா (ஹஸாரே)விடம் இருந்து பிரிந்து தனிக்க!ட்சி ஆரம்பித்தபிறகு அண்ணாவை அவர் தொந்தரவு செய்வதே இல்லை! அண்ணாவுக்கு நாமம் போடுவதும் இல்லை! அதனால் தான்!

மீண்டும் சந்திப்போம்.        

Sunday, January 26, 2020

தொடரும் விவாதங்கள்! #அரசியல் இன்று!

குடியுரிமை, குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றித் தேவை இல்லாத அச்சத்தை வெளிப்படுத்துகிற சாக்கில், அரசுக்கு எதிரான கலகங்கள், போராட்டங்களைக் கிளப்பி வீட்டுக் குளிர்காய்கிறவர்கள் யார் யாரென்று அனேகமாக எல்லோருக்குமே இப்போது புரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் கூட கடந்த 15 முதல் டில்லியில் ஷாஹீன் பாக், காப்பியடித்து 24 முதல் சென்னையில் வண்ணாரப்பேட்டை என்று ஒரு குறிப்பிட்ட மத்தத்தினரைக் கூட்டி, போராட்டங்கள் செயற்கையாகத் தொடர வைக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறோம். அதனால் குடியுரிமைச் சட்டத்திருத்தம் அதில் உள்ளதும் இல்லாததும் என இந்த 31 நிமிட வீடியோவில் திருமதி நிர்மலா சீதாராமன் விளக்கமாகச் சொல்கிறார்.

     
திரும்பத்திரும்ப பொய்யான தகவல்கள், அச்சத்தைத் தூண்டுகிறவிதத்தில் பரப்பப் படுகிற விஷத்துக்கு மாற்று, இதுமாதிரிப் பொறுமையாக விளக்கிச் சொல்வது மட்டும் தான்! அதனால், இன்னொருமுறை கேட்டுப் புரிந்து கொள்வதில் தவறே இல்லை! 


ஒரு மார்க்சிஸ்ட்டாக இருந்த முந்தைய நாட்களில், ஜி . ராமகிருஷ்ணனை, சந்தித்த தருணங்கள் சில உண்டு. உதறியெறிந்துவிட்டு வெளியே வந்தபிறகு, இன்றும் கூட என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம் ஒன்று இது! எமெர்ஜென்சி நாட்களுக்குப் பிறகு, ஜனதா கட்சி பரிசோதனை முயற்சி தோற்றுப்போனபின்னால் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவ்வளவு கேவலமாக வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது எதனால் என்பது இன்னமும் நெருடலாக இருக்கிற கேள்வி! மதன் ரவிச்சந்திரன் போன்ற அதிக அனுபவம் இல்லாதவொரு ஊடகக்காரரை  70 வயது கடந்த தோழர் ஜி.ஆர். சமாளிக்கமுடியாமல் தடுமாறுகிற பரிதாபத்தை இந்த 30 நிமிட விவாதத்தில் பார்த்தேன். மார்க்சீயத்தை கூட  மறந்துவிட்டு ஈவெராவை தூக்கிப்பிடிக்க வேண்டிய நிலைமைக்கு மார்க்சிஸ்டுகள் போனது ஏன்? நிறைய விஷயங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல்  ஜி.ஆர் தடுமாறுகிற மாதிரியே டோலர்கள் நிலைமையும் ஆகிப்போனதோ? 

 
                  
இங்கே மார்க்சிஸ்டுகள் மாதிரி இடையில் புகுந்து ஈவெரா ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளாமல், ஆரம்ப நாட்களிலிருந்தே ஈவெரா ஆதரவாளராகவும், பெரியார் என்றொரு திரைப்படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்து வெளியிட்டவருமான வேலு பிரபாகரன் இந்த 40 நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார்? சமீபத்தில் ஆதன் தளத்தில் பார்த்த உருப்படியான நேர்காணல் இது தானென்று அடித்துச் சொல்லுவேன்! இரண்டே நிமிட மறுப்பில், சும்மா எதையோ கொளுத்திப் போட்டுவிட்டு ரஜனிகாந்த் அடுத்த சினிமா பற்றி யோசிக்கப்போய் விட்டார். ரஜனி மீது விழவேண்டிய வெளிச்சம் தமிழருவி மணியன் மீது இன்றைக்கு, கொஞ்சம் அதிகப் படியாகவேவிழுந்து கொண்டிருக்கிறது! மணியனை விட கவனிக்கப்பட வேண்டிய நபர் வேலுபிரபாகரன் தான்! ஒரு பாமரத்தனமான ஈவெரா அபிமானம் தெரிந்தாலும் ரஜனி பேசியது சரிதான் என்று வீரமணி அண்ட் கோவை தோலுரிக்கிறார்! நெறியாளர் மாதேஷுக்கு ஐயா இப்படி சேம் சைட் கோல் போடுகிறாரே என்று அதீத அவஸ்தை இருப்பது செம  காமெடி என்பதற்காகவே இதைப் பார்க்கலாம்!

இத்தனை ஆண்டுகள் கடந்தும், பூணூல் என்பது பிராமணர்கள் மட்டுமே அணிவது என்ற மூடநம்பிக்கையில் பலரைத் திளைக்க வைத்திருப்பது ஒன்று மட்டுமே ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் அளப்பரிய சாதனை! பெரியார் மண்ணு; பெரியாரின் சீடர்களின் மண்டையில் இருப்பதும் மண்ணு மாத்திரமே!   

                                                      
சேட்டைக்காரன் பதிவர் ஏன் பொங்குகிறார்? ஒன்றும் இல்லை! வேலைவெட்டி இல்லாத தமிழேண்டா க்ரூப் டில்லி குடியரசுதின விழாவில் தமிழக அரசு சார்பில் பங்குகொண்ட ஊர்தியில் அய்யனார் சிலை இருந்தது! அய்யனார் சிலைக்கு எப்படிப்பூணூல் அணிவிக்கலாம் என்று கிளம்பிவிட்டார்கள்! அவ்வளவுதான்!😀😁😻


இங்கே அது ஒரு கனா காலம் 2013 ஏப்ரல் பதிவில் கூட கங்கைகொண்ட சோழபுரம் போகிறவழியில் அவர் பார்த்த அய்யனாருக்கும் கூடப் பூணூல் இருக்கிறது!

