Monday, April 29, 2019

ரெண்டு முருகன்! அரசியல் ஆய்வாளர்! ஜெயமோகன்!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 அன்றே முடிந்துவிட்டாலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 வரை காத்திருக்கப் பொறுமையில்லாத, வெற்று ஊகங்களைப் பேசுவதில் அக்கறை காட்டுகிற மாநிலமாகவே இருக்கிறது. சூலூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ரெண்டு முருகன், கண்ணை மூடினால் கருணாநிதியாக  தெரிகிறார் ஸ்டாலின் என்று பேசிவிட்டு அடுத்துச் சொன்னதும் அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலும் இன்றைய அரசியல் காமெடியில் முதலாவதாக.    நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை விட திமுகழகம் சட்ட சபைக்கான இடைத்தேர்தல் முடிவுகளில் தான் அதிக அக்கறை காட்டுகிறது என்பது தெரிந்த விஷயம்தான்! எந்த அளவுக்கு திமுக தலைவர்களும், உபிக்களும் காய்ந்துபோய்க் கிடக்கிறார்கள் என்பதை  நான் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே! ரெண்டு முருகன், தன்னை கிங் மேக்கர் ரேஞ்சுக்கு உயர்த்திக் கொண்டு  பேசுவது பெரிய காமெடியா இல்லையா? 

ஏன் அது காமெடி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் தமிழர் கட்சி சீமான், அமமுக தினகரன் அப்புறம் மய்யம் கமல் காசர் இந்த மூன்று தரப்பும் எவருடைய கனவுகளுக்குக் குறுக்கே வந்து மறிக்கிறார்கள் என்ற கணக்கும் தெரிந்தாக வேண்டும். மே 23 அன்று தான் சரியான விடை கிடைக்கும் என்றாலும், ஊகம் செய்வது என்று ஒரு வழி இருக்கிறதே!இங்கே ரவீந்திரன் துரைசாமி, அவருடைய கணக்காக சில விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்கிறார். சீமானைப் பற்றிய மதிப்பீடு அதிகம். கமல் காசருக்கு சொல்லியிருப்பதும் கூடப் பொருந்தவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

வட போச்சே
ஆட்களைவிட கேமரா அதிகமா இருக்கும்னு தெரியாம போச்சே. அடுத்த கண்டனக்கூட்டத்தைத் தவறவிடவே கூடாது. பெஸண்ட்நகர்லேந்து மீனம்பாக்கம்போய் பிளைட் பிடிச்சி திருவனந்தபுரம் போய் ஜெயமோகனோட அசோக்நகர் கூட்டத்துக்கு வந்துரணும்‬

இவ்வளவு நக்கலாக மாமல்லன் எழுதியிருக்கிறாரே, ஜெயமோகன் அப்படி என்ன தான் வல்லுவ்வான கண்டனத்தைப் பதிவு செய்திருப்பார் என்று ஆவலாகப் பார்க்கப் போனால் ஜெமோ பொசுக்கென்று முடித்துவிட்டார்.   


திருமாவளவனுக்கு கிழட்டுச் சிறுத்தை எஸ்ரா சற்குணம்  (அடைமொழி அவரே கொடுத்துக் கொண்டது ) ஆதரவு அளித்தது கூடப் பெரிய விஷயமில்லை! ஜெமோ கூட இலக்கிய வாதிகளுடன் கூடி ஆதரவு தெரிவித்திருப்பது என்ன மாதிரியான ஸ்டன்ட் என்று எனக்குத் தெரியவில்லை! ஆனால் திருமாவளவன் பதற்றத்தில் இருப்பது புரிகிறது. இதே பதட்டம் மதுரை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசனிடமும்    தென்பட்டது. 


    மீண்டும் சந்திப்போம். 
    

Sunday, April 28, 2019

நிறுவனங்கள் ஜெயிக்கும் விதம்! #தலைமைப்பண்பு #BSNL

இன்னொரு வலைப்பக்கத்தில் மீண்டும் BSNL! மீண்டு வருமா? என்று ஒரு செய்தியை வைத்துப் பதிவெழுதிய பிறகு, பழைய ஞாபகங்கள் அதைத் தொடர்ந்து எழுந்தன. அந்தப்பக்கத்தில் ஒன்பது வருடங்களுக்கு முன்னால் எழுதிய ஒன்றை மீள்பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு பிரச்சினையை  வெவ்வேறு  கோணங்களில் அணுகுவது என்பது ஒரு சரியான தீர்வு கிடைக்க வழி கோலுவதாகவும் இருக்கும். ஒரு பிரச்சினைக்கு தீர்வு என்பது இப்படி மூன்றுவிதமாக இருக்கலாம். ஒரு தொழில் சார்ந்த பிரச்சினையில் இந்த மூன்றில் ஏதோ ஒன்றுதான் சாத்தியம் என்கிற நிலையில், என்னமாதிரியான தீர்வை நீங்கள் விரும்புவீர்கள்?

2010 ஏப்ரலில் எழுதியதன் மீள்பதிவாக .......

தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் குறித்துப் பதிவெழுதிக் கொஞ்ச நாட்களாகி விட்டது! ஒரு பொதுவான நோக்கத்தில் சேருகிற குழு ஜெயிப்பதற்கும், தோற்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இங்கே குழு என்று சொல்லும்போது, பொதுவான நோக்கத்தில் விருப்பத்தோடு பங்கு கொள்கிறவர்கள் என்று தான் அர்த்தம்! 

இங்கே, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில், கோஷ்டி, கோஷ்டிககுள் கோஷ்டி, அத்தனைக்கும் ஒரே பொது நோக்கம் என்ன என்றால், அடுத்த கோஷ்டியை சமயம் பார்த்துக் காலை வாருவது மட்டும் தான் என்ற கலாசாரக் கருமாந்திரத்தை ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்வதற்காக மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! காங்கிரஸ் கட்சியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே பாடம், ஒரு தலைமை, ஒரு பொது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறவர்கள்  எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது  ஒன்று மட்டும் தான்!  தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் என்று பேசுகிற இடத்தில் ஒரு கட்சியைப் பற்றி, அரசியலைப் பற்றிய  பேச்சு ஏன் வந்தது என்று கேட்டால்,  இங்கே இந்தியச் சூழ்நிலையில் அரசியல் என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் புகுந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பதால் தான்! தவிர்த்து விட்டுப் பேசுவதே கொஞ்சம் அதீதக் கற்பனையாக மட்டுமே நிற்கும்!

ஸ்ட்ராடஜி அண்ட் பிசினஸ் தளத்தில்,  இன்னும் ஒரு பத்து வருடங்களுக்காவது நீடித்து நிற்கும் சில ஐடியாக்களைப் பட்டியலிட்டிருந்தது. ஒரு பத்துக் கருத்துக்கள் அப்படிப் பட்டியலிடப் பட்டிருந்ததைப் படித்து விட்டுக் கொஞ்சம்  யோசிக்கலாமே! நம்முடைய நடைமுறை வாழ்க்கையில், நிறுவனத்தில், தொழிலில் இவை எப்படிப் பொருந்தும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு எனக்கு எழுதுங்களேன்!

