Friday, April 5, 2019

சிவகங்கை (வழி) திண்டுக்கல் To வயநாடு!

சிவகங்கை தொகுதியை என்ன தைரியத்தில் பானாசீனா தன் மகனுக்காகப் போராடி வாங்கினார் என்கிற ஆச்சரியம் எனக்கு இருந்ததுண்டு. திமுக மீது குதிரைசவாரி செய்யலாம் கரையேறி விடலாம் என்று நினைக்கிறாரா? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வேறுவிதமான ஆட்டம் ஆடிய பானாசீனா (விவரம் வேண்டுவோர் A ராசா எழுதிய புத்தகத்தைப் பார்க்கவும்) என்ன understanding இல் திமுகவுடன் சேர்ந்து களம் இறங்குகிறார்?     

தினகரனின் அமமுக, ஓட்டுக்களை எந்த அளவு பிரிக்கும் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
  
நாட்டுக்கு இப்போது ரொம்ப முக்கியமான கேள்வி நடிகர் மன்சூர் அலி கானுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது ஏன்?


காரணமெல்லாம் சீமாறு சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன? கேணப்பய ஆட்சியில கிறுக்குப்பய நாட்டாமை என்கிறமாதிரி சீமாறு கட்சி நடத்தினால் கூட நின்று காமெடி செய்ய ஒரு ஆள் வேண்டாமா?அதுதான் மன்சூர் அலிகான்! ரொம்ப வில்லங்கமான காமெடியன்!  

தந்தி டிவியில் நீண்டநாட்கள் கழித்து பார்த்த உருப்படியான தொலைக்காட்சி விவாதம் இது. காரணம் வயநாடு தொகுதியில் ராகுல் காண்டி போட்டியிடுவதும் இடதுசாரிகள் பம்முவதுமான எனக்குப் பிடித்த சினேரியோவாக இருக்குமோ?     

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் யார் இந்த பீம்ராவ்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்று பார்த்தால் முன்வைக்கிற கருத்தும் அப்படியேவா? K T ராகவனும்  மாலனும் சரியாகப் பேசினாலும் திருச்சி வேலுசாமி மாதிரி ஒரு அபசுரம்! தேர்தல் முறைகளில் உள்ள கோளாறை பீம்ராவ் மனம்போனபோக்கில் வியாக்கியானம் செய்தபோது ராகவன் அதே  லாஜிக்கை  இடது சாரிகளுக்குப் பொருத்திச் சொன்னது கிளாஸ்! 

இதற்குமேலும் வயநாடு பற்றியே பேசிக் கொண்டிருந்தால் வருகிற கொஞ்சப்பேரும் ........

மீண்டும் சந்திப்போம்!
       

4 comments:

  1. பெங்கால்ல ஒரு லைன், கேரளாவுல ஒரு லைன், திமுகவுல ஒரு லைன்.... அப்போ கொள்கை - அதுக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?

    39 சதவிகித வாக்கு பாஜகவுக்கு. எதிர்ப்பு வாக்குகள் பிரிந்துவிட்டன என்று சொல்பவர், கேரளாவில் 20 சதவித வாக்குகள் மட்டுமே வாங்கி நாங்க வெற்றிபெற்றோம் என்பதைச் சொல்லமாட்டார்...

    ReplyDelete
    Replies
    1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்த மாநிலங்கள் கேரளாவும் மேற்கு வங்கமும்! திரிபுராவில் ஜெயித்தாலும் தோற்றாலும் கட்சியில் பெரிய மதிப்புமிக்க இடம் இருந்ததில்லை. கேரளவுக்குத் தனிச் சிறப்பு என்னவென்றால் உலகத்திலேயே முதல்முறையாக 1957 இல் வாக்குச்சீட்டு மூலமாக அமைந்த கம்யூனிஸ்ட் அரசு என்பதோடு கம்யூனிஸ்ட் தத்துவத்தை இந்தியச் சூழ்நிலைகளுக்கேற்ப விளக்க முடிந்த ஒரே தலைவர்
      ஈ எம் எஸ் நம்பூதிரிபாட் அவரளவுக்கோ அவருக்குப்பின்னோ தத்துவார்த்த ரீதியில் அரசியலை அலசத்தெரிந்தவர் இடது,வாழாது கம்யூனிஸ்ட் கட்சிகளில் எவருமில்லை என்பது, ஒன்று.

      மேற்குவங்கம் கொஞ்சம் தலைக்கனம் அதிகமான மொழி அபிமானம் உள்ள ஜனங்களிடையே நீக்குப்போக்கான அணுகுமுறைகளில் (ஐக்கிய முன்னணித்தந்திரம் என்று தத்துவார்த்த அடைமொழி கொடுப்பார்கள்) ஒரு வலுவான ஆதரவுத்தளத்தை அமைப்பதில் ப்ரொமோத் தாஸ் குப்தா முன்னோடி. ஜோதிபாசு முதலமைச்சராக ஆனதும் மார்க்சிஸ்ட் கூட்டணி 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது, இரண்டு.

      ஆக இயல்பாகவே கேரளா, கேற்குவங்கம் இரண்டு மாநிலக் குழுக்களுமே ஒரு நீயாநானா போட்டியில் கேரளா லைன் பெங்கால் லைன் என்று பிரிந்து நின்றதும், ஆட்சியில் இருந்தவரை மே.வங்கம் aggressive ஆக இருந்து, ஆட்சியை இழந்தபின் இப்போது சேட்டன்மார் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதும் இயற்கையானதே.

      வலது கம்யூனிஸ்ட் கட்சி பாடு தேவலை1அவர்கள் புரட்சி, தத்துவம் எல்லாவற்றையும் மறந்து நீண்டகாலமாகி விட்டது. இருக்கிற இடங்களில் கூட அந்தந்த நேரத்துக்குத் தகுந்தமாதிரி கூவிக்கொள்வார்கள். இடதுகளோடு ஒட்டியிருந்தது மாறி இப்போது விசிக மதிமுகவோடு ஒட்டிக் கொண்டு திமுகவுடன் பேரம்பேசுவது என்றாகி விட்டார்கள்.

      Delete
    2. //அப்போ கொள்கை - அதுக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?// இதெல்லாம் தேர்தல் கால விடுமுறையில் சென்றுள்ளன. முடிந்தவுடன் பேரம் பேசி அதை justify பண்ண அதெல்லாம் வந்து விடும்!

      Delete
    3. பந்து! இந்திய இடதுசாரிகளின் தொடர் சறுக்கல் மிகவும் வேதனையான சரித்திரம்! அதை மறந்துவிட்டுப் பேச முடியாது.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)