குடியுரிமை, குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றித் தேவை இல்லாத அச்சத்தை வெளிப்படுத்துகிற சாக்கில், அரசுக்கு எதிரான கலகங்கள், போராட்டங்களைக் கிளப்பி வீட்டுக் குளிர்காய்கிறவர்கள் யார் யாரென்று அனேகமாக எல்லோருக்குமே இப்போது புரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் கூட கடந்த 15 முதல் டில்லியில் ஷாஹீன் பாக், காப்பியடித்து 24 முதல் சென்னையில் வண்ணாரப்பேட்டை என்று ஒரு குறிப்பிட்ட மத்தத்தினரைக் கூட்டி, போராட்டங்கள் செயற்கையாகத் தொடர வைக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறோம். அதனால் குடியுரிமைச் சட்டத்திருத்தம் அதில் உள்ளதும் இல்லாததும் என இந்த 31 நிமிட வீடியோவில் திருமதி நிர்மலா சீதாராமன் விளக்கமாகச் சொல்கிறார்.
திரும்பத்திரும்ப பொய்யான தகவல்கள், அச்சத்தைத் தூண்டுகிறவிதத்தில் பரப்பப் படுகிற விஷத்துக்கு மாற்று, இதுமாதிரிப் பொறுமையாக விளக்கிச் சொல்வது மட்டும் தான்! அதனால், இன்னொருமுறை கேட்டுப் புரிந்து கொள்வதில் தவறே இல்லை!
ஒரு மார்க்சிஸ்ட்டாக இருந்த முந்தைய நாட்களில், ஜி . ராமகிருஷ்ணனை, சந்தித்த தருணங்கள் சில உண்டு. உதறியெறிந்துவிட்டு வெளியே வந்தபிறகு, இன்றும் கூட என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம் ஒன்று இது! எமெர்ஜென்சி நாட்களுக்குப் பிறகு, ஜனதா கட்சி பரிசோதனை முயற்சி தோற்றுப்போனபின்னால் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவ்வளவு கேவலமாக வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது எதனால் என்பது இன்னமும் நெருடலாக இருக்கிற கேள்வி! மதன் ரவிச்சந்திரன் போன்ற அதிக அனுபவம் இல்லாதவொரு ஊடகக்காரரை 70 வயது கடந்த தோழர் ஜி.ஆர். சமாளிக்கமுடியாமல் தடுமாறுகிற பரிதாபத்தை இந்த 30 நிமிட விவாதத்தில் பார்த்தேன். மார்க்சீயத்தை கூட மறந்துவிட்டு ஈவெராவை தூக்கிப்பிடிக்க வேண்டிய நிலைமைக்கு மார்க்சிஸ்டுகள் போனது ஏன்? நிறைய விஷயங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் ஜி.ஆர் தடுமாறுகிற மாதிரியே டோலர்கள் நிலைமையும் ஆகிப்போனதோ?
இங்கே மார்க்சிஸ்டுகள் மாதிரி இடையில் புகுந்து ஈவெரா ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளாமல், ஆரம்ப நாட்களிலிருந்தே ஈவெரா ஆதரவாளராகவும், பெரியார் என்றொரு திரைப்படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்து வெளியிட்டவருமான வேலு பிரபாகரன் இந்த 40 நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார்? சமீபத்தில் ஆதன் தளத்தில் பார்த்த உருப்படியான நேர்காணல் இது தானென்று அடித்துச் சொல்லுவேன்! இரண்டே நிமிட மறுப்பில், சும்மா எதையோ கொளுத்திப் போட்டுவிட்டு ரஜனிகாந்த் அடுத்த சினிமா பற்றி யோசிக்கப்போய் விட்டார். ரஜனி மீது விழவேண்டிய வெளிச்சம் தமிழருவி மணியன் மீது இன்றைக்கு, கொஞ்சம் அதிகப் படியாகவேவிழுந்து கொண்டிருக்கிறது! மணியனை விட கவனிக்கப்பட வேண்டிய நபர் வேலுபிரபாகரன் தான்! ஒரு பாமரத்தனமான ஈவெரா அபிமானம் தெரிந்தாலும் ரஜனி பேசியது சரிதான் என்று வீரமணி அண்ட் கோவை தோலுரிக்கிறார்! நெறியாளர் மாதேஷுக்கு ஐயா இப்படி சேம் சைட் கோல் போடுகிறாரே என்று அதீத அவஸ்தை இருப்பது செம காமெடி என்பதற்காகவே இதைப் பார்க்கலாம்!
இத்தனை ஆண்டுகள் கடந்தும், பூணூல் என்பது பிராமணர்கள் மட்டுமே அணிவது என்ற மூடநம்பிக்கையில் பலரைத் திளைக்க வைத்திருப்பது ஒன்று மட்டுமே ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் அளப்பரிய சாதனை! பெரியார் மண்ணு; பெரியாரின் சீடர்களின் மண்டையில் இருப்பதும் மண்ணு மாத்திரமே!
சேட்டைக்காரன் பதிவர் ஏன் பொங்குகிறார்? ஒன்றும் இல்லை! வேலைவெட்டி இல்லாத தமிழேண்டா க்ரூப் டில்லி குடியரசுதின விழாவில் தமிழக அரசு சார்பில் பங்குகொண்ட ஊர்தியில் அய்யனார் சிலை இருந்தது! அய்யனார் சிலைக்கு எப்படிப்பூணூல் அணிவிக்கலாம் என்று கிளம்பிவிட்டார்கள்! அவ்வளவுதான்!😀😁😻
இங்கே அது ஒரு கனா காலம் 2013 ஏப்ரல் பதிவில் கூட கங்கைகொண்ட சோழபுரம் போகிறவழியில் அவர் பார்த்த அய்யனாருக்கும் கூடப் பூணூல் இருக்கிறது!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment