இங்கே இடதுசாரிகளுக்கு இருக்கிற மவுசு என்னவென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவர்களைப் பற்றி எழுதுகிற பதிவுகளுக்கு வருகிற நண்பர்கள் எண்ணிக்கை என்ன என்று பார்த்தாலே போதுமென்கிற அளவுக்குத்தான் இருக்கிறது. ஒருகாலத்தில் மரியாதையோடு பார்க்கப்பட்ட இடதுசாரி இயக்கம், தோழர்களை நினைத்தால் எனக்கே மிகவும் வேதனையாகத் தான் இருக்கிறது.ஆனால், மாற்றம், மாற்று அரசியல் என்று பேச ஆரம்பித்தால் இடதுசாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டுப்பேச முடியாது. இந்தத் தேர்தல் முடிவுகளும் 2014 ஐ விட இடதுசாரிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத்தான் தரப்போகிறது என்கிற செய்திகள் உறுதியாகிக் கொண்டே வருகின்றன.
மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியின் கொழுப்பு இம்முறை கணிசமாகக் குறைக்கப்படும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் இந்து தமிழ்திசை நாளிதழ்களில் செய்தி வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. இடதுசாரி வாக்குகளில் கணிசமான பகுதி பிஜேபிக்கு அப்படியே மாறுமென்று திரிணாமுல் கட்சியின் தேர்தல் பண்டிட்டுகள் இப்போதுதான் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்! The internal reports and feedback of TMC suggest that the Left’s vote — as much as 30% in the 2014 general election — is shifting to some extent to the Bharatiya Janata Party (BJP) as the latter is recognised as a key challenger to the Trinamool என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். யார் ஜெயிப்பார்களென்று தோன்றுகிறதோ அவர்களுக்கே ஓட்டுப் போடுவதென்ற பாமரத்தனம் வங்காளிகளையும் விட்டு வைக்கவில்லை. “Our prospects now hinge on the level of shift of the Left vote. We hope to get more than 30 seats but if the Left loses more than 10% of its share, we may even go down to 25,” said a Trinamool leader on condition of anonymity. The party leaders also fear that in at least 15 seats where the minority concentration is low, the BJP has garnered considerable strength to take on the Trinamool. And any addition, particularly from the Left’s vote base, will give the BJP further recognition among the Bengali middle class.முழுச் செய்தியும் இங்கே
கேரள நிலவரம் எப்படியிருக்கிறதாம்? ராகுல் காண்டி வயநாடு தொகுதியில் நிற்பதால் காங்கிரசுக்கு மூன்று தென் மாநிலங்களில் மவுசு கூடுகிறது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதென்று கதைத்தார்களே, இப்போது என்ன சொல்கிறார்களாம்? The candidacy of Suresh Gopi as the NDA candidate in Thrissur, was a setback, said congress leader and UDF candidate T N Prathapan. The activities of the RSS were strong. The Hindu votes may have gone to the BJP, he made the statement at the UDF meet convened here today என்கிறது கேரள கௌமுதி ஹிந்து ஓட்டுக்கள் காங்கிரசுக்கு இல்லை என்பதுபோலவே இடது சாரிகளுக்கும் இல்லை என்ற முடிவுக்கு வந்தால் தவறில்லை. சபரிமலை விவகாரத்தில் இடதுமுன்னணி அரசு எடுத்த நிலை ஹிந்து மக்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தியது என்பது வாக்களிப்பதிலும் பிரதிபலித்திருக்க நிறையவே வாய்ப்புண்டு.
இங்கே தமிழ்நாட்டில் 4 சீட்டுகளில் ஒன்று தேறினாலே அதிசயம்! அந்த அதிசயம் மதுரையில் நடக்க வாய்ப்பில்லை.
இந்தத் தேர்தலில் ராகுல் காண்டியும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி, மோடிக்கெதிராகப் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டதைத் தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. அந்தப்பொய்களும் உடனுக்குடன் அம்பலப் பட்டு பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன என்பதில் அவர்களுக்கு வெட்கம் ஏதுமில்லையாம்!