மீண்டும் சந்திப்போம்.           

Friday, January 24, 2020

இலக்கியம் அப்புறம்! அரசியல் பார்வையைத் தொடரலாமா?

முந்தின பதிவில் சங்க இலக்கியம் பேசியது, ஒரு புத்தக அறிமுகம் எப்படி இருந்தது என யாராவது வந்து சொல்வார்கள் என்று ஒருநாள் காத்திருந்தேன். எதையும் காணோம்! வழக்கமான அரசியல் பார்வையைத் தொடரலாமா?  ஆதன் தளத்தில் ஒரு வித்தியாசமான நேர்காணல்!


இந்த 37 நிமிடவிவாதத்தில் முதல் ஆச்சரியம், பங்கு கொண்டவருடைய பெயர் ஸ்ரீராம் சேஷாத்ரி! இப்படி ஒரு அரசியல் விமரிசகர் இருப்பதே எனக்கு இந்த விவாதத்தைப் பார்த்தபிறகுதான் தெரிய வந்தது! அதைவிட, மிகுந்த ஆச்சரியம் அவர் ரஜனி பேச்சு  குறித்து கொஞ்சம் விவரத்தோடு பேசிய விதம்! நெறியாளர் மாதேஷ் மற்ற சேனல்களை போல. தோன்றினாலும் அடிக்கடி குறுக்கிடுவதில்லை என்று எனக்குத்  தோன்றினாலும், யூட்யூப் தளத்தில் ஒரு கமென்ட் வித்தியாசமாக!  

ramesh karthik  13 hours ago (edited)

மாதேஷ் மூன்று முக்கிய குறிப்புகளை நீ தடுத்து விட்டாய்.

 முதலாவது குறிப்பு பெரியாரின் இந்து மத எதிர்ப்பை பற்றி அவர் பேசினார் அதை நீ தடுத்து பேச்சை திசை திருப்பி விட்டாய்.

 இரண்டாவது குறிப்பு இந்து மதம் என்றாலே சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு தோற்றம் அதை ரஜினி உடைக்க நினைக்கிறார் அதைப்பற்றி பேச வரும்போது அதையும் நீ தடுத்து வேறு ஒரு கேள்வியை மடத்தனமாக கேட்டு விட்டாய்.

மூன்றாவது அவர் எல்லோருக்குமான அரசியல் எல்லோருக்குமான ஆன்மீகம் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் 3 மாதங்களிலும் அவரவர் தெய்வங்களை வணங்கலாம் அதைப் பற்றி விளக்கம் தரும்போது அதையும் நீ தடுத்து விட்டாய்.

பிறகு எவ்வாறு ஒரு கருத்தை ஒரு விருந்தினர் உன்னிடம் தெளிவுபடுத்த முடியும்?.

 எல்லாத்தையும் நீ முழுமையாக கேட்காமல் பிஜேபி, பிஜேபி , பிஜேபி  என்று ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் நீ மடை கட்டினால் எவ்வாறு பேசுவது?.

பொதுவாக யூட்யூப் தளத்தில் கமென்ட் பார்த்தீர்கள் என்றால், வெறுப்பைக் கக்கும் அநாகரிகமான வார்த்தைகளில் இருக்கும், அவைகளுக்கு கொஞ்சம் எதிர்க்கருத்தும் இருக்கும். திரௌபதி பட ட்ரெய்லருக்கு வந்த 24000+ கமென்டுகளில் 99.5% ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் இருந்ததை, ஒரு விதிவிலக்காக எடுத்துக் கொண்டுபார்த்தால் ஒரு அரசியல் விவாதத்தை முழுதாகப் பார்த்துவிட்டு, இப்படி ஒரு தெளிவான கமென்ட் செய்திருப்பதை பார்ப்பது இதுவே முதல் முறை என்பது இந்த வீடியோ விவாதத்தில் மிகப்பெரிய வித்தியாசம், சிறப்பு! ஸ்ரீராம் சேஷாத்ரி, இதர சேனல்களில் பார்த்திராத சங்கதிகளையும் இதில் பேசியிருக்கிறார் என்பதால் பார்க்கும்படி நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன்.  

 வீடியோ 27 நிமிடம் 

தமிழருவி மணியன்தான் ரஜனிக்கு குருவா? அப்படி என்றால் பிஜேபியை எதற்காக ரஜனியோடு சம்பந்தப் படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்? இந்து தமிழ் திசை எதற்காக ரஜனியை அரசியலுக்கு வராமல் தடுக்க இந்த  அச்சுறுத்தல் என்று தலைப்புக் கொடுத்து, என்ன சொல்ல வருகிறார்கள்? 

இந்த இரு விவாதங்களையும் முழுமையாகப் பார்க்கும் படி கேட்டுக்கொள்ளத்தான் என்னால் முடியும். ஆனால் பார்ப்பதும் நடப்பு என்ன என்பதை யோசித்து முடிவு செய்வதும் உங்களிடம்தான் இருக்கிறது. என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்கலாமா? கூடாதா?  

மீண்டும் சந்திப்போம்.                      

Friday, January 10, 2020

தொடரும் விவாதங்கள்! பார்த்துவிட்டு என்ன செய்கிறோம்?

சிலபல விஷயங்களின் மீதான விவாதங்கள் முழு உண்மையை வெளிக்கொண்டு வருகிற மாதிரி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிட்டுப்போய் விட முடியாது. எந்தவொரு விவாதமும், ஏதோவொரு உண்மையைத் தன்னையறியாமலேயே வெளிக்கொண்டு வந்துவிடுவதைக் கவனிக்கிறோமா? குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான கலகங்கள், போராட்டங்களை எதிர்க்கட்சிகள் ஏதோவொரு வகையில் மீண்டும் மீண்டும் கையிலெடுப்பதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் பொதுவேலை நிறுத்தம் /பாரத் பந்த் என்ற கூத்தையும் நடத்தினார்கள். அதன்மீது பொதுஜனங்களுடைய பார்வை என்னவாக இருக்கிறது?


