எத்தனையோ கருத்துக்கணிப்புகள் வந்துபோய்க்கொண்டே தான் இருக்கின்றன. அவைகளை யாரும் கேலிசெய்வது இல்லை. ஆனாலும் லயோலா கருத்துக்கணிப்பு என்றால் நெட்டிசன்களிடம் எத்தனை நக்கல்! எத்தனை இளப்பம்! ஏன் என்று ரொம்பவும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ள வேண்டியதே இல்லை! அதுவும் லயோலா என்றால் திமுக ஆதரவு லோலாயி என்றாகி விட்ட பிறகு...... !
இந்த லோலாயி என்ற வார்த்தைக்கு குங்குமம் தளத்தில் ஒரு விரிவான விளக்கக் கட்டுரையே வந்திருக்கிறதாக்கும்! ஆனால் "சிறிய தண்டனைக்காரர்கள் பெரிய தண்டனைக்காரர்களைக் கண்டால் பயந்து அவர்களுக்கு சேவகம் புரியத்தொடங்கி விடுகிறார்கள். ஆசான்-சீடன் நிலை உறுவாகி குருபக்தி வரைபோய் விடுகிறது கைதி வாழ்க்கை. இப்படிப் பழைய கைதி புதிய கைதிக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து விடுகிறான்.அப்படிப் பட்ட வாத்தியார்களை லோலாயி என்று சிறையில் கேவலமாகப் பேசுவார்கள். இவன் சேலம் லோலாயி, இவன் கடலூர் லோலாயி என்று தனிப்புகழ் பெற்றவர்களும் கைதிகளுக்குள் உண்டு" என்று இந்த விக்கி பக்கம் விளக்கம் சொல்கிறது.
2:42 PM - 5 Apr 2019
2:28 PM - 5 Apr 2019
இங்கே கமல் காசர் ஒரு நல்ல மெசேஜ் சொல்லியிருக்கிறார்! அதைக் கொஞ்சம் பார்த்துவிட்டு, நெட்டிசன்கள் எப்படி லயோலாவை வறுத்தெடுக்கிறார்கள் என்று பார்க்கலாமா?
சென்ற லயோலா கல்லுரி
கருத்தின்படி திமுக 33 சதவீதம் வாக்குகள்
என கணித்தது..
டெபாசிட் காலி
இந்த தடவை அதே மாதிரி
இந்த தடவை திமுக 33 தொகுதிகளில் வாய்ப்பு
அப்ப சரியான கணிப்பு தான்
தம்பி...லயோலா கருத்து கணிப்புப்படி...
ஓ...அந்த உபிஸ் ங்க திரும்பவும் வந்துட்டானுங்களா?...சரி எனக்கு நிறைய வேலை இருக்கு..நீங்க வேற ஆள பாருங்க
லோக்சபா தேர்தலில் 33, இடைத் தேர்தல்களில் 11 தொகுதிகளை திமுக அள்ளும்! லயோலா கருத்து கணிப்பு-செய்தி
எத்தனை வருசமா இந்த கருத்து கணிப்பு சொல்றீங்க ??
போன தேர்தலுல கூட திமுக ஜெயிச்சிடுமுனு சொன்னோமே ?
தெரியாதா உங்களுக்கு ?
அப்போ சரி ..சொல்லுங்க..
#லொயோலா
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு : லயோலா கருத்து கணிப்பு
#
இவங்ககிட்ட குஜராத் எலக்ஷ்ன்ல யாரு ஜெயிப்பான்னு கேளுங்க, திமுகன்னு சொல்லுவாங்க, ஏன்னா பேமண்டு அப்படி
சார்... கருத்துக் கணிப்புல, ஜோசியர் சொல்ற மாதிரி, 'ஆண் குழந்தைதான் பிறக்கும்" என்று 100 பேர்கள்ட சொன்னால், 40 பேருக்கு ஆண் குழந்தை பிறக்கலாம் இல்லை 60 பேருக்கு ஆண் குழந்தை பிறக்கலாம். அவங்களாம் ஜோசியர் அட்டஹாசமா சொல்லிட்டார்னு சொல்லுவாங்க.
ReplyDeleteபாருங்க... திமுக+காங்கிரஸ் கூட்டணி 36 சீட்டுகள் வெற்றி பெற்றால், (இதுக்கு மெயின் காரணம் அதிமுக பிரிந்திருப்பதுதான்), 'நாங்கதான் அப்போவே சொன்னோமே' என்று சொல்லிடுவாங்க.
இதுமாதிரி ஒரு தடவை நக்கீரன்ல, 140 சீட் திமுகவுக்கு வரும்னு போட்டிருந்தாங்க. கலைஞர் தொலைக்காட்சில காலைல 7 மணி லேர்ந்து நக்கீரன் கோபாலும் கலந்துக்கிட்டு, நிச்சயம் பெரு வெற்றி பெரும்னு சொல்லிக்கிட்டிருந்தார். ரிசல்ட் மாற ஆரம்பிச்சதும் 9 மணிக்கெல்லாம் தொலைக்காட்சியைவிட்டு நடையைக் கட்டிட்டார் (இந்த வடிவேலு திமுக பிரச்சாரம் பண்ணின தேர்தல்ல). பார்க்கும்போது ரொம்பக் கேவலமாக இருந்தது.
கருத்துக்கணிப்புகளில் முக்கியமானது சாம்பிள் சைஸ், அடுத்து கருத்தைப் பெறுவதற்கான சரியான கேள்விகள்! உறுதிப்படுத்திக் கொள்ள துணைக்கேள்விகள் இருக்கலாம். தகவல்களை சரியான முறையில் collate செய்தால் 90 முதல் 99% வரை சரியான முடிவுகளை பெறலாம். குருட்டு ஜோசியமில்லை இது!
Deleteஇங்கே லயோலா, நக்கீரன் செய்வதெல்லாம் அப்பட்டமான திரித்தல் வேலை!
புது வருஷ பிறப்பன்று (யுகாதி) பஞ்சாங்க சிரவணத்தில் அந்த வருட ஆதாயம் விரயம் பற்றி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் படிப்பதுண்டு.கேட்ட பிறகு யாரும் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. அதே போலிருக்கிறது இந்த லயோலா கருத்துக் கணிப்பு.
ReplyDeleteபஞ்சாங்கப் பலன்களையாவது விதிவசம் என்று மறப்பதற்காவது கவலைப்படாமல் இருந்துவிடலாம் உமேஷ் சார்! ஆனால் வேண்டுமென்றே திரிசமன் வேலைகளைத் தொடர்ந்து செய்கிற லயோலாக்களை அப்படியே விட்டு விடலாமா?
Delete