Sunday, April 28, 2019

ரங்கராஜ் பாண்டே! சேட்டைக்காரன்! இந்தியா டுடே!

பிரியங்கா வாத்ரா தான் முதலில் வாயை விட்டது! ஏன் நான்  வாரணாசியில் போட்டியிடக் கூடாதா? அவரே அப்புறம் தலைமை சொன்னால் வாரணாசியில் போட்டியிடுவேன் என்று சொன்னார். காங்கிரஸ் தலீவர் ராகுல் காண்டி கூட சஸ்பென்ஸ் இன்னும் சிலநாள் நீடிக்கட்டுமே என்கிறமாதிரி மழுப்பலாகச் சொன்னார். ஆக, சோனியா வாரிசுகளே ஊதிப் பெரிதாக்கிய விஷயம் கடைசியில் புஸ்ஸாகிப் போனது. 

நேற்றுவரை இவர்களைத் தூக்கிப் பிடித்த ஊடகக்காரர்கள்  பர்கா தத் முதலானவர்கள் மூஞ்சி செத்துப் போனதில் என்னென்ன சொல்லியிருப்பார்கள்? இவர்களுடைய  ட்வீட்டர் கொலேஜ் கூட முகநூலில் கிடைத்துப் பகிர்ந்திருந்தேன். 



ரங்கராஜ் பாண்டே கொஞ்சம் சுற்றிவளைத்துச் சொல்வதோடு உல்டாவாகவும் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அப்படிப் போட்டியிட மாட்டார்கள் என்பது உண்மைதான் என்றாலும் பப்பியும், பப்புவும் திரும்பத்திரும்ப  அதையே பேசியது எதற்காகவாம்? பாண்டே பதில் சொல்ல மாட்டார்.     .

