பொதுவாகவே தென்மாநில அரசியலும் அகில இந்திய அரசியலும் வேறுவேறு திசைகளில் பயணிப்பவை என்கிற மாதிரியான பிம்பம் நீண்டகாலமாகவே இங்கே பரப்பப் பட்டு வருவதை அறியாதார் யார்? மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோஷத்துக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பது கூட்டணி தர்ம ஃபார்முலாவின்படி மாநிலத்தில் தனிக்கொள்ளை மத்தியிலே கூட்டுக்கொள்ளை என்று திமு கழகம் முன்னோடியாக இருந்து நடத்திக்காட்டிய சமகால வரலாறு அவ்வளவு எளிதாக மறந்துவிடக் கூடியதா என்ன?
தென்மாநிலங்களிலும் தமிழ்நாடு விபரீதமாகத் தனிப்பட்டுப் போனது ஏன் என்று இங்கே இப்படிச் சொல்கிறார்கள்! கண்ண தாசன் தான் சொன்னாரா எங்கே எப்போ என்ற கேள்விகளுக்கு என்னிடம் விடையில்லை. ஆனால் வாசகங்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை!
ஆமாமா இல்லையா என்பதை ஓசிச்சோறு வீரமணி வகையறாக்களைப் பார்த்தே முடிவு செய்துகொள்ளலாமே!
1995 இல் மாயாவதி மீது சமாஜ்வாதி கட்சியினர் கொலைவெறித் தாக்குதல் நடத்திய பின்னர் இருகட்சிகளும் உத்தர பிரதேச அரசியலில் எதிரிகளாகவே இருந்த நிலை மாறி ஒரேமேடையில் மாயாவதியும் முலாயம் சிங் யாதவும் தங்களுடைய ஒற்றுமையைப் பறைசாற்றினார்களாம்! இன்று ஈடா என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி இந்த ஒற்றுமைக்கு முறிவு நாள் மே 23 என்று ஏற்கெனெவே குறிக்கப்பட்டு விட்டது என்று கிண்டல் செய்திருக்கிறார். நுட்பமான இந்தகிண்டலைப் புரிந்துகொள்ள உத்தரப்பிரதேச அரசியல் களநிலவரம் என்ன என்பதைக் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக முலாயம் சிங் யாதவ், மாயாவதி இருவருக்குமே பிரதமர் பதவிமீது ஒரு கண் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டாலே, உறவுக்கு முறிவுநாள் என்று கிண்டலாகச் சொல்வதை புரிந்து கொள்ள முடியும். FirstPost தளத்தில் ஸ்ரீமாய் தாலுக்தார், மம்தா பானெர்ஜி இதேபோல பிரதமர் கனவுடன் சர்வ ஜாக்கிரதையாக மகாகட்பந்தன் தேர்தலுக்குப் பிறகு கூடி முடிவெடுப்போம் என்று சொல்வதன் பின்னணியை விளக்கி ஒரு செய்திக்கட்டுரை எதேங்கிநின்று ழுதியிருக்கிறார். கிணற்றுத்தவளைகளாக தமிழக அரசியல்கட்சித்தலைவர்கள் விடும் பீலாவிலேயே தேங்கிநின்றுவிடாமல் இருக்க உதவும் செய்தி அது.
இன்னும் பிடிவாதமாக வடக்கு வடக்குதான்! தமிழ்நாடு தனித்தீவு தான் என்கிறீர்களா? உங்களுக்காக குமுதம் தளத்தில் இருந்து ஒருபடம்!
No comments:
Post a Comment