நாத்திகம் சிலருக்குப் பொழுதுபோக்காகவும், பலருக்கு பிழைப்பாகவும் இருப்பதை 2008 இல் இங்கே பதிவுகள் எழுத ஆரம்பித்த நாட்களிலேயே நிறையப் பேசியாகி விட்டது. இங்கே திராவிடர் கழகம், அதை அடியொற்றிப் பகுத்தறிவோடு (?!!) பேசிப் பிழைப்பு நடத்திவருகிற இவர்களை ஒரு மூன்றாம்தரக் கோமாளிகளாக மட்டுமே பார்க்க முடிவதால், இவர்கள் பேசும் நாத்திகம், பகுத்தறிவு அனைத்தையும் பார்த்துவிட்டுக் கடந்து போகவே நினைக்கிறேன். ஆனால் என் கண்முன்னாலேயே நடந்த சில விஷயங்கள், அதைப்பற்றிய செய்திகளை நடந்த காலத்திலேயே வாசித்தவன் ஒரு சாட்சியாக இருப்பதுபோலவே இன்னும் நிறையப்பேர்கள் இங்கு இருக்கிறோம். போதாக்குறைக்கு, அவர்களுடைய வீரப்பிரதாபங்களை அவர்களே தம்பட்டம் அடித்துக் கொண்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் வேறு அள்ள அள்ளக் குறையாமல் கிடைத்து வருகின்றன.
வீடியோ 7.55 நிமிடத்திலிருந்து வீரமணி
ஒப்புதல் வாக்குமூலம். சுபவீ கொஞ்சம் உண்மை
நிறையப்பொய் கலந்து சமாளிப்பு!
ரங்கராஜ் பாண்டே அம்பலப்படுத்துகிறார்!
அப்படி என்னென்ன ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பதை இங்கே ரங்கராஜ் பாண்டே 26 நிமிட வீடியோவில் கொஞ்சம் பட்டியலிடுகிறார். 50 வருடங்களுக்கு முன்பு போட்ட அதே ஆட்டத்தை இன்றைக்கும் ஆட நினைக்கும் மூடத்தனத்தை என்னெ,வென்று சொல்வது? துக்ளக் பொன்விழா நிறைவுக்கு கூட்டத்தில் நடிகர் ரஜனிகாந்த் போகிறபோக்கில் சொன்ன ஒரு விஷயம், சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமர் சீதை படங்களை இழிவுபடுத்திய விவகாரத்தை வேறெந்த செய்திப்பத்திரிகையும் வெளியிடவோ கண்டிக்கவோ முனையாதபோது துக்ளக் இதழில் புகைப்படங்களுடன் செய்தியும் வெளியிட்டுக் கண்டனமும் தெரிவித்தவர் சோ ராமசாமி ஒருவர் மட்டுமே! திமுக அரசு துக்ளக் இதழைப் பறிமுதல் செய்து விஷயத்தை அமுக்கப்பார்த்ததில், அந்த இதழ் துக்ளக்கை reprint செய்து மறுபடி வாசகர்களிடம் கொண்டுசேர்த்த தைரியத்தை சிலாகித்துப் பேசியது, கழகங்களை ரொம்பவுமே சங்கடப்படுத்தியிருக்கிறது. என்னதான் மூடிமறைக்கப் பார்த்தாலும், முழுப்பூசணிக்காயை பத்திருபது சோற்றுப்பருக்கைக்குள் மறைத்து விட முடியுமா?
பொதுவாக உலகெங்கும் நாத்திகர்கள் கடைப்பிடிக்கும் பொதுவான டெக்னிக், மதநம்பிக்கைகளைக் கேலி செய்வது, நக்கலாக கொச்சைப்படுத்துவது என்றால் இங்கே ஈவெரா நாத்திகத்துக்குப் பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி என்கிறமாதிரியான துவேஷம் மட்டுமே மூலதனம். மதநம்பிக்கைகளைக் கேலி செய்வது என்பது இழிவு படுத்துவது, வெறுப்பை விதைப்பது என்பது மிகவும் செலெக்டிவாக ஹிந்துமத நம்பிக்கைகள் கடவுளர் மீது மட்டுமே என்றால் இந்தமாதிரியான செலக்டிவ் அம்னீஷியா நாத்திகத்தை என்னவென்று மதிப்பது?
வீடியோ 48 நிமிடம்
திராவிட சாயம் வெளுத்துப்போச்சு என்பது தெரிந்துமே கூட, இங்கே உள்ள பல ஊடகங்கள் விஷயத்தை எப்படி திரித்து ரஜனி ஈவெராவை அவதூறாகப் பேசினாரென கூவுகின்றன பாருங்கள்! இந்த விவாதத்தில் வீரமணியை விமரிசிக்க முனைந்த கராத்தே தியாகராஜனை வீரமணி பேரை சொல்லவிடாமல் குறுக்கே விழுந்து மறித்த நெறியாளரைக் கொஞ்சம் பாருங்களேன்! தீயன்னா கழகம்போல இந்த சேனலும் மூஞ்சி சுருங்கித்தான் போய்க்கொண்டே இருப்பதும் வாடிக்கையாகிப் போன வேடிக்கை!
ஈவெரா பெயரில் பிழைப்பு நடத்தி வரும் சில அமைப்புக்கள், ரஜனி மீது வழக்குப் பதிவதற்கு முனைந்திருக்கிறார்கள். ஆக்டிவ் அரசியல் செய்ய இன்னமும் தயங்குகிற ஒரு நடிகனை இவர்களே அரசியலுக்கு இழுத்துவந்து, கிரீடத்தையும் சூட்டி விடுவார்களோ என்று எனக்குப் பெரும் கவலை! எனக்கு ரஜனியை ஒரு நடிகனாகப் பார்ப்பதற்கே விருப்பம் இருந்ததில்லை! ஒரு அரசியல்வாதியாகப் பார்ப்பது என்றால்....?
ஈவெரா பெயரில் பிழைப்பு நடத்தி வரும் சில அமைப்புக்கள், ரஜனி மீது வழக்குப் பதிவதற்கு முனைந்திருக்கிறார்கள். ஆக்டிவ் அரசியல் செய்ய இன்னமும் தயங்குகிற ஒரு நடிகனை இவர்களே அரசியலுக்கு இழுத்துவந்து, கிரீடத்தையும் சூட்டி விடுவார்களோ என்று எனக்குப் பெரும் கவலை! எனக்கு ரஜனியை ஒரு நடிகனாகப் பார்ப்பதற்கே விருப்பம் இருந்ததில்லை! ஒரு அரசியல்வாதியாகப் பார்ப்பது என்றால்....?
எது பொருளோ, எது பொருட்படுத்தப்பட வேண்டியதோ, அதைத் தயங்காமல் பேசுவோம்! கேள்வி கேட்போம்! என்கிற ஞானம் மட்டும் நமக்கு வந்துவிட்டால், அப்புறம் வேறென்ன வேண்டும்?
மீண்டும் சந்திப்போம்.