பொதுவாக தேர்தல் நேரத்தில் ஊடகத் தம்பட்டங்களும் அரசியல்வாதிகளுடைய பொய்களும் கட்டவிழ்த்து விடப்படுவது வாடிக்கைதான் என்றாலும், தமிழகத்தில் இந்தமுறை எல்லை மீறிப்போயிருப்பதென்னவோ உண்மை! இந்த முறை பெரும்பாலான சேனல்கள் திமுக அணி சார்ந்தே செய்திகளை வெளியிடுகிறமாதிரிப் பார்த்துக்கொள்ளப்பட்ட விதம் ......கொண்டையை மறைக்க முடியவில்லையோ?
நேற்றிரவு முதல் திமுக கூட்டணியினரால் ஊதி ஊதிப்பெரிது படுத்தப்பட்ட மதுரை பெண் அதிகாரி விவகாரம் புஸ்ஸென்று போய்விட்டது. ஆனால் கைதேர்ந்த திமுகழகம் இதற்கெல்லாம் அயர்ந்துவிடுமா என்ன? இன்னொரு இல்லாதவிவகாரத்தைத் தெடிக் கண்டுபிடித்து வில்லங்கமான செய்தியாக்குவார்கள்! நாமும் வாய்பிளந்து அய்யய்யோ அப்படியா என்றே காதுலபூ நாமே சுற்றிக் கொள்வோம், இல்லையா?
இருகோடுகள் படம் பார்த்தவர்களுக்குப் படத்துவக்கமே மாஸ்டர் பிரபாகர் ஒரு கோட்டை வரைந்து அதை அழிக்காமல் சிறிதாக்குவது எப்படி என்று கேட்பதும் அப்பா ஜெமினியும் தாத்தா எஸ்வி சகஸ்ரநாமமும் பதில் சொல்லமுடியாமல் பம்ம அம்மா ஜெயந்தி வந்து கோட்டுக்குப் பக்கத்தில் இன்னொரு கோட்டைப் பெரிதாக வரைந்து, இப்போ முதல்கோடு சிறுசு ஆயிடுச்சா என்று புதிரை அவிழ்க்கிற opening இன்றும் கூடப் பசுமையாக நினைவிருக்கும்! நமக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ. அதை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்பதாவது புரிகிறதா?
இலங்கையின் கொழும்பு நகரில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 228 பேர் பலியாகியிருக்கிறார்கள். அவர்களில் 35 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். மேலும் 470க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக விகடன் தளச் செய்தி சொல்கிறது.
உயிரிழந்தவர்களுக்காகவும் இலங்கையில் அமைதி திரும்பவும் பிரார்த்தனை செய்வோம்.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இஸ்லாமிய மதவாதிகளின் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் இதுவரை 290 மக்கள் பலியாகியிருக்கிறார்கள்.
ReplyDeleteஇலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட முறையிலும் இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கை ஜனாதிபதியிடம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்திருப்பதாக இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பலமாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாராட்டபட வேண்டியது.