Tuesday, April 23, 2019

மாறிவரும் ஊடகத்துறை! தேங்கிநிற்கும் ஊடகக்காரர்கள்!

கருத்துக்கணிப்பு நடத்தியபிறகு ரங்கராஜ் பாண்டே கொஞ்சம் அடக்கி வாசித்தமாதிரித்தான் தெரிந்தது. ஊடகமோ வலைப்பதிவோ எதுவானாலும் காலாட்டிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் என்பது எனக்கே தெரியும் போது தொழில்முறை ஊடகக்காரரான பாண்டேவுக்குத் தெரிந்திருக்காதா? பார்க்கத்  தூண்டுகிற தலைப்போடு ஒரு விவாதம்! திசைகள்...4!  நான்கு பேர் கூடி ஜெயலலிதாவா எடப்பாடி..? கருணாநிதியா ஸ்டாலின்..? என்ற தலைப்பில் உரையாடுகிறார்களாம்!



இங்கே பட்டிமண்டபங்கள் வெட்டி மண்டபங்களாகிப் போன மாதிரி தொலைக்காட்சியோ யூட்யூப் சேனலோ தமிழில் விவாதங்கள் எதுவும் ஆழமானதாகவோ அர்த்தமுள்ளதாகளோ இருப்பதில்லை என்ற வருத்தம் நீண்டகாலமாகவே எனக்குண்டு. சரிதானே?!

எடப்பாடி எதற்காக ஜெயலலிதாவாகவேண்டும்? இசுடாலின் எதற்காக கருணாநிதி ஆகவேண்டும்? ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பாணி, கைவரக்கூடிய நடைமுறைகள் என்றிருக்கும் போது ஒருவர் இன்னொருவரின் நகலாக இருப்பாரா என்ற கேள்வியே மிக அபத்தமானது. இதில் தினமலர் வெங்கடேஷும் துக்ளக் ரமேஷும் தான் பார்த்தவுடன் பெயர் தெரிந்துகொள்ளக் கூடிய அறிமுகம் உள்ளவர்கள், மற்ற இருவர் பெயரைத் தெரிந்துகொள்ள முயற்சித்து அலுத்து விட்டது. 

கொஞ்சம் வழக்கமான விவகாரங்களிலிருந்து விலகி புதிதாக என்ன செய்தி என்று தேடப்போகும் போது Zee5 சேனலில்  ஆட்டோ சங்கர் வெப் சீரீஸ் இன்று முதல் ஸ்ட்ரீமிங் ஆகிற நிலையில் அதன் தயாரிப்பாளரை பத்திரிகையாளர்கள் வறுத்தெடுத்தார்களாம்! நம்மூர் பத்திரிகையாளர்களுடைய திடீர் அறச்சீற்றம் குபீர் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.  இங்கே ஹிந்தி அல்லது மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிற உள்ளூர் வெப் சீரீஸ் பெரும்பாலும் ஆபாசமான வசனங்கள், soft porn ரகக்காட்சிகளோடு தான் வருகின்றன என்பது கூடத்தெரியாத பத்திரிகையாளர்கள் என்றால் சிரிப்பு வருமா வராதா? இதன் ஸ்க்ரிப்டை பதிவர்கள் பலருக்கும் அறிமுகமான தண்டோரா மணி ஜி தான் எழுதியிருக்கிறார் என்பது சந்தடி சாக்கில் ஒரு கொசுறுத்தகவல்! 


