Sunday, January 19, 2020

#525 எது பொருளோ, அதைப் பேசுவோம்!

நாத்திகம் சிலருக்குப் பொழுதுபோக்காகவும், பலருக்கு பிழைப்பாகவும் இருப்பதை 2008 இல் இங்கே பதிவுகள் எழுத ஆரம்பித்த நாட்களிலேயே நிறையப் பேசியாகி விட்டது. இங்கே திராவிடர் கழகம், அதை அடியொற்றிப் பகுத்தறிவோடு (?!!) பேசிப் பிழைப்பு நடத்திவருகிற  இவர்களை ஒரு மூன்றாம்தரக்  கோமாளிகளாக மட்டுமே பார்க்க முடிவதால், இவர்கள் பேசும் நாத்திகம், பகுத்தறிவு அனைத்தையும் பார்த்துவிட்டுக் கடந்து போகவே நினைக்கிறேன். ஆனால் என் கண்முன்னாலேயே நடந்த சில விஷயங்கள், அதைப்பற்றிய செய்திகளை நடந்த காலத்திலேயே வாசித்தவன் ஒரு சாட்சியாக இருப்பதுபோலவே இன்னும் நிறையப்பேர்கள் இங்கு இருக்கிறோம். போதாக்குறைக்கு, அவர்களுடைய வீரப்பிரதாபங்களை அவர்களே தம்பட்டம் அடித்துக் கொண்ட  ஒப்புதல் வாக்குமூலங்கள் வேறு அள்ள அள்ளக் குறையாமல் கிடைத்து வருகின்றன.

 வீடியோ 7.55 நிமிடத்திலிருந்து வீரமணி 
ஒப்புதல் வாக்குமூலம். சுபவீ கொஞ்சம் உண்மை 
நிறையப்பொய் கலந்து சமாளிப்பு!
ரங்கராஜ் பாண்டே அம்பலப்படுத்துகிறார்! 
    
அப்படி என்னென்ன ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பதை இங்கே ரங்கராஜ் பாண்டே 26 நிமிட வீடியோவில் கொஞ்சம் பட்டியலிடுகிறார். 50 வருடங்களுக்கு முன்பு போட்ட அதே ஆட்டத்தை இன்றைக்கும் ஆட நினைக்கும் மூடத்தனத்தை என்னெ,வென்று சொல்வது? துக்ளக் பொன்விழா நிறைவுக்கு கூட்டத்தில் நடிகர் ரஜனிகாந்த் போகிறபோக்கில் சொன்ன ஒரு விஷயம், சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமர் சீதை படங்களை இழிவுபடுத்திய விவகாரத்தை வேறெந்த செய்திப்பத்திரிகையும் வெளியிடவோ கண்டிக்கவோ முனையாதபோது துக்ளக் இதழில் புகைப்படங்களுடன் செய்தியும் வெளியிட்டுக் கண்டனமும் தெரிவித்தவர் சோ ராமசாமி  ஒருவர் மட்டுமே! திமுக அரசு துக்ளக் இதழைப் பறிமுதல் செய்து விஷயத்தை அமுக்கப்பார்த்ததில், அந்த இதழ் துக்ளக்கை reprint செய்து மறுபடி வாசகர்களிடம் கொண்டுசேர்த்த தைரியத்தை சிலாகித்துப் பேசியது, கழகங்களை ரொம்பவுமே சங்கடப்படுத்தியிருக்கிறது. என்னதான் மூடிமறைக்கப் பார்த்தாலும், முழுப்பூசணிக்காயை பத்திருபது சோற்றுப்பருக்கைக்குள் மறைத்து விட முடியுமா? 

பொதுவாக உலகெங்கும் நாத்திகர்கள் கடைப்பிடிக்கும் பொதுவான டெக்னிக், மதநம்பிக்கைகளைக் கேலி செய்வது, நக்கலாக கொச்சைப்படுத்துவது என்றால் இங்கே ஈவெரா நாத்திகத்துக்குப் பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி என்கிறமாதிரியான துவேஷம் மட்டுமே மூலதனம். மதநம்பிக்கைகளைக் கேலி செய்வது என்பது இழிவு படுத்துவது, வெறுப்பை விதைப்பது என்பது மிகவும் செலெக்டிவாக ஹிந்துமத நம்பிக்கைகள் கடவுளர் மீது மட்டுமே என்றால் இந்தமாதிரியான செலக்டிவ் அம்னீஷியா நாத்திகத்தை என்னவென்று மதிப்பது?

