சிலபல விஷயங்களின் மீதான விவாதங்கள் முழு உண்மையை வெளிக்கொண்டு வருகிற மாதிரி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிட்டுப்போய் விட முடியாது. எந்தவொரு விவாதமும், ஏதோவொரு உண்மையைத் தன்னையறியாமலேயே வெளிக்கொண்டு வந்துவிடுவதைக் கவனிக்கிறோமா? குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான கலகங்கள், போராட்டங்களை எதிர்க்கட்சிகள் ஏதோவொரு வகையில் மீண்டும் மீண்டும் கையிலெடுப்பதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் பொதுவேலை நிறுத்தம் /பாரத் பந்த் என்ற கூத்தையும் நடத்தினார்கள். அதன்மீது பொதுஜனங்களுடைய பார்வை என்னவாக இருக்கிறது?
நேற்றுபொது வேலைநிறுத்தமாமே! பார்த்தீர்களா? என்ன நடந்ததாம்? என்று இன்னொரு பக்கத்தில் புதிய தலைமுறை டிவி விவாதத்தின் காணொளியைக் கொடுத்து என்னுடைய கருத்தாகவும் சிலவிஷயங்கள் சொல்லியிருந்தேன். இங்கே அதே விஷயத்தை மதன் ரவிச்சந்திரன் கையிலெடுத்து ஒரு 50 நிமிட விவாதத்தை நேற்று நடத்தியிருக்கிறார். விவாதத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்! விவாதம் எனக்கென்னவோ பாரத்பந்த் என்ற கேலிக்கூத்தை யாருமே ஒருபொருட்டாக எடுத்துக் கொண்டு அதைப்பற்றி விவாதித்த மாதிரித் தெரியவில்லை. பொதுவேலைநிறுத்தத்தின் impact அவ்வளவுதானா?
திரௌபதி பட ட்ரெயிலர் தமிழகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரெயிலர் வெளியானது ஜனவரி 3 அன்றுதான் என்றாலும் இங்கே சிலதரப்புகளில் பரபரப்பையும், வேறு சில தரப்புகளில் எதிர்க்க வேண்டும் என்ற நினைப்பையும் தூண்டியிருக்கிறது. திராவிடர் கழகத்தின் கி வீரமணி இந்தப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று சொல்லியிருப்பதாக ஒரு யூட்யூப் வீடியோவின் தலைப்பில் பார்த்தேன். உண்மையோ பொய்யோ இருந்து விட்டுப் போகட்டும்.
இந்த 22 நிமிட வீடியோவில் திரைப்படத்தின் இயக்குனர் G மோகனும் இசையமைப்பாளர் ஜுபினும் பேசுவது அக்டோபர் கடைசியிலே வெளியாகிவிட்டது. இயக்குனர் மிகத்தெளிவாக சென்னையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது அது என்ன என்பதைச் சொன்னபிறகும் கூட எதற்காக இத்தனை வீண் சர்ச்சைகள் என்பது தெரியவில்லை.
திரௌபதி பட ட்ரெயிலர் தமிழகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரெயிலர் வெளியானது ஜனவரி 3 அன்றுதான் என்றாலும் இங்கே சிலதரப்புகளில் பரபரப்பையும், வேறு சில தரப்புகளில் எதிர்க்க வேண்டும் என்ற நினைப்பையும் தூண்டியிருக்கிறது. திராவிடர் கழகத்தின் கி வீரமணி இந்தப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று சொல்லியிருப்பதாக ஒரு யூட்யூப் வீடியோவின் தலைப்பில் பார்த்தேன். உண்மையோ பொய்யோ இருந்து விட்டுப் போகட்டும்.
இயக்குனர் கதைக்களம் என்ன என்று சொல்வது
10நிமிட வீடியோவில்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளிப்பட்ட ராயபுரம் ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் நடந்த போலித்திருமண மோசடி பற்றிய
மீண்டும் சந்திப்போம்
அதிகாரம் உள்ளவர்கள் தன் அதிகாரத்தின் மூலம் சட்டத்தின் துணை கொண்டு சாதிக்கின்றார்கள். அதிகாரம் இல்லாத ஏழை எளிய மக்கள் அரைகுறை அதிகாரத்திடம் சிக்கிக் கொண்டு தவிக்கின்றார்கள். இயக்குநர் சொல்வது போல எத்தனை குடும்பத்தில் இறப்பு நடந்ததோ?
ReplyDeleteவழக்கறிஞர்களுக்கு தனியாக என்ன அதிகாரம் இருக்கிறது ஜோதிஜி? போய், தில்லுமுல்லு, அடாவடி எல்லாவற்றையும் கையிலெடுத்துக்கொண்ட கதையை சொல்லும் கீழே டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு சுட்டி இருக்கிறதே! அந்த வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதென்பதற்கு இன்று வரை ஒரு தகவலும் இல்லை
Deleteஇதெற்கென்ன சொல்வீர்கள்?
எனக்கு முதலில் குறிப்பிட்ட சில வழக்கு முதல் நாள் அப்பீல் செய்து அன்றே அடுத்த நாளே அதற்கான ஜாமீன் போன்ற தீர்ப்புகள் வருவதேஇன்னமும் ஆச்சரியமாக உள்ளது.
Deleteநீதிதேவன் மயக்கம் என்று சொல்லமுடியாது! நீதிமான்களும் நிறைய சந்தர்ப்பங்களில் முதலீடு போடாத கூட்டாளிகளாக ஆகிவிடுகிறார்களோ என்னவோ? !!
Delete