பக்கா டூப்ளிகேட்டாக, காந்தி பெயரைத் தனது ஒட்டுவாலாக வைத்துக் கொண்டிருக்கிற ராகுல் காண்டி இன்று கேரளாவில் வயநாடு தொகுதி, கல்பேட்டா பகுதியில் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுங்கள் என்று கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து நடக்கும் இந்தக் கூட்டத்தில். கோட்சேவுக்கும் நரேந்திர மோடிக்கும் ஒரே சித்தாந்தம் தான் என்று உளறியிருக்கிறார்.
http://bit.ly/AathmavinRaagangal
நேரு சிறையிலிருந்த நாட்களில் தன்னுடைய ஒரே மகளுக்கு உலக சரித்திரத்தைச் சொல்கிற மாதிரி எழுதிய கடிதங்கள் பின்னாட்களில் Glimpses of World Hostory என்று புத்தகமாகவும் வந்ததாகச் சொல்வதுண்டு! ஆனால் இந்திராவுக்கு, அது மண்டையில் எறியதுமில்லை! தன்னுடைய வாரிசுகளுக்கு குறைந்த பட்ச சரித்திரத்தைக் கூட,கற்பிப்பதற்கு முனைந்ததுமில்லை! வாரிசுகளும் கூட, ராகுல் காண்டி மாதிரித் தற்குறிகளாகத்தான் இருக்கிறார்கள் என்பதை மேலே 22 நிமிட வீடியோவில் நேரடியாகவே பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.
வீடியோ 4 நிமிடம்
ஒரிஜினல் காந்தியின் பிடிவாதம், என்வழிப்படி விருப்பமானால் சேர்ந்துவா, இல்லையானால் ஒதுங்கிப்போ என்பது மாதிரியான சர்வாதிகார குணம் பிடிக்காதவர்கள் கூட அவரை வெறுத்ததில்லை. தன்னுடைய போராட்டத்த்தில் இஸ்லாமியர்களும் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, மகாத்மா காந்தி விட்டுக் கொடுத்துப் போனமாதிரி வேறெந்தத் தலைவரும் அவ்வளவு இறங்கிப்போனதில்லை. ஆனால் காந்தியை முகமது அலி ஜின்னா நம்பவே இல்லை! கிழவன் தன்னுடைய அபிமான ஜவகருக்குத் தான் சாதகமாக இருப்பான் என்று வளர்த்துக் கொண்ட அதீத அவநம்பிக்கை, ஹிந்துக்களும் இஸ்லாமியரும் ஒன்றாக ஒத்துவாழவே முடியாது என்ற பிரிவினை வாதமாக வளர்ந்து, தேசம் பிளவுபட்டதில் முடிந்தது.
1946 அக்டோபர் நவம்பரில் வங்காளத்தில் இருந்த ( இப்போது வங்கதேசத்தில் சிட்டகாங் அருகில்) நவகாளியில் ஹிந்துக்களை ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்கள் கொன்றுகுவித்து, கட்டாய மதமாற்றம்,கற்பழிப்பு என்று அட்டூழியம் தொடர்ந்ததில், நான்கு மாத காலம் மகாத்மா காந்தி அந்தப் பிரதேசம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து சமாதானம் பேசியது பாதிக்கப் பட்ட மக்களிடம் சிறிதும் எடுபடவில்லை. மிச்சம் மீதி இருந்தவர்கள் இப்போதைய மேற்குவங்கம், திரிபுரா, அஸ்ஸாம் பிரதேசங்களுக்கு குடிபெயர்ந்தனர். எழுத்தாளர் சாவி எழுதிய நவகாளி யாத்திரை, எந்தக் காலத்திலோ படித்தது, எந்த அளவுக்கு நேர்மையாக விஷயத்தைச் சொல்லியிருந்தது என்று இப்போது நினைவில் இல்லை, மீள்வாசிப்பு செய்ய நினைக்கிறேன். (Feb 1, வெள்ளிக் கிழமை வரை இந்தப்புத்தகத்தை அமேசானில் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்) இணையத்தில் தேடினால் கிழக்கு பாகிஸ்தானாக இருந்து, இப்போது வங்காள தேசமாக இருக்கிற பகுதியில் தொடர்ச்சியாக இன்று வரையிலும் கூட, ஹிந்துக்கள் எந்த அளவுக்கு கட்டாய மதமாற்றம் கற்பழிப்பு உட்பட , வன்முறைக்கு ஆளானார்கள் என்ற தகவல்கள் கொட்டிக் கிடப்பது கிடைக்கும்.
#FREE | பத்து நூல்கள் இலவசம் | பிப்ரவரி 01 பிற்பகல் 1.29 வரை
*
சர்வோதயம்
http://bit.ly/Sarvodayam
இந்திய சுயராஜ்யம்
http://bit.ly/HindSwarajTamil
பல ரூபங்களில் காந்தி
http://bit.ly/BahuroopiGandhiTamil
பாபூ அல்லது நானறிந்த காந்தி
http://bit.ly/BirlaOnBapu
மகாத்மா காந்தி நினைவு மாலை
https://amzn.to/2upPveY
நவகாளி யாத்திரை
https://amzn.to/2qOKcDC
தமிழ்நாட்டில் காந்தி
http://bit.ly/TSSRajanGandhi
காந்தி யார்?
http://bit.ly/GandhiYaar
காந்தியும் ஜவஹரும்
http://bit.ly/GandhiyumJawaharum
ஆத்மாவின் ராகங்கள்
*
சர்வோதயம்
http://bit.ly/Sarvodayam
இந்திய சுயராஜ்யம்
http://bit.ly/HindSwarajTamil
பல ரூபங்களில் காந்தி
http://bit.ly/BahuroopiGandhiTamil
பாபூ அல்லது நானறிந்த காந்தி
http://bit.ly/BirlaOnBapu
மகாத்மா காந்தி நினைவு மாலை
https://amzn.to/2upPveY
நவகாளி யாத்திரை
https://amzn.to/2qOKcDC
தமிழ்நாட்டில் காந்தி
http://bit.ly/TSSRajanGandhi
காந்தி யார்?
http://bit.ly/GandhiYaar
காந்தியும் ஜவஹரும்
http://bit.ly/GandhiyumJawaharum
ஆத்மாவின் ராகங்கள்
ஒரு காந்தீயவாதியைப் பற்றிய ஒரு நாவலில், காந்தி மீது ஜனங்களுக்கு எவ்வளவு அபிமானம் இருந்தது என்பதை மிக அருமையாக ஆத்மாவின் ராகங்கள் என்று நா. பார்த்தசாரதி எழுதியிருந்ததை, அதைத் தொட்டு முன்னர் இந்தப் பக்கங்களில் எழுதிய பதிவு எழுதிப் பத்தாண்டுகளை நெருங்கப் போகிறது.
புத்தகத்தை இங்கே இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்! வாசிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்கிறேன்
மீண்டும் சந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment