ஈரானிய ஜெனெரல் காசிம் சொலைமானியை அமெரிக்கா போட்டுத்தள்ளிய விவகாரத்தில் சில நண்பர்கள் முகநூலில், கொஞ்சம் எதிர்மறையான பகிர்வுகளை எழுதியிருப்பதைப் பார்த்தேன். ஈரான், ஈராக் இருநாடுகளும் வெறித்தனமான இஸ்லாம் மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்துப் பலகாலமாயிற்று. பழைய பெர்ஷிய வரலாறு கலாசாரம் அழிக்கப்பட்டு நூற்றாண்டுகள் பல ஆன பின்னால் அதைப்பற்றிப் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? ராஜீய உறவுகளும் வெளியுறவுக் கொள்கையும் நல்ல வேளையாக இந்தமாதிரி சென்டிமென்ட் மீது உருவாக்கப் படுவதில்லை. டொனால்ட் ட்ரம்ப் பேசும் போது சொலைமானி நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில்2012 இல் புது டில்லியில் இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் மீது நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டுச் சொன்னது தற்செயலானது அல்ல. நாட்டின் பாராளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்திய போது கூட அமைதிகாத்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அன்றைக்கு இஸ்ரேலிய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் என்ன செய்திருப்பார்கள்?
சேகர் குப்தா இந்த 15 நிமிட வீடியோவில், சொலைமானி கொல்லப்பட்டபிறகு அமெரிக்கா உலக நாடுகள் பலவற்றுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதான பட்டியலில் பாகிஸ்தான் இருந்தது ஆனால் இந்தியா இல்லையே ஏன் என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு சில அனுமானங்களைச் சொல்கிறார். முக்கியமாக பாகிஸ்தான் இருக்கிற (பூகோள) கேந்திர முக்கியத்துவம் பற்றிச் சொல்கிறார். ஆப்கானிஸ்தான், ஈரான் இருநாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்துகொள்கிற நாடாக பாகிஸ்தான் மட்டுமே இருக்கிறது, இந்தியா அல்ல. தவிர ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் தாலிபான்களில் பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி கொடுக்கப் பட்டவர்கள் ஒரு பகுதி என்றால் ஈரானில் இருக்கிற தாலிபான்கள் மீதி. இப்படியான கேந்திர முக்கியத்துவம் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டுதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாதென்று அடம்பிடிக்கிறது. CPEC என்று சீனாவின் மத்தியப்பகுதியை பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்துடன் இணைக்கிற ப்ராஜெக்ட் எந்த முன்னேற்றமுமில்லாமல் இருந்தாலும் (பாகிஸ்தானிடம் காசு இல்லை) சீனாவுக்கும் இந்தியா, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஒரு போட்டி நாடாக வளர்ந்துவிடக் கூடாதென்ற நல்லெண்ணம் நிறையவே இருக்கிறது.
இதையெல்லாம் எழுத பேச நினைக்கும் போது ஒரு நக்கலான கதைதான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. ஒரு கதை சொல்லட்டா சாரே?!
இதையெல்லாம் எழுத பேச நினைக்கும் போது ஒரு நக்கலான கதைதான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. ஒரு கதை சொல்லட்டா சாரே?!
இந்திய நண்டுகள்! ஒரு கதை! ஒரு நல்ல உதாரணமும் கூட!
படித்துப்பார்த்துவிட்டு கருத்தும் சொல்லுங்களேன்!
No comments:
Post a Comment