ஒரு உதாரணத்துக்காக எனக்குத் தெரிந்த வங்கித் துறையையே எடுத்துக் கொண்டு இந்தக் கருத்துக்களை உரைத்துப் பார்த்து, சரிதானா இல்லையா என்று சொல்ல முனைந்திருக்கிறேன். எனக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்த அபிப்பிராயங்களைச் சொல்ல முடிகிறது. தவறு ஏதேனும் தெரிய வந்து, சுட்டிக் காட்டினால், திருத்திக் கொள்ள ஆட்சேபமேதுமில்லை.  

முதலாவதாக, செயல்படுத்தும்விதம்! 
எவ்வளவு சிறந்த செயல்திட்டமாக இருந்தாலும் சரி, அது வெற்றி பெறுவது, அதை எப்படி நீங்கள் நடைமுறைப் படுத்துகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. மிகச் சிறந்த கன்செப்ட் கூட, மோசமான நடைமுறைப்  படுத்துதலினால், கேலிக்குரியதாகப் போய்விடும்!

பொதுத்துறை வங்கியான பின்னாலும் கூட, கொங்கணி வங்கி என்றே இன்னமும் அறியப்படும் புள்ளிராசா வங்கியில் கோர் பாங்கிங் வந்தாயிற்று! ஆனாலும் இன்னமும், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில், பின்தங்கியே இருக்கிறது. மிகச் சிறந்த கோர் பாங்கிங் பாக்கேஜ் தான்! ஆனால், முதல் கோளாறு, தன்னுடைய வாடிக்கையாளர்களை அறிந்து  வைத்திருக்கும் விதத்தில் இருந்து தொடங்குகிறது. கோர் பாங்கிங்கில் இருக்கும் மிக அருமையான அம்சமே, வாடிக்கையாளரைப் பற்றிய முழு விவரங்கள், அதை வைத்துக் கொண்டு அவர் கேட்கும் வசதிகளை வழங்குவதில் உடனடியாக முடிவெடுக்கும் தொழில்நுட்பம் தான்!  இந்த வங்கியில், வாடிக்கையாளருடைய  விலாசம், தொலை பேசி எண், என்ன வேலை செய்கிறார் என்ற விவரங்களே முழுமையாக இருக்காது. வாடிக்கையாளர்களுடைய கையெழுத்தைப் புதுப்பிப்பதும் கூட மாமாங்கத்துக்கு ஒரு தரம், அல்லது இரண்டு மாமாங்கத்துக்கொரு தரம் தான்!  இந்த வங்கியின் ஒரு கிளையில், பலசமயம் ஏடிஎம் இயங்காது ! என்ன காரணமென்று விசாரித்துப் பார்த்தால், மெஷினுக்குப் பணத்தை லோட் செய்வது யார் என்பதில் அந்தக் கிளையில் இருக்கும் இரண்டு அதிகாரிகளுக்குள் இருக்கும் பனிப்போர்!   ஏடிஎம் வரவுசெலவை சரிபார்ப்பது எப்படி என்று கூட அந்த இரண்டு பேருக்குத் தெரியாது என்பது கொசுறுத் தகவல்!

இரண்டாவதாக, தொடர்ந்து கற்றுக்கொள்ளும் நிறுவனமாக இருப்பது! 

பெரும்பாலான பிரச்சினைகள், கற்றுக் கொள்வது என்பது தொடர்ச்சியான ஒன்று என்பதை மறந்து விடுவதால் எழுவது  தான்! எவ்வளவு கோளாறுகள் இருந்தாலுமே, படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு செயல்படுகிற தன்மை தலைமையில் இருந்து கடைசி ஊழியர் வரை இருக்குமேயானால், அத்தகைய நிறுவனத்தை வெல்வதற்கு எவராலும் முடியாது.  
புள்ளிராசா வங்கியின் மிகப் பெரிய பலவீனமே, அது கற்றுக் கொள்வதை ஒரு பண்பாகக் கொண்டிருக்கும் நிறுவனம் அல்ல! பொறுப்பைத் தட்டிக் கழிப்பது, ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்சாக இருக்க மட்டுமே தெரிந்த பல்லக்குத் தூக்கிகள் அல்லது ராஜ விசுவாசிகள், இது தான் அந்த வங்கியின் நீண்ட நாள் சரித்திரம்! Professionalism என்று சொல்கிற தேர்ந்த நிர்வாகம், தலைமை இருந்ததே இல்லை. தவறிப்போய்  இரண்டு சந்தர்ப்பங்களில் மானேஜிங் டைரக்டராக  வந்தவர்கள் ஒரு தொழில் முறை சார்ந்த முடிவுகளை மேற்கொண்ட போது அவர்கள் பாடு திண்டாட்டமாகப் போனது! 1980 களில் ஒருவர் வந்து, decentralisation  என்று முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பரவலாக்க முயன்றார்! அடுத்தவனுக்குப் பல்லக்குத் தூக்கியே, முடிவெடுப்பதை அடுத்தவனிடம் விட்டே ஒட்டுண்ணிகளாக வாழ்ந்த அந்த வங்கியின் அதிகாரிகளிடம் வரவேற்பில்லை. 
நான்கு ஜெனரல் மானஜர்கள்! ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி  விசுவாசி கோஷ்டிகள்! அதில் பிரதானமான இரண்டு, தலைமை நிர்வாகிக்கு எதிராகக் கலகக் கொடிதூக்கி, ஊழியர்கள் சங்கம் ஒன்றைத் தூண்டிவிட்டு, தலைமை நிர்வாகிக்கு அரசியல் பின்னணியோடு ஆப்பு வைத்தது. இருபது வருடம் கழித்து இன்னொருவர் வந்தார்! ஜெனரல் மானேஜர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்! கீழே கையை வைக்கவில்லை, தலைமையில் இருந்து கடுமையான நடவடிக்கைகள் ஆரம்பித்துக் கடைசிவரை ஒரு ஒழுங்குக்கு வந்து வங்கி நிஜமாகவே சரிவில் இருந்து மீண்ட நேரம், இன்னொரு ஊழியர் சங்கம் கலகக் கொடி தூக்கியது! அரசியல் பின்னணி, தலைமை நிர்வாகியை இன்னொரு வங்கிக்கு மாற வைத்தது! புள்ளிராசாவுக்குப் புள்ளி கூடிக் கொண்டே வந்தது தான் மிச்சம்!

மூன்றாவதாக, நிறுவனப் பண்புகள்! 

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அதன் நோக்கங்கள் தெளிவாக வரையறுக்கப் பட வேண்டும்! அந்த நோக்கங்களை எப்படி அடையப் போகிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.  ஊழியர்கள், வாடிக்கையாளர்களுடைய நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனம் இருக்க வேண்டும். கார்பரேட் பண்புகள் என்பது வளருகிற எந்த ஒரு நிறுவனத்திற்கும் மிக முக்கியமானது.
புள்ளி ராசா வங்கிக் கிளைகளில் மிஷன் ஸ்டேட்மென்ட், சிடிசன் சார்டர் இப்படிப் பல போஸ்டர்கள் தொங்கும்! அதற்கு என்ன அர்த்தம், பின்னணி என்பது அங்கே பணி புரியும் எவருக்காவது சொல்லப் பட்டிருக்குமா, புரிந்திருக்குமா என்பது சந்தேகமே! Six Sigma, TQM, இப்படி நிறுவனங்களில் நிறைய மாறுதல்கள் வந்து கொண்டிருந்தன. ஆரம்ப காலங்களில் மாற்றங்களைப்  புரிந்துகொண்ட செயல்படுத்த முனைந்த இந்திய நிறுவனங்கள் மிகக் குறைவு தான்! பின்னால், இந்த கன்செப்டுகளைப் பேசுவதே ஒரு ஃபேஷனாகிப் போனது! புள்ளி ராசா வங்கியும் கூட அப்படித்தான்! போஸ்டர்களில் இருந்த வாசகங்கள், அரசியல்வாதிகள் தரும் வாக்குறுதிகளைப் போலவே வெறும் வார்த்தைகள் தான்!

நான்காவதாக, வாடிக்கையாளருடனான உறவு முறையை நிர்வகிப்பது!

முதலில் வாடிக்கையாளர் யார், அவர்  எப்படிப்பட்டவராக இருப்பதை நிறுவனம் விரும்புகிறது என்பதைப் பொறுத்தே அந்த நிறுவனம் வாடிக்கையாளருடனான உறவு நீடித்திருப்பதா, அல்லது தற்காலிகமானதா, முறித்துக் கொள்ள வேண்டியதா என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கும்! ஒரு நல்ல நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடனான உறவு முறை நீண்ட காலத்துக்கு நீடிப்பதையே விரும்பும்!  உறவின் தன்மையை, நிறுவனமும் வாடிக்கையாளரும் பரஸ்பரம் கொண்டிருக்கும் நம்பிக்கை, பயன்பாடு, ஆதாயம் இந்த மூன்றுமே தீர்மானிப்பதாக இருக்கும்.
The Power of Ultimate Six Sigma நூலில் அதன் ஆசிரியர் கெகி ஆர் போடே வாடிக்கையாளர்களை, நிறுவனத்திற்கும் அவர்களுக்குமிடையிலான உறவை, பரஸ்பர ஆதாயங்களின் அடிப்படையில், பிளாட்டினம், தங்கம், வெள்ளி, செம்பு, தகரம் எனத் தரம் பிரித்து, வாடிக்கையாளர்களுடனான உறவை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று விவரித்திருப்பதை, விரிவாக இன்னொரு தனிப்பதிவாகப் பார்க்கலாம். சுருக்கமாக பார்ப்பதற்கு , ஒரு வங்கியையே எடுத்துக் கொள்வோம்.
ஒரு வங்கியின் குறிப்பிட்ட ஒரு கிளையில் நான்காயிரம்  வாடிக்கையாளர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். எண்பது:இருபது என்ற பரேடோ கோட்பாடின்படி, மிகக் குறைந்த சதவீதம் தான், ஒரு வரவு செலவின்  பெரிய ஆதாயத்தைத் தருவதாக இருக்கும். அதையே தலைகீழாகப் பார்த்தால் எண்பது சதவீதப் பேரிடமிருந்து அந்த வங்கிக்கு எந்தப் பயனுமில்லை. ஒரு வாடிக்கையாளர், அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் பற்று இருக்கிறது!  அவருடைய  வரவுசெலவில் வங்கி வட்டியாக, வருடத்திற்குக் குறைந்தபட்சம், பதினைந்து லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டுகிறது. இதர இனங்களில், கமிஷன், எக்ஸ்சேஞ் இனங்களில் இன்னும் ஒரு ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு சிறிய கிளை, அதன் மொத்த வருவாயே ஆண்டுக்கு ஒருகோடி ரூபாய்க்கும் கீழ் தான் என்ற நிலையில், இந்த வாடிக்கையாளர், அந்தக் கிளையின் மிக முக்கியமான வாடிக்கையாளராக, மிகக் கவனமாகக் கையாளப்படவேண்டிய, நீண்ட கால உறவுக்குத் தகுதியானவராக ஆகிறார்.

இன்னொருவர், அவரும் வங்கியில் ஒரு ஐம்பதாயிரம்  ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். மாதச் சம்பளம் பெறுகிறவர், சம்பளத்தில் மாதா மாதம் பிடித்தம் செய்கிற விதமாக! இவருக்கு இரண்டு மாதம் சம்பளப் பிடித்தம் ஆகவில்லை, கோர்பான்கிங்கில் பணம் இருப்பு இருக்கும் போது பாக்கி முழுதையும் பிடித்தம் செய்து விடுகிறமாதிரி ஏற்பாடு,  தான் ஒப்புக் கொண்டபடி தவணையைக் கட்டவில்லை, அது பிடித்தமாகி இருக்கிறது என்பதெல்லாம் இவருக்கு முக்கியமில்லை, இப்போது மொத்தமாகப் பிடித்தது அவருக்குக் கஷ்டமாக இருக்கிறது. கத்த ஆரம்பித்து விடுகிறார்.

இன்னொருத்தர், செக் புக் வாங்கியிருக்கிறார், மினிமம் பாலன்ஸ்   குறைகிறது, அதற்குக் கட்டணம் விதிக்கப் படுகிறது. அவர், மினிமம் பாலன்ஸ் மாதிரி  விஷயங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை, அவரும் கத்த ஆரம்பிக்கிறார். இன்னொருவர், அவருக்கு ஒரு நாளைக்குப் பத்துத் தரம் பாஸ் புக் என்ட்ரி பண்ணியே ஆக வேண்டும்! கிளியரிங்கில் செக் வந்ததா, என்ன செக் வந்தது என்று அவருக்கு போன் செய்ய வேண்டும், அவர் இதோ கட்டுகிறேன் என்று சொல்வார், மாலை காஷ் கவுண்டரை மூடுகிற வரை, மூன்று நான்கு இன்ஸ்டால்மெண்டில் பணம் கட்டுவார், அப்போதும் கூட செக்கிற்குப் போதாது. மானேஜர் தற்காலிகமாக ஓவர்ட்ராப்ட் அனுமதிக்க வேண்டும்! இது தினசரி நடக்கும் கூத்து.

சுருக்கமாகச் சொன்னால், பலருடைய வங்கி வரவு செலவுகளைக் கவனித்துப் பார்த்தால், அவை ஒன்றும் போற்றிப் பாதுகாத்துக் கொள்ளப் பட வேண்டிய லட்சிய உறவுகள் இல்லை என்பது தெரியும்! வாடிக்கையாளர் சேவை என்பது, ஒருவழிப்பாதை அல்ல என்பதே இங்கே நிறையப் பேருக்குப் புரிவதில்லை! அல்லது, நம்மைப் பற்றி நாம் மிகப் பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பதை, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியும் அப்படியே அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சரியல்லவே!

கெகி ஆர் போடே சொல்வது இது தான்! நல்ல வாடிக்கையாளர் சேவை என்பது, வாடிக்கையாளரைத் தரம்பிரித்துக் கழிக்க வேண்டியவை எவை, காப்பாற்றிக் கொள்ள வேண்டியவை எவை என்பதைத் தெளிவாக வரையறுக்கும்போது, செயல் படுத்தும் போதுதான் கிடைக்குமென்கிறார்!
Customer Relational Management  என்பது நிச்சயமாக எல்லாவற்றையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது அல்ல!  
Win-Win என்று இரு தரப்புமே ஜெயிக்கிற மாதிரி இருப்பதில் தான் வெற்றிகரமான CRM இருக்கிறது!

ஐந்தாவதாக, தொழில்நுட்பமே பெரும் சவாலாக!
சவால்களைச் சமாளித்து  முன்னேறிச் செல்லப் பெரும் ஊக்கமாக!