நேற்றுபொது வேலைநிறுத்தமாமே! பார்த்தீர்களா? என்ன நடந்ததாம்? என்று இன்னொரு பக்கத்தில் புதிய தலைமுறை டிவி விவாதத்தின் காணொளியைக் கொடுத்து என்னுடைய கருத்தாகவும் சிலவிஷயங்கள் சொல்லியிருந்தேன். இங்கே அதே விஷயத்தை மதன் ரவிச்சந்திரன் கையிலெடுத்து ஒரு 50 நிமிட விவாதத்தை நேற்று நடத்தியிருக்கிறார். விவாதத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்! விவாதம் எனக்கென்னவோ பாரத்பந்த் என்ற கேலிக்கூத்தை யாருமே ஒருபொருட்டாக எடுத்துக் கொண்டு அதைப்பற்றி விவாதித்த மாதிரித் தெரியவில்லை. பொதுவேலைநிறுத்தத்தின் impact அவ்வளவுதானா? 

திரௌபதி பட ட்ரெயிலர் தமிழகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரெயிலர் வெளியானது ஜனவரி 3 அன்றுதான் என்றாலும் இங்கே சிலதரப்புகளில் பரபரப்பையும், வேறு சில தரப்புகளில் எதிர்க்க வேண்டும் என்ற நினைப்பையும் தூண்டியிருக்கிறது. திராவிடர் கழகத்தின் கி வீரமணி இந்தப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று சொல்லியிருப்பதாக ஒரு யூட்யூப் வீடியோவின் தலைப்பில் பார்த்தேன். உண்மையோ பொய்யோ இருந்து விட்டுப் போகட்டும்.


இந்த 22 நிமிட வீடியோவில் திரைப்படத்தின் இயக்குனர் G மோகனும் இசையமைப்பாளர் ஜுபினும்  பேசுவது அக்டோபர் கடைசியிலே வெளியாகிவிட்டது. இயக்குனர் மிகத்தெளிவாக சென்னையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது அது என்ன என்பதைச் சொன்னபிறகும் கூட எதற்காக  இத்தனை வீண் சர்ச்சைகள் என்பது தெரியவில்லை.

இயக்குனர் கதைக்களம் என்ன என்று சொல்வது 
10நிமிட வீடியோவில் 


சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளிப்பட்ட ராயபுரம் ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் நடந்த போலித்திருமண மோசடி பற்றிய 


மீண்டும் சந்திப்போம் 

Monday, November 4, 2019

வெட்டி அக்கப்போர்களால் ஆனது தமிழக அரசியல்!

அரசியலை வைத்து மட்டுமே பதிவுகள் எழுதுவதில் உள்ள சிக்கலே அப்படி எழுதுகிற ஒவ்வொரு தருணத்திலும் சுவாரசியமான பரபரப்புச் செய்தி எதுவுமே இருக்காது என்பதுதான்! அதனால்தானோ என்னவோ தமிழக அரசியல்வாதிகள் குறிப்பாகத் திராவிட அரசியல்வாதிகள் கோமாளித்தனங்கள் செய்வதிலேயே இல்லாத பரபரப்பையும் செய்திகளையும் தொடர்ந்து உருவாக்க முயற்சிக்கிறார்களோ?


பிஜேபிகாரர்கள்  திருவள்ளுவருக்கு காவியாடை அணிவித்து விட்டார்கள் என்று கொதித்தெழுந்தார் இசுடாலின்! ட்வீட்டரில்தான்! அதையே அவர் பேசிய வீடியோவாக வெளியிட்டு  இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!


ஒழுங்கால் ஓரே ஒரு திருக்குறளைப் பிழையில்லாமல் சொன்னால் நாங்கள் போட்ட பதிவை நீக்கி விடுவோம் என்கிறது பிஜேபி! ஆக, இசுடாலினுடைய கோமாளித் தனங்கள் தான் இங்கே அரசியல், பரபரப்பு, செய்திகள் என்றே போய்க் கொண்டிருந்தால், தமிழக அரசியலைப் பற்றி என்னதான் எழுதுவது?


பாவம்! ஐம்பது வருடங்களுக்கும் மேலாக திராவிட இயக்கம் செய்து வந்த நச்சுக் கலப்பு அம்பலமாகி நிற்கிற வேளை இது!  இசுடாலின் கோமாளியாகி நிற்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?  

 

வெட்டி அக்கப்போர்களால் ஆனது தமிழக அரசியல் என்பது அப்பட்டமாகத் தெரிந்த விஷயம்தான்! திருச்சி வேலுச்சாமி ராஜீவ் காண்டி கொலைவழக்கு பற்றிப் பேசுகிற authority ஆகியிருப்பது இன்னொரு விதமான அக்கப்போர். ரங்கராஜ் பாண்டே நடத்துகிற இந்த விவாதம் அல்லது அக்கப்போர் வீடியோ 51 நிமிடம்.

கேள்வியே இதுபோன்ற வெட்டி அக்கப்போர் அரசியல் நடத்துகிறவர்களை எப்போது புறக்கணிக்கக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?

குறைந்தபட்சமாக எப்போது உங்களை இந்தக் கேள்வி கேட்டுக்கொள்ளத் தயாராகப் போகிறீர்கள்?

மீண்டும் சந்திப்போம்.  

Friday, August 9, 2019

பிரதமர் உரை! இருவேறு விவாதங்கள்! புரிவது என்ன?

நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் ஆர்டிகிள் 370 விஷயத்தின் மீது மக்களுக்கு ஒரு 40 நிமிட உரையை நிகழ்த்தியிருக்கிறார். புதியதலைமுறை டிவி ஒளிபரப்பிய  நேரலை உரையை ஒரு காரணத்துக்காக  இங்கே பகிர்கிறேன்.


எனக்கு ஹிந்தி தெரியாது  என்பதால், ஆங்கில சேனல்களில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் போடுவார்கள், ஆங்கில செய்தி ஊடகங்களில் என்ன செய்தி ரிப்போர்ட் ஆகியிருக்கிறது என்று தேடித்தேடி, புரிந்துகொள்ள முயற்சி செய்வது எனக்குப் பழகிப்போய்விட்டது. ஆனால் சில முக்கியமான விஷயங்களை தமிழ் சேனல்கள் புரிந்து கொள்கிற, விவாதம் நடத்துகிற லட்சணத்தை வைத்துப் புரிந்து கொள்ள முடியாது என்பது தெரிந்த விஷயம் தான்!


