உதயநிதி அரசியல் பேசக் கற்றுக்கொண்டு விட்டார்! திராவிட அரசியலில் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று கேட்க நினைக்கிறீர்களா? இந்த வீடியோவைப் பார்த்து விடுங்கள்!
சமாளிப்பது! சமாளிப்பதுதான் அரசியலில் கற்றுக்கொள்வது! சமாளிக்கிற கலையில் உதயநிதி கொஞ்சம் தேர்ச்சி பெற்று வருகிறார்! ஆமாமா? இல்லையா?
எப்போது பொதுவெளியில் இருந்து ஓய்வுபெறவேண்டும் என்கிற விவஸ்தை மட்டும் வைகோவுக்கு இருந்திருந்தால்.....? என்று பெருமூச்சு வேண்டுமானால் விடலாம்!
ஜாமீன் வாரிசு கார்த்தியை எல்லாம் ஆதரித்துப் பேசுகிற நிலைமை வந்தபிறகாவது வைகோ சுதாரித்துக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை! இதேமாதிரி இன்னொருவரும் இந்தப்பட்டியலில் சேருகிறார்!
பழ. கருப்பையா! காலம் எப்படியெல்லாம் மனிதர்களை மாற்றிவிடுகிறது என்பதற்கு நடமாடும் உதாரணம்! மகன் கரு. பழனியப்பனையும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதெல்லாம் எதற்கு? நெட்டுக்கு வந்தோமா நாலு அக்கப்போர் கசமுசா படித்தோமா? காமெடியா எதையாச்சும் பாத்தோமா?
ஒங்களுக்காகவே கவுண்டர் காமெடி! கலக்குறாருங்கோ!
No comments:
Post a Comment