பொதுவாக அரசியலை மட்டுமே பேசிக்கொண்டிருப்பவன் வேறு விஷயத்தை உள்ளர்த்தம் வைத்துச் சொல்லாவிட்டால் கூட இதிலும் உள்குத்து ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகம் வருவது இயற்கைதான்! அப்படி ஒரு அழுத்தமான சாயம் என் மீது விழுந்திருப்பது தெரிந்தும் கூட எதற்காக வேறுவிஷயம் குறித்துப் பேசவேண்டும். தந்தையர் இருவர் என்று மொட்டையாகத் தலைப்பு வைத்திருந்தால் வாரிசு அரசியலில் முந்திக் கொண்ட நேரு, கருணாநிதி இவர்களைப் பற்றியதாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட வரலாம் என்பதால் தான் முன்னெச்சரிக்கையாக இது வேற சப்ஜெக்ட்! என்றும் சேர்த்துச் சொல்லவேண்டிவந்தது!
பட்டிமன்றம் ராஜா தனியாக யூட்யூப் சேனலை வைத்திருக்கிறார். அதில் சிலநாட்களுக்கு முன்னால் மதுரையில் திருமதி பாரதி பாஸ்கர் நடுவராக இருந்து இரு பெண்மணிகள் பேசுகிற ஒரு விவாதக்களம் வலையேற்றப் பட்டிருப்பதை பார்த்துவிட்டு கேட்டு ரசித்தேன். பெண்கள் விமரிசிக்காத ஆண்கள் யார்? அனேகமாக தந்தைகள்தானே!

பாரதி பாஸ்கர் தொடக்கவுரைக்குப் பிறகு பேசவருகிறவர் திருமதி ரேவதி சுப்புலட்சுமி, தந்தை எப்படிப் பட்டவனாக இருக்கவேண்டும் என்று தசரதன் பாத்திரப்படைப்பைப் பற்றி சொல்கிறார்,
அடுத்துப் பேச வருகிறவர் திருமதி விசாலாட்சி! கம்பன் காவியத்தில் தசக்கிரீவன் என்று போற்றப்படும் இராவணன் பாத்திரப்படைப்பை கம்பனுடைய பார்வையில் இருந்து சொல்கிறார்.
இரு தந்தையரைப்பற்றி இருவர் பேசி முடித்தாயிற்று. நடுவர் தன்னுடைய முடிவுரையைச் சொல்ல வேண்டாமா?
இன்றைய பொழுது கம்பன் தமிழோடு! வலையேற்றம் செய்த திரு ராஜாவுக்கு நன்றியுடன்!
No comments:
Post a Comment