நேற்றிரவே அவசர அவசரமாக புதியதலைமுறை ஒளிபரப்பிய நேர்பட பேசு நிகழ்ச்சியை இன்று பார்த்தேன். வீடியோ 35 திமுக தரப்பில் பேசிய வழக்கறிஞர் சரவணன், திராவிடங்களுக்கே உரித்தான அலட்சியம், அரைகுறைப் புரிதல், திரித்துப் பேசுதல் இவை தாண்டி விஷயம் புரிந்து கொண்டு பேசவில்லை. பத்திரிகையாளர் லட்சுமணன் பிரதமர் உரையைப் பற்றி பேசாமல் ஆர்டிகிள் 370 காலாவதியானவிதத்தைப் பற்றியே பேசுகிறார். நேரு இந்திரா காலத்தில் காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் சட்டப்படிதான் பல விஷயங்களை செய்தார்களா என்ற முன்னுதாரணத்தைப் பற்றி பேசவில்லை. சுமந்த் சி ராமன் அவருடைய சந்தேகங்களைக் கேட்பதற்காகவே வந்தார் போல இருந்தது.    பானு கோம்ஸ் ஒருவர் கொஞ்சம் புரிந்து பேச முயன்றார் என்றாலும் அவரைப் பேச விட்டார்களா அல்லது பிரதமர் என்ன பேசினார் என்பதன் மீதுதான் பேசினார்களா? எனக்கு இந்த நிகழ்ச்சியில் எதை நேர்பட பேசினார்கள் என்ற குழப்பம்  இன்னமும் தீரவில்லை. ஆனால் உள்ளூர்ச் சேனல்களின் யோக்கியதை, உள்ளரசியல் தெரிந்ததனால் புதியதலைமுறை விவாதங்களை எல்லாம்  சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.


The Prnt தளத்தின் சேகர் குப்தா, இவரை அடிக்கடி இந்தப் பக்கம் ஒரு reference ஆக எடுத்துக் கொள்வதன் பின்னணியில் இவர் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்ள முடியா விட்டாலும், இவரைப்  புறக்கணிக்க முடியாத அளவுக்கு, ஊடகத்துறை அனுபவமும், ஒரு செய்தியை எப்படிப்பகுத்துப் பார்க்க வேண்டும் என்கிற தெளிவும் இருப்பதுதான்!

இந்தப் பதினான்கு நிமிட வீடியோவில் பிரதமரின் 40 நிமிட உரையை நான்கு விதமாக ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்காக என்று மிகுந்த கவனத்துடன் இருந்ததாகச் சொல்கிறார். முதலாவது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு! தெளிவாக ஆர்டிகிள் 370 சிறப்பு அந்தஸ்து போனது போனதுதான் என்று சொல்லிவிட்டு, அந்த ஆர்டிகிள் காஷ்மீர் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார். அடுத்து நாட்டுமக்களுக்கு! ஆர்டிகிள் 370 வெறும் ஆரம்பம் தான், முடிவெடுப்பதற்குத் தயங்கித் தயங்கியே  தேங்கிப்போன நிறைய விஷயங்களில் இனிமேல் ஒரு தெளிவான செயல்கள் முடிவுகளுக்குத் தயாராக இருங்கள் என்கிற மாதிரி! மூன்றாவது பாகிஸ்தானுக்கு! இனி வரும் நாட்களில் இந்திய அரசின் அணுகுமுறை என்னமாதிரி இருக்கும் என்பதைக் கோடி காட்டுவதாக! காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுடன் பேசுவதற்கு எதுவுமில்லை, சிம்லா ஒப்பந்தம், இஸ்லாமாபாத் தீர்மானம் என்பதெல்லாம் பழங்கதை என்று தெளிவுபடுத்துகிற மாதிரி! சர்வதேச சமூகத்துக்கு ஒரு செய்தியும் நேற்றைய உரையில் இருக்கிறது. 6 பில்லியன் டாலர் கடனுக்காக நாட்டின் பொருளாதாரத்தையே அடகு வைத்திருக்கிற பாகிஸ்தானா? அல்லது வலுவான பொருளாதார அடித்தளத்துடன் நம்பகத் தன்மையுடன் இருக்கிற இந்தியாவா என்று (soverign bond வெளியீட்டுக்கு இருக்கிற ஆதரவைத்தொட்டு) முடிவுசெய்து கொள்ளுங்கள் என்கிற செய்தி. இப்படி நாலுவிதமான ஆடியன்சுக்கு நாலுவிதமான செய்தி இருப்பதை பிரதமர் உரையைக் கேட்டதும் புரிந்துகொள்ள முடிந்ததா? நம்மூர் சேனல்களை நம்பினால் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? 

மேலே மூன்று வீடியோக்கள்! முதலாவது பிரதமர் பேசியது! அடுத்து உள்ளூர்ச் சேனல் எதுபொருளோ அதைக் கோட்டை விட்டு மற்ற ஆகாவரிகளைப் பேசியது. Reading inbetween the lines என்று பேச்சின் பின்னணியில் என்ன செய்தி யார் யாருக்குச் சொல்லப்பட்டது என்பதை கிரகித்துக் கொண்டு சொல்வது கடைசி வீடியோவில்.

ரங்கராஜ் பாண்டே ஒரு பேட்டியில் சொன்னது போல செய்திகள் எங்கிருந்து கிளம்புகின்றன அல்லது கிளப்பிவிடப் படுகின்றன என்பதை புரிந்து கொள்ள செய்திகளின் வேரைப் பிடித்துப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். 

மீண்டும் சந்திப்போம்.
                             
                

Tuesday, June 11, 2019

இன்றைக்கிருக்கும் காங்கிரஸ் ...! ஒருபார்வை!

தமிழிசை ஒரு குடும்ப அக்கப்போரில் சிக்கினார் என்ற செய்திக்காகவே முந்தைய பதிவைக் கொஞ்சம் அதிக மக்கள் பார்த்திருக்கிறார்கள் போல. ஆனால் அதில் சந்தோஷப் படுவதற்கென்ன இருக்கிறது? தமிழிசை மகன் பிஜேபி ஆதரவாளரோ, உறுப்பினரோ இல்லை  என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இங்கே ஊடகங்களின் உருட்டி விளையாடுகிற பொம்மையாகத்தான் தமிழிசை இன்னமும் இருக்கிறார். இதில் பெருமைப்பட்டுக் கொள்ள, யாருக்கு  என்ன தகுதி இருக்கிறது?


