மேற்கு வங்காளத்தில் இன்னமும் கணிசமான செல்வாக்குடன் இருக்கும் இடதுசாரிகள் காங்கிரஸுடன் இணைய ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், காங்கிரஸ் இறங்கி வரவில்லை. ‘பி.ஜே.பி இங்கு மம்தாவுடன் ஆக்ரோஷமான மோதலில் ஈடுபட்டிருக்கிறது. நாமும் பிரிந்து நின்று நான்குமுனைப் போட்டியை உருவாக்க வேண்டாம். குறைந்தபட்சப் புரிந்துணர்வையாவது செய்துகொள்வோம். இப்போது காங்கிரஸ் வசமுள்ள மற்றும் செல்வாக்குள்ள தொகுதிகளில் நாங்கள் வேட்பாளரை நிறுத்த மாட்டோம். கம்யூனிஸ்ட்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் நீங்கள் வேட்பாளரை நிறுத்தாதீர்கள்’ என்று கம்யூனிஸ்ட்கள் கேட்கிறார்கள்.
ஆனால், மேற்கு வங்காளத்தில் ராகுலுக்கு நல்ல கூட்டம் கூடுவதால், அதீத நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸ், இதற்குக்கூட இறங்கி வரவில்லை என்று காங்கிரஸ் வலிய வந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டதாக விகடன் தளம் குறைப்பட்டுக்கொள்கிறது இந்தச் செய்தியைக் கொஞ்சம் படித்துப் பார்க்க முடியுமானால் காங்கிரஸ் தலைமை ஒருவிதமான கற்பனா உலகத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்!
இங்கே தமிழக அரசியல் களேபரங்களைக் கண்டுகொள்ளாமல் போய் விடலாம் என்று நினைத்தால் கூட விடமாட்டேனென்று சுற்றிச் சுற்றி ரெண்டுமுருகன் IT ரெய்டு விவகாரம் வந்துகொண்டே இருக்கிறது, ஆ. விகடன் காசுக்கு கூவுகிற ஊடகம் என்று 2G ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாட்களிலேயே தெரிந்தாலுமே கூட முழுக்கத் தவிர்க்க முடியாதபடி, இது மாதிரி இரண்டுபக்கமும் ஆடுகிற ஆட்டங்கள் இருக்கின்றன.
IT ரெய்டு பற்றிப்புலம்புகிற திமுக தன்னளவில் எவ்வளவு யோக்கியமாக இருக்கிறது? பொய்யான செய்திகளைப் பரப்புவதில் முன்னோடிகளை அவ்வளவு எளிதில் நம்பி விட முடியுமா? இங்கே ஜெயக்குமார் சொன்னார் என்பதற்காகவே இல்லை, எவர் என்ன சொன்னாலும் அதன் உண்மைத் தன்மை எவ்வளவாக இருக்கும் என்பதை மதிப்பிடப் பழக வேண்டாமா?
ஆனால், மேற்கு வங்காளத்தில் ராகுலுக்கு நல்ல கூட்டம் கூடுவதால், அதீத நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸ், இதற்குக்கூட இறங்கி வரவில்லை என்று காங்கிரஸ் வலிய வந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டதாக விகடன் தளம் குறைப்பட்டுக்கொள்கிறது இந்தச் செய்தியைக் கொஞ்சம் படித்துப் பார்க்க முடியுமானால் காங்கிரஸ் தலைமை ஒருவிதமான கற்பனா உலகத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்!
IT ரெய்டு பற்றிப்புலம்புகிற திமுக தன்னளவில் எவ்வளவு யோக்கியமாக இருக்கிறது? பொய்யான செய்திகளைப் பரப்புவதில் முன்னோடிகளை அவ்வளவு எளிதில் நம்பி விட முடியுமா? இங்கே ஜெயக்குமார் சொன்னார் என்பதற்காகவே இல்லை, எவர் என்ன சொன்னாலும் அதன் உண்மைத் தன்மை எவ்வளவாக இருக்கும் என்பதை மதிப்பிடப் பழக வேண்டாமா?
That தமிழ் தேசியமே காறித்துப்புன மொமன்ட் இது!
பாவம்....பப்பு!