தொழில்நுட்பம் என்பது நிச்சயமாக பெரும் முன்னேற்றத்துக்கு அடிப்படை என்பதெல்லாம் உண்மைதான்!  புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது பெரும்பாலான நிறுவனங்கள் சில அடிப்படையான தவறுகளைச் செய்கின்றன. முதலாவதாக, அவை தற்போதைய வாடிக்கையாளர்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுத்தப் படுகின்றன. அப்படி தற்போதைய வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு செயல்படுத்துவதாக நினைப்பதில் கூட, தங்களுடைய வாடிக்கையாளர்களை புரிந்து வைத்திருப்பது சரிதானா என்று சோதித்துப் பார்க்கக் கூட முயற்சி இருப்பதில்லை.

நேற்றுவரை சௌகரியமாகப் பழகிப்போன மனநிலையில் இருந்து விடுபடுவதற்கு, வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்குத் தயாராக, அதற்குத்தகுந்தபடி நடைமுறைகளைப் புதிதாக  வடிவமைத்துக் கொள்வதற்குத் தயாராக இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முந்திக் கொள்ளும் நிறுவனங்கள்  மட்டுமே ஜெயிக்கின்றன!
Disruptive Innovation!  இங்கே இந்த வார்த்தையின் பொருளென்ன, இது எப்படிச் செயல்படுகிறது என்பதின் சிறு விளக்கமும், ஒரு வீடியோவும்! 
.......................................................................

பத்து விஷயங்களாக சொல்ல ஆரம்பித்ததில் முதல் 5 கருத்துக்களை மட்டுமே இந்தப்பதிவில் சொல்லப் பட்டது. புள்ளிராசா வங்கிக்கு புள்ளிகள் குறைந்திருக்கிறதா  கூடியிருக்கிறதா என்ற நடப்பு நிலவரம் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 

இந்தப்பதிவின்  முக்கியமான சாரம் என்னவென்றால், எந்தவொரு  நிறுவனமும் பிழைத்திருக்க சோஷலிசம், சமூகநீதி, சமநீதி என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது. இப்படி இங்கே விளக்கிக் கொண்டிருக்கும்  சமயத்தில் அந்தப்பக்கத்துப் பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டம்  

BSNL ஆக மாற்றம் கொள்ளும் பொழுது புதிதாக எந்த வேலைக்கும் ஆள் எடுப்பதில்லை (No New Recruitment) என்று தொழிற் சங்கங்களோடு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் கண்ட பலன்கள் தாம் பிரதானமானது. கீழ் மட்டத்தில் பணி புரிந்தவர்கள் பதவி உயர்வு பெறவும், பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகள் அவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப மூன்றாம் நிலை ஊழியர்கள் வரை வேலை பெறவும் அது வழி வகுத்தது. இலாகாவில் பெற்ற அனுபவக் கல்வி மூலம் technical துறைகளில் பணியாற்றுவோர் இன்றைய தொழிற் போட்டிக்கு ஈடு கொடுத்து வருகிறார்கள் என்பது முக்கியமாக கணக்கில் கொள்ள வேண்டிய விஷயம்.
இதை ஒரு தகவலாக மட்டுமே சொல்ல இந்த நேரத்தில் ஆசைப்படுகிறேன். 

BSNL ஏன் ஒரு தேங்கிப்போன நிறுவனமாகிப்போனது என்ற கேள்விக்கு விடை வேறெங்கும் தேட வேண்டியதே இல்லை. Complacency ஒருபோதும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாது. ஐந்தாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை இன்னொரு முறை வாசித்துவிடுங்கள்!
      

        

ரங்கராஜ் பாண்டே! சேட்டைக்காரன்! இந்தியா டுடே!

பிரியங்கா வாத்ரா தான் முதலில் வாயை விட்டது! ஏன் நான்  வாரணாசியில் போட்டியிடக் கூடாதா? அவரே அப்புறம் தலைமை சொன்னால் வாரணாசியில் போட்டியிடுவேன் என்று சொன்னார். காங்கிரஸ் தலீவர் ராகுல் காண்டி கூட சஸ்பென்ஸ் இன்னும் சிலநாள் நீடிக்கட்டுமே என்கிறமாதிரி மழுப்பலாகச் சொன்னார். ஆக, சோனியா வாரிசுகளே ஊதிப் பெரிதாக்கிய விஷயம் கடைசியில் புஸ்ஸாகிப் போனது. 

நேற்றுவரை இவர்களைத் தூக்கிப் பிடித்த ஊடகக்காரர்கள்  பர்கா தத் முதலானவர்கள் மூஞ்சி செத்துப் போனதில் என்னென்ன சொல்லியிருப்பார்கள்? இவர்களுடைய  ட்வீட்டர் கொலேஜ் கூட முகநூலில் கிடைத்துப் பகிர்ந்திருந்தேன். ரங்கராஜ் பாண்டே கொஞ்சம் சுற்றிவளைத்துச் சொல்வதோடு உல்டாவாகவும் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அப்படிப் போட்டியிட மாட்டார்கள் என்பது உண்மைதான் என்றாலும் பப்பியும், பப்புவும் திரும்பத்திரும்ப  அதையே பேசியது எதற்காகவாம்? பாண்டே பதில் சொல்ல மாட்டார்.     .