இந்த உப்புப்பெறாத விஷயத்தை ஊதிப்பெரிதாக்குகிற ஊடகங்கள் வயநாடு தொகுதியில் ராகுல் காண்டி முஸ்லிம் வாக்குகளில் மட்டும்தான் ஜெயித்தார் என்று அசாதுதீன் ஒவைசி உடைத்துச் சொல்லியிருப்பதைப் பேசுவார்களா என்று கேளுங்களேன்!

  
கொஞ்சம் சுவாரசியமான அக்கப்போர் என்பதற்கு மேல் இதில் புதிதாக, ஏற்கெனெவே தெரியாத விஷயம் ஏதுமில்லை.

இதைவிட  கொஞ்சம் அர்த்தமுள்ள, நடப்பு விவகாரங்களைத் தெரிந்து கொள்கிற மாதிரி ஒரு விவாதம் கரண் தாப்பருடன்!  


இங்கே காங்கிரஸ் சார்புடன் பேசுகிற சித்தார்த்  வரதராஜன் (The Wire) முதல் ஹிந்துஸ்தான் டைம்சின் வினோத் ஷர்மா, அப்புறம் கர்நாடக காங்கிரசின் வீரப்ப மொய்லி எல்லோருமாக அலசு அல்சென்று அலசி.......? என்ன முடிவுக்கு வந்தார்களாம்?  தானோ பிரியங்காவோ காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டோம் என்று ராகுல் காண்டி சொல்வது எப்படியிருக்கிறதாம்? கரண் தாப்பர் சொல்கிற மாதிரி சோனியாG & வாரிசுகள் தான் பிரச்சினையே! சோனியாG & வாரிசுகள் தான் தீர்வே என்றா?

காலாவதியாகிப்போய்விட்ட காங்கிரஸ் பிராண்டை  எவர் வந்தாலும் தூக்கிச்சுமக்க முடியாது, புத்துயிர் தரவும் முடியாது என்பது ஏனோ விவாதம் செய்கிற எவருக்கும் உறைக்கவே மாட்டேன் என்கிறது!  

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஒரிஜினல் காந்தி இருந்த காங்கிரஸ் இல்லை இன்றைக்கிருப்பது!

ஒரிஜினல் காந்தியால் பட்டத்து இளவரசர் போலவே நடத்தப பட்ட ஜவஹர்லால் நேரு, ஏதோ போனால்போகிறதென்று மாற்றுக் கருத்தையும் சகித்துக் கொண்டமாதிரி,பாமர ஜனங்களுக்கு அரசியலில் என்ன நடக்கிறதென்றே தெரிய விடாமல் வைத்திருந்த நேரு காலத்துக் காங்கிரஸ் கூட இல்லை இன்றைக்கிருப்பது!

எதிர்க்கருத்தா? குரல்வளையை நெறிப்பேனென்று மமதையோடு கட்சியை உடைத்து, துதிபாடிகளின் கும்பல் தான் இண்டிகேட் என்றும், தேர்தல் ஆணையத்தில் சில மாய்மாலங்களை செய்து தாங்களே இந்திய தேசிய காங்கிரஸ் என்று ஆக்கிக் கொண்ட இந்திரா காலத்துக் காங்கிரஸ் கூட இல்லை இன்றைக்கிருப்பது!

இந்திரா மரணத்துக்குப் பின்னால் அரியணை ஏற்றப்பட்டு பிரதமரானாலும், மனைவியும் அவரது உறவினர்களும் சேர்ந்து bofors ஊழல் என்று ஆரம்பித்ததைக் கண்டும்காணாமல் இருந்த ராஜீவ் காண்டி காலத்துக் காங்கிரஸ் கூட இல்லை இன்றைக்கிருப்பது!

நரசிம்மராவைத் துரத்த சீதாராம் கேசரியைப் பயன்படுத்திக் கொண்டு பின்னர் அவரையும் தூக்கியெறிந்துவிட்டுத் தானே காங்கிரஸ் தலைவராய் 18 வருடங்கள்  அமர்ந்து கொண்ட சோனியாG காங்கிரசின் எச்சம் தான் இன்றைக்கிருப்பது.  

மகனைத் தலைவராக்கி 2 வருடங்கள் தானாகிறது. அதற்குள் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது என்றால் இன்றைக்கிருக்கும் காங்கிரசின் இறுதிநாட்கள் நெருங்கிவிட்டன என்று சொல்லாமல் வேறென்ன சொல்வீர்களாம்?

மீண்டும் சந்திப்போம்.                   

Friday, June 7, 2019

மாரிதாஸ்! எஸ்வி சேகர்! K T ராகவன்! சவால் விடுகிறார்கள்!

சமீபகாலங்களில் என்னை மிகவும் வியப்படைய வைத்த பகிர்வுகள், காணொளிகள் என்று பார்க்கும் போது தொழில்முறை ஊடகக்காரராகவோ, முழுநேர அரசியல்வாதியாகவோ இல்லாத திரு M மாரிதாஸ் முதலிடம் பெறுகிறார். ஒரு இயக்கமாகச் செய்திருக்க வேண்டிய வேலையை ஒரு சிறுகுழுவுடன் சேர்ந்து செய்து காட்டியிருக்கிறார் என்பது சிறப்பு.ஒரு ஆசிரியராக இருப்பது அவருடைய கூடுதல் பலம்.
  

வெறும் காமெடியனாக இருந்த நாட்களில் எஸ் வி சேகர் ஊடக வெளிச்சத்துக்காக அலைந்த மாதிரித் தெரியவில்லை. ஆனால் அரசியலில் நுழைந்த பிறகு ஊடகவெளிச்சம் வேண்டியிருக்கிறதே!


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தனியாகவே ஒரு யூட்யூப் சேனல் ஆரம்பித்தால் போதுமே!  SVES50 TVஎன்று ஒன்றைத்தனியாகவே ஆரம்பித்துவிட்டார் போல!


K T ராகவன்! பிஜேபியின் மாநிலச் செயலாளர்களில் ஒருவர்! தொலைக்காட்சி விவாதங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக அதே நேரம் வலுவாகத் தன் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறவர். தமிழகத்தில் கண்ணியமான ஒரு அரசியல்வாதி. நீட் தேர்வைக் குறித்து இசுடாலினுக்கு ஒரு பகிரங்கமான சவால் விடுகிறார். தமிழிசைக்கு அடுத்து பிஜேபியின் மாநிலத்து தலைமைக்கு வரக்கூடுமென்று முகநூல் வட்டாரங்களில் ஒரு தகவல் உலாவருகிறது.  

திரு ராகவன் பிஜேபியின் மாநிலத்  தலைமைப் பொறுப்புக்கு வருவாரேயானால் அது வரவேற்கப்பட வேண்டிய நல்ல செய்திதான்! 
 
அரசியல் தெரிந்துகொள்ள, அரசியல் பழக உதவியாக இருக்கக் கூடிய மூன்று காணொளிகள் இவை என்றே நினைக்கிறேன்.  

மீண்டும் சந்திப்போம்.


அடுத்தவீடு ஆந்திரா! YSRCPயின் நாடகத்தனமான அரசியல்!  வாசித்தீர்களா? என்ன நினைக்கிறீர்கள்? 
   

Wednesday, June 5, 2019

காஷ்மீர்! பிரச்சினையும் அதற்கான தீர்வும்!

முந்தைய இருபதிவுகளில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக தொகுதி சீரமைப்பு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்கை எடுத்துச் செயல்பட இருப்பதாக வெளிவந்த செய்திகளைக் கோடி காட்டியிருந்தேன். அதுதொடர்பான இரு காணொளிகள் இங்கே! காணொளிகளைப் பார்த்துவிட்டு, முடிந்தால் முந்தைய பதிவுகளில் சொல்லப்பட்டதென்ன என்பதைப் பார்த்து விடுங்கள்! தொகுதிகள் Delimitation செய்யப்படலாம் என்ற வெறும் தகவலே, காஷ்மீரி அரசியல்வாதிகளுக்கு கிலியைக் கொடுத்திருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.  



முதலில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இதுவிஷயமாக என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேட்கலாம்.  


இந்த வீடியோவில் delimitation process தொடங்குவதற்கு முன் இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் முன்னால் பிறப்பித்திருந்த உத்தரவை மாற்றக்கோரி மனுச்செய்ய வேண்டி வரும் என்பதில் இருந்து சங்கிலித்தொடராக நிறைய நடைமுறைகளைக் கடந்தாகவேண்டும் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். முந்தைய பதிவில் ஒமர் அப்துல்லாவின் முகநூல் பகிர்வில் என்ன சொல்லியிருக்கிறது என்பதற்கும் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.


காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாகவும், இதுவரை இழைக்கப் பட்டஅநீதிகளுக்கு நியாயம் அளிப்பதாகவும், மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்கும் முயற்சியாகவும் இருக்கிற இதை பாரூக் அப்துல்லா எப்படிப் பார்க்கிறார், ஏன் எதிர்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அதிமேதாவியாக இருக்க வேண்டியதில்லை. #சுயநலம் 


நேற்றைக்கு ரிபப்லிக் டிவியில் நடந்த காரசாரமான விவாதம் இது. கொஞ்சம் கூச்சல்கள் அதிகம் இருந்தாலும் கவனித்துக் கேட்கவேண்டிய விவாதம் இது.

இன்றைய இளையதலைமுறைக்கு காஷ்மீர் பிரச்சினை என்றால் என்னவென்றே தெரியாத நிலையில், இந்த விவாதங்கள் ஒரு தெளிவான புரிதலைக் கொடுக்கக் கூடும். கவனித்துக் கேட்டுவிட்டு வாருங்கள், தொடர்ந்து பேசலாம்!

மீண்டும் சந்திப்போம்.
      
   

Saturday, May 25, 2019

பக்தாள் நிலைமையென்ன? ஒரு பின்னூட்டக் கவலை!

இங்கே முந்தைய பதிவுக்கு நண்பர் ரஹிம் கொஞ்சம் விரிவாகவே ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். பின்னூட்டங்களில் பதிலாக எழுதுவதும் கூடப் பல சமயங்களில் கேள்விகளாக இருந்துவிடுவதுண்டு. இங்கேயும் அதேபோலத்தான் என்பதால்  அவர் சொன்னதை  அப்படியே இங்கே தருகிறேன். அதற்கு என்னுடைய பதில் என்றில்லாமல், இங்கே வரும் நண்பர்கள் பதில் சொல்ல முனைந்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். எப்போதுமே ஒரு கை  ஓசை என்றே இருந்துவிடக்கூடாது அல்லவா?



பிஜேபி வென்றாலும் பக்தாக்களை பதட்டப்பட வைக்கும் கவலைகள்!



1. இது ஒன்றும் புது அரசு இல்லை. 2014 ன் தொடர்ச்சிதான். இவர்கள் என்ன செய்வார்கள் என பிஜேபி எதிரணிக்கு பழக்கம்தான். உண்மையில் இவர்களை எதிர்கொள்ள எதிரணிக்கு ஆற்றலும் அனுபவமும் அதிகம்.

2. ஒடுக்கபட்டோருக்கு குரல் கொடுக்கும் திருமா, சுப்பராயன், வெங்கடேசன், தமிழச்சி, ரவிக்குமார் போன்றோர் கடந்த அதிமுக பொம்மைகளை விட வீரியமான உறுப்பினர்கள். இது ஒரு பார்லியை பதற வைக்கும் ட்ரீம் டீம்.

3. இந்திய இந்து மயமாகிறது என்பது அளவுக்கு மீறிய கற்பிதம். இந்துத்துவம் ஓரளவு ஓட்டுக்களை பெற்று தந்தது என்பதை தவிர மிதமிஞ்சிய பயம் தேவை இல்லை. வடஇந்தியாவில் பதிவான வாக்குகளே 50 முதல் 55 சதமே. பாதி நபர்கள் வாக்களிக்க வில்லை. அதில் (50 இல்) 30 முதல் 40 சதம் மட்டும் BJP நிரந்தர வாக்கு வங்கி. BJP வாங்கியது 50 சதம். அதாவது மேலதிகமாக 10 சதவீத நடுநிலை வாக்குகள் சென்றுள்ளன. மீதம் 50 சதம் எதிர்வாக்குகளே. 10 சதம் நடுநிலை வாக்குகள் திரும்ப வெல்லவும் 50 சத எதிர் வாக்குகள் ஒருமுகப்படுத்தவும் ஒரு உத்தி மட்டும் தேவை. இந்தியா இன்னும் ஒரு பன்முக நாடுதான்।

4. இந்துத்துவமும் தேசிய வெறியும் ஓட்டுக்களை வாங்கி தந்தாலும், தேசிய பிரச்சனைகளான வேலை வாய்ப்பும், விவசாய அழிவும் இந்த அரசை தாக்கும். இந்துத்துவம் நீண்ட நாளைக்கு மக்களுக்கு சோறு போடாது. இந்திய பொருளாதாரம் இதை தெளிவாக உணர்ந்துள்ளது. கூர்ந்து கவனித்தால் பங்கு சந்தை இதை எதிரொலிப்பதை காணலாம். BJP மிருக பெரும்பான்மை பெற்ற 23-May அன்று, முன்காலத்தில் நடக்காத அளவு பங்குச்சந்தை 'தேமே' என உயராமல் இருந்தது. ஆனால் நிபுணர்கள் 10 டு 15 சதம் உயருமென கணித்திருந்தார்கள்.

5. இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கோட்ஸேயின் கொடூர வரலாறு, சுதந்திரப்போரில் BJP ன் பங்கு, கேடி அண்ட் அல்லக்கைகள் அறிவுக்கூர்மை (கேன்சருக்கு மூத்திரம், மேகமூட்டத்தில் ரேடாரில் தப்புவது, இத்யாதி) ஒரு பொது விவாதத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான விவாதங்கள் மூலம் பலரும் விழிப்படைய ஒரு வாய்ப்பு.

6. BJP ஆதரவாளர்களுடன் என்னுடன் உரையாடலில், BJP மேலுள்ள அபிமானத்தை விட காங்கிரஸ் மேலான கடுமையான வெறுப்பே இவர்களை BJP ன் பால் இழுக்கிறது. காங்கிரஸ் மாற்று தலையெடுக்கும்போது, BJP யை 'வேறு வழியில்லாமல்' ஆதரிக்கும் இவர்களில் பலர் BJP யை கழற்றி விடுவார்கள். காங்கிரஸுக்கு முட்டு கொடுப்பதை காங்கிரஸ் அபிமானிகள் நிறுத்த தொடங்கினால் இது இன்னும் விரைவில் சாத்தியமாகும்.

ஆறே பாயிண்டுகள்தான்! உங்களுடைய கருத்து என்ன? இன்றொரு நாள் காத்திருந்து, நண்பர்கள் பதிலெதுவும் தராவிடில், நாளை மறுநாள் இந்தப் பதிவிலேயே என்னுடைய பதில்களைத் தருகிறேன். 
  

கூட்டணிகள்,  தொகுதிப்பங்கீடுகள் எந்த அளவுக்கு செல்லுபடியாகக் கூடியவை என்பதைக் கொஞ்சம் யோசித்து வையுங்களேன்! தொடர்ந்து அரசியல் பேச உதவியாக இருக்குமே! அப்படியே இந்த வீடியோவையும்!

    
மீண்டும் சந்திப்போம்.

Friday, March 29, 2019

இடதுசாரிகள் இங்கே தீண்டத் தகாத கட்சிகள் தானா?

ஒரு காலத்தில் உ.பி.யின் முக்கியக் கட்சிகளின் கூட்டணிகளில் தவறாமல் இடம்பெற்றவர்கள் இடதுசாரிகள். இவர்களில், அதிக செல்வாக்கு பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) அதிகபட்சமாக 1967-ல் ஆறு தொகுதி கிடைத்திருந்தது. அதே 6 தொகுதிகள் மீண்டும் 1984-ல் சிபிஐக்கு உ.பி.யில் கிடைத்தது. இதில் கான்பூர் தொகுதியில் சுபாஷினி அலியும் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு அக்கட்சிக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன் 1991 தேர்தலில் கடைசி வெற்றி கிடைத்தது. இதுவும் தற்போது சரிந்து சிபிஐக்கு 0.1 சதவிகித வாக்குகள் மட்டுமே உ.பி.யில் மீதம் உள்ளன. 

The Indian Left, according to its critics, has never been right. When it was time to join the national movement in 1942 it called for support to the "peoples' second world war". Amid the euphoria of freedom, it called for an armed revolution in Telengana during 1948. In the era of crisis during the late '50s and '60s, it went for compromise. Chand Joshi analyses the dilemma of the Left in India in the context of this most momentous year in Indian politics  சந்த் ஜோஷி இப்படி அலசிக் காயப்போட்டது அக்டோபர் 2014 இந்தியா டுடே 


இந்நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட சிபிஐயின் உ.பி. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இது, காங்கிரஸ் பொதுச்செயலாளரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுடன், பத்து நாட்களுக்கு முன்பாகவே முறிந்தது. 


அதேசமயம், மற்றொரு பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி வதேரா, உ.பி.யில் செல்வாக்கு இல்லாத கட்சிகளான மஹான் தளம், ஜன் அதிகார், அப்னா தளத்தின் கிருஷ்ணா பட்டேல் பிரிவு ஆகியவற்றுடன் பேசி கூட்டணி அமைத்துள்ளார். இதற்கு பாஜகவை போல் காங்கிரஸும் உபியில் இடதுசாரி கட்சிகளை வளர்க்க விரும்பவில்லை என்பது காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி பேப்பரில் The Necessary Alternative என்றால் போதுமா? இடதுசாரிகளை ஆதரித்துக் கட்டுரை எழுதினால் மட்டும் சரியான மாற்று என்றாகிவிடுமா? 
இப்படி ஒரு பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டதற்கு  வேறு எவரையும் குறைசொல்ல முடியாத அளவுக்கு இடதுசாரிகள் தொடர்ந்து மேற்கொள்ளும் தவறான அரசியல் நிலைகளே முழுக்காரணமாக இருக்கின்றன. தேர்தல் அரசியலை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்பதில் இங்கே இடதுசாரிகள் தொடர்ந்து தவறு செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒன்று தேர்தல் அரசியலில் முழுக்க நனைவது  அல்லது குறுங்குழுக்களாக உடைந்து சிதறிப்போன நக்சல்கள் மாதிரி தேர்தல் பாதை திருடர்கள் பாதை என்று ஒதுங்கிப் போவது என்ற மாதிரித்தானா?
தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு சரியான பாதைக்குத் திரும்பவேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய இடதுசாரிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அவசர அவசியமாக ஆகியிருக்கிறது. இந்திய சூழலுக்கேற்ற இயக்கமாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! தவற விட்டால் இடதுசாரிகளை இனிமேல் திருமாவளவன், திராவிடர் கழகம் போன்ற திருகல் வேலை ஆசாமிகளிடமிருந்து மட்டுமே போகிறபோக்கில் பேசக் கேள்விப்படுகிற மாதிரி மட்டுமே ஆகிவிடும்! 
   

