புருடா செய்திகளில் விகடன் புருடாவுக்குத் தனி இடம் கொடுத்தே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அத்தனை ஸ்பெஷல்! எந்த நேரத்தில் உண்மையில் கொஞ்சம் தாராளமாகப் பொய் கலந்து எழுதுவார்கள், எந்த நேரம் வடிகட்டின பொய்யில் கொஞ்சம் உண்மை கலந்து எழுதுவார்கள் என்பதைக் கணிக்கவே முடியாது. இந்த வார ஜூவியில் சக்திவேல் என்பவர் எழுதியிருக்கிற கூட்டணி குருமா ....இந்தியாவுக்கு சரியாக வருமா என்ற தலைப்பில் (பசியோடு பரோட்டா பொட்டலத்தைப் பார்த்துக் கொண்டே எழுதினாரோ?) எழுதியிருக்கிற செய்திக் கட்டுரை மூக்கில் விரலை வைத்த தருணம்!
கொஞ்சம் மூன்றாவது அணி அமைந்து யாரோ ஒரு மாநிலக் கட்சி ஆசாமி பிரதமராக இருந்து கொஞ்ச நாளிலேயே கவிழ்க்கப்பட்ட பழைய கதையோடு சொல்கிற இந்த ஒரு பத்தி தான் என்னை இந்தச் செய்திக் கட்டுரையைக் கொஞ்சம் திரும்பப் பார்க்க வைத்தது.தேசியக் கட்சிகளுக்கு மாநிலப் பார்வை வேண்டும் என்று சொல்லும் மாநிலக் கட்சித் தலைவர்கள், தங்களுக்குத் தேசியப் பார்வை இருக்கவேண்டியது அவசியம் என்பதை மறந்துவிடுகிறார்கள். ‘மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சியை விமர்சிப்பது மட்டுமே தேசியப் பார்வை ஆகிவிடாது’ என்பதை மாநிலக் கட்சிகள் உணர வேண்டும்.
கமல் ஒரு இரண்டும்கெட்டான் என்று புறந்தள்ளிவிட்டுப் போகத்தான்ஆசை! மனிதர் விட மாட்டேன் என்று பிடிவாதமாக மேலும் மேலும் அபத்தமாகப் பேசிக்கொண்டே போகிறாரே!
அட்டைப்படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை
வழக்கமாக தோழர்கள்தான் மூன்றாவது அணிக்கு முதல் கோஷம் எழுப்புவார்கள். ஆனால், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், மூன்றாம் அணிக்கு அவர்கள் முழுக்குப் போட்டுவிட்டார்கள். இப்போது அதில் மும்முரமாக இருக்கிறார், சந்திரசேகர ராவ். அன்னாருக்கு மாநில அரசியல் போரடித்துவிட்டதுபோல... என்று அட்டகாசமாக ஆரம்பிக்கிறார் சக்திவேல். இப்படி சந்தோஷத்துடன் மேலே வாசிக்க ஆரம்பித்தால் அடுத்து வரும் வரிகளிலேயே சறுக்குகிறார். பிஜேபியும் சரி காங்கிரசும் சரி தலா 150 இடங்களை ஒட்டித்தான் வரும், மாநிலக் கட்சிகளுடைய கை ஓங்கும் என்று ஆரூடம் சொல்லும்போதே, அரசியல் ஞானம் அல்லது புருடாவிடுவதில் விகடன் training பளிச்சிடுகிறது.
ஆரூடம் ஆக, சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெற்கிலிருந்தும் மம்தா கிழக்கிலிருந்தும், மாயாவதி வடக்கிலிருந்தும் பிரதமர் கனவில் மிதக்கி றார்கள். பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மம்தாவை காங்கிரஸும் மாயாவதியை பி.ஜே.பி-யும் களமிறக்கும் என்கிறார்கள். மே 23 இரவில் இருந்தே, அரங்கேற்றவேளை ஆரம்பித்துவிடும். என்று றெக்கை கட்டிப் பறக்கிறது
ஆரூடம் ஆக, சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெற்கிலிருந்தும் மம்தா கிழக்கிலிருந்தும், மாயாவதி வடக்கிலிருந்தும் பிரதமர் கனவில் மிதக்கி றார்கள். பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மம்தாவை காங்கிரஸும் மாயாவதியை பி.ஜே.பி-யும் களமிறக்கும் என்கிறார்கள். மே 23 இரவில் இருந்தே, அரங்கேற்றவேளை ஆரம்பித்துவிடும். என்று றெக்கை கட்டிப் பறக்கிறது
கொஞ்சம் மூன்றாவது அணி அமைந்து யாரோ ஒரு மாநிலக் கட்சி ஆசாமி பிரதமராக இருந்து கொஞ்ச நாளிலேயே கவிழ்க்கப்பட்ட பழைய கதையோடு சொல்கிற இந்த ஒரு பத்தி தான் என்னை இந்தச் செய்திக் கட்டுரையைக் கொஞ்சம் திரும்பப் பார்க்க வைத்தது.தேசியக் கட்சிகளுக்கு மாநிலப் பார்வை வேண்டும் என்று சொல்லும் மாநிலக் கட்சித் தலைவர்கள், தங்களுக்குத் தேசியப் பார்வை இருக்கவேண்டியது அவசியம் என்பதை மறந்துவிடுகிறார்கள். ‘மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சியை விமர்சிப்பது மட்டுமே தேசியப் பார்வை ஆகிவிடாது’ என்பதை மாநிலக் கட்சிகள் உணர வேண்டும்.
இப்படிக் காங்கிரசால் டில்லியில் 7 தொகுதிகளும் போச்சு என்று பேசிய அதே அரவிந்த் கேசரிவாலு, இன்று அதே நாறவாயால் பிஜேபி நினைத்தால் 2 நிமிடங்களில் தன் கதையை முடித்துவிடும்; தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாலேயே கொல்லப் படலாம் என்று ஒப்பாரிவைத்திருப்பது காமெடிக் கொடுமை!
#AKவாலு assaasinate செய்யப்படுகிற அளவுக்கு worth ஆ? காமெடிப்பீசு!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment