தமிழக அரசியலில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிற ஒரு விஷயம் தயாநிதி மாறன் மாதிரியான வேட்பாளர்கள் எப்படி ஜெயிக்க முடிந்தது? 2004 இல் தாத்தா கருணாநிதியால் மத்திய சென்னை தொகுதி வேட்பாளராகக் களமிக்கப்பட்டு ஜெயித்தவுடன் பசையுள்ள இலாகாவுக்கு மந்திரியாகவும் ஆக்கப்பட்டது எப்படி? இவரை இருமுறை தேர்ந்தெடுத்த தொகுதிக்கு இவரால் என்ன கிடைத்தது?
புல்வாமா தாக்குதல், அபிநந்தன் விடுதலை முதற்கொண்டு எப்படிப் பேசுகிறார் என்பதைக் கொஞ்சம் கவனித்தாலே, ஏன் இவர் போன்றவர்களைத் தேர்தலில் தோற்கடித்தே ஆகவேண்டும் என்பதற்கான காரணமும் விளங்கிவிடும்.
தயாநிதி மாறன் மட்டுமே இல்லை! கலிஞ்சர் டிவியுமே கூட அப்படித்தான் வாய்க்கொழுப்புடன் அலைகிறது! இத்தனைக்கும் இந்த டிவியைப் பார்ப்பவர்கள் மானாட மயிலாட பார்க்க மட்டுமே வருகிறார்களே தவிர இதுமாதிரி அரசியல் சேட்டைகளைப் பார்ப்பதில்லை என்பதுகூடத் தெரியாத ஒரு நிர்வாகம்! என்னவென்று சொல்வது?
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்! இப்படித் தமிழிசை மேடைக்கு மேடை பேசியபோது ஏகப்பட்ட கிண்டல், நையாண்டி! பிஜேபி தமிழகத்தில் காலூன்றவே முடியாதென்று வஜனம் பேசியவர்கள் ஏராளம்! இப்படித்தான் கேரளம், மேற்கு வங்கத்திலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சொல்லிச் சொல்லியே பிஜேபிக்கு போதுமான விளம்பரத்தையும் தேடித் தந்து விட்டார்களோ?
மகளோ, சகோதரியோ பெரிய மனுஷியான தருணங்களில் அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்தவராக இருப்பின், கொஞ்சமே கொஞ்சம் நான் சொல்லப் போவது புரியலாம். மாதவிடாய் காலங்களில் இருட்டில் ஒரு பெண் தன் கழிவுகளைக் கழித்து வரும் கொடுமையை இது நாள் வரை யாராவது அக்கறையுடன் களைய முற்பட்டிருக்கிறோமா? வாய் கிழிய, தொண்டை புடைக்க, பெண் விடுதலையும், தனிமனித சுதந்திரமும் இணையத்தில் பேசும் நாம் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இதைப் பற்றி என்றாவது பேசியிருக்கிறோமா?
65 ஆண்டு காலமாகப் போட்ட இந்திய பட்ஜெட்டினால் கிராமத்து பெண்களின் இந்தச் சிரமத்தைப் போக்க ஒரு ரூபாயாவது செலவு செய்திருக்கிறோமா? ஆடு மாடுகள் நாய்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட மனுச ஜென்மமாகப் பிறந்து தொலைந்த இந்த பெண்களுக்கு இல்லையே என்று ஒருநாள் ஒருபொழுதாவது மாதர் சங்கங்கள் ஒரு வார்த்தை பேசியிருக்குமா? 33 சதவீத ஒதுக்கீடுக்கு வாய் கிழிய சபைகளில் சண்டை போட்ட புண்ணியவான்கள் யாராவது இவர்கள் ஒதுங்க 3க்கு 3 அடி இடம் ஒதுக்கணும்னு பேசினார்களா?
இதோ ஒரு மனுசன் வந்தான், என்னவோ எழவு புரியாத வார்த்தையில் ஸ்வச்ச் பாரத் என்றான், வழக்கம் போல நாம ஸ்வச்சு பாரத்து _ச்சு பாரத்து என்று அதைக் கிண்டல் பண்ணினோம். அதிலும் அரசியலை மட்டும் பார்த்தோம். அந்த மனுசன், இத்தனை கிராமத்துப் பெண்களின், ஒரு மகனாக, சகோதரனாக, மகள்களின் அப்பனாக நின்று அவர்களின் துயரம் நீக்கியிருக்கிறான். கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகள் எத்தனையோ லட்சமாம். எண்ணிக்கை அவசியமில்லை. ஆனால் கட்டிக் காக்கப்பட்டது பல கோடிப் பெண்களின் மானம்.
மழைச் சேற்றிலும் பாம்புகளுக்கு நடுவிலும் கழித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு மட்டுமே தெரியும். இந்தக் கழிவறைகள் எத்தனை பெரிய வரம் என்று!
ஒரு மகனாக, ஒரு தகப்பனாக, ஒரு சகோதரனாக, இத்தனை கோடி கிராமத்துப் பெண்களின் பரிதவிப்பைப் போக்கிய அந்த ஒற்றைக் காரியம் போதும்டா சாமி! இந்த ஒற்றைச் சாதனைக்கே பாரத அன்னை #நரேந்திர_தாமோதரதாஸ்_மோதி என்ற ஒரு மகத்தான பிள்ளையைப் பெற்றெடுத்ததற்கு மார்பும் வயிறும் குளிர்ந்திருப்பாள்.
மீண்டும் மோடி! வேண்டும் மோடி! என்று உரக்கச் சொல்வதில் இன்னும் என்ன தயக்கம்?
கொஞ்சம் சொல்லுங்கள்!
வாழ்க மோடிஜி...
ReplyDeleteமீண்டும் வரவேண்டும் மோடிஜி!...
வாருங்கள் துரை செல்வராஜூ சார்! உரக்கச் சொன்னதற்கு நன்றி!
Delete