இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளும் வணக்கங்களும்! ஒரு புதிய ஆண்டு பிறக்கிறதென்றால், நலமும் வளமும் பெருகட்டும்! நாடும் மக்களும் செழிக்கட்டும் என வாழ்த்துவது மரபு. இந்தப் புத்தாண்டு அந்த வாழ்த்துக்களை உண்மையாகவே நடத்திக் காட்ட ஒரு வாய்ப்பையும் தந்து பிறந்திருக்கிறது.
இந்து மக்கள் முன்போல வாய்மூடி மௌனிகளாக இருக்கப் போவதில்லை என்பதை சமீபகால நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன என்று ஒரே இந்தியா நியூஸ் தளத்தில் சிவ.
சரவணகுமார் எழுதியிருக்கும் இந்தக்கட்டுரை சொல்கிறது அதிலிருந்து சில பகுதிகள்:
ஸ்டாலின் தாங்கள் ஹிந்து விரோதி அல்ல என்று மேடைக்கு மேடை அலற ஆரம்பித்திருக்கிறார்… கருணாநிதி திருமால் போற்றி , முருகன் போற்றியெல்லாம் வெளியிட்டார் என்கிறார்…பாஜக மட்டும்தான் இந்துக்களின் ஏகபோக பிரதிநிதி என்று கேள்வி எழுப்புகிறார்..
அவருடைய சகோதரி கனிமொழியின் பகுத்தறிவு பிரச்சாரங்கள் எல்லோருக்கும் தெரியும்… திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் பற்றி அவர் பேசியதும் , ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுப்பு அனுமதிப்பது குறித்து அவர் பேசியதும் , தன்னுடைய தந்தை உடல் நலம் குன்றி இருந்த போது அவருடைய உதவியாளர் அவர் நெற்றியில் விபூதி வைப்பதைப் பற்றி கிண்டலடித்து பேசியதும் இன்னும் எல்லோருக்கும் நினைவிருக்கிறது…
அப்படிப்பட்ட புரட்சிகர பகுத்தறிவாளர் கவிதாயினி கனிமொழி தற்போது நெற்றியில் பொட்டு இல்லாமல் வெளியே வருவதே இல்லை …தூத்துக்குடியில் ஒரு கோயில் விடாமல் சுற்றுகிறார்… அவருடைய தாயார் ராசாத்தி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு , தன் மகள் திருச்செந்தூர் முருகன் அருளால் வெற்றி பெறுவார் என்று அறிவிக்கிறார்… இதோ நேற்றுவரை தன்னுடைய டுவிட்டர் ப்ரோபைலை டி.பி. யில் வைத்திருந்த ஈவேரா படத்தை மாற்றி விட்டு பனைமரத்தின் படத்தை வைத்திருக்கிறார் கனிமொழி..
திமுகவின் பொய்புரட்டுக்கள் அதோடு ஓய்ந்து விட்டதா? இல்லை என்கிறது The Hindu நாளிதழ் அம்பலப்படுத்துகிற செய்தி! ஜல்லிக்கட்டு விவகாரத்தை எப்படி திமுகவினர் திட்டமிட்டு என்னவோ மெரினா புரட்சி என்று கிளப்பி விட்ட கதை இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
தி.மு.க-வால் கட்டமைக்கப்பட்டு தூண்டப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம், ஏமாற்றப்பட்ட தமிழக இளைஞர்கள்! “Operation Thalapathy”-க்காக பகடைக்காயான தமிழர் எழுச்சி – பகீர் உண்மைகள்!
ஜெயலலிதா மரணமடைந்ததும் தமிழகத்தில் ஒரு நிலையற்ற அரசியல் தன்மையையும், குழப்பத்தையும் உருவாக்க தி.மு.க எடுத்த முன் முயற்சி திட்டம்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் என்றும்,இப்போராட்டத்தை எப்படி தூண்டிவிடுவது, நடத்துவது, எந்தெந்த தீய சக்திகளைக் கொண்டு தொடர்ச்சியாக இதை ஒரு சாகும்வரை போராட்டமாக நடத்தி நிர்வாகத்தை நிலைகுலைய செய்து அ.தி.மு.க அரசை கவிழ்ப்பதுதான் தி.மு.க-வின் திட்டமென்றும் இந்து ஆங்கில நாளிதழ் தங்களுக்கு கிடைத்த ஓ.எம்.ஜி என்ற நிறுவனம் மூலம் கசிந்த சில மின்னஞ்சல் தகவல்கலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் பெயர் “பிராண்டு தளபதி”-யாகும். ஜல்லிக்கட்டு ஆதரவு இயக்கம் என்ற ஒரு போராட்டத்தை செயற்கையாக தூண்டி நடத்தியது பிராண்டு தளபதி என்கிற ஸ்ட்ரேட்டஜிக் திட்டம்தான்.
திருச்சி தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மற்றும் அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகன் ஆகியோர் இந்த சூப்பர் திட்டத்தின் இயக்குனர்கள்.
இந்த பிராண்டு தளபதி திட்டத்தை வடிவமைத்து, இந்த போராட்டத்தை நிர்வகித்தது One Mind Generation Research Foundation (OMG) என்கிற ஒரு மேலாண்மை ஆலோசனை நிறுவனமாகும் என்றும் இரகசியமாக வெளியான இ.மெயில் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக தி இந்து பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
2015-ஆம் ஆண்டே இத்திட்டம் தொடங்கியதாகவும் அப்போது முதன் முதலாக ஜல்லிக்கட்டுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கப்பட்டதாகவும் ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் பொது இந்த போராட்டம் பிசுபிசுத்ததால் ஜெயலலிதா மரணத்துக்கு பின் விரிவான அளவிலும், தீவிரமாகவும் இந்த திட்டம் முன்னெடுத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்துக்கான செலவுகள் அனைத்தும் தி.மு.க-வினர் ஏற்றுக் கொண்டதாகவும், அதன்படி OMG நிறுவனம் தி.மு.க-வின் பெயர் வெளியே தெரியாதவாறு மக்கள் கலை இலக்கிய கழக போராளி கோவன், சின்னப்பொண்ணு, கவிஞர் வைரமுத்து போன்றோரை இந்த போராட்டத்தில் பங்கேற்க செய்து, தமிழக இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை தூண்டி விட்டு இப்போராட்டத்தி நடத்தியதாகவும் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க-வுக்கான தேர்தல் அறிக்கையை தயாரித்து அளித்தது இந்த OMG நிறுவனம்தான் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக அரசியலில் மேற்கண்டவாறு குழப்பம் விளைவிக்கவும் இந்த நிறுவனம் பயன்படுத்தப்பட்டதாகவும் மேற்படி இ.மெயில் தகவல்கள் தெரிவிப்பதாக இந்து ஆங்கில நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக காங்கிரஸ் கூட்டணியை ஏன் முற்றொட்டாக நிராகரிக்க வேண்டுமென்பதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன.உறுதியான முடிவெடுத்து செயல்படுத்துகிற வாய்ப்பு இன்னும் நான்கே நாட்களில் நமக்கு கிடைக்கிறது.
திமுகவோடு, கூட்டணி சேர்ந்திருக்கிற உதிரிகளான விசிக, மதிமுக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரசை நிராகரிப்போம்! புதிய தமிழகம் பிறக்க அதுவொன்றே வழி!
No comments:
Post a Comment