Showing posts with label கமல் காசர். Show all posts
Showing posts with label கமல் காசர். Show all posts

Thursday, May 27, 2021

தமிழக சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள்!

மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும் மாதவனா    வாழ்ந்துபாரு வறுமை பழகிப்போகும் இப்படி ஒருபாட்டு ஒன்பது ரூபாய் நோட்டு திரைப் படத்தில் வரும். மோடிக்கு எதிராக அரசியல் செய்யத் தெரியாதவர்கள் கூட அப்படி மனம் தளர்ந்து மோடி மீது வெறுப்பைக் கக்குவதே அரசியல் என்ற நிலைமைக்குப் பழகிப்போய் விட்டார்கள். விவசாயிகள் போராட்டம் என ஆரம்பித்து திக்குதிசை தெரியாமல் அந்தரத்தில் திரிகிற ஒருகூட்டத்தை, இங்கே உள்ள சில அரசியல்வாதிகள் ஆதரிக்கிற போர்வையில் மோடி மீது வெறுப்பையும் வன்மத்தையும் கக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட நாள்  மே 26. அந்த நாளுக்கு என்னவாம்?


சரக்கு, மிடுக்கு என வீரவசனம் பேசிய திருமா கூட இந்த மாதிரி சரக்கு தீர்ந்துபோன காமெடிப்பீசாகி விட்டார். 2014 இல் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்ட தினமான மே 26 ஆம் தேதியை தேசிய கருப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 

வேளாண் சட்டங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப்பார்த்து விட்டுத்தான் எதிர்க்கிறார்களா? வெறுப்பரசியல் செய்ய அதெல்லாம் தேவையே இல்லை என்பது இந்திய அரசியலின் தலைவிதி!  


3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும்! சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோமென இசுடாலின் அறிவித்திருப்பதாக இந்த வீடியோ செய்தி.  அதுமட்டும் தானா?


 

இந்தமாதிரி வக்கிரமான பாடல் எழுதுகிறவருக்கு விருது! முதல்வர் பாராட்டு என்பதெல்லாம் தமிழகத்தின் சோகம்.
  


சிரிப்புத்தான் வரு.குதையா! 
இடுக்கண் வரும்போது சிரித்துத்தான் சமாளித்தாக வேண்டும்! வேறென்ன செய்ய? மேலே உள்ள ஸ்க்ரீன் ஷாட் நாச்சியாள் சுகந்தி என்பவருடைய முகநூல் பகிர்விலிருந்து எடுக்கப்பட்டது 


நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களில் கமல் காசர் கட்சி கரைந்து போனதும் சகாயம் என்கிற உத்தமருடைய சாயம் வெளுத்துப்போனதும் தான்! சகாயத்துடைய சாயம் தேர்தலுக்கு முன்பாகவே கடந்த ஜனவரியில் வெளுத்தது. கமல் காசர் யாருடைய B டீம்/ கைக்கூலி என்பது தேர்தலுக்குப் பின்னால் வெளுத்தது. அவரைக்  கருவேப்பிலையாகப்பயன்படுத்திக் கொள்ள அவரே யார் யாரிடம் விலைபோனார் என்பது கொஞ்சமல்ல  நிறையவே வினோதமான விஷயம்!  

மீண்டும் சந்திப்போம்.       

Thursday, May 20, 2021

#அடுத்தவீடு #கேரளா #ஆந்திரா அரசியல்! அப்புறம் கமல் காசர்!