ஒரு கோவிலில் அபிஷேகத்துக்கான பாலுக்கு ஒரு பெரிய குடம் வைத்திருந்தார்கள். கிராமத்துமக்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு கிண்ணம் பால் விடவேண்டுமென்பது விதி. எல்லாரும் விட்டார்கள். மாலையில் பூசாரி பார்த்தபோது, குடம் நிறைய தண்ணீர் இருந்தது. மற்றவர்கள் எல்லாம் பால் விடும்போது தான் மட்டும் ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டால் தெரியவா போகிறதென்று எல்லோரும் நினைத்ததன் விளைவு!
அமேத்தி மக்கள் ஜெயிக்கவைப்பார்களென்று வயநாடு ஓட்டர்களும், 'நம்ம மேலே நம்பிக்கையில்லாமெத்தானே திடீரென்று கேரளாவுக்கு ஓடினார்...அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்' என்று அமேத்தி மக்களும் நினைத்துவிட்டால்?........பாவம் பப்பு!
அதானே!
கண்ணடித்த ப்ரியா வாரியர் படம் ஓடவில்லை!
காப்பியடிக்கும் ராகுல் காண்டி கதை மட்டும் ஓடணுமா?
விகடன் எதற்காக குறைபட்டுக்கொள்ளவேண்டும்? பத்திரிகையின் பணி செய்திகளை அளிப்பது. தான் சார்ந்துள்ள கட்சிக்காக கூட்டணி சேர்க்க முயல்வதல்ல. விகடன் இந்த மாதிரிச் செய்திகளை வெளியிட்டு அதன் எஜமானர்கள் திமுக தலைவர்கள் என்பதை வெளிப்படுத்திக்கொள்கிறது
ReplyDeleteமுந்தைய காலங்களில் செய்தியைத் தருவது என்பது ஒரு தொழிலாகவும் வியாபாரமாகவும் இருந்தது. பாரபட்சமின்றி செய்திகளைத் தந்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், செய்திகளைப் புரிந்துகொள்ளவும் வாசகர்கள் சுயமாக ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ள உதவியாக தலையங்கம், விசேஷ கட்டுரைகள் எழுதுவதும் (தினமணியில் கணக்கன் கட்டுரைகள் மாதிரி) ரூ ஆரோக்கியமான பத்திரிகை தர்மமாகவே இருந்தது. கட்சிகளுக்கென்று தனியாக ஊதுகுழல்கள் இருந்தன.
Delete2000களுக்குப் பிறகு ஊடகங்கள் செய்தியைத் தருகிற என்ற நிலையில் இருந்து பிறழ்ந்து செய்திகளை விற்பனை செய்கிற, காசுக்கு கூவுகிறவைகளாக ஆனது மிகப்பெரிய சீரழிவு. உதாரணத்துக்கு NDTV யை எடுத்துக் கொண்டால், அதில் காங்கிரஸ்காரர்கள் முதலீடு செய்ய ஆரம்பித்ததும், பர்கா தத் மாதிரி மீடியா தரகர்கள் உருவானதும் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்தவை.
விகடன் குறைப்பட்டுக்கொள்கிறது என்பது நான் சொன்னது. அந்த வார்த்தைகளின் பின்னால் விகடன் செய்திக்கான சுட்டி இருக்கிறது. உங்கள் கேள்விக்கு நேர்மையாகப் பதில் சொல்லிவிட்டேனா இல்லையா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்!
எனக்குத் தெரிந்து, எமெர்ஜென்சியில் இந்திராகாந்தி பத்திரிகைகளை அச்சுறுத்தியபோது, இந்தியன் எக்ஸ்ப்ரஸ் உண்மைச் செய்திகளைச் சொன்னது. அதற்குப் பிறகு, எப்போது பத்திரிகைகள், தங்கள் பத்திரிகைத் தொழிலை விட்டுவிட்டு, வேறு தொழில்களிலும் இறங்கியதோ, அப்போது, மற்றவர்களிடமிருந்து முதலீடுகளைக் கவர நினைத்தது. அதுதான் இன்றைய நிலைக்குக் காரணம்.
Deleteகட்சிக்காரர்களுக்கு ரேடியோ உரிமம், தொலைக்காட்சி உரிமம் என்றெல்லாம் பாரபட்சமாய்க் கொடுத்ததெல்லாம் இதற்குக் காரணம்தான்.
https://youtu.be/V1qO4q_ibE8
Delete