Venugopalan
”ஆஜ்தக்” & “இந்தியா டுடே” தொலைக்காட்சிகளுக்கு பிரதமர் மோடிஜி அளித்த பேட்டி, மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
பொதுவாக, மோடிஜி மீது சர்வசாதாரணமாக வைக்கப்படுகிற விமர்சனம் ஒன்று உண்டு. இது பற்றி பேட்டிகண்ட ராகுல் கன்வலும் இறுதியில் குறிப்பிட்டார். ‘உங்களிடமிருந்து எந்தக் கேள்விக்கும் பதிலே கிடைக்காது என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், நீங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டீர்களே!’
‘ஆஜ்தக்’ மற்றும் ‘இந்தியா டுடே’ இரண்டு தொலைக்காட்சிகளும் எந்த அளவுக்கு மோடியைக் கரித்துக் கொட்டுகிறவர்கள் என்பதை அனைவரும் அறிவர். மோடிஜியே கூட இந்தப் பேட்டியின்போது இதை வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல ஒன்றுக்கு மூன்று முறை குத்திக் காட்டினார். ஆனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, பேட்டி கண்ட மூவரும் இழுத்த இழுப்புக்கு இணங்கி, அவர்கள் எப்படியெல்லாம் கேட்க விரும்பினார்களோ, என்னவெல்லாம் கேட்க விரும்பினார்களோ, எல்லாவற்றையும் அனுமதித்து, ஒவ்வொரு கேள்விக்கும் போதுமான பதிலை மோடிஜி அளித்திருக்கிறார். இதற்கு முன்னர், இன்னொரு மோடி எதிர்ப்புத் தொலைக்காட்சியான ‘ABP’க்கும் இதே போன்று ஒரு பேட்டியை சமீபத்தில் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியாமலோ, விரும்பாமலோ திசைதிருப்பி வேறு கேள்விக்கு முண்டியடிக்காமல், பொருத்தமான பதிலை, உரிய தகவல்களுடன், தேவையான அளவு நகைச்சுவை, காட்டம் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து ஒரு நீண்ட நெடிய பேட்டியை சற்றும் சுவாரசியம் குறையாத ஒரு அனுபவமாக்கினார்.
வேலைவாய்ப்பு குறித்து ராகுல் கன்வல் கேட்ட கேள்விக்கு, “உங்கள் அலுவலகத்திலேயே கூட ஆட்கள் அதிகமாகிவிட்டதால், உட்கார இடமின்றி சிலர் நின்றுகொண்டே வேலை பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன். இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?” என்று மடக்கியதும் ராகுல் கன்வலிடம் பதில் இல்லை.
தீவிரவாதச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சாதுவி பிரக்ஞாவுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதித்தைப் பற்றிக் கேட்கப்பட்டபோது அவர் அளித்த விளக்கம் பிரமாதம். “என்மீது கூடத்தான் எத்தனை எத்தனையோ பயங்கரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளால், அமெரிக்கா எனக்கு விசா கொடுக்க மறுத்தார்கள். இப்போது அதே அமெரிக்கா எனக்கு அழைப்பு விடுக்கவில்லையா? நான் போய் வரவில்லையா? இதுபோல திட்டமிட்டு ஒருவர் மீது குற்றம்சாட்டுவது புதிதல்ல. அதுவும் ஆயிரக்கணக்கான வருடங்களாய்த் தழைத்து வருகின்ற ஹிந்து தர்மத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அந்த தர்மத்தோடு தீவிரவாதத்தைத் தொடர்புபடுத்தி அரசியல் செய்கிறவர்களுக்கு எதிர்வினையாக, சாதுவி பிரக்ஞாவை தேர்தலில் நிறுத்துவதுதான் நியாயம்.” என்று ஆணித்தரமாக தனது கருத்தைத் தெரிவித்தார்.
மமதா பானர்ஜி குறித்து....
“2009-ல் இதே மமதா பானர்ஜி, மே.வங்கத்தில் சட்டவிரோதமாகக் குடியேறுகிறவர்கள் குறித்து ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார். காகிதங்களைக் கிழித்து வீசியெறிந்தார். அங்கே குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தினாலொழிய தேர்தல் நடத்த முடியாது என்று ஆவேசப்பட்டார். இன்று அந்த மமதா பானர்ஜி இப்படி மாறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரது விஷயத்தில் எனது கணிப்புகள் அனைத்தும் தவறி விட்டன என்பது வேதனையாக இருக்கிறது.”
பணமதிப்பிழப்பு குறித்து....
”அது தேர்தலுக்காகச் செய்யப்பட்டதல்ல. ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த உ.பி. தேர்தலில் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், நடந்தது என்ன? பணமதிப்பிழப்புக்குப் பிறகும் நாங்கள் அபாரமான வெற்றியை அடைந்தோம். 2014 தேர்தலின்போது நாங்கள் விலைவாசி குறித்தும் பேசினோம். இப்போது எதிர்க்கட்சிகள் விலைவாசி குறித்து ஏன் பேசுவதில்லை? பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்திருப்பதற்கு பணமதிப்பிழப்பும் ஒரு முக்கியமான காரணமாகும்.”
முத்தலாக் குறித்து....
“முத்தலாக் விஷயத்தை மத அடிப்படையில் பார்க்கக்கூடாது. வரதட்சணைத் தடுப்புச் சட்டம் ஹிந்து விரோதச் சட்டமா? பால்ய விவாகத் தடுப்புச் சட்டம் ஹிந்து விரோதச் சட்டமா? முத்தலாக் தடுப்புச் சட்டம் பெண்களின் மாண்பைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் முத்தலாக் தடை செய்யப்பட்டிருக்கிறபோது, இந்தியாவில் மட்டும் எப்படி அனுமதிப்பது?”
ஜம்மு-காஷ்மீர் குறித்து...
“மெஹபூபா முஃப்தியுடனான எங்களது உறவு எண்ணையும் தண்ணீரும் சேர்ந்த கலப்படம். மக்கள் தீர்ப்பு குழப்பமாக இருந்த காரணத்தால், வேறு வழியின்றி கூட்டணி அரசு அமைந்தது. காஷ்மீரைப் பொறுத்தவரையில், இரண்டு குடும்பங்கள் குத்தகைக்கு எடுத்திருப்பதுபோல நடந்து கொள்கிறார்கள். தனி ஜனாதிபதி, தனி பிரதமர் என்றெல்லாம் அவர்கள் பேசுவதை, அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிற எந்தக் கட்சியும் இதுவரை ஏன் கண்டிக்கவில்லை?”
”இங்கே மே.வங்கத்தில் தேர்தல் வன்முறை அதிகமாகி, தினம் கொலைகள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலின்போது ஒரு வன்முறை சம்பவமும் இன்றி, 75% வாக்குப்பதிவு நடந்தது எப்படி என்று யோசிக்க வேண்டாமா?”
காங்கிரஸ் அறிவித்துள்ள “நியாய்” திட்டம் குறித்து...
”காங்கிரஸ் 2009-ல் சுமார் ஆறு லட்சம் கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவர்கள் ரத்து செய்தது வெறும் 52,000 கோடி மட்டுமே! அதிலும் பெரும்பாலான தொகை நிலமே இல்லாதவர்களுக்கும், விவசாயத்துடன் சற்றும் சம்பந்தமில்லாதவர்களுக்கும் சென்று சேர்ந்தது. 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் ஆகியவை அப்போது பெருமளவு பேசப்பட்டதால், இந்த விவசாயக்கடன் தள்ளுபடி ஊழல் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. ”
“இப்போதுகூட, ம.பியிலும் ராஜஸ்தானிலும் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நாடறியும். ஆகவே, காங்கிரஸ் அளிக்கிற வாக்குறுதிகளை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.
2019 பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் குறித்து...
“2014 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மிகக்குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகியது காங்கிரஸ். 2019 பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலேயே மிகக்குறைவான தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட இருக்கிறது. இதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.”
2019-தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாய்ப்பு குறித்து...
“2014-ல் பெற்றதைக் காட்டிலும் அதிக இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும்.”
“2014-ல் வென்றதை விட அதிக இடங்களில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும்.”
”2014-ல் கிடைத்ததை விட அதிக வாக்கு சதவிகிதம் பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும்.”
“2014-ல் வெற்றி பெறாத தொகுதிகளிலும் மாநிலங்களிலும் கூட பா.ஜ.க. வெற்றி பெறும்.”
இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு, திறம்பட பதிலளித்திருந்தார் பிரதமர் மோடிஜி. தேசப்பாதுகாப்பு, மேக்- இன் – இந்தியா, கங்கை தூய்மைப்படுத்துதல், ஜி.எஸ்.டி என்று கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளித்திருக்கிறார். எல்லாவற்றையும் மொழிபெயர்த்துப் போட்டால், ஒரு ‘லைக்’ போட்டுவிட்டு தப்பித்து ஓடுகிறவர்கள் அதிகம் இருப்பார்கள் என்ற அபாயம் காரணமாக, சில சோறு பதம். அவ்வளவே!
இந்தப் போட்டியின் தொடர்ச்சியாக, இன்று இந்தியா டுடே ஒரு குட்டி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். அதில், பேட்டியை மோடிஜி கையாண்ட விதம் குறித்து, அவரைப் பேட்டிகண்ட மூவரும் மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள்.
ஒருபடி மேலே போய், ராகுல் கன்வல் ‘இதே மாதிரி ராகுல் காந்தியையும் ஒரு பேட்டி எடுக்கலாமா?’ என்று ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார்.

