ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டாலும் ஆங்கிலேயர்களிடமிருந்து தொற்றிக் கொண்ட பல விஷயங்களை நம்மால் விட முடிந்ததா என்ன? பிறக்கும் புதுவருடத்தில் நம்பிக்கையூட்டுகிறதாக ஒரு பத்து விஷயங்களை காங்கிரஸ் சார்புள்ள சேகர் குப்தா பட்டியலிட்டுச் சொல்கிறார். பொருளாதாரம் படுத்தே விட்டது, வங்கிகள் வராக்கடன் சுமையிலிருந்து மீளவே முடியாது, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டே போகிறது என்றே காங்கிரசும் இடதுசாரிகளும் கோயபல்சை மிஞ்சுகிற மாதிரி தொடர்ந்து ஊதிக் கொண்டே இருந்தாலும், ஒரு ஊடகக் காரராக சேகர் குப்தாவாலும் கூட, நேர்மறையான விஷயங்களை மறைக்க முடியவில்லை என்பதை இந்த 19 நிமிட வீடியோவில் பார்க்கமுடிவது ஒரு நல்ல விஷயம்!
நேற்றைய பதிவில் நெல்லை கண்ணன் உளறல் குறித்து சுடசுட ஒரு விவாதத்துக்கு ஏற்பாடு செய்திருந்த மதன் ரவிச்சந்திரன் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். பார்த்தீர்களா?
நேற்றைக்கு ஒளிபரப்பான இந்த விவாதத்தை யூட்யூப் தளத்தில் தற்போது வரை 32,408 பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. கிஷோர் கே சுவாமி ஒருவரைத்தவிர, வேறு எந்தப் பங்கேற்பாளரும் ஜனங்களுக்கு அறிமுகமான பிரபலங்கள் இல்லை என்பதைக் கவனித்தீர்களானால் முழுக்க முழுக்க இத்தனை பார்வையாளர்கள் மதன் ரவிச்சந்திரன் என்கிற வளர்ந்து வரும் ஊடகக்காரர் ஒருவருக்காக மட்டுமே பார்த்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
நெல்லை கண்ணன் வட்டார வழக்கில் இயல்பாகப் பேசியது குற்றமே இல்லை என்கிற மாதிரி இன்னொரு வலைப்பதிவுக்கு ஒரு பதில் வந்திருந்தது. நெல்லை கண்ணன் பேசியதன் வீடியோவைக் கவனித்துக் கேட்டிருந்தால் அவன் இவன் என்ற ஏகவசனம், சகட்டு மேனிக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் இருவரைப் பற்றியும் சின்னத்தனமான விமரிசனம், ஜெயலலிதா அவரை 5 கோடி கொடுத்து விலைக்கு வாங்க முயன்றதில் தோற்றது, பிஜேபியின் KT ராகவனை ஜாதியைத்தொட்டுக் கேவலமாகப் பேசியது என்று ஏராளமான விஷயங்கள் இருந்ததைக் கேட்டிருக்க முடியும். ஒரேவரியில் சொல்வதானால் நல்ல தமிழ்ப்பேச்சாளராக பெயர்பெற்றிருந்த நெல்லை கண்ணன் வெற்றிகொண்டான் தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார். அப்படி இறங்கியதில் ஏகத்துக்கும் சறுக்கி விபரீதமாகப் புரிந்துகொள்ளப் படுகிற அளவுக்கும் போய்விட்டார்! எல்லாம் காசு செய்கிற வேலை!
மதன் ரவிச்சந்திரன் இந்த ஒருமணிநேர விவாதத்தை நல்லமுறையில் நடத்தியிருக்கிறார் என்பது இத்தனை பார்வையாளர்கள் யூட்யூப் தளத்தில் வந்து பார்த்திருக்கிறார்கள் என்பதாக வெளிப்பட்டிருக்கிறது.
தமிழக அரசியல்களம் கொஞ்சம் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமானால் திராவிடங்களின் பிடியில் இருந்து முழுமையாக விடுபட்டே ஆகவேண்டும். அதன் முதல் கட்டமாக விசிக, பாமக, இடதுசாரிகள் திருகல் முகன் காந்தி, வேல்முருகன், சுபவீ செட்டியார் போன்ற பலபத்து உதிரிகளைக் கழித்துக் கட்டியே ஆக வேண்டும் என்பதை நீண்டநாட்களாகவே இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இந்தப்புது ஆண்டு அதற்கான முன்னோட்டக் களமாக அமைய வேண்டும் என்பதைத் தவிர இந்த மண்ணை நேசிக்கிறவர்களுக்கு வேறென்ன ஆசை இருந்துவிட முடியும்?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment