தாத்தா கலீஞர் மட்டும் கையைப்பிடித்து மத்திய சென்னை தொகுதி வேட்பாளராக்கி ஜெயித்ததும் கூட்டணிதர்மத்தில் மத்திய அமைச்சராகவும் ஆக்கியிராவிட்டால் தயாநிதி மாறன் மாதிரி கெக்கேபிக்கே பொருட்படுத்தவேண்டிய ஒரு ஆளாக வளர்ந்திருக்கவே முடியாது. நம்முடைய துரதிர்ஷ்டம் இவர் போன்ற ஆசாமிகள் பேசுகிற அபத்தமான அரசியல் விரிவுரைகளைக் கேட்கவேண்டியிருக்கிறது. ஒதுக்கியெறிந்து விட்டுப் போயிருக்கலாம்தான்! ஆனால், அடையாளம் காட்ட வேண்டிய அரசியல் கடமை ஒன்று இருக்கிறதே!
BSNL , Air India பொதுத்துறை பற்றியெல்லாம் தயாநிதிமாறன் லெக்சர் செய்வது வேடிக்கையா? காலக்கொடுமையா? BSNL சீரழிவுக்கு தயாநிதி மாதிரி ஊழல் பெருச்சாளிகளும் முக்கிய காரணம் என்பது அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியதா?
ஐடி ரெய்டு நடத்தித் தேர்தல் வேலைகளை முடக்கப் போவதாகத் தனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது என்று பேசி அப்படியாவது யாராவது அனுதாபப்படுவார்களா என்று காத்திருக்கிறார்பானாசீனா! சிரிப்பதா? காறி உமிழ்வதா?
மாரிதாஸ் இங்கே நரேந்திர மோடி என்ன செய்தார் என்பதைத் தெளிவாக விளக்குகிறார். கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்க என்ன தயக்கம்? திராவிடப்பொய்யர்களுக்கே காதுகொடுத்தால் எப்படி?
கி வீரமணி உளறல்கள் அளவுக்கு மீறிப்போய்க் கொண்டே இருப்பதில் பகுத்தறிவு எந்த அளவுக்குப் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை விட திமுக கூட்டணிக்கு விழும் வாக்கு எண்ணிக்கையை எந்த அளவுக்குப் பதம் பார்க்கப் போகிறது? தெரிந்துகொள்ள நானும் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறேன்.
அத்தைக்கு மீசை முளைத்தால்...
நாரமணி பழனிக்கு காவடி எடுத்தால்...
கழகக்குஞ்சுகள் இடுப்பை கிள்ளாமல், பிரியாணிக் கடைக்காரனை அடிக்காமல் இருந்தால்...
கனிமொழி திருப்பதிக்கு பாதயாத்திரை போனால்...
எஸ்ரா சற்குணம் ஹிந்து மதத்திற்கு மாறினால்...
துரைமுருகன் லிப்ஸ்டிக் போடாமல் இருந்தால்...
ஸ்டாலின் டை அடிக்காமல், கையில் துண்டுச்சீட்டு இல்லாமல் உளறாமல் பேசினால்...
ஒருவேளை, நடந்தாலும் நடக்கலாம்.
கனவு காணும் வாழ்க்கை யாவும்...கலைந்து போகும் கோலங்கள்.
நாமும் இப்படி உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமிது!
செய்வோமா?
No comments:
Post a Comment