அந்த குட்டி வீடியோ 
தயவு செய்து செய்யுங்கள்! அவசியம் ராகுல் காந்தியையும் பேட்டி காணுங்கள்.
தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால், மீம்ஸ் போடுகிறவர்கள் சற்றே ஆசுவாசமாகக் காணப்படுகிறார்கள். அவர்களை உசுப்பிவிட இதைவிட நல்ல யோசனை இருக்கவே முடியாது. என்று முடித்திருக்கிறார். 

முழுப்பேட்டியும் இங்கே  
   

Saturday, April 27, 2019

எதில்தான் அரசியல் செய்வது? விவஸ்தையே இல்லையா?

நம்மூர் திமுக, மற்றும் முட்டுச்சந்து போராளிகளிடம் சிக்கிக் கொண்டிருப்பது விளையாட்டு வீராங்கனை கோமதி மாரிமுத்து. அவரேதான் இவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டாக வேண்டும். இதற்குமுன்  சில அமீரகப் போராளிகள் ரீஷேர் செய்த பதிவுகளில் தினமலர் மீதான வன்மம் கொட்டப்பட்டுக் கிடந்தது. வெள்ளி வென்ற வீராங்கனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கம் வென்ற கோமதியைப் புறக்கணித்த மாதிரி திரிசமன் வேலை அது! 


செல்வி கோமதி அவர்கள், கிழிந்த ஷூ உடன் ஓடினேன் என்றது இந்தப்போட்டியில் இல்லை ஐயன்மீர். அவருடைய கடந்த காலங்களைச் சொல்கிறார். சொந்தக்காசில் தான் போட்டிகளுக்காக விமானத்தில் செல்வதாகச்சொன்னதும் கடந்த காலங்களே. அவர் தற்போது sports quota வில் மத்திய அரசுப்பணியான வருமான வரித்துறையில் பணி கிடைத்து, பெங்களூரில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணி புரிகிறார்.

இவர் தங்கம் வென்றிருப்பது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில். அதற்கு இவரை அனுப்பியது இந்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் கிடையாது. தடகளப் போட்டிகளை நடத்துவதற்கென்றே இருக்கும் Athletic Federation of India - AFI என்கின்ற அமைப்பு. இந்த AFI என்பது, அரசு உதவி பெற்று, அரசு அனுமதியோடு, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க, பயிற்சி கொடுக்க, போட்டிகள் நடத்த அமைக்கப் பட்டது. அதேபோல இதே சகோதரி கோமதி அவர்கள், இதே ஆசிய போட்டிகளில், 2013ல் 7வது இடத்திலும், 2015ல் 4 வது இடத்திலும் வந்தவர். அப்போதும் இவர் AFI சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஷூ பஞ்சாயத்துக்கு வருவோம். எந்தவொரு international போட்டிகளிலும், கிழிந்த ஷூ உடனெல்லாம் ஓட முடியாது. அதேபோல வேறு வேறு ஷூவும். எல்லாமே தரம் பரிசோதிக்கப் பட்டு சரிபார்க்கப்பட்டே அனுமதிக்கப்படும். அதேபோல வீரர்களுடைய உடை, காலணிகள் என அனைத்திற்கும் ஏகப்பட்ட விதிகள் & கட்டுப்பாடுகள் இருக்கிறது.
செல்வி கோமதி உண்மையில் வாய்ப்புக்காக சிரமப்பட்டது, கடந்த காலங்களில். தன்னுடைய தந்தை, தாய் மற்றும் ஏழ்மை நிலையோடு போராடி வென்றிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல், தன்னுடைய கடந்த கால சிரமங்களைப் பற்றி சொல்லியிருப்பதையும், இரண்டு நிறங்களில் இருக்கும் ஷூக்களையும் தவறாக எடுத்துக்கொண்டு ஏகப்பட்ட நண்பர்கள் அறச்சீற்றம் கொள்கிறீர்கள் என்று ரா.புவன் குமுதம் தளத்தில் எழுதி இருக்கிறார். குமுதம் தளத்தின் முகநூல் பகிர்வில் பார்த்தது  அதற்கு வந்த இரு பின்னூட்டங்கள் 

DrDhana Pathy #போராளிஸ்


கோமதிமாரிமுத்து பிஞ்ச காலணியை போட்டுட்டு ஓடினார்
கோமதிமாரிமுத்து இரண்டு வேறு காலணிகளை போட்டுட்டு ஓடினார்.
ஆக.. இவனுக எவனுமே படிப்பறிவில்லாத முட்டாப்பயலுகன்னு தெளிவா தெரியுது

உசைன் போல்ட் என்ன பஞ்சத்துக்கு பொறந்தவரா?

இரு வேறு விதமான காலணிகள் அணிய காரணம் என்ன?

ஒவ்வொரு ஓட்டப்பந்தய வீரருக்கும் இரு கால்களிலும் உந்து சக்தி வேறுபடும்.ஓடத்தொடங்கியவுடனும், கடைசி கோட்டை தொட தாண்டும்பொழுதும் இரு கால்களில் ஏதோ ஒரு காலை மட்டுமே அதிகமாக பயன்படுத்தி உந்தித் தள்ளுவார்கள்,

உந்து சக்தி அதிகமாக உள்ள காலில் பிடிமானம் அதிகமாக உள்ள காலணி அணிவார்கள்.காலணிகள் இரண்டும் தடகள வீரரின் உயரம், இரு கால்களின் அளவு/உந்து சக்தி ஆகியவை கணக்கில் கொண்டு பயிற்சியாளர் துனையுடன் கவனமாக தேர்ந்தெடுக்கப்படும்

சமீப காலமாக State meet களிலேயே  இரண்டு நிற ஸ்பைக்ஸ் (Spikes running shoes) போட்டு ஓடுவது வழக்கமாம்.

அரசு ஒரு உதவியும் செய்யவில்லை என்ற பொய்யும் நேற்றிலிருந்து பரப்புகிறார்கள்.
#போராளிகளை போல முட்டா புண்ணாக்குகளாக இருக்க வேண்டாம். 

Madhu Ramachandran  சரவணன் சுவாமி என்பவர் எழுதிய பகிர்வை எடுத்துக் போட்டிருக்கிறார். 

பக்கா திமுக-காங் தயாரிப்பான கோமதி மாரிமுத்துவுக்கு செருப்பு வாங்க பணமில்லையாம்! உள்ளூர் போட்டிகளில் வென்றதால் மத்திய அரசு பணி.. மாதம் 4 நாட்கள் வேலைக்கு முழு சம்பளம்.. அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம்... இலவச வீடு புதுப்பித்தல்..

பாஜக மீது அவதூறு பரப்ப திமுக தந்தது 10 லட்சம். காங்கிரஸ் தந்தது 15 லட்சம்.. இவர்களின் பிண அரசியலுக்கு அனிதா பலியானது போல் இல்லாமல் உஷாராக இருப்பது கோமதிக்கு நலம்! 

வெற்றி கிடைக்கும் போது பணிவு தேவை... வீண் பகட்டு, விளம்பரம், அரசியல் செய்தால் விரைவில் திறமையற்று ஏதாவது ஸ்கூலில் பிடி டீச்சராக வேண்டியிருக்கும்! திமுக-காங் பிண அரசியல் குறித்து கோமதி தெரிந்துகொள்வது நல்லது. காரியம் முடிந்துவிட்டால் திமுக-காங் திரும்பி கூட பார்க்க மாட்டான்.. மத்திய அரசின் மீது அவதூறு பரப்பவைக்கும் சதிவலையில் விழாமல் இருப்பது கோமதியின் எதிர்காலத்திற்கு நல்லது!

பல லட்சம் பணம் செலவழித்து அனிதாவை சுப்ரீம்கோர்ட் வரை சென்று வாதாட வைத்த திமுகவுக்கு தாங்கள் நடத்தும் மருத்துவக்கல்லூரியில் ஒரு மேனேஜ்மெண்ட் கோட்டா சீட் கொடுத்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார்.. இதுதான் திமுக பிண அரசியல்.

முகநூலில் ஜவஹர் புருஷோத்தமன் எஸ்ரா சற்குணம் பாட்டுக்குப் பாட்டு மருத்துவர் ராமதாசிடமிருந்து வந்திருப்பதைச் சொல்லி இப்படி நகைக்கிறார் 


இதுக்கு அந்தாள செருப்பாலயே அடிச்சிருக்கலாம் 😀
பேராயர் எஸ்ரா சற்குணம் விடுதலை சிறுத்தையாக இருப்பதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. அதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உண்டு!
-மருத்துவர் ராமதாஸ்

நம்மூர் அரசியல் என்பது விவஸ்தைகெட்டதனம் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்! அதற்காக இந்த அளவுக்கா விவஸ்தைகெட்டு நடந்து கொள்வது?  

அரசியல்களம்! கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க!


அண்ணே...இது தான்ணே டெஸ்க்டாப்பு. நெட்டு கனெக்ட் செஞ்சுட்டு இந்த மோஸில்லா ஃபையர் ஃபாக்ஸ க்ளிக் செய்ங்கண்ணே...
டேய்...ஏண்டா படுத்துற...?
அண்ணே...முதல்ல அப்படித்தான் இருக்கும். ரொம்ப ஈஸிண்ணே...
சரி அது யாருடா ரோஸி ஃபையர் ? போட்டோ இருக்காடா...
அண்ணே அது மோஸில்லா ஃபையர் ஃபாக்ஸ்ன்ணே...அது ஒரு புரெளவ்சர்ன்ணே...
துரைமுருகன்ணே...இவன் என்ன சொல்றான்னு புரியுதா ? உள்ளாடைகளப் பத்தி பேசுறானோ ?
அப்பா மாதிரி அசிங்கம் அசிங்கமா சொல்லிக்குடுக்குறான் தம்பி. மண்டபத்துல இன்னேரம் 4 மீட்டிங்குக்கான துண்டு சீட்டு ரெடி பண்ணியிருக்கலாம். இதெல்லாம் உதயநிதியும், அவன் மகனும் பார்க்கட்டும். நீ வா இந்த தடவை துண்டு சீட்டுல 8 வரி இருக்காம். கடினமா இருக்குமாம். வந்து மனப்பாடம் செய்.


இப்படி முகநூலில் R நாராயணன் காட்சிக்களுக்கேற்றபடி கதை சொன்னால் ஒருவர் பின்னூட்டத்தில் சொல்வது  இன்னும் டேமேஜிங்!

Ramesh VT அண்ணே  மௌசை இரண்டு முறை அழுத்துங்கண்ணே .

டேய் என்னை ஏன்டா எலியை புடிச்சி அழுத்த சொல்ற, நான் அந்த அளவுக்கு இல்லடா... ஸ்டாலின்.
 


ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் வாழ்வு மலர தங்க மாளிகை திறப்பு விழாவுக்குத் தனி விமானத்தில் பறந்து சென்று பணி செய்த சோசலிச சமுதாய சமய சார்பற்ற சமதர்மச் சிற்பி வாழ்க! என்று முகநூலில் நக்கலாக வாழ்த்துகிறார் தேவராஜ். மதுரை நகைக்கடைத் திறப்புவிழாவுக்காக விஜய் சேதுபதி தொகுப்பாளினி தியாவுடன் தனிவிமானத்தில் பறந்து வந்தாராம்! அம்மணி படம்புடிச்சு இன்ஸ்டாகிராம் இத்யாதிகளில் பகிர்ந்து கொண்ட படம் வைரலாகப்பரவி இப்படி நக்கலுக்கும் உள்ளாகியிருக்கிறது. சரி, அரசியலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நடிகர்கள் என்ன பேசினாலும் இங்கே அரசியலாக்கப்படும்! அதை வைத்து அரசியலும் செய்யப்படும்! 


பிரியங்கா வாத்ரா வாயாடிதான்! வாய்க்கொழுப்பு உள்ளவர்தான்! ஆனால் அட்டைக் கத்தி! ஒன்றுக்கும் உதவாது என்று சதீஷ் ஆசார்யா சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா? ம்ம்ஹூம்! அவர் மோடி எதிர்ப்பாளர்! என்ன நினைத்து வரைந்தாரோ? உங்களுக்காவது எதுவும் புரிகிறதா?


மம்தா பானெர்ஜிகள் செய்கிற ரசகுல்லா கூட இப்படித்தான்  இருக்குமாம்!

மீண்டும் சந்திப்போம்.
          

Friday, April 26, 2019

கேள்விக்கென்ன பதில்?

நரேந்திர மோடி Vs Who கேள்விக்குப் பதில் என்ன?  என்று சாதாரணமாகக் கேட்டாலே பதில் சொல்லத் தயங்குகிற ஒரு வினோதமான தமிழ் இணையம் இது. இங்கே பரீட்சை எதுவும் வைக்கவில்லை, ஒரு கருத்துக் பரிமாற்றத்துக்காக எழுதுவது தான் என்று மறுபடியும் வலியுறுத்தி ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தாக வேண்டுமோ? 


இப்படி நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி பதில் சொல்வது ஒருவகை என்றால் HTN சேனலில் பர்கா தத் பம்முகிற மாதிரிப் பதுங்குவது இன்னொரு வகை! Rahul Gandhi has walked into a trap by centering his Lok Sabha campaign on anti-Modi narrative, not real issues என்று  FirstPost தளத்தில் தினேஷ் உன்னிகிருஷ்ணன்  நேற்று எழுதிய செய்திக்கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன். தீக்கதிர் குமரேசன்கள் வாதிடுவதுபோல இது நரேந்திர மோடியோ பிஜேபியோ திட்டமிட்டுச் செய்ததல்ல. மோடி வெறுப்பு என்ற ஒற்றைப் புள்ளியிலேயே  தேங்கிப்போன காங்கிரஸ் முதலான அத்தனை எதிர்க்கட்சிகளும் சிக்கிக் கொண்ட படுகுழி அது.


சதீஷ் ஆசார்யா கிண்டல் செய்வதுபோல ஊடகங்களோடு பேட்டி என்பது கத்திகள் மீது படுப்பது அல்ல. முந்தைய பதிவில் விஜய் சேதுபதி லாவகமாக ஊடகக்காரர்களை சமாளிக்கிற விதத்தை வியந்து வீடியோ போட்டிருந்தது கூட விஜய் சேதுபதி புகழ் பாடுவதற்காக அல்ல. பொறுப்பில் இருப்பவர்கள் ஊடகங்களோடு பேசுவதென்பது எப்போதுமே scripted தான்! எல்லோருமே இசுடாலின் போல, ஆக வாய் புளித்ததோ ஆக மாங்காய் புளித்ததோ என்று பேசமாட்டேன் ரகத்தில் பேசுவதுமில்லை. அல்லது ராகுல் காண்டி மாதிரிப் பொறுப்பே இல்லாமல் பேசுவதும் இல்லை.

பர்க்கா தத் பாகவதை:
நிற்கவில்லையெனில் ஏன் சொன்னாய்
பிரியங்கா நிற்கவில்லை எனில் அடியே
நமோவிற் கெதிரில் காசியில் (நிற்க)
ஒருமுறையல்ல இருமுறைகள் ஏன் உறுதி சொன்னாய் மவளே
நமோவிற் கெதிரில் காசியில் (நிற்க)
ஸாகரிகா கோஸ் பெங்காலிப் பாகவதை:
அமேடி போய் விடுமோ தோழி
அமேடி போய்விடுமோ
பரந்து பரந்து எங்கும் நின்றதில்
இரந்த இடம் தோற்றிடுமோ அடியே இடதுடன் மோதி என்ன பலன்
உடன் பிறந்த டெல்லியில் தோற்றிட
அமேடி போய் விடுமோ!
ரோஹிணி சிங் பாகவதை:
அந்தரங்கம் சொன்ன தென்ன மானே
காங்கிரஸ் அந்தரங்கம் சொன்னது என்ன
பிரியமானவள் மோடியுடன் மோதுவள் என்று
அந்தரங்கம் சொன்ன தென்ன தோழி
ஆணிடம் பயந்தாளோ அன்றித் தேருதல்
கணிப்புடன் பயந்தாளோ தோழி, அடீ
மரியா சக்தி - கிறிஸ்தவப் பாகவதை:
துண்டைத் துவள விட்டாரே சகியே
-இந்தத்
தேர்தலில் துண்டைத் துவள விட்டாரே
கொண்ட குடும்பம் என்று வந்திட்டால்
பண்டு உடனிருந்தோர் யாரும் இல்லார்
பின்னும் வெளி மனிதர் மற்றும்
என்றும் அரசியலில் இல்லாதார்
மட்டும் உண்மை அறிவார் இன்று (துண்டை)
ஸபா நக்வி - முஸ்லீம் பாகவதை:
எதற்கு இடங் கொடுத்தீர் வேறு
விதத்தில் நடக்கும் என்று ஏன்
கதைகள் சொன்னீர் காங்கிரஸே நீர்
எதிரியை நோகத் தரமோ பிரியே
விதியை வேகத் தகுமோ பின்னும்
வீட்டின் உள்முற்றம் பாதுகாப்பு என்று
போட்டியென்ற பின்விதியை நோகத் தரமோ!
(மற்ற பாகவதர்களின் கீர்த்தனைகளை வசதிப்படி வாசகர்களே மனசு போல மொழிபெயர்த்துக் கொள்ளலாம்) என்று முகநூலில் நக்கலாக எழுதுகிறார் Kp கள்ளபிரான்!


 மீண்டும் சந்திப்போம்!       

ஊடகக்காரர்கள்! விஜய் சேதுபதி! ராகுல் (சோனியா மகனல்ல)!

எங்கள்Blog இல் கேட்டுவாங்கிப்போடும் கதையாக இந்த செவ்வாயன்று நௌஷத் கான் என்பவர் எழுகிய கதை ஒன்று வெளியாகியிருந்தது. உண்மை கற்பனையை விட விசித்திரமானது என்று சொல்வார்கள் இல்லையா? இந்த வீடியோவைப் பாருங்கள்!


சென்னை பிரெஸ் கிளப்புக்கென்றே தேடி வருகிற வழக்கமான அக்கப்போர்களிலிருந்து விலகி  கொஞ்சம் வித்தியாசமான நேர்காணல் இது. அல்லது ரெட் பிக்ஸ் தளத்துக்கென்றே கிடைத்த வினோதமானதாகக் கூட இருக்கலாம்! எங்கள் பிளாகில் கதைபடிக்கிற, அதன்மீது கதைக்கிற நண்பர்களாக இருந்தாலும்சரி, நேரடியாக இங்கே வந்து வாசிப்பவர்களாக இருந்தாலும் சரி, இந்த நேர்காணல் வெளிப்படுத்தும் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்!   

விஜய் சேதுபதி கொஞ்சம் வித்தியாசமான மனிதராக இருக்கிறார். ஊடகங்களைக் கையாளுவதில் அவருடைய தனித்துவம் வெளிப்பட்ட  நேர்காணலாக இது இருக்கிறது.


சென்னைப் பத்திரிகையாளர்கள் சுத்த சோப்ளாங்கிகள் தானோ என்கிற சந்தேகம் சமீப காலமாக எந்தவொரு முன் தயாரிப்புமே இல்லாமல், வறட்டுத்தவளைகள் போல பேட்டியில் கூவுவதைத் தவிர, கொஞ்சம் ஏமாந்தால் மேலே விழுந்து பிராண்டுகிற பூனைகளாக இருப்பதைக் கவனித்து வருவதில், விஜய் சேதுபதி அதற்கெல்லாம் இடம்தராமல் பேட்டியை நகர்த்திக் கொண்டுபோகிற சாமர்த்தியத்தை, அதையும் சினேகிதப்பூர்வமாகச் செய்வதைப் பார்த்து உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.

ராகுலை மிகவும் பிடித்து போன தருணம் அல்லது ராகுல் ஏன் வருங்கால தலைமுறைகளுக்கான ஆதர்சம்:
ஸ்ரேஷ்டபாரதம் என்கிற நிகழ்ச்சி அமிர்தா டிவியில் ஒளிபரப்பாகிறது. எழுத்தச்சன் ராமாயணத்திலிருந்து ஒரு ராமாயண செய்யுளை கொடுக்கிறார்கள். அதற்கு அதில் பங்கு பெறும் பள்ளிக்கூட மாணவர்கள் விளக்கம் சொல்கிறார்கள். விளக்கமென்றால் அப்படி ஒரு அட்டகாசமான ஆழமான விளக்கம். சிறுவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ராமாயணத்தில் இருக்கும் அற்புதமான அறிவு அபாரம். வெறும் மனப்பாட அறிவல்ல. அதைத்தாண்டி தார்மிக சிந்தனையையும் அந்த மாணவர்கள் வெளிக்காட்டுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் எனும் சிறுவனின் விளக்கம் பிரமாதம். ’நம் சனாதன தர்மத்தில் ஏக தேவ வணக்கம் இல்லை ஏக சைதன்யம் என்பதே இங்கு உள்ளது’ என்கிறான். கம்ப ராமாயணத்துக்கும் இப்படி தமிழ் மாணவர்கள் விளக்கம் கூற அதை கேட்கும் நாள் எந்நாளோ? அப்படி ஒரு டிவி நிகழ்ச்சியை பார்க்கும் நாள் எந்நாளோ? 12:40 இல் இருந்து காணொளியை பார்க்கவும்.  

     
வீடியோவைப் பார்த்தபிறகு அரவிந்தன் நீலகண்டன் ஒரு எழுத்துக் கூட மிகையாகச் சொல்லவில்லை என்பது நன்கு விளங்கியது. அவர் ஏங்கியதைப்போல கம்பராமாயணத்தை நம்முடைய இளஞ்சிறார்களும்  பயின்று இதே போலப் பொருள் சொல்லும் நாள் என்று வருமோ என்ற ஏக்கம் என்னையும் தொற்றிக் கொண்டது. 

மீண்டும் சந்திப்போம்.
  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)