Venugopalan
”ஆஜ்தக்” & “இந்தியா டுடே” தொலைக்காட்சிகளுக்கு பிரதமர் மோடிஜி அளித்த பேட்டி, மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
பொதுவாக, மோடிஜி மீது சர்வசாதாரணமாக வைக்கப்படுகிற விமர்சனம் ஒன்று உண்டு. இது பற்றி பேட்டிகண்ட ராகுல் கன்வலும் இறுதியில் குறிப்பிட்டார். ‘உங்களிடமிருந்து எந்தக் கேள்விக்கும் பதிலே கிடைக்காது என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், நீங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டீர்களே!’
‘ஆஜ்தக்’ மற்றும் ‘இந்தியா டுடே’ இரண்டு தொலைக்காட்சிகளும் எந்த அளவுக்கு மோடியைக் கரித்துக் கொட்டுகிறவர்கள் என்பதை அனைவரும் அறிவர். மோடிஜியே கூட இந்தப் பேட்டியின்போது இதை வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல ஒன்றுக்கு மூன்று முறை குத்திக் காட்டினார். ஆனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, பேட்டி கண்ட மூவரும் இழுத்த இழுப்புக்கு இணங்கி, அவர்கள் எப்படியெல்லாம் கேட்க விரும்பினார்களோ, என்னவெல்லாம் கேட்க விரும்பினார்களோ, எல்லாவற்றையும் அனுமதித்து, ஒவ்வொரு கேள்விக்கும் போதுமான பதிலை மோடிஜி அளித்திருக்கிறார். இதற்கு முன்னர், இன்னொரு மோடி எதிர்ப்புத் தொலைக்காட்சியான ‘ABP’க்கும் இதே போன்று ஒரு பேட்டியை சமீபத்தில் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியாமலோ, விரும்பாமலோ திசைதிருப்பி வேறு கேள்விக்கு முண்டியடிக்காமல், பொருத்தமான பதிலை, உரிய தகவல்களுடன், தேவையான அளவு நகைச்சுவை, காட்டம் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து ஒரு நீண்ட நெடிய பேட்டியை சற்றும் சுவாரசியம் குறையாத ஒரு அனுபவமாக்கினார்.
வேலைவாய்ப்பு குறித்து ராகுல் கன்வல் கேட்ட கேள்விக்கு, “உங்கள் அலுவலகத்திலேயே கூட ஆட்கள் அதிகமாகிவிட்டதால், உட்கார இடமின்றி சிலர் நின்றுகொண்டே வேலை பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன். இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?” என்று மடக்கியதும் ராகுல் கன்வலிடம் பதில் இல்லை.
தீவிரவாதச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சாதுவி பிரக்ஞாவுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதித்தைப் பற்றிக் கேட்கப்பட்டபோது அவர் அளித்த விளக்கம் பிரமாதம். “என்மீது கூடத்தான் எத்தனை எத்தனையோ பயங்கரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளால், அமெரிக்கா எனக்கு விசா கொடுக்க மறுத்தார்கள். இப்போது அதே அமெரிக்கா எனக்கு அழைப்பு விடுக்கவில்லையா? நான் போய் வரவில்லையா? இதுபோல திட்டமிட்டு ஒருவர் மீது குற்றம்சாட்டுவது புதிதல்ல. அதுவும் ஆயிரக்கணக்கான வருடங்களாய்த் தழைத்து வருகின்ற ஹிந்து தர்மத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அந்த தர்மத்தோடு தீவிரவாதத்தைத் தொடர்புபடுத்தி அரசியல் செய்கிறவர்களுக்கு எதிர்வினையாக, சாதுவி பிரக்ஞாவை தேர்தலில் நிறுத்துவதுதான் நியாயம்.” என்று ஆணித்தரமாக தனது கருத்தைத் தெரிவித்தார்.
மமதா பானர்ஜி குறித்து....
“2009-ல் இதே மமதா பானர்ஜி, மே.வங்கத்தில் சட்டவிரோதமாகக் குடியேறுகிறவர்கள் குறித்து ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார். காகிதங்களைக் கிழித்து வீசியெறிந்தார். அங்கே குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தினாலொழிய தேர்தல் நடத்த முடியாது என்று ஆவேசப்பட்டார். இன்று அந்த மமதா பானர்ஜி இப்படி மாறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரது விஷயத்தில் எனது கணிப்புகள் அனைத்தும் தவறி விட்டன என்பது வேதனையாக இருக்கிறது.”
பணமதிப்பிழப்பு குறித்து....
”அது தேர்தலுக்காகச் செய்யப்பட்டதல்ல. ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த உ.பி. தேர்தலில் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், நடந்தது என்ன? பணமதிப்பிழப்புக்குப் பிறகும் நாங்கள் அபாரமான வெற்றியை அடைந்தோம். 2014 தேர்தலின்போது நாங்கள் விலைவாசி குறித்தும் பேசினோம். இப்போது எதிர்க்கட்சிகள் விலைவாசி குறித்து ஏன் பேசுவதில்லை? பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்திருப்பதற்கு பணமதிப்பிழப்பும் ஒரு முக்கியமான காரணமாகும்.”
முத்தலாக் குறித்து....
“முத்தலாக் விஷயத்தை மத அடிப்படையில் பார்க்கக்கூடாது. வரதட்சணைத் தடுப்புச் சட்டம் ஹிந்து விரோதச் சட்டமா? பால்ய விவாகத் தடுப்புச் சட்டம் ஹிந்து விரோதச் சட்டமா? முத்தலாக் தடுப்புச் சட்டம் பெண்களின் மாண்பைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் முத்தலாக் தடை செய்யப்பட்டிருக்கிறபோது, இந்தியாவில் மட்டும் எப்படி அனுமதிப்பது?”