ஒருவழியாக கேரளத்தில் இரண்டாவது முறையாக இடது முன்னணி அரசின் அமைச்சர்கள் இன்றைக்குப் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் கேரளம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மந்திரிசபை பதவியேற்பு நடந்து விட்டது. 140 இல் 99 இடங்களைப் பிடித்தவர்கள், மந்திரிசபையை முடிவு செய்வதற்கு இத்தனை நாட்கள் ஆனது ஏன் என்ற கேள்வி இருந்தது. மந்திரிசபையில் யார்யார் என்பதை முடிவு செய்வதற்காகவே இத்தனை நாள் ஆகியிருக்கிறது என்பதை விட பழைய முகங்கள் எவரும் வேண்டாம் என்று தீர்மானிப்பதற்கே இத்தனை காலமாகி இருக்கிறது. முந்தைய மந்திரிசபையில் மிகவும் திறமையாகப் பணியாற்றி எல்லோராலும் அபிமானிக்கப் பட்ட K K ஷைலஜாவுக்கு மந்திரிசபையில் இடமில்லை என்பதே பினரயி விஜயன் மீது கேரளத்தில் கடும் அதிருப்தி ஏற்படக் காரணமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

 


எது எப்படியானால் தான் என்ன? தமிழக அரசியலின் கபட வேடதாரிகளுடைய வாழ்த்தும் வரவேற்பும் பினரயி விஜயனுக்கு இருக்கிறதே! அது போதாதா என்ன?  

******* 

ஆந்திர அரசியலில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தே நீண்டகாலமாகி விட்டதல்லவா? சந்திரபாபு நாயுடு கொஞ்சம் மாநிலத்தைத் தாண்டி அரசியல் செய்ய முயன்று YSR காங்கிரசிடம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிற பரிதாபத்தைக் கடைசியாகப் பேசிய நினைவு. ஆனால் முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி செய்கிற விதம் மிகவும் விபரீதமானதாக இருக்கும் போலத் தெரிகிறதே!அவரை எதிர்த்தோ விமரிசித்தோ எவரும் வாயைத் திறக்கக் கூடாதென்ற ரீதியில் அப்படியான செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப் படுகிறவர்கள் எவராயினும் அவர்கள் மீது Sedition தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்படுவதாகச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.அவருடைய கட்சி MP ஒருவர்மீதே அப்படிக் குற்றம் சாட்டப்பட்டு, போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார்மீது விசாரணை நடத்திய ஆந்திர உயர்நீதி மன்றம், அவருக்கு ஹைதராபாத் ராணுவ மருத்துவமனையில் பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது. கருத்து சுதந்திரம் என்று கம்பு சுற்றிக் கொண்டிருந்த போராளிகள் எவர் கண்ணிலும் இது ஏன் படவே இல்லை என்கிற அனாவசியமான கேள்வியை நான் கேட்கப்போவதே இல்லை! 


இப்படிப்போற்றிப்பாடப்பட்டதெல்லாம் மிகவும்  பழைய கதை!  Telugu media outlet TV5 News has moved the Supreme Court seeking quashing of an First Information Report (FIR) in a sedition case in Andhra Pradesh. Shreya Broadcasting Pvt Ltd, which owns TV5, has contended in its plea that the state government "intends to silence" critics and the media by filing a "vague FIR" and abusing the process of law. "It is humbly submitted that the continuance of the FIR is likely to cause a chilling effect on the media in such crucial times of the pandemic, when truthful and fearless reporting is the need of the hour," said the plea என்கிறது செய்தி. ஆட்சி அதிகாரம் கண்ணை மறைக்கிற தருணங்களில் வீழ்ச்சியும் சேர்ந்தே வரும் ரன்பது வரலாறு சொல்கிற அனுபவம்!

*******


எம்ஜியார் படப்பாடல் வரிகளோடு காட்சி தருகிற கமல் காசர் அது தனக்கே பாடமாகிப் போகும் 
என்பதை ஏனோ மறந்துவிட்டார்!   

