இந்தமுறை எனக்கு தேர்தல் பரப்புரைகளை நேரடியாகக் களத்திலிருந்து கேட்கிற வாய்ப்பு இல்லாமலேயே போனதில் வருத்தம் எல்லாம் ஒன்றுமில்லை. அந்த அளவுக்குத் தரமான சம்பவங்களாக அவை இருப்பதும் ஒரு காரணம்!
உதயநிதிக்கு அரசியல் ஆசைவந்ததில் கூடத் தவறில்லை. ஆனால் கிளிப்பிள்ளை மாதிரி ஒரே வசனத்தை அப்படி இப்படிக்கூட மாற்றாமல் பேசுவது மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறதே! ரசிகர்மன்றத்தினர் யாரும் எடுத்துச் சொல்ல மாட்டார்களோ?
ஜமீன் குடும்பமாக இருந்து இப்போது ஜாமீன் குடும்பமாக மாறிவாழும் ப. சிதம்பரமோ வாரிசோ சிவகங்கைக்கும் தேவை இல்லை தமிழகத்துக்கும் தேவையில்லை என்று காரிய காரணங்களோடு விளக்குகிறார் மாரிதாஸ்! இந்திய அரசியலின் ஊழல் பெரும்புள்ளியாக இருக்கும் பானாசீனா குடும்பத்தோடு சிறைக்குப்போக வேண்டியவர் மட்டுமே என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொல்வதை இந்தப் பக்கங்களைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்குத் தனியாக நினைவுபடுத்த வேண்டியதே இல்லை!
இசையில் சாதனை செய்து ஒரு மில்லியன் டாலர் பரிசு பெற்ற லிடியன் நாதசுரத்தை கோபாலபுரம் கருணாநிதி வீட்டுக்கு வரவழைத்து அஞ்சலி செய்யவைத்த கூத்து அரங்கேறி இருப்பதைப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. சாதனைச் சிறுவன் பக்கத்தில் ட்ரேட் மார்க் இளிப்புடன் தயாநிதி மாறன் என்பது கூடுதல் அபத்தம். இந்த ஆக்டோபஸ் குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடும் ஜனங்களும் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் திமு கழகம் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டாகவேண்டும் என்பதைத் தவிர வேறு வழி இருக்கிறதா?
அவரும் நானும் நிகழ்ச்சியில் Ma Foi பாண்டியராஜனும் அவர் துணைவியாரும் பேசக் கேட்டதில், சலிப்பூட்டும் காங்கிரஸ், கழக அரசியலில் ஏற்பட்ட அலுப்பு கொஞ்சம் குறைந்தது என்றே சொல்ல வேண்டும்.
நாடார் சமுதாயமே அரசியல்படுத்தப்பட்ட சமுதாயம் என்று எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கையில் திருமதி பாண்டியராஜன் இருவருடைய குடும்பமும் political family இல்லை என்று கேஷுவலாகச் சொல்லும் போது, அட அப்படியா என்று ஆச்சரியப்பட்டு ........!!
நாடார் சமுதாயமே அரசியல்படுத்தப்பட்ட சமுதாயம் என்று எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கையில் திருமதி பாண்டியராஜன் இருவருடைய குடும்பமும் political family இல்லை என்று கேஷுவலாகச் சொல்லும் போது, அட அப்படியா என்று ஆச்சரியப்பட்டு ........!!
No comments:
Post a Comment