ஜம்மு-காஷ்மீர் குறித்து...
“மெஹபூபா முஃப்தியுடனான எங்களது உறவு எண்ணையும் தண்ணீரும் சேர்ந்த கலப்படம். மக்கள் தீர்ப்பு குழப்பமாக இருந்த காரணத்தால், வேறு வழியின்றி கூட்டணி அரசு அமைந்தது. காஷ்மீரைப் பொறுத்தவரையில், இரண்டு குடும்பங்கள் குத்தகைக்கு எடுத்திருப்பதுபோல நடந்து கொள்கிறார்கள். தனி ஜனாதிபதி, தனி பிரதமர் என்றெல்லாம் அவர்கள் பேசுவதை, அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிற எந்தக் கட்சியும் இதுவரை ஏன் கண்டிக்கவில்லை?”
”இங்கே மே.வங்கத்தில் தேர்தல் வன்முறை அதிகமாகி, தினம் கொலைகள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலின்போது ஒரு வன்முறை சம்பவமும் இன்றி, 75% வாக்குப்பதிவு நடந்தது எப்படி என்று யோசிக்க வேண்டாமா?”
காங்கிரஸ் அறிவித்துள்ள “நியாய்” திட்டம் குறித்து...
”காங்கிரஸ் 2009-ல் சுமார் ஆறு லட்சம் கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவர்கள் ரத்து செய்தது வெறும் 52,000 கோடி மட்டுமே! அதிலும் பெரும்பாலான தொகை நிலமே இல்லாதவர்களுக்கும், விவசாயத்துடன் சற்றும் சம்பந்தமில்லாதவர்களுக்கும் சென்று சேர்ந்தது. 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் ஆகியவை அப்போது பெருமளவு பேசப்பட்டதால், இந்த விவசாயக்கடன் தள்ளுபடி ஊழல் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. ”
“இப்போதுகூட, ம.பியிலும் ராஜஸ்தானிலும் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நாடறியும். ஆகவே, காங்கிரஸ் அளிக்கிற வாக்குறுதிகளை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.
2019 பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் குறித்து...
“2014 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மிகக்குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகியது காங்கிரஸ். 2019 பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலேயே மிகக்குறைவான தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட இருக்கிறது. இதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.”
2019-தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாய்ப்பு குறித்து...
“2014-ல் பெற்றதைக் காட்டிலும் அதிக இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும்.”
“2014-ல் வென்றதை விட அதிக இடங்களில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும்.”
”2014-ல் கிடைத்ததை விட அதிக வாக்கு சதவிகிதம் பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும்.”
“2014-ல் வெற்றி பெறாத தொகுதிகளிலும் மாநிலங்களிலும் கூட பா.ஜ.க. வெற்றி பெறும்.”
இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு, திறம்பட பதிலளித்திருந்தார் பிரதமர் மோடிஜி. தேசப்பாதுகாப்பு, மேக்- இன் – இந்தியா, கங்கை தூய்மைப்படுத்துதல், ஜி.எஸ்.டி என்று கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளித்திருக்கிறார். எல்லாவற்றையும் மொழிபெயர்த்துப் போட்டால், ஒரு ‘லைக்’ போட்டுவிட்டு தப்பித்து ஓடுகிறவர்கள் அதிகம் இருப்பார்கள் என்ற அபாயம் காரணமாக, சில சோறு பதம். அவ்வளவே!
இந்தப் போட்டியின் தொடர்ச்சியாக, இன்று இந்தியா டுடே ஒரு குட்டி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். அதில், பேட்டியை மோடிஜி கையாண்ட விதம் குறித்து, அவரைப் பேட்டிகண்ட மூவரும் மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள்.
ஒருபடி மேலே போய், ராகுல் கன்வல் ‘இதே மாதிரி ராகுல் காந்தியையும் ஒரு பேட்டி எடுக்கலாமா?’ என்று ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார்.

அந்த குட்டி வீடியோ 
தயவு செய்து செய்யுங்கள்! அவசியம் ராகுல் காந்தியையும் பேட்டி காணுங்கள்.
தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால், மீம்ஸ் போடுகிறவர்கள் சற்றே ஆசுவாசமாகக் காணப்படுகிறார்கள். அவர்களை உசுப்பிவிட இதைவிட நல்ல யோசனை இருக்கவே முடியாது. என்று முடித்திருக்கிறார். 

முழுப்பேட்டியும் இங்கே  
   

2 comments:

  1. அங்கே படிக்காமல் விட்ட வேணுஜியின் ஸ்டேட்டஸை இங்கே படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆக, இந்தப்பக்கங்களுக்கும் ஒரு உபயோகம் இருக்கிறது!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)