பாண்டேவைக் கேளுங்கள் என்று கேள்வி பதில் நிகழ்ச்சியை மீண்டும் இன்று நேரலையில் நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல ஊடகக்காரராக, ஜனங்களுடன் நேரடித்தொடர்பில் இருக்கிற வெற்றிகரமான முயற்சி இது, கொஞ்சம் புதிது என்றே நினைக்கிறேன். இவரைத் தவிர இங்கே எத்தனை ஊடகக்காரர்கள் மக்களோடு இப்படி நேரடித் தொடர்பில் இல்லாமலேயே மக்களுடைய குரல் போலப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை தெரிய வந்தால் நிச்சயமாகக் காறித்துப்புவீர்கள்! இந்த நேரலையின் வீடியோ 6வது நிமிடத்திலிருந்து தொடங்குகிறது
ஊடகங்கள் தங்களுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்ட பழைய நாட்கள் இனிமேல் திரும்பிவரவே வராது என்றுதான் தோன்றுகிறது. இங்கே செய்திகளைத் தருவது என்பது ஒரு தனிவியாபாரமாக இருந்த காலம் உண்டு. அன்றும் கூட பல ஊடகங்கள் ஒருபக்கச் சார்பாக இருந்ததுண்டு. ஆனால் அதை ஒளிவுமறைவில்லாமல் செய்த காலம், அதை ஒரு conviction உடன் செய்த காலம். இன்றைக்கு செய்திகளைக் காசுக்குத் தகுந்த மாதிரி உருவாக்கி அதையே ஜனங்கள் தலையில் வலுக்கட்டாயமாகத் திணிக்கிற காலம் என்பதை #ஊடகப்பொய்கள் என்று பலமுறை இங்கே எழுதி வந்திருக்கிறேன். செய்திகளின் உண்மை, நம்பகத்தன்மையை சோதித்துப் பார்த்தே நம்பவேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவர்மீதும் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதில் தவறில்லையே!
பொய் சொல்லுவதில் கோயபல்ஸ் பாணியை எல்லாம் மீறி. திராவிடப்பொய்கள் தனி ஆவர்த்தனமாக இங்கே ஒலித்துக் கொண்டே இருந்ததில், நிறுத்து! ரீல் அறுந்து போச்சு! கட்டத்துக்கு வந்தாயிற்று! மாரிதாஸ் தன்பங்குக்கு யுனெஸ்கோ விருது புரட்டைப் புரட்டியெடுக்கிறார்.
இவ்வளவு சொல்லிவிட்டுக் காங்கிரஸ் பொய்களைப் பற்றிப் பேசாமலிருக்க முடியுமா, நீங்களே சொல்லுங்கள்!
சீமான் திமுகவை விமரிசித்தால் புதியதலைமுறைக்கு ரொம்ப வலிக்கிறதாம்! வலியோடு ஒரு விவாதம் ஏன் செய்கிறார்கள்?
புரிகிறதா? #ஊடகப்பொய்கள் #திராவிடப்புரட்டு
No comments:
Post a Comment