ராகுல் காண்டி பிரதமராகமுடியவில்லை என்றாலுமே எந்தப் பிரச்சினையுமில்லை என்று குலாம் நபி ஆசாத் சொல்லி இருப்பதும் 23 ஆம் தேதி சந்திப்புக்கு எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு சோனியா G கடிதம் எழுதி அழைத்திருப்பதும் இன்றைக்கு பேசுபொருளாகி இருக்கிறது. இந்த அழைப்பு இதைக் காட்டுகிறதாம்? it seems to have finally dawned on the Congress that its own revival, aggressively being pursued by the Gandhi siblings in states like UP - can wait; survival is at stake if it does not play its part in stopping the Modi juggernaut.இப்படி எழுத சுவாதி சதுர்வேதியை விட்டால் வேறு யார் இருக்கமுடியும் சொல்லுங்கள்! அதுவும் NDTV தளத்தில்! காசுக்கு கூவுகிற ஊடகக்காரர்கள், சமயங்களில் இதுமாதிரி உபதேசங்கள் செய்வது அந்தக்காலம் தொட்டு நடப்பதுதான்!
இடதுசாரிகள் சோனியாவின் அழைப்பை ஏற்கப் போகிறார்களா? நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி, கே சந்திரசேகர ராவ் இந்த மூவரும் எப்படி respond செய்யப் போகிறார்கள்? தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் காய் நகர்த்தக் காத்திருக்கும் மம்தா பானெர்ஜி என்ன செய்வார்? மாயாவதி, அகிலேஷ் யாதவ் முதலானோர் என்ன செய்வார்கள்? காங்கிரசோடு இன்னமும் ஒட்டிக் கொள்வது ஹராகிரி / தற்கொலை செய்துகொள்வதாகி விடுமே என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கிறதா?
இத்தனை கேள்விகளுக்கும் எனக்கு விடை தெரியாது. ஆனால் இந்திய அரசியலில் முட்டாள்கள் என்ன செய்வார்கள் என்பதும் காங்கிரசை நம்பிப் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்தவர்கள் கதை என்னவாயிற்று என்பதும் நன்றாகத் தெரியும்.
மீண்டும் சந்திப்போம்.
தப்பித் தவறி, என் டி ஏ கூட்டணி பெரும்பான்மைக்கு சற்றுக் குறைவான இடங்களை மட்டும் வென்று, மீதி உள்ளவர்கள் எல்லோரும் பெரும்பான்மைக்கு சற்று கூடுதலான இடங்களைப் பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மோடி அப்போ, நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று சொல்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்! அடுத்த நொடி என்ன ஆகும்? எதிர்க் கட்சியினர் எல்லோரும் ஒருவருக்கொருவர் குழி பறித்து, கூடையில் அள்ளிக் கொட்டிவிடுவார்கள். டமால், டுமீல் என்று தீபாவளி சத்தம் எல்லோருக்கும் கற்கும்! ஆறு மாதங்களுக்குள் மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டிய சூழல் ஏற்படும்!
ReplyDeleteகாங்கிரசுக்கும் வாய்ப்பில்லாமல் ஆனால் காங்கிரஸ் ஆதரவுடன் ஏதோ ஒரு உதிரிக்கட்சியின் தலைவர் பிரதமராகிவிடலாம் ன்ற நினைப்பு அந்த உதிரிக்கட்சிகளுக்கு இருக்கிறதோ இல்லையோ காங்கிரசுக்கு இருப்பது மாதிரித்தான் சோனியாவின் அழைப்பு இருக்கிறது. இப்போதைக்குத் தங்கள் அரியணையில் ஏற முடியாவிட்டாலும் அனுசரணையான அரசு அமைந்தால் போதும் என்கிற நிலையில் காங்கிரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.
Deleteஆனால் காங்கிரசை நம்பிப் பிரதமரானவர்கள் கொஞ்சநாட்களிலேயே ஆதரவு வாபஸ் என்று கவிழ்ந்ததும் மீண்டும் அரசியலில் தளஓத்தூக்க முடியாமல் போனதும் சமகால வரலாறுதான்.
உங்கள் பதிவில் எழுத்துகள் மிகவும் சிறியதாக உள்ளன. அளவைக் கூட்டிப் படித்தால் கூட கடினமாக உள்ளது. எழுத்து அளவைக் கூட்டுங்கள்.
ReplyDeleteசோதித்துப் பார்த்ததில் இந்த வலைப்பக்கம் firefox ப்ரவுசருக்கு optimise ஆகவில்லை என்பதும் 150% வைத்துப்பார்க்கும் போதுதான் படிக்க முடிகிறது என்பதையும் கண்டு கொண்டேன். எனக்கு க்ரோம் பிரவுசரில் சரியாக இருப்பது இதர ப்ரவுசர்களுக்குச் சரிவரவில்லை. DD தயவு செய்தாரானால் இதற்கும் ஒரு சரியான தீர்வைக் கண்டுவிட முடியும்!
Delete