Friday, May 10, 2019

மைனஸ் X மைனஸ் = ப்ளஸ்! அரசியலுக்குச் சரிவருமா?

தமிழக அரசியலில் சமீப ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான திருப்பம், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று தமிழ்த்தேசியம் திராவிடக்கட்சிகளைத் தோலுரிக்க ஆரம்பித்ததுதான்! தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் பலகுழுக்களாக பிரிந்து இருந்தாலும் உடனடியாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிற ஒரு பெயர் சீமான்! நாம் தமிழர் கட்சி! 9 ஆண்டுகளாகப்  புறக்கணித்து விட  முடியாத அளவுக்கு தமிழக அரசியலில் நீடிக்கிறார்கள். 



சீமானுடைய அரசியலோ, தமிழ்த்தேசியமோ எனக்குக் கொஞ்சம்கூடப்  பிடித்தமானதாக இருந்ததில்லை   என்றாலும், இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு தனி இடம், தனி உபயோகம் அரசியலில் இருக்கத்தான் செய்கிறது என்பதால் எவரையும் நான் குறைத்து மதிப்பிடுவதில்லை. அர்த்தமில்லாமல் வெறும் பேச்சுப் பேசியே வளர்ந்த திராவிடம், அதே பேச்சால் தான் வீழ்ச்சி அடையவேண்டுமென்பதும் விதிக்கப்பட்டதுதானோ?  இந்தச் சிறிய காணொளியைக் கொஞ்சம் பார்த்துவிடுங்கள்!

இன்றைய தினமணி நாளிதழில் வ. மு. முரளி என்பவர் எழுதி இருக்கிற அரசியல் செய்தியின் உள்ளடக்கம் நேற்றே அந்தப் பக்கத்தில் ஏற்கெனெவே பேசப்பட்டது தான்!  இருந்தாலும் அச்சுஊடகம் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் இல்லையா?

மேற்கு வங்கம்: காவியாக மாறுகிறது சிவப்பு நிறம்!
இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்க மாநிலம் இன்று அவர்களின் பிடியிலிருந்து நழுவிவிட்டது. அது மட்டுமல்லாமல், மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகாரத்துக்கும் அரசியல் பகைமைக்கும் ஈடு கொடுக்க முடியாமல், மத்தியில் ஆளும் பாஜக பக்கம் மேற்கு வங்கத்தின் இடதுசாரிகள் மெதுவாக சாய்ந்து வருகின்றனர்.இது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேற்கு வங்கத்தை 1977 முதல் 2011 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆண்ட மார்க்சிஸ்ட் கட்சி இன்று தனது வாக்கு வங்கியையும் தொண்டர் பலத்தையும் சிறுகச் சிறுக இழந்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இழப்பு, பாஜகவுக்கு சாதகமாக மாறி வருவதைக் கண்டு அக்கட்சியின் தலைவர்கள் திகைக்கிறார்கள். பிரதமர் மோடி தலைமையில் புத்துணர்வுடன் களமிறங்கும் பாஜகவில் சிபிஎம் முன்னாள் நிர்வாகிகள் பலரும் இணைந்து வருகின்றனர். ஜோதிபாசு முதல்வராக இருந்த வரை (1977- 2000) சிபிஎம் வலுவான கட்சியாக மட்டும் இருக்கவில்லை; அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே செயல்பட முடியாத நிலையும் நிலவியது.
மார்க்சிஸ்ட் அராஜகங்களை காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவில்லை என்பதே அக்கட்சியிலிருந்து மம்தா பானர்ஜி வெளியேறி தனிக்கட்சி துவங்கவும் காரணமானது.
2000 முதல் 2011 வரை முதல்வராக இருந்த புத்ததேவ் ஆட்சிக் காலத்தில்தான், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மக்கள் செல்வாக்குள்ள தலைவியாக உருவெடுத்தார். அதற்கு பாஜகவும் உதவியது. ஜோதிபாசு 2010-இல் காலமானார். இடதுசாரிக் கூட்டணியின் 34 ஆண்டுகால ஆட்சியால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்ததன் விளைவாக 2011-இல் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) ஆட்சிக்கு வந்தது; மம்தா பானர்ஜி முதல்வரானார்.ஆட்சியை இழந்த இந்த 8 ஆண்டுகளில் சிபிஎம் பெருத்த வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
2011-இல் சிபிஎம் பெற்றிருந்த வாக்கு விகிதம் 39.6 %. அது 2016 பேரவைத் தேர்தலில் 25.6 சதவீதமாகக் குறைந்தது. அந்தத் தேர்தலில் இடதுசாரி முன்னணி காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டிருந்ததது.
அந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் திரிணமூல் 213 தொகுதிகளில் வென்றது. தேர்தல் உடன்பாடு மூலம் ஆதாயம் அடைந்த காங்கிரஸ் 44 தொகுதிகளில் வென்றது. இடதுசாரி முன்னணி (சிபிஎம்- 26, ஆர்எஸ்பி- 3, பார்வர்டு பிளாக்- 2, சிபிஐ-1) 32 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
அந்தத் தேர்தலில் பாஜக அணி 6 தொகுதிகளில் வென்றது. அதேசமயம், 2011-இல் 4.06 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு விகிதம் 2016-இல் 10.8 சதவீதமாக அதிகரித்தது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 44.9 % ஆகவும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 12.25 % ஆகவும் இருந்தன. 

