Friday, April 19, 2019

(தேர்தல்) முறைகேடுகளும் பொதுத்துறை வங்கிகளும்!

பொதுத்துறை வங்கிகள் என்பது பெயரளவுக்குத்தான்! ஆனால் எந்தவொரு முறைகேடு நடந்தாலும், அரசியல்வாதிகளுக்குச் சளைக்காமல் வங்கி அதிகாரிகளும் சமயத்தில் ஊழியர்களும் சேர்ந்தே முறைகேடுகளில் இறங்குவது பொதுத்துறை வங்கிகள் என்று மட்டுமில்லை, தனியார் வங்கிகளிலும் சர்வசாதாரணமானதுதான்! இந்தச் செய்தி எத்தனைபேர் கண்களில் பட்டிருக்கும் என்பது தெரியாது! ஏற்கெனெவே அரசல்புரசலாக முகநூலிலும் வேறு சில சமூகவலைத்தளங்களிலும் வந்ததுதான் என்றபோதும் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.  


வேலூர் அருகில் திமுக பொருளாளரின்  இடத்தில் நடத்தப் பட்ட  வருமான வரிச் சோதனை எதிர்கட்சிகளைப் பழி வாங்கும் நடவடிக்கை என்ற செய்தி/ கருத்து வாக்குப் பதிவுக்கு முன்னரும் பின்னரும் பரப்பப்பட்டு வருகிறது. வேலூர் தொகுதி தேர்தல் ரத்துசெய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று கூவியவர்களும், ஊடகங்களும் பிடிபட்ட பணம் எங்கிருந்து வந்தது என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசுவதே இல்லை. காரணமென்ன என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமானது இல்லை!
    
ஆனால் உண்மை என்னவெனில், அங்கு பணம் பதுக்கப் பட்டிருக்கிறது என்று வருமான வரித்துறைக்குத் தகவல் கொடுத்ததே துரைமுருகனின் உறவினர் ஒருவர்தான் எனச் சொல்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

துரைமுருகனின் இன்னொரு உறவினர் என்று கூறப்படும் கனரா வங்கியின் மண்டல அலுவலகத்தில் சீனியர் மானேஜராக இருக்கும் தயாநிதி என்ற அதிகாரிதான் ரூ11.48 கோடி அளவிற்கு இருந்த கரன்சிகளைச் சிறிய மதிப்பிலான கரன்சிகளாக மாற்றிக் கொடுத்தார் என்பது விசாரணையில் வெளியாகி இருக்கிறது.
// “It was a case of an enthusiastic relative who is a senior official with Canara Bank, Vellore, extending a helping hand, and another disgruntled relative leaking the information to the authorities,” said a source in the I-T department//
வேலூர் கனரா வங்கி கேஷ் செஸ்ட்டில் (ரிசர்வ் வங்கிக்காக வங்கிகள் ரொக்கத்தை பாதுகாத்து வைக்கும் இடம் ) பணி புரிந்த இரு அதிகாரிகள் திரு தயாநிதியின் வேண்டுகோளின் பேரில் பெரிய மதிப்புள்ள கரன்சிகளுக்கு பதிலாக ரூ 200 நோட்டுகள் வேண்டும் என்று விண்ணப்பித்து மூன்று நான்கு தவணைகளில் நோட்டை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்,
பணம் வங்கிக் கணக்கிலிருந்து வித்டிரா செய்யப்படவில்லை. ரொக்கமாக கொண்டுவரப்பட்டு சில்லறை நோட்டுக்களாக மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது
எப்படி நடந்தது? குட்டு எப்படி வெளிப்பட்டது? செய்தியின் இந்த infographic சொல்வதைக் கவனித்துப்பாருங்கள்.

  
ரெண்டுமுருகனின்  ஒரு உறவினர் தயாநிதி கனரா வங்கியின் மூத்த அதிகாரிதான் பெரியமதிப்பு நோட்டுக்களுக்கு 200 ரூ, நோட்டுக்களாக கரன்சி செஸ்ட் மானேஜர்கள் சிங்காரம் மற்றும் வினோத் கிருஷ்ணன் துணையோடு மாற்றித் தந்து இருக்கிறார். தயாநிதி அப்படிச் செய்வது சிசிடிவி காமெராவில் பதிவாகியிருக்கிறது. விசித்திரம் என்னவென்றால் அவர் ஒருவர் மட்டுமே பரிவர்த்தனையைக் கையாண்டதாக சிசிடிவியில் பதிவாகியிருப்பதுதான்! வங்கி நடைமுறைகளில் குறைந்தபட்சம் இருவராவது இருந்திருக்க வேண்டும். VVIP கஸ்டமருக்கு விதிகள் எல்லாம் வெறும் அப்பளம்!      

