Behindwoods கேபிரியல் தேவதாஸ் பேட்டியெடுப்பதில் இன்னமும் கற்றுக்குட்டியாகவே இருக்கிறார் என்றாலும் ரங்கராஜ் பாண்டேவுடன் இந்த நேர்காணல் கொஞ்சம் சுவாரசியமாக இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். #Homework செய்யாமல் சரியான கேள்விகளைக் கேட்கத் தவறினாலும் ரங்கராஜ் பாண்டே அதைச் சமன்செய்து பதில் சொல்கிறார். ஒரு ஊடகக்காரராக இன்னொரு ஊடகக் காரரை விட்டுக் கொடுக்காமல் பேசுவது தவறில்லைதான்!
முதலில் இந்த மரணமாஸ் தலைப்பை விடுங்கள்! முதல் மூன்று நிமிடங்கள் ஸ்கிப் பண்ணிவிட்டுப் பேட்டி தொடங்கும் இடத்தில் இருந்து பாருங்கள். மூன்றாவது அணிக்கான தேவை எப்போதுமே இருந்துவருகிறது என்றும் திராவிட இயக்கங்கள் தங்கள் அடையாளத்தைத் தொலைத்துவிட்டார்கள் என்றும் ரங்கராஜ் பாண்டே சொல்வதைக் கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டியிருக்கிறது. திராவிடங்கள் அடையாளத்தைத் தொலைத்தது போய்த்தொலையட்டும்! கம்யூனிஸ்டுகளே தங்கள் அடையாளத்தைத் தொலைத்துத் தடுமாறிக் கொண்டே வருவதைக் குறித்துக் கவலைப்படுவார் எவரும் காணோம்!
ரங்கராஜ் பாண்டே இருந்த இடத்தை நிரப்ப சலீம் ரொம்பவுமே சிரமப்படுகிறார்! என்றாலும் நாளை வாக்களிக்க பதினோரு விதமான அடையாளங்களில் ஏதாவது ஒன்று கட்டாயம் தேவை என்று கொஞ்சம் உபயோகமான தகவலைச் சொல்கிறார் என்பதற்காக மட்டும் இந்த வீடியோ! மற்றப்படி மனிதர் கதைப்பதில் கொஞ்சம்கூட சுவாரசியம் இல்லை.
ராகுல் காண்டி அரசியல் பேசுவதே காமெடிக் கொடுமைதான்! அதைவிட மொழிபெயர்ப்புக் கொடுமை இருக்கிறதே, நம்மூர் தங்கபாலுக்கள் காலரை நிமிர்த்திவிட்டுக் கொள்ளலாம்!
வாய்விட்டுச் சிரிக்கலாம்!
கடைசி காணொளி..
ReplyDeleteமொழி புரிந்தால் இன்னும் ரசிக்கலாம்.
முழிபெயர்த்தவர் பிஜே குரியன் பேராசிரியராம்! ஒவ்வொரு வாக்கியத்தையும் ராகுல் இரண்டு மூன்று முறை அவருக்குப் பொறுமையாகச் சொல்ல வேண்டியிருந்தது என்பதும் அதையும் தப்பும் தவறுமாக முழிபெயர்த்தார் என்பதும் முகநூலில் சின்னச் சின்ன வீடியோக்களாக உலாவந்துகொண்டிருக்கிறதே ஸ்ரீராம்! எனக்கும் மலையாளம் தெரியாது, ஒருமுறைக்கு இருமுறை கவனித்துத்தான் என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு ஊகமாகப் புரிந்துகொள்வேன்!
Delete