கமல் காசர் கட்சியிலிருந்து இன்னொரு முக்கியப்புள்ளி CK குமரவேல் இன்றைக்கு விலகியிருக்கிறார் என்பது சிலகாலம் முன்புவரை இங்கே சென்னை விமானநிலைய மேற்கூரை மீண்டும் மீண்டும் பெயர்ந்து விழுந்த கதை மாதிரியான சுவாரசியமற்ற செய்தியாகிக் கொண்டு வருகிறது என்பது இந்த நாளுடைய விசேஷம். நேற்றைக்கு முருகானந்தம் என்ற புள்ளி விலகினாராம்! விலகியதற்கு குமரவேல் சொன்ன காரணம் விசித்திரமானது. Kumaravel told TNM that Kamal Haasan disappointed them as he made it clear that MNM is a leader based party and not a cadre based party என்கிறது இந்தச்செய்தி அவர் சொல்கிற மாதிரி cadre based party இங்கே எத்தனை இருக்கிறது என்பது தெரியுமா? cadre based party என்பதன் பொருள் புரிந்துகொள்ள முடிகிறதா? சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.    

Saturday, May 15, 2021

வெளியேறும் நிர்வாகிகள்! கரைகிறதா கமல் காசர் கட்சி?

BIGG BOSS அலட்டல் புகழ் கமல் காசரை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு அரசியல் பேச வேண்டி வரும் என்பதைக் கனவிலும் நான் நினைத்துப் பார்த்ததே இல்லை! கமல் காசர் யாருடைய B டீம்? யாருடைய வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறிப்பார்? யாருடைய வாக்குகளைப் பிரிப்பார்? இத்தனை கேள்விகளுக்கும் கமல் காசர் கட்சிக்குள் இன்று நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளே விடை சொல்லிக் கொண்டிருக்கின்றன.  

ரங்கராஜ் பாண்டே இந்த 22 நிமிட வீடியோவில் கமல் காசர் கட்சிக்குள் நடப்பதென்ன, கரைசேருவாரா என்று கொஞ்சம் சொல்கிறார். வெறும் மூன்றே மூன்று நபர்கள் தானே விலகியிருக்கிறார்கள்? அதற்குள்ளாகவே  கட்சி கலகலத்துவிட்டதாக, கரைந்து விட்டதாக எல்லோருமே இத்தனை பரபரப்பாகப் பேசுவானேன்? சமீபத்தில் விலகிய நிர்வாகி சந்தோஷ்குமார் தொகுதிப்பக்கம் அதிகமாகத் தலைகாட்டாமல் 22000+ வாக்குகள் வாங்கினாரே! விலகிய அந்த மதுரவாயல் வேட்பாளர் 33000+ வாக்குகள் வாங்கினாரே! அதெல்லாம் சொல்வது என்ன? கமல் கட்சிக்கு மவுசு இருக்கிறது என்பதையா?  

சவுக்கு சங்கர், ரெட் பிக்ஸ் Felix  இவர்களைக்கூட நான் சட்டை செய்வதில்லைதான்! அதற்காக இந்த 26 நிமிட காமெடியை  ரசிக்காமல் இருக்க முடியுமா? சவுக்கு சங்கர் அவிழ்த்து  விடுவதெல்லாம் உண்மையல்ல என்பதை இங்கே அழுத்தமாகப்பதிவு செய்கிறேன்.   

 ரங்கராஜ் பாண்டேவும் சவுக்கு சங்கரும் தலா இருபது  நிமிடத்துக்கும் மேலாகப்பேசியும்  முடிவுக்கு வரமுடியாத விஷயத்தை வெறும் ஒருநிமிட வாசிப்பிலேயே இங்கே சொல்லி விடுகிறார் என்றால் ........

கமலஹாசனின் கட்சி கரைவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌
அக்காலத்தில் பெரும்படை நடத்தும் அரசர்கள் துணைபடை ஒன்றை உருவாக்கி இன்னொரு முனையில் இருந்து தாக்குவார்கள், யுத்தம் முடிந்ததும் அதை கலைப்பார்கள்
அரசியலில் இதெல்லாம் ஒருவகை தந்திரம், இனி திமுகவுக்கு நெருக்கடி வரும்பொழுது மட்டும் கமல் அரசியலுக்கு வருவார்
இப்பொழுது அவர்களுக்கு சிக்கல் இல்லை என்பதால் கமல் கட்சி நடத்தவேண்டிய அவசியமில்லை
869
38 கருத்துகள்
195 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

ஆக, பஞ்சாயத்து கலைகிறது அல்லது கரைகிறது என்று தனியாகவும் சொல்ல வேண்டுமா?😍😎  

மீண்டும் சந்திப்போம்.

Friday, September 20, 2019

ஊரோடு ஒத்துவாழ்! மாரிதாஸ்! கோபிகிருஷ்ணன்! கமல் காசர்!

ஊரோடு ஒத்துவாழ்! ஊரைப் பகைக்கின் வேரொடு கெடும்! என்பதெல்லாம் காலாவதியாகிப்போன வழக்கு!  எதிர் நீச்சல் என்று சொல்வதற்கும் முதலில் சொன்னதற்கும் எத்தனை முரண்பாடு என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்தது உண்டா?  முதலில் பிஜேபியின் நாராயணன் திருப்பதி இங்கே என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்! 


   
முக.ஸ்டாலின் - வைகோ கூட்டணி.. மிக மோசமான வியாபாரம் என்று இந்த வீடியோவின் சாரமான தலைப்பாக தலையங்கம் என்கிற யூட்யூப் சேனல் சொல்கிறது. உண்மை தான் என்று எல்லோருக்கும் தெரியும்! ஆனால் என்னென்ன விஷயங்களை முதலீடாக வைத்து அரசியலில் வியாபாரம் செய்கிறார்கள் என்று கேள்விகேட்டால் என்ன சொல்வீர்கள்?
சுபவீ செட்டியாருக்குத் தன்னுடைய பேச்சு வியாபாரத்தின் முதலாக இருப்பது திராவிடம், தமிழ் என்று கலந்துகட்டி அடிப்பது தான் என்பது மிகத்தெளிவாகவே தெரியும். ஆனால் அவர் பேசுவதைக் கேட்கிற எத்தனைபேருக்கு அது தெரியும்?


அங்கே தான் துண்டுச்சீட்டை வைத்துக் கொண்டு இசுடாலின் பேசுகிற அரசியலாகட்டும், அம்பேத்கர், தலித் என்று திருமா செய்கிற அரசியலாகட்டும், சுபவீ மாதிரி பேசுவதை மட்டுமே முழுநேரத் தொழிலாகட்டும், இவர்கள் எல்லோரும் என்ன மாதிரி அரசியல், வியாபாரம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள மாரிதாஸ் மாதிரியான இளைஞர்கள் தேவைப் படுகிறார்கள்! ஊரோடு ஒத்துவாழ் என்கிற வழக்கை நாம் எவ்வளவு தவறாகப் புரிந்துகொண்டு மந்தைத்தனமாக இருப்பது என்றே சாய்ந்தால் சாயுற பக்கமே சாயுற செம்மறி ஆடுகளாகவே ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் கூடப் புரியும்!