இந்தத்தகவலைப் போட்டுக் கொடுத்ததும் ரெண்டுமுருகனின் இன்னொரு சொந்தம் தான். தயாநிதி தற்சமயம் முதற்கட்ட விசாரணை முடிந்த பிறகு பணியிடைநீக்கம் செய்யப் பட்டிருக்கிறார். ஆனால் அவரது  கூட்டாளிகளை ஏன் விட்டு வைத்திருக்கிறது கனராவங்கி என்ற கேள்விக்கான விடை தெரியவில்லை.

Demonetisation தருணத்தில் பொதுத்துறை வங்கிகளும் சரி தனியார் வங்கிகளும் சரி எப்படிச் செயல்பட்டிருப்பார்கள்? சாமானிய ஜனங்களை  வரிசையில் காத்துக் கிடக்கவைத்து விட்டு, அரசியல் பிரமுகர்களுக்கும், சினிமா மற்றும் தொழில் பிரபலங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கோடிக் கணகான  நோட்டுகளை எப்படி மாற்றிக் கொடுத்து இருப்பார்கள் என்பதற்கான ஒரு சின்ன சாம்பிள் இது. ஆனால் பழி சுமத்தப் பட்டதென்னவோ நரேந்திர மோடி மீதுதான்!  

வங்கி விதிகளில் சாமானிய கஸ்டமர் VVIP கஸ்டமர் என்று இரண்டுவிதமான treatment இல்லைதான்! ஆனால் பிசினெஸ் வேண்டும் என்ற போட்டியில், முதலில் காலாவதியாவது வங்கி விதிகள்தான்! விஜய் மல்லையாக்களும் நீரவ் மோடிகளும் ஏன், எப்படி வங்கிகளில் முன்னுரிமை பெறுகிறார்கள் என்பதற்கான சின்ன சாம்பிளாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்!  ஆர்தர் ஹெய்லியின் The Money Changers நாவல் விமரிசனமாக இந்தப்பக்கங்களில் எழுதியிருந்தது நினைவு வருகிறதா?  

4 comments:

  1. தயாநிதி என்ற பெயர் ராசியோ?

    ஏன் இவரை வங்கியைவிட்டு விரட்டி அடித்து, பென்ஷன் தராமல் உள்ளே தள்ளக்கூடாது? இவர்களைப் போன்ற தேசத்துரோகிகள்தான் நாட்டின் இத்தகைய நிலைக்குக் காரணம்.

    ReplyDelete
    Replies
    1. மாட்டிக் கொண்ட ஒருவரைப் பற்றி மட்டுமே பேசுகிறோமா நெல்லை சார்?

      பிரச்சினை, இன்னமும் மாட்டிக் கொள்ளாமல் தப்பிவரும் வங்கி அதிகாரிகளைப் பற்றியது. நகர்வாலா வழக்கில் ஸ்டேட் வங்கி அதிகாரிக்கு தண்டனை ஏதும் அளிக்கப்படவில்லை. இங்கே தயாநிதியும் கூட அதிகபட்சம் CRS என்று தப்பித்து விடுவதற்கான வாய்ப்பே அதிகம்!

      Delete
  2. அநியாயம் சார்! படிக்க படிக்க எரிச்சல் எல்லை மீறுகிறது. நம் BB தான் எகிறும். என்ன செய்வது?

    இதைப் பற்றியெல்லாம் டிவி விவாதச் சேனல்களில் விவாதிக்க மாட்டார்களா?.. தமிழ் பத்திரிகைகளில் நடுநிலை ஏடுகள் என்று பீற்றிக் கொள்ளும் பத்திரிகைகளில் கூட இம்மாதிரிச் செய்திகள் இருட்டடிப்பு செய்யப் படுவதேன்?.. தி ஹிந்துவில் இந்தச் செய்தி வெளியானதோ?..
    டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு தொடர்ந்து வருட சந்தா கட்ட தீர்மானித்திருக்கிறேன். நம்மால் முடிந்தது அவ்வலவு தான்.

    ReplyDelete
    Replies
    1. என் ராம் கைகளுக்கு வந்தபிறகு இந்து நாளிதழ் என்றைக்கு நடுநிலையாக இருந்தது ஜீவி சார்? இந்தச் செய்தி வேண்டுமென்றே இங்குள்ள ஊடகங்களால் மறைக்கப்படுகிறதென்றே நினைக்கிறேன். கொங்கணி வங்கிகளே ஒரு மாதிரி என்றால் கனரா வங்கி அந்த ஒருமாதிரியின் உச்சம். ஹர்ஷத் மேத்தா காலத்தைய பங்குச்சந்தை ஊழலாக இருக்கட்டும், அல்லது வேலூர் சமாசாரமாக இருக்கட்டும், கனரா வங்கி அதில் முந்திரிக்கொட்டை மாதிரித் துருத்திக் கொண்டு நிற்கும்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)