Tuesday, April 9, 2019

தேர்தல் என்றால் சும்மாவா? அரசியல் களேபரங்கள்!

நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் அதிகம் இழிவுபடுத்தப்பட்ட ஒரு பிஜேபி தலைவர் H ராஜா. அவரைப் பற்றிப் பேசும்போதும் சரி எழுதும் போதும் சரி, அத்தனை வன்மம், அத்தனை விஷம் கக்கும் வார்த்தைகள் வீசப்பட்ட கதை இங்கே எல்லோருக்குமே தெரிந்ததுதான். அவரை இழிவு படுத்துவதாலேயே தாங்கள் உத்தமர்களாக ஆகிவிடமுடியும் என்று நம்புவது என்ன மாதிரி திராவிடப் பகுத்தறிவு என்பது யாருக்காவது தெரியுமா?


வீடியோவில்  முதல் 3 நிமிடங்களை skip செய்துவிடலாம்! பேட்டியே அதன்பின்தான் ஆரம்பம்!    behindwoods இன் கேபிரியல் தேவதாஸ் பிரபலங்களைப் பேட்டி எடுப்பதில் இன்னமும் கத்துக்குட்டிதான் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் கேட்கலாமா? இதே மாதிரி திமுக வாரிசுகள் அல்லது பானாசீனாவிடம் துள்ள முடியுமா? இங்கே தமிழகத்தில் ஊடகங்களுமே முதலில் சொன்ன திராவிடப் பகுத்தறிவோடு தான் கேள்வி கேட்கிறார்களோ? பரிதாபம்! 


மத்தியப்பிரதேச காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத்துக்கு வேண்டப்பட்டவர்கள் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஏராளமான பணம், ஆவணங்கள் பிடிபட்டிருப்பதன் மீதான விவாதம் இது. தேர்தல் என்றால் #dirtycash புழக்கம் எப்படியிருக்கும் என்பதன் ஒருசிறு சாம்பிள் இது. 

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காண்டி உரையாடிய மாதிரியே தானும் மாணவ மாணவியரிடம் உரையாட வேண்டும் என்கிற விபரீத ஆசை சிவகங்கை சின்ன ஜாமீனுக்கும் வந்துவிட்டதாம்! என்ன நடந்தது என்பதை இங்கே சொல்கிறார்கள்!  


திமுகவின்  யோக்கியதை என்ன என்பதைத் தனியாக இனிமேல் நோட்டீஸ் அடித்தோ குறுஞ்செய்தி அனுப்பியோ தான் ஜனங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன? ஆடிய ஆட்டங்களும் இழிவு படுத்திப் பேசிய பேச்சுக்களும் வீடியோ காட்சிகளாக உலா வந்து கொண்டிருக்கிறதே! அதற்கு என்ன செய்வார்களாம்?   திராவிடங்களைத் தோல்வி பயம் பிடித்து ஆட்டுகிறது! 

முன்ன ஒரு கத்துக்குட்டி காலி குரூப்பு.. பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போட்டுச்சு..

ஸ்டாலின் தானே சட்டையை கிழிச்சிட்டு ரோட்டுல நின்னாரு ..

20₹டோக்கன் குரூப்புல நாலு பொண்ணுக... போலீஸ் ரெய்டை தவிர்க்க.. தாங்களே நிர்வாணமாகி... போலீஸ் அங்கே நுழைய முடியாமல்... தடுத்திருக்காக...


இப்போ ஸ்டாலினிஸ்ட் ஒன்னு ஈவேரா சிலையை உடைச்சு வச்சிருக்குது...

தன்னைத்தானே கேவலப்படுத்திக்கிட்டு... அடுத்தவன் மீது பழி சுமத்தும் போக்கு... தமிழகத்தில் அதிகரிச்சிட்டே போகுது...

திராவிடவாத கல்வி கற்றுத்தந்த பெருமைமிக்க செயல்களுக்கு சில உதாரணங்கள் இவை... 

என்று முகநூலில் தலையில் அடித்துக்கொள்கிறார் ஒருவர் 


மீண்டும் சந்திப்போம். 
  

4 comments:

  1. திமுக இந்தத் தேர்தலில் வெற்றிபெறும்...ஆனால் நிச்சயம் இந்து வாக்குகள் குறையும். இந்த டிரெண்ட் பாஜக வாக்குகள் அதிகரிப்பில் (தனிக் கட்சியாக) முடியும். பாருங்கள், பாஜக கூட்டுச் சேராமல் இருந்தால், இந்து வாக்குகள் அதற்கு வர ஆரம்பிக்கும். இதற்கு முன்னால் ஜெ. அவர்கள் இந்த வாக்குகளை வைத்திருந்தார் (மோடியிடம்கூட தன்னிடம் பாஜகவைவிட இந்துக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாராம்)

    ReplyDelete
    Replies
    1. இப்போதுள்ள fluid ஆன நிலைமையில் தமிழக ரிசல்ட்டை கணிப்பது கடினம் என்றே நினைக்கிறேன். திமுக வெற்றிபெற்றாலும் அது அவர்களுக்கு கைகொடுக்குமா என்பதையும் சேர்த்தே தான் சொல்கிறேன்.

      Delete
  2. எனக்கென்னமோ வீரமணியிடம் இந்து எழுச்சியை கொண்டு வரும் வேலையே பிஜேபி தான் கொடுத்திருக்கும் என தோன்றுகிறது! கிட்ட தட்ட பத்து வருடத்துக்கு மேலே சத்தமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இவ்வளவு சத்தம் போடுவது தற்செயல் இல்லை. ஒன்று, கருணாநிதி இல்லாததால் தலை கால் புரியாமல், ராஜகுரு பதவிக்கு ஆசைப்பட்டு ஆடவேண்டும். இல்லையென்றால் மறைமுகமாக இந்து எழுச்சிக்கு பாடு பட வேண்டும்.. எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நல்லது நடந்தால் சரி!

    ReplyDelete
    Replies
    1. சத்தம் போடுவது முக அழகிரி மகன் துரை தயாநிதி சொன்னமாதிரி ஓசிச்சோற்றுக்கு அலைகிற குணம்தான்! தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள ஏதோ ஒரு மேடை, ஏதோ ஒரு சர்ச்சை இந்தமாதிரி ஆசாமிகளுக்குத் தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறது, அவ்வளவுதான்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)