இந்த 37 நிமிட வீடியோவை அவசியம் பார்க்க வேண்டுமென்று பரிந்துரை செய்கிறேன். தி பயனீர் நாளிதழில் நிருபராகப் பணி புரிந்து வருகிற J கோபிகிருஷ்ணன், அவிழ்த்துவிட்ட கோவில் காளையாக வலம் வந்துகொண்டிருந்த சால்வை அழகர் சீனாதானாவுக்கு மூக்கணாங்கயிறு மாட்ட முயற்சித்த ஒருசிலரில் (முதல் பெயராக டாக்டர் சுப்ரமணியன் சுவாமி) ஒருவர்! சிலகாலத்துக்கு முன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். பானாசீனா மற்றும் அவரது மனைவி நளினி இருவரும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு நிறைய முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள், அதை விசாரித்து சீனியர் அட்வகேட் அந்தஸ்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்ததில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பார் கவுன்சில் ஒரு 4 நபர் குழுவை அமைத்து இந்தவிஷயத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சொல்லியிருக்கிறார். INX Media வழக்கு குறித்தும் (நேற்றைக்கு சிபிஐ நீதிமன்றத்தில் சீனாதானாவின் பரிதாபமான முறையீடுகளை கொஞ்சம் சிரித்துக் கொண்டே சொல்கிறார்) அப்புறம் சீனாதானா எதிர்கொள்ள வேண்டிய வழக்குகளைப் பற்றிக் கொஞ்சம் சுவாரசியமாகச் சொல்கிறார். ஊரார் வாய்மூடி அமைதியாக இருப்பது போல, தானும் இருப்பானேன் என்று ஒருசிலர் முனைப்பாகச் செயல்படுவதுதான் மாற்றத்துக்கு முன்னோடி என்பதை இந்தப் பக்கங்களில் Change Management என்ற தலைப்பில் ஒரு பதினோரு பதிவுகளில் ஒரு புத்தகத்தின் மீதான என்னுடைய சிந்தனைகளாகச் சொல்லி இருந்தேன் என்பது விளம்பரம் தான்! ஆனால் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயமாக இருக்கிற விளம்பரம்!


நடிகர் விஜய் தனது பிகில் படைப்பு பாடல்கள் வெளியீட்டில் அரசியல் வாடை தொனிக்கிற மாதிரிப் பேசியதோ, அதை எதிர்த்தோ ஆதரித்தோ சிலர் பேசியதோ விஷயமே இல்லை! மக்கள் நீதி மையம் என்றொரு கட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே கமல் காசர் விஜய் பேச்சை ஆதரித்துப் பேசியிருப்பதுதான் மேட்டரே!

யாரை எங்கே வைப்பது என்று தமிழகத்தில் ஐம்பது அறுபது ஆண்டுகளாகவே யாருக்கும் புரியவே இல்லை என்பதுதான் கோளாறுகளின் ஊற்றுக்கண்ணே! கண்ணதாசன் தன்னுடைய சொந்த அனுபவத்தில் நொந்து போய் எழுதிய இந்தப்பாட்டே கொஞ்சம் யோசிக்க வைக்கும்!

மீண்டும் சந்திப்போம்.

Monday, September 16, 2019

மறுபடியும் சுபவீ! கமல் காசர்! திருநாவுக்கரசர்!

திராவிட இயக்கத் தமிழர்  பேரவை என்றொரு தனிக்கடை விரித்து பேச்சு வியாபாரம் செய்துவரும் சுபவீ செட்டியாரை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து சோனியாG காங்கிரஸ் பேசவைத்திருப்பது, அவர்களுடைய அரசியல் எந்த அளவுக்கு கீழிறங்கி இருக்கிறது என்பதை மட்டுமல்ல, சீனாதானாவுக்கு ஆதரவுக்குரல் எழுப்பவும் கூட காங்கிரஸ் வாடகைக்குத் தான் ஆள்பிடித்தாக வேண்டியிருக்கிறது என்கிற பரிதாபத்தை நன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.  ஒரு 25 நிமிடக் காமெடியை அனுபவிக்க முடிகிறதா பாருங்கள்! 



திஹார் சிறையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சால்வை அழகர் பானாசீனாவின் மகன் அவருக்கு ஒரு கடிதம் எழுதி இருப்பதாக இங்கே  அதிலே என்ன சொல்லியிருக்கிறது என்பதை விட அதை எந்தெந்த ஊடகங்களுக்கு குறிப்பிட்டு tag செய்திருக்கிறார் என்பதை அவருடைய  ட்வீட்டரில் பார்த்துக் கொள்ளலாம்! இதில் பெரும்பாலான  ஊடகங்களின் சாயம் வெளுத்துப்போய் நீண்ட நாட்களாகிறது என்பது ஒரு புறம்! இன்னமும் கூட ஊடகப்பொய்களாலேயே சால்வை அழகருடைய பிம்பத்தைத் தூக்கி நிறுத்திவிடலாம் என்று நம்புகிறார்கள் பாருங்கள், அது இன்னமும் விசித்திரம்!


கமல் காசருடைய மக்கள் நீதி மையம் கட்சிக்கு  என்ன ஆயிற்று என்று இங்கே யாரும் தேடுவதாகவோ கவலைப் படுவதாகவோ தெரியவில்லை. ஆனாலும் மனிதர் நானும் இருக்கிறேன் என்று திடீரென்று உறக்கம் கலைந்து தமிழ் மொழி, ஜல்லிக்கட்டு என்றெல்லாம்  பெனாத்தியிருக்கிறார்! 

Moron Kamalahasan and DMK Chieவந்த Stalin are howling about imposition of Hindi. What about their imposition that no Hindi will be taught in TN? Let Hindi be an optional third language and the choice on which language to opt left to the student
1:41 PM · Sep 16, 2019  

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியிடமிருந்து வந்த பதிலடி இது ஒரு பக்கம் என்றால் யூட்யூபில் இப்போது பார்த்த இந்த வீடியோ செம கலக்கல்!  


சமோசா, டீ, பஜ்ஜி, அப்புறம் கொஞ்சம் திருநாவுக்கரசர் எம்.பி.: மாஜி கே.என்.நேருவின் ’கை கழுவும்’ அரசியல் என்ற தலைப்பில் இங்கே கொஞ்சம் தமாஷாக ஒரு செய்தியைச் சொல்கிறார்கள்! 


ஒட்டுமொத்த காங்கிரஸுக்கும் முதல் ஆளாய் அல்வா கொடுத்த கே.என்.நேரு, சமீபத்தில் காங்கிரஸின் எம்.பி. திருநாவுக்கரசருக்கு சமோசா கொடுத்ததுதான் செம்ம கலாய்ப்பான சேதி. அதாவது திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் திருநாவுக்கரசர், நன்றி சொல்லி தொகுதி எங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நன்றி தெரிவிக்க சென்ற அரசருடன் நேருவும் சென்றிருக்கிறார். எம்.பி.க்கு அங்கிருக்கும் பிரபல கடை ஒன்றில் சமோசா, பஜ்ஜி, டீ என ஏகப்பட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களை வாங்கிக் கொடுத்து குஷியாக்கி இருக்கிறார் நேரு. சாப்பிட்டு முடித்த பின், ‘சரி மறுபடியும் நன்றி அறிவிப்பை தொடரலாமா?’ என்று அரசர் கேட்க, ‘கை எண்ணெய்யா இருக்குது. கழுவிட்டு வந்துடுறேன். நீங்க ஆரம்பிங்க ’ என்று சொல்லி கிளம்பியவர் அதன் பிறகு அந்த திசைக்கே வரலையாம். காத்திருந்து காத்திருந்து அரசரும் நொந்துட்டாராம். 

ஹும் காங்கிரஸை கை கழுவுறதுல நேரு ரொம்ப சுட்டியா இருப்பார் போல என்கிறார்களே மெய்யாலுமா?

மீண்டும் சந்திப்போம்.
  

Saturday, May 18, 2019

புருடாவிலும் கொஞ்சம் செய்தி! கமல் காசர்! அடடே!மதி

புருடா செய்திகளில்  விகடன் புருடாவுக்குத் தனி இடம் கொடுத்தே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அத்தனை  ஸ்பெஷல்! எந்த நேரத்தில் உண்மையில் கொஞ்சம் தாராளமாகப்    பொய் கலந்து எழுதுவார்கள், எந்த நேரம் வடிகட்டின பொய்யில் கொஞ்சம் உண்மை கலந்து எழுதுவார்கள் என்பதைக் கணிக்கவே முடியாது. இந்த வார ஜூவியில் சக்திவேல் என்பவர் எழுதியிருக்கிற கூட்டணி குருமா ....இந்தியாவுக்கு சரியாக வருமா என்ற தலைப்பில் (பசியோடு பரோட்டா பொட்டலத்தைப் பார்த்துக் கொண்டே எழுதினாரோ?)  எழுதியிருக்கிற செய்திக் கட்டுரை மூக்கில் விரலை வைத்த தருணம்!

    அட்டைப்படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை 

ழக்கமாக தோழர்கள்தான் மூன்றாவது அணிக்கு முதல் கோஷம் எழுப்புவார்கள். ஆனால், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், மூன்றாம் அணிக்கு அவர்கள் முழுக்குப் போட்டுவிட்டார்கள். இப்போது அதில் மும்முரமாக இருக்கிறார், சந்திரசேகர ராவ். அன்னாருக்கு மாநில அரசியல் போரடித்துவிட்டதுபோல... என்று அட்டகாசமாக ஆரம்பிக்கிறார் சக்திவேல். இப்படி சந்தோஷத்துடன் மேலே வாசிக்க ஆரம்பித்தால் அடுத்து வரும் வரிகளிலேயே சறுக்குகிறார். பிஜேபியும் சரி காங்கிரசும் சரி தலா 150 இடங்களை ஒட்டித்தான் வரும், மாநிலக் கட்சிகளுடைய கை  ஓங்கும் என்று ஆரூடம் சொல்லும்போதே, அரசியல் ஞானம் அல்லது புருடாவிடுவதில் விகடன் training பளிச்சிடுகிறது. 

ஆரூடம் ஆக, சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெற்கிலிருந்தும் மம்தா கிழக்கிலிருந்தும், மாயாவதி வடக்கிலிருந்தும் பிரதமர் கனவில் மிதக்கி றார்கள். பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மம்தாவை காங்கிரஸும் மாயாவதியை பி.ஜே.பி-யும் களமிறக்கும் என்கிறார்கள். மே 23 இரவில் இருந்தே, அரங்கேற்றவேளை ஆரம்பித்துவிடும். என்று றெக்கை கட்டிப் பறக்கிறது 

கொஞ்சம் மூன்றாவது அணி அமைந்து யாரோ ஒரு மாநிலக் கட்சி ஆசாமி பிரதமராக இருந்து கொஞ்ச நாளிலேயே கவிழ்க்கப்பட்ட பழைய கதையோடு சொல்கிற இந்த ஒரு பத்தி  தான் என்னை இந்தச் செய்திக் கட்டுரையைக் கொஞ்சம் திரும்பப் பார்க்க வைத்தது.தேசியக் கட்சிகளுக்கு மாநிலப் பார்வை வேண்டும் என்று சொல்லும் மாநிலக் கட்சித் தலைவர்கள், தங்களுக்குத் தேசியப் பார்வை இருக்கவேண்டியது அவசியம் என்பதை மறந்துவிடுகிறார்கள். ‘மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சியை விமர்சிப்பது மட்டுமே தேசியப் பார்வை ஆகிவிடாது’ என்பதை மாநிலக் கட்சிகள் உணர வேண்டும்.  


கமல் ஒரு    இரண்டும்கெட்டான் என்று புறந்தள்ளிவிட்டுப் போகத்தான்ஆசை! மனிதர் விட மாட்டேன் என்று பிடிவாதமாக மேலும் மேலும் அபத்தமாகப் பேசிக்கொண்டே போகிறாரே! 

  
இப்படிக் காங்கிரசால் டில்லியில் 7 தொகுதிகளும் போச்சு என்று பேசிய அதே அரவிந்த் கேசரிவாலு, இன்று அதே நாறவாயால் பிஜேபி நினைத்தால் 2 நிமிடங்களில் தன் கதையை முடித்துவிடும்; தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாலேயே கொல்லப் படலாம் என்று ஒப்பாரிவைத்திருப்பது காமெடிக் கொடுமை! 



#AKவாலு assaasinate செய்யப்படுகிற அளவுக்கு worth ஆ? காமெடிப்பீசு!

மீண்டும் சந்திப்போம்.        

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)