சும்மா சும்மா தமிழ்நாட்டு அபத்தங்களையே பார்த்துக் கொண்டிருக்காமல் நமக்கு அடுத்த வீடுகளாக இருக்கும் கேரளா, ஆந்திரா, தெலங்கானா செய்திகளையும் கொஞ்சம் பார்த்தால் என்ன? அமாவாசை நிறைந்த நல்லநாளாகப் பார்த்து ராகுல் காண்டி கேரளாவில் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். பப்புவோடு பப்பியும் கூட வந்திருக்கிறார் என்கிறது செய்தி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் VS அச்சுதானந்தன் அமுல் பேபி என்று ராகுலை 2011 இல் சொன்னது இன்றைக்கும் பொருந்துகிறது என்றார் இல்லையா?
#Amul Topical : Congress President to contest from two seats in Lok Sabha 2019!
5:38 PM - 2 Apr 2019
அமுல் இதையும் சாமர்த்தியமாக ஒரு விளம்பரமாக்கி விட்டது ஒன்றுதான் வயநாடு வேட்புமனு தாக்கலில் இருக்கும் ஒரே சுவாரசியம்!
லட்சுமியின் NTR ராம் கோபால் வர்மாவின் படம் ஒரு வழியாக ஆந்திரா தவிர்த்து மற்ற பகுதிகளில் ரிலீசாகி டீசண்டான வசூலையும் தந்திருப்பதில் டைரக்டர் சந்தோஷமாகி விட்டார். ஆந்திராவில் ரிலீஸ் குறித்து ஏப்ரல் 9ஆம் தேதி ஆந்திர உயர்நீதிமன்றம் முடிவெடுக்கப் போகிறதாம்! அதாவது 11 ஆம் தேதி தேர்தல் என்கிற நிலையில், தேர்தலுக்கு முன்னால் அங்கே படம் ரிலீசாகப் போவதில்லை என்பது சந்திர பாபு நாயுடுவுக்கு கொஞ்சம் நிம்மதி! ஆனால் RGV விடுவாரா?
All truly real and realistic honest fans of NTR and @tarak9999 should cast their vote only after seeing @ncbn in #LakshmisNTR ..@naralokesh is a false heir to @jaiTDP and only true heir is the fantastic @tarak9999
who should be the only true honest future of TDP
10:45 PM - 2 Apr 2019
ராம் கோபால்வர்மாவின் இந்த ட்வீட் ஆந்திர அரசியலில் கொஞ்சம் கொளுத்திப் போட்டிருக்கிறது. அரசியல் கலக்காமல் வெறும் சினிமா மட்டும் என்பது இல்லை! இல்லவே இல்லை என்பது நமக்கு அடுத்தவீடு ஆந்திரா காட்டும் ஒரு பாடம்!
இன்னொரு அடுத்த வீடு கர்நாடகா பற்றி சொல்வதற்கு ஏதும் இல்லையா? இருக்கிறது! முன்னாள் முதல்வர் சித்தராமையா செல்வாக்கும் பிடியும் கொஞ்சம் அதிகமாகிக் கொண்டிருக்கிறதாம்! இன்றைக்கு மாண்டயாவில் காங்கிரஸ் மாவட்டப் புள்ளி ஒருவர் வீட்டில் வருமானவரிச் சோதனை என்று வழக்கமான செய்திகள் தான்! பதிவெழுதிச் சிறப்பிக்க என்ன இருக்கிறது? !!
மீண்டும் சந்திப்போம்!
No comments:
Post a Comment