Thursday, February 14, 2019

அரசியல் களம்! மாற்று அரசியல் என்றால் என்ன?

மாற்று அரசியல் என்ன? இடதுசாரிகளை நம்பலாமா? இதைத்தான் முந்தைய பதிவின் தலைப்பாக வைத்திருக்க வேண்டும்! மாற்று அரசியல்! இடதுசாரிகளை நம்பலாமா? என்று கேள்வியின் முதல்பகுதியை விட்டுவிட்டு நேரே இடதுசாரிகளிடம் போய்விட்டோமா?

பரவாயில்லை! மாற்று அரசியலை இடதுசாரிகள் தான் முன்னெடுக்க முடியுமென்று,2014 ஆகஸ்டிலேயே பிரகாஷ் காரத் பேட்டி கொடுத்தது இங்கே    இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனால் 1964 முதலே அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட நீங்கள் பார்க்க முடியும்! அரசியல் மாற்று! மாற்று அரசியல்! என்று வார்த்தைகளை மாற்றிப்போட்டுப்  பார்த்தால் இரண்டும் ஒன்றல்ல என்பதுமே கூட மெல்ல மெல்லப் புரியும். Some basic research and investigation by us in India Against Corruption earlier this year revealed that at least 15 senior ministers of the Union cabinet, including the prime minister, Pranab Mukherjee and P. Chidambaram had serious charges of corruption or worse pending against them. This malaise is representative of the entire political class என்று சஞ்சய்ராவத் 2012 இல் எழுதியதுமே கூட வெறும் வார்த்தைச் சிலம்பம்தான்! 
வாய்ச் சிலம்பத்திலேயே சோஷலிசம், செகுலரிஸம் இன்னபிற புரட்சிகளையும் சாதித்து விட்டதாக நம்ப வைப்பதில் இந்திரா காங்கிரசாக இருந்து இன்றைக்கு சோனியா ராகுல் பிரியங்கா என்று மட்டுமே ஆகி  முட்டுச் சந்துக்கு வந்து நிற்கும் காங்கிரஸ் ஓரளவுக்கு ஜெயித்து இன்றைக்கு அனைத்தையும் இழந்து நிற்கிற பரிதாப முதலியார்  கதையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கலாம்.சுருக்கமாக Pseudo Left என்கிற அசிங்கமான நகலெடுக்கிற வேலையை முதலில் ஆரம்பித்தது காங்கிரஸ்தான்! இன்று மற்றவர்கள் அந்த வேலையில்  கைதேர்ந்தவர்களாகி காங்கிரசை ஓரங்கட்டி வைத்து விட்டார்கள்! 
இந்த வீடியோ சொல்வது உண்மைதானா? இதற்கு விடை இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடக் கூடியதுதான்! ஆனால் மார்க்சீயம், அம்பேத்கரியம், ஈவெராஈயம் எல்லாம் கலந்துகட்டி, தன்னையும் ஒரு மாற்றாகக் காட்டிக் கொள்கிற பேச்சு சாமர்த்தியம் விசிக வின் திருமாவளவனுக்கு கைவந்த கலையாகி விட்டது.
இருமுனைப்போட்டியா? மும்முனைப் போட்டியா? நான்கு முனைப்போட்டியா என்றே தெளிவாகாமல் இங்கே தேர்தல் களத்தை ஊடகங்கள் வீணாகக் குழப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் தந்தி டிவியின் அசைன்மெண்டாக இதுதான் இருக்கும் போல!
தேதிமுக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் இங்கே பிளந்து கட்டுகிறார்!

ஆனாலும் தனக்கு கிடைத்த                        நல்ல வாய்ப்பையும் வாக்கு வங்கியையும் கணிசமாக இழந்து நிற்பது என்னவோ மறுக்கமுடியாத கள யதார்த்தம்!

இவர்களில் எவராவது நிஜமான மாற்று அரசியலை முன்னெடுத்துப் பேசுகிறார்களா?இப்போதிருக்கும் அரசியலுக்கு சரியான மாற்று எது என்பது தெரிந்து தான் பேசுகிறார்களா?  

அந்த வகையில் ஒரு மாற்று அரசியலை முன்வைத்துக் களம் கண்டவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டும் தான்! 1964 இல் கட்சி உடைவதற்கு முன்னாலேயே, ஒருபகுதி மாற்றங்களுக்காக உழைப்பதை விட்டுவிட்டு அரசோடு இணக்கமாகப் போய்விட்டார்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக அறியப் படுகிற CPIM, தன்னுடைய கொள்கை அறிக்கையையும் செயல் அறிக்கையையும் தெளிவாக அறிவிக்கவும் செய்தார்கள். அவர்களே கூட இங்கே ஒரு புரட்சிகர அரசே அமைந்தாலும் சோஷலிஸப் புரட்சியை சாதிக்க முடியாது, இடைக்கால ஏற்பாடாக மக்கள் ஜனநாயகப் புரட்சி நடந்தேறி, அதுநிலைத்த பிறகு தான் சோஷலிசப் புரட்சி என்பது சாத்தியம் என்று தெளிவாக வரையறுத்தார்கள். இங்கே பார்க்கவும் 

ஆனால் இந்திரா அரசியல் சாசன முகவுரையில் 42வது திருத்தம் கொண்டுவந்து "sovereign democratic republic" என்றிருந்ததை "sovereign, socialist, secular democratic republic" என்று மாற்றியவுடனேயே நாடு ஒரு சோஷலிச, மதச்சார்பற்ற ஜனநாயகமாக மாறிவிட்டது என்று கதைத்தால் நானும் ஒரு Pseudo Socialist என்பதற்கு மேல் வேறென்ன ஆகிவிட முடியுமாம்?

விடை தெரிந்தால் சொல்லுங்கள்! மேலும் கேள்விகள் கேட்போம்!   
  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)