Thursday, April 4, 2019

ஏழை சோனியா G, பரம ஏழை தயாநிதி மாறன்! உதவ ஒரு நல்லுள்ளம்!

தன்னுடைய சொத்துமதிப்பு ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி! கோபாலபுரத்தில் ஆறுவீடு போயஸ் தோட்டத்தில் பெரிய பங்களா கொடநாடு பகுதியில்  600 ஏக்கர் எஸ்டேட்  இருந்தும் கடன்  4 லட்சம் கோடி! என்றெல்லாம் சொல்லி விட்டு இதெல்லாம் அப்பட்டமான பொய் என்றும் சொல்லி தேர்தல் மனுவும் ஏற்கப்பட்டு போட்டியிடுகிறார் ஒரு வேட்பாளர்! 


முகம் ரொம்பவும் பரிச்சயமானதாகத் தெரிகிறதா? கண்டு கொள்வோம் கழகங்களை என்றதலைப்பில் துக்ளக் இதழில் தொடராக எழுதியவரும், காமராஜருக்கு  நெருங்கிய தொண்டர், ஸ்தாபன காங்கிரசிலும் எமெர்ஜென்சிக்குப்பிறகு ஜனதாதளத்திலும் இருந்த நெல்லை ஜெபமணியின் மகன் திரு மோகன்ராஜ்! காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருந்து ராஜீவ் காந்தி கொலைவழக்கு விசாரணையிலும் பங்கு பெற்றவர்! அந்த வழக்குக்குப் பின் விருப்ப ஓய்வில் வந்து தனியாக ஜெபமணி ஜனதா கட்சி என்று நடத்தி வருகிறார். அவர்தான் இந்தமாதிரி நகைப்புக்குரியதாகத் தோன்றும் Rorm 26 ஐ பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுவோடு தாக்கல் செய்திருக்கிறார்.  


ச்சும்மா பழைய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கிறது என்று காட்டிக் கொள்ள ஒரு பழைய படம்!  இப்போது ஜெபமணி மோகன்ராஜ் எதற்காக தொடர்ந்து இப்படிச் செய்கிறார் என்று பார்க்கலாம்! இந்திய அளவில் பிரபலமான கட்சி ஜனதா தளம். அதன் தமிழக தலைவராக இருந்தவர் நெல்லை ஜெபமணி. நேர்மையாளர், காந்தியவாதி. அவரது மகன் நெல்லை மோகன்ராஜ். இவர் காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சமீபத்தில் பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மோகன்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் இணைக்கப்படும் வேட்பாளர் சொத்து, கடன் குறித்த விவரங்களுக்கான படிவத்தில் தனது சொத்து ரூ. 1 லட்சத்து 76,000 கோடி என்றும், கடன் ரூ. 4 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் வேட்பமனு பரிசீலனை முடிந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. அவரது வேட்பமனுவின் அஃபிடவிட் தற்போது வாட்ஸ் அப், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் தனது முகநூலில் பேசி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ஏன் அப்படிச் செய்தாராம்?  அவரே சொல்கிறார்: 2014-ல் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் நிற்கிறார். ஸ்ரீவத்சவா என்கிற இன்கம்டாக்ஸ் கமிஷனர் கார்த்தி சிதம்பரம் நிறைய பொய் சொல்லியிருக்கிறார் என அஃபிடவிட் தாக்கல் செய்தார்.அப்போது அந்த வழக்கை நான் கவனித்தேன். பொய்யான அஃபிடவிட் தாக்கல் செய்தால் 6 மாதம் சிறை தண்டனை என்பதை அறிந்து, ஏன் இந்த விவகாரத்தில் வழக்கு தொடரப்படவில்லை என்று கேட்டு கடிதம் எழுதினேன். அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்தேன். அது விசாரணைக்கு வரவே இல்லை.அதன் பின்னர் தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியது. அதில் பொய்யான அஃபிடவிட் தாக்கல் செய்தால் 6 மாதம் சிறை தண்டனை என்ற தண்டனையை ரத்து செய்துவிட்டோம் என்று பதில் அனுப்பி வேண்டுமானால் நீங்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். 

அதனால்தான் கிண்டலுக்கு கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் இப்போது சொன்னதுபோல் 1 லட்சத்து 76,000 கோடி சொத்து உள்ளதாக முன்பு அஃபிடவிட் தாக்கல் செய்தேன். அதற்கு முன் 2009-ல் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இதேபோன்றுத்தான் அஃபிடவிட் தாக்கல் செய்தேன்.அப்போது வடநாட்டிலிருந்து பிரபல ஆங்கில நாளிதழ் என்னை பேட்டி கண்டது. நீங்கள் தான் இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர் என்ன செய்யப்போகிறீர்கள் எனக்கேட்டார்கள். சோனியா தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்று அபிடவிட்டில் பதிவு செய்துள்ளார், தயாநிதி மாறன் சொந்தமாக வீடு இல்லை என அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இருவருக்கும் உதவலாம் என நினைக்கிறேன் என்று தெரிவித்தேன் என்கிறார்!

பாருங்கோய்யா! பரம ஏழைகள்  சோனியா G, தயாநிதி மாறனுக்கு உதவ இப்படி ஒரு    நல்ல மனிதரா?

நம்மூர் தேர்தல் சட்டங்களில் ஏகப்பட்ட ஓட்டைகள்  இருக்கின்றன என்பது இப்படி அம்பலப்படுத்தப்பட்டும் கூட எங்கோ மழைபெய்கிறது என்றிருக்கும் வாக்காளப் பெரு மக்களே! என்ன செய்யப்போகிறீர்களாம்?     

7 comments:

  1. கண்டுகொள்வோம் கழகங்களை படித்திருக்கிறேன்.

    இன்றைய பதிவு சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை ஜெபமணி கண்டுகொள்வோம் கழகங்களை என்று தொடர் எழுதித் தன்னுடைய கடமையைச் செய்துவிட்டார். வாசித்த நாம் தொடர்ந்து அந்தச் செய்தியை எடுத்துச் சொல்ல வேண்டுமே ஸ்ரீராம்!

      Delete
  2. நானும் இன்றைய தினமலரில் இந்தச் செய்தியை வாசித்தேன்.
    அருமையான விழிப்புணர்வு செயல்.

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் அதிகாரிகளாக இங்கே பணியாற்றுகிற ரெவின்யூ ஆசாமிகள் எப்படிப் பட்ட ஞானசூனியங்களாக வெட்கம் கெட்டவர்களாக முதுகெலும்பில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை திரு மோகன்ராஜ் தொடர்ந்து மூன்றாவது முறையாக நிரூபித்திருக்கிறார், சரி! இப்போதுதானே அது செய்தியாகவே ஆகியிருக்கிறது!

      விழிப்புணர்வு என்று சொல்லும்போதே நாம் விழித்துக் கொண்டோமா? கேள்வி எழுப்பினோமா என்று தொடர் கேள்விகளை எழுப்புகிறதே ஜீவி சார்!

      Delete
  3. In my view, this man is another traffic Ramasami in other words, Nuts.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்! பலநேரங்களில் இந்த மாதிரி Nuts தேவைப்படுகிற தேசமாயிற்றே பாரதம்!

      Delete
  4. அதச் சொல்லுங்க!

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)