மணி ஜி இரண்டுநாட்களுக்கு முன் முகநூலில் பகிர்ந்தது  
திருவான்மியூர் ஏரியாவுக்குள் ஆம்பளங்க போனால் சாராயம் குடிக்க வச்சிருவான்.பொம்பளையா இருந்தா பிராத்தலுக்கு இழுத்துடுவான். சைக்கோ..சீரியல் கில்லர்..கேங்ஸ்டர்..இப்படி எத்தனையோ விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இணையத்தில் அவனைப்பற்றி..அவன் ஆட்டோ சங்கர். 
வீரமணி, பாக்சர் ரவி, வெள்ளை ரவி என்று ரவுடிகள் வட சென்னையில் கோலோச்சிக்கொண்டிருந்த சமயம்..தென் சென்னையில் சைலண்டாக அராஜகம் செய்து கொண்டிருந்தவன் ஆட்டோ சங்கர். ஒரு நாள் காலைப் பத்திரிக்கைகளில் திடீர் தலைப்பு செய்தியானான்.தோண்ட தோண்ட பிணங்கள்..சாராயம்,பிராத்தல் ராக்கெட்.அரசியல் ,காவல் துறை தொடர்புகள் என்று செய்திகள் கொட்ட ஆரம்பித்தன. ஆறு கொலை வழக்குகளில் தூக்கிலிடப்பட்டான் . இன்னும் ஒன்பது பெண்களை காணவில்லை.எரித்து கடலில் வீசி விட்டான்.. இப்படி நிறைய உறுதி செய்யப்படாத வதந்திகள் . நடிகைகள், அரசியல்வாதிகள் என்று சகலரையும் அவனே குறிப்பிட்டு ஒரு பத்திரிக்கையில் தொடராக எழுதினான். ஆனால் ஒருத்தரும் மறுக்கவேயில்லை. அதிலேயே கொஞ்சம் புனைவு இருந்தது என்று அவன் சம்பந்தப்பட்ட ஆட்கள் நேர் உரையாடலில் என்னிடம் கூறினார்கள். இந்த தொடருக்காக சங்கர் குடும்பம், அவன் சகோதரர் (பரோலில் வந்தபோது),ஜெயிலில் உடன் இருந்தவர்கள் என்று பலரை சந்தித்தோம். எழுதப்படாத சில விஷயங்கள் தெரிய வந்தது. போலிஸ் ரெக்கார்ட்ஸ் படி ஆறு கொலைகள்...அதன் அடிப்படையில் திரைக்கதை அமைத்தோம்..கொஞ்சம் ஃபிக்‌ஷன் சேர்த்து..இதில் அவன் புகழ் பாடியவர்களும் உண்டு.பெரியார் நகரை பொறுத்தவரை ஆட்டோ சங்கர் ஒரு காட்ஃபாதர் . அவன் பிராத்தலில் இருந்த ஒரு பெண்மணியையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்ன கதைகள்....வேறு  ..ஆனால் இங்கிருக்கும் கிரியேட்டிவ் சுதந்திரம்..மற்றும் சட்டப்பிரச்சனைகள் ..இவற்றை கருத்தில் கொண்டு இந்தத்தொடர் உருவாகியுள்ளது..தமிழ் இணையத்தொடர்களில் ஒரு ராவான...கல்ட்டான தொடராக இது இருக்கும்.. மேக்கிங்,பெர்ஃபாமன்ஸ் எல்லாமே புதிதாக இருக்க வேண்டும் என்று பார்த்து செய்திருக்கிறோம்...

இனி எஜமானர்கள்தான் சொல்ல வேண்டும்.
( வாய்ஸ் ஓவரில் இருக்கும் வரிகளுடன் ஒரு கிரியேட்டராக எனக்கு சம்மதமில்லை.அது தனி அரசியல்  )
இந்த வாய்ப்பை அளித்த இணைத்தயாரிப்பாளர் மற்றும் தொடரின் D.O.P Manoj Paramahamsa அவர்களுக்கு நன்றி.

இப்படி ஒரு அறிமுகத்தோடு ட்ரெயிலர் லிங்க் கொடுத்து மணி ஜி எழுதியிருந்ததை படித்தபோதுகூட பெரிதாக எதுவும் தோன்றவில்லை. இன்றைக்கு பிரஸ் மீட்டில் மீடியாக்காரர்கள் செய்த அழும்பைப் பார்த்ததும்........
  
தொழில்நுட்ப வளர்ச்சியில் வீடியோ ஆன் டிமாண்ட் ரகத்தில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கக் கூடிய ஸ்ட்ரீமிங் வீடியோக்களாக வருகிற வெப் சீரீஸ் வடிவம்  அழுவாச்சிகாவியங்களைத் தவிர வேறொன்றையும் அறியாதபல  தொலைக்காட்சிகளுக்கு எச்சரிக்கைமணி அடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.     


    
     
     
      

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)