அண்ணே...இது தான்ணே டெஸ்க்டாப்பு. நெட்டு கனெக்ட் செஞ்சுட்டு இந்த மோஸில்லா ஃபையர் ஃபாக்ஸ க்ளிக் செய்ங்கண்ணே...
டேய்...ஏண்டா படுத்துற...?
அண்ணே...முதல்ல அப்படித்தான் இருக்கும். ரொம்ப ஈஸிண்ணே...
சரி அது யாருடா ரோஸி ஃபையர் ? போட்டோ இருக்காடா...
அண்ணே அது மோஸில்லா ஃபையர் ஃபாக்ஸ்ன்ணே...அது ஒரு புரெளவ்சர்ன்ணே...
துரைமுருகன்ணே...இவன் என்ன சொல்றான்னு புரியுதா ? உள்ளாடைகளப் பத்தி பேசுறானோ ?
அப்பா மாதிரி அசிங்கம் அசிங்கமா சொல்லிக்குடுக்குறான் தம்பி. மண்டபத்துல இன்னேரம் 4 மீட்டிங்குக்கான துண்டு சீட்டு ரெடி பண்ணியிருக்கலாம். இதெல்லாம் உதயநிதியும், அவன் மகனும் பார்க்கட்டும். நீ வா இந்த தடவை துண்டு சீட்டுல 8 வரி இருக்காம். கடினமா இருக்குமாம். வந்து மனப்பாடம் செய்.
இப்படி முகநூலில் R நாராயணன் காட்சிக்களுக்கேற்றபடி கதை சொன்னால் ஒருவர் பின்னூட்டத்தில் சொல்வது இன்னும் டேமேஜிங்!
டேய் என்னை ஏன்டா எலியை புடிச்சி அழுத்த சொல்ற, நான் அந்த அளவுக்கு இல்லடா... ஸ்டாலின்.
ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் வாழ்வு மலர தங்க மாளிகை திறப்பு விழாவுக்குத் தனி விமானத்தில் பறந்து சென்று பணி செய்த சோசலிச சமுதாய சமய சார்பற்ற சமதர்மச் சிற்பி வாழ்க! என்று முகநூலில் நக்கலாக வாழ்த்துகிறார் தேவராஜ். மதுரை நகைக்கடைத் திறப்புவிழாவுக்காக விஜய் சேதுபதி தொகுப்பாளினி தியாவுடன் தனிவிமானத்தில் பறந்து வந்தாராம்! அம்மணி படம்புடிச்சு இன்ஸ்டாகிராம் இத்யாதிகளில் பகிர்ந்து கொண்ட படம் வைரலாகப்பரவி இப்படி நக்கலுக்கும் உள்ளாகியிருக்கிறது. சரி, அரசியலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நடிகர்கள் என்ன பேசினாலும் இங்கே அரசியலாக்கப்படும்! அதை வைத்து அரசியலும் செய்யப்படும்!
பிரியங்கா வாத்ரா வாயாடிதான்! வாய்க்கொழுப்பு உள்ளவர்தான்! ஆனால் அட்டைக் கத்தி! ஒன்றுக்கும் உதவாது என்று சதீஷ் ஆசார்யா சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா? ம்ம்ஹூம்! அவர் மோடி எதிர்ப்பாளர்! என்ன நினைத்து வரைந்தாரோ? உங்களுக்காவது எதுவும் புரிகிறதா?
மம்தா பானெர்ஜிகள் செய்கிற ரசகுல்லா கூட இப்படித்தான் இருக்குமாம்!
மீண்டும் சந்திப்போம்.
/சமதர்மச் சிற்பி வாழ்க! என்று முகநூலில் நக்கலாக வாழ்த்துகிறார் தேவராஜ்// - இதெல்லாம் பொறாமையில் பொசுங்குபவர்கள் எழுதுவது. விஜய் சேதுபதி பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர். குறிப்பிட்ட தேதியில் அவருக்கு நேரமில்லாது இருக்கலாம். இல்லை, காலை ஒரு ஷெடியூலுக்குப் பிறகு மறுநாள் காலையும் நடிப்பு வேலை சென்னையில் இருக்கலாம். அதனால் ஜாய் ஆலுகாஸ் மதுரைக்கு வர, ஹெலிகாப்டர் செலவையும் ஏற்றுக்கொண்டிருக்கலாம். அப்படி வருவதில் என்ன தவறு? 'ஒடுக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் எழுதும் போராளிகள்' ஏன் மொபைல் உபயோகப்படுத்த வேண்டும்? சிலேட் உபயோகப்படுத்தி ஒடுக்கப்பட்டவர்களுக்காக உழைக்கலாமே.
ReplyDeleteநானறிந்த வரை தேவராஜ் அவர்களுக்கு விஜய் சேதுபதி மீது பொறாமை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கடந்தகாலங்களில் விஜய்சேதுபதி கொஞ்சம் அரசியலும் பேசியிருக்கிறார், அதில் உடன்பாடு இல்லாத நக்கலாக மட்டுமே எனக்குத் தோன்றியது. அதனால் தான் இங்கேபகிர்ந்தது!
Delete/ட்டைக் கத்தி! ஒன்றுக்கும் உதவாது என்று சதீஷ் ஆசார்யா சொல்வதாக // - கார்ட்டூன் சொல்வது... மோடி, ரெடியாக களத்தில் 'பிரியங்காவை' எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால் உண்மையில் பிரியங்காவின் கட்டவுட்டை முன்னே வைத்து அஜய் ராய் என்ற சாதாரண வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் என்பது..
ReplyDeleteமோடி பிரியங்காவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதே அந்த அட்டைக்கத்தியை glorify செய்கிற மாதிரி இருக்கிறதே! பிரியங்கா அந்த அளவுக்கு worth ஆ என்ன? !!
Delete