வீடியோ 48 நிமிடம் 

திராவிட சாயம் வெளுத்துப்போச்சு என்பது தெரிந்துமே கூட, இங்கே உள்ள பல ஊடகங்கள் விஷயத்தை எப்படி திரித்து ரஜனி ஈவெராவை  அவதூறாகப் பேசினாரென கூவுகின்றன பாருங்கள்! இந்த விவாதத்தில் வீரமணியை விமரிசிக்க முனைந்த கராத்தே தியாகராஜனை வீரமணி பேரை சொல்லவிடாமல்  குறுக்கே விழுந்து மறித்த நெறியாளரைக்  கொஞ்சம் பாருங்களேன்! தீயன்னா கழகம்போல இந்த சேனலும் மூஞ்சி சுருங்கித்தான் போய்க்கொண்டே இருப்பதும் வாடிக்கையாகிப் போன வேடிக்கை!    

ஈவெரா பெயரில் பிழைப்பு நடத்தி வரும் சில அமைப்புக்கள், ரஜனி மீது வழக்குப் பதிவதற்கு முனைந்திருக்கிறார்கள். ஆக்டிவ் அரசியல் செய்ய இன்னமும் தயங்குகிற ஒரு நடிகனை இவர்களே அரசியலுக்கு இழுத்துவந்து, கிரீடத்தையும் சூட்டி விடுவார்களோ என்று எனக்குப் பெரும் கவலை! எனக்கு ரஜனியை ஒரு நடிகனாகப் பார்ப்பதற்கே விருப்பம் இருந்ததில்லை! ஒரு அரசியல்வாதியாகப் பார்ப்பது என்றால்....?      

எது பொருளோ, எது பொருட்படுத்தப்பட வேண்டியதோ, அதைத் தயங்காமல் பேசுவோம்! கேள்வி கேட்போம்! என்கிற ஞானம் மட்டும் நமக்கு வந்துவிட்டால், அப்புறம் வேறென்ன வேண்டும்?  

மீண்டும் சந்திப்போம்.              
       

2 comments:

  1. "ஆக்டிவ் அரசியல் செய்ய இன்னமும் தயங்குகிற ஒரு நடிகனை"

    சார் தவறான புரிதல். அவர் தயங்கவில்லை, அவர் தீர்மானித்துள்ள நேரம் வரும் போது அவர் செயல்படுவார். மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள், கட்டாயப்படுத்துகிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பதற்காக வந்து நெருக்கடிக்குள்ளாக அவர் தயாராக இல்லை.

    ஒருவர் என்ன நினைக்கிறார் எதனால் தாமதப்படுத்துகிறார் என்பது தெரியாமலே அனுமானத்தில் விமர்சிப்பது சரியல்ல.

    உங்களுக்கு அவர் செய்வது வேடிக்கையாகத் தோன்றினாலும் காலம் பதில் கூறும்.

    "எனக்கு ரஜனியை ஒரு நடிகனாகப் பார்ப்பதற்கே விருப்பம் இருந்ததில்லை! ஒரு அரசியல்வாதியாகப் பார்ப்பது என்றால்....? "

    ரசனை ஒருவருக்கொருவர் மாறுபடும் ஆனால், இதை எப்படி பார்க்க விருப்பமில்லையோ அவர் அரசியல்வாதியாக வந்து இதே போல வெற்றி பெறப்போவதையும் விருப்பமில்லையென்றாலும் பார்க்கும் நிலை வரும்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள கிரி!

      உங்களுக்கு ரஜனிகாந்த் மீது நம்பிக்கை இருப்பதில் எனக்கு ஒருமனத்தடையுமில்லை! உங்களுக்கு அப்படி நம்புவதற்கு சுதந்திரம் இருக்கிற மாதிரியே, நம்பாமல் இருப்பதற்கு எனக்கு காரணங்கள் நிறைய இருக்கின்றன. ரஜனி அரசியல் உதார்களை நான் ஆரம்பநாட்களில் இருந்தே பார்த்துவருவதால் என்னுடைய கணிப்பு தவறாகாப்போவதற்கு சான்ஸ் ரொம்பக் கம்மி அதைத்தாண்டியும் வந்தாரானால் மகிழ்ச்சியே!

      ஒரு அரசியல் பார்வையாளனாக விமரிசனம் செய்வதற்கு இன்னொரு பார்ட்டி கிடைத்தால் வேண்டாமென்று யார் சொல்வார்கள்? :-))))))

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)