2014-இல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் இடதுசாரிகளின் வீழ்ச்சி தொடர்ந்தது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 44 மக்களவைத் தொகுதிகளில் டிஎம்சி 34 தொகுதிகளை வென்றது. முந்தைய தேர்தலில் (2009) அக்கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. அதேபோல, 15 தொகுதிகளில் வென்றிருந்த சிபிஎம் 2 இடங்களை மட்டுமே தக்கவைத்தது. மாறாக 2009 தேர்தலில் ஓரிடத்தில் மட்டுமே வென்ற பாஜக 2014-இல் இரு இடங்களில் வென்றது. அப்போதே சிபிஎம்மின் பாரம்பரிய வாக்காளர்கள் பாஜக பக்கம் சாய்வது தெரியத் துவங்கியது.

அந்தத் தேர்தலில் கட்சிகளின் வாக்கு விகிதத்தில் பெருத்த மாற்றம் காணப்பட்டது. டிஎம்சி -39.05 % (2009இல் 32 %), சிபிஎம் கூட்டணி -29.7 (2009இல் 42 %), காங்கிரஸ்- 9.58 (2009இல் 13.45 %), பாஜக -17.02 (2009இல் 6.14 %) என வாக்குவிகிதங்களை கட்சிகள் பெற்றன. அந்தத் தேர்தலில் டிஎம்சியும் பாஜகவும் மட்டுமே கூடுதல் வாக்குகளைப் பெற்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியும் சிபிஎம்மும் இழந்த வாக்குகளை பாஜக சுவீகரித்துக் கொண்டது.

கடந்த ஐந்தாண்டுகளில் நிலைமை மேலும் மாறியது. மாநிலத்தை ஆளும் டிஎம்சி கட்சியின் அதிரடியால் திணறும் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். டிஎம்சி கட்சியினரின் வன்முறை அரசியலை பாஜக நேரடியாக எதிர்கொள்வதால் அக்கட்சியினர் மீது மக்களின் அனுதாபமும் பெருகியது. தவிர, மம்தாவின் சிறுபான்மையினர் ஆதரவுப் போக்கால் பெரும்பான்மை இந்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது நடைபெறும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் சிபிஎம்மும் மேலும் சரிவைச் சந்திக்க உள்ளதாகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தேர்தல் களத்தில் பாஜகவுக்கு முன்னாள் மார்க்சிஸ்ட் தோழர்கள் உறுதுணையாகி இருந்து வருகிறார்கள். உதாரணமாக வடக்கு கொல்கத்தா தொகுதியில் டிஎம்சி வேட்பாளரான சுதீப் பந்தோபாத்யாயவை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ராகுல் சின்ஹாவின் பிரசார அணியில் முன்னாள் கம்யூனிஸ்டுகள் பலரைக் காண முடிகிறது.
அந்தத் தொகுதியில் பாஜகவுக்கு உதவியாக முன்னாள் இடதுசாரிகள் செயல்படுவதைக் கண்டு பத்திரிகையாளர்கள் வியந்தனர்.சிபிஎம்மின் தீவிர விசுவாசியான தபன் பிஸ்வாஸ் என்ற தொண்டர் டம்டம் தொகுதியில் பாஜக வேட்பாளர் செளமிக் பட்டாச்சார்யாவுக்கு வாக்கு சேகரிக்கிறார். அவரைப் பொருத்த வரை, தேர்தல் களத்தில் தனது அரசியல் எதிரியை வெல்லும் பலம் சிபிஎம்முக்கு இல்லை; அந்த இடத்தை பாஜக நிரப்புகையில் அதை ஆதரிப்பது தவறல்ல.
சிபிஎம் காலாவதியான கட்சியாகிவிட்டது. அக்கட்சிக்குக் கூடும் மக்கள் கூட்டம் மிகக் குறைவு. இதேபோன்ற காட்சிகளை மேற்கு வங்க மாநிலம் நெடுகக் காண முடிகிறது. சிவப்புக் கொடியேந்தி கோஷமிட்ட தொண்டர்கள் பலரும் காவிக்கொடியுடன் மம்தாவை எதிர்த்துப் போராடுகின்றனர். இந்த வித்யாசமான காட்சியே அரசியல் செல்லும் திசையைக் காட்டுகிறது.

ஹபீப்பூர் பேரவைத் தொகுதியில் சிபிஎம் எம்எல்ஏவாக இருந்த காகென் முர்மு கடந்த மார்ச் மாதம் பாஜகவுக்கு மாறிவிட்டார். தற்போது அவர் வடக்கு மால்டா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 

இயக்க ரீதியாகவும் மக்கள் செல்வாக்கு ரீதியாகவும் மார்க்சிஸ்ட் கட்சி பெற்றிருந்த இடத்தைக் கைப்பற்ற பாஜக முனைகிறது. மம்தாவுக்கு பதிலடி கொடுக்கும் திராணி பாஜகவுக்கு மட்டுமே இருப்பதாக டிஎம்சியின் அரசியல் எதிரிகள் கருதுவதால், பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் மேற்கு வங்கம் முழுதும் பிரபலமான தலைவராகி விட்டார்.
திரிபுராவில் பாஜக நிகழ்த்திக் காட்டிய அதிசயத்தை வெகுவிரைவில் மேற்கு வங்கத்திலும் பாஜக அரங்கேற்றும் என்று பரவலாக பேசப்படுகிறது. மக்கள் எண்ணமும் காலமும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுகூலமாக இல்லை.
பாஜகவின் மூலவடிவமான பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமபிரசாத் முகர்ஜி, வங்க மாநிலத்தவர். அவரது மாநிலத்தில் அவரது வழிவந்த பாஜகவினர் வெற்றியை நோக்கிப் பயணிப்பது காலத்தின் கோலம் அல்லாமல் வேறென்ன? 

கட்டுரையாளர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மிகைப் படுத்திச் சொல்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும் மேற்கு வங்க நிலவரம் கவலைதருவதாகவே இருக்கிறதென்பது என் கருத்து. தேர்தல் வெற்றி தோல்விகளை வைத்து நான் இதைச் சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சி மாதிரியே திரிணாமுல் காங்கிரசும் குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக ஹிந்து முஸ்லிம் பிளவை அதிகரித்து வருவதும் சட்டவிரோதக் குடியேற்றம் ஊக்குவிக்கப்படுவதும் இன்னொரு காஷ்மீர் ஆக மேற்குவங்கமும் மாறுகிற அபாயம் வலுத்து வருகிறது. மம்தா பானெர்ஜி தோற்கடிக்கப்பட்டாலுமே  கூட,அவர்  வளர்த்து விட்டிருக்கிற பிரிவினைப்போக்குகள் அவ்வளவு எளிதாக மறைந்துவிடாதென்பது கவலைதரும் விஷயம்.

திராவிடங்களை வீழ்த்த தமிழ்த்தேசியம், மார்க்சிஸ்டுகளை ஒடுக்க மம்தா பானெர்ஜி என்று ஒரு தீமைக்கு இன்னொரு தீமை தான் மாற்று என்றாகிவிடக்கூடாதே!   
     
        

4 comments:

  1. திமுக செய்வதைப்போல் (செய்துகொண்டுவந்ததைப்போல்), திருனாமுல் காங்கிரஸும் 'வாக்கு வங்கி' என்ற அடிப்படையில் தேசத்துக்கு விரோதமாகச் செயல்படுகிறது. இப்படிச் செய்ததால்தான் தமிழ்மண்ணில் ராஜீவ் கொலைசெய்யப்பட்டார்.

    ReplyDelete
    Replies
    1. திமுகவின் அராஜகம், ஆட்டபாட்டங்களை விட மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டுகள் வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகளைவைத்துச் செய்த அராஜகம் அதிகம். அதே ஆட்டத்தை மார்க்சிஸ்டுகளைவிட அதிவேகமாகத் தொடர்கிறