JNU வில் நடப்பது என்ன? வன்முறைக்கு யார் காரணம்? இதற்கு பின்னூட்டத்தில் மதன் ரவிச்சந்திரன் பேசுகிற விதம் பிடிக்கவில்லை, அடிக்கடி இடையில் குறுக்கிடுகிறார் என்றொரு குற்றச்சாட்டை நண்பர் திருப்பூர் ஜோதிஜி சொல்லி இருந்தார். ஆர்னாப் கோஸ்வாமி முதல் இங்கே புதியதறுதலை கார்த்திகைச் செல்வன் இப்படி எவராக இருந்தாலும் நெறிப்படுத்துகிறேன் என்ற சாக்கில் இடையிடையே குறுக்குச்சால் ஓட்டுவது, உரத்த குரலில் பேசுவது என்பது சேனல் விவாதங்களில் ஒரு fashion மாதிரி ஆகிவிட்டது என்பதை வருத்தத்தோடு ஒப்புக் கொள்கிறேன். மதன் ரவிச்சந்திரன் ஒருவரை மட்டும் குறை சொல்வதால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது?
மதன் ரவிச்சந்திரனிடம் எனக்குப் பிடித்தமான ஒரு விஷயம், யாருமே பேசத்துணியாத விஷயத்தைக் கூட ஒரு விவாதப்பொருளாக்கி விடுகிறார் என்பதுதான்! திரௌபதி படத்தைப் பற்றி எதுவும் தெரியாமலேயே முன்முடிவுகளோடு விவாதம் செய்யவருகிறவர்களை இங்கே தமிழகத்தில் நிறையக் காணலாம் என்பதற்கு இந்த 56 நிமிட விவாதத்தில் பங்கேற்ற 4 பேர்களே சரியான சாட்சி. விவாதத்தில் உருப்படியான அம்சம் என்னவென்றால் 5வதாக பங்கேற்ற படத்தின் இயக்குனர் G மோகன் தன்னுடைய படத்தைப் பற்றி, சுருக்கமாக விளக்கிய இறுதிப்பகுதிதான்! இங்கே திராவிடங்கள், கழகங்கள் பீற்றிக்கொல்வது போல சாதி ஒழிப்பு கோஷங்கள் பிரகடனங்களால் நடந்து விடவில்லை, இவர்களால் சாதி ஒழியப்போவதுமில்லை என்பது பல்லிளிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை மறந்துவிட்டு விவாதங்களில் மட்டும் சத்தமாகக் கூவிக் கொண்டிருப்.பது ஆகப்பெரிய காமெடி! விவாதத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்!
திரௌபதி என்றொரு திரைப்படத்துக்காக ஐந்து நாட்களுக்கு முன்னால் டீசர் மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. நான் இதை முதலில் பகிர்ந்த சமயத்தில் பதி.னோரு லட்சம் பார்வைகளை பெற்று இருந்தது. இப்போது 30,35,160 பார்வைகளைப் பெற்றதோடு 24,813 கமெண்டுகளையும் வாரிக் குவித்திருக்கிறது என்பதில் திரைப்படத்துக்கான ஒரு பரபரப்பான விளம்பரத்தையும் சேர்த்தே கொடுத்து இருக்கிறது. கமெண்டுகள் அத்தனையும் நான் பார்க்க விரும்பவில்லை. டீசரைப் பார்த்து மட்டுமே எந்தவொரு படத்தைப்பற்றியும் அபிப்பிராயம் சொல்கிற வழக்கம் எனக்கு இல்லை. படம் திரைக்கு வரட்டும், பார்த்துவிட்டு கருத்தைச் சொல்லலாம் என்று காத்திருக்கிறேன். ஆனால், டீசரைப் பார்த்துவிட்டு இப்போதே படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற மாதிரியான அபத்தமான எதிர்ப்புக்குரல்கள் கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
குண்டுசட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த தமிழக டிவி சேனல்கள் யூட்யூப் சேனல்களில் கூட ஈரான் அமெரிக்கா மோதலைப்பற்றி எல்லாம் விவாதம் உரையாடல் நடத்த ஆரம்பித்து விட்டார்கள் என்பது தமிழகத்துக்கு நல்லகாலமா? போதாதகாலமா? இந்த 55 நிமிட உரையாடலை ஒரு காமெடிக்காக வேண்டுமானால் பார்க்கலாமே தவிர பரிந்துரைக்கிற அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லை. மூத்த பத்திரிகையாளர் என்று சொல்கிறார்கள் ஆனால் ஹோம் ஒர்க் செய்யாமலேயே, சீட்டில் குறித்து வைத்திருக்கிற செய்திகளைத் தப்பும் தவறுமாக சொன்னால் எப்படிப் பரிந்துரைப்பது? பொழுது போக வேண்டுமென்றால் எத்தனை தவறுகள் என்று கண்டு பிடிக்க முடிகிறதா என்று கேம் விளையாடலாம். உதாரணத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் தகுதிநீக்கம் செய்யப் பட்டுவிட்டார் என்று திரும்பத்திரும்பச் சொல்வது! (இன்னமும் அது செனேட் சபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவே இல்லை)
மீண்டும் சந்திப்போம்.
எனக்கு ஒரு கொள்கையில் மாற்றுக் கருத்து இருக்கிறது. நான் அதற்குப் பின்னால் உள்ள நல்லது மற்றும் கெட்டது போன்ற அனைத்து விசயங்களையையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுவேன். அதற்குப்பிறகு நான் என்னளவில் அந்தக் கருத்து குறித்து என் கருத்தாக சிலவற்றை எடுத்துக் கொள்வேன். வாய்ப்பிருந்தால் எழுத நினைப்பேன். ரங்கராஜ் பாண்டே உரையாடலில் நான் பார்த்தவரைக்கும் அமைதியாக இருப்பார். திடீரென்று குத்தீட்டியை சர் என்று இறக்குவார். எதிரே இருப்பவர் தடுமாறிவிடுவார். உடனே வெளியே வந்து அவர் எனக்கு பேச வாய்ப்பு தராமல் ஏமாற்றிவிட்டார் என்று புலம்புவார்கள். உண்மையான காரணம் பேசியவர் பக்கம் நியாயம் இருக்காது. கொள்கை என்ற பெயரில் சம்மந்தப்பட்ட கட்சியின் கொள்ளை வெளியே வந்து விடும். அதன் மதன் எடுக்கும் ஒரு விசயம் எவரும் தொடப் பயப்படுவது. அல்லது அவரின் தைரியம். ஆனால் பேச விட்டு சந்துக்குள் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். வயது காரணமாக ரொம்ப படபடப்பாக இருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகின்றது.
ReplyDeleteஎதிர்த்தரப்பு என்ன என்பதைத் தெரிந்துகொண்டால்தான், நம்முடைய தரப்பில் உண்மையிலேயே குறைகள் இருக்கிறதா அல்லது ஏதாவது சொல்லவேண்டுமே என்பதற்காகச் சொல்கிறார்களா என்பதையே புரிந்து கொள்ளமுடியும் என்பதான காலம் போயே விட்டது.
Deleteஇன்றைக்கு ஊடகங்கள் கருத்தைத் திணிப்பதற்கான கருவிகளாக ஆனபிறகு அரசியல்வாதிகள் அவற்றை விலைக்கு வாங்குவதும் எளிதாகிவிடுகிறது.
இதில் சுவாரசியமான ஒருவிஷயம், ஜோதிஜி! மதன் ரவிச்சந்திரனுடைய அரசியலை அவரை அடக்கிவைக்க நினைத்த சீனியர் ஊடகக்காரர்களே தீர்மானிக்கிறார்கள் என்பதைக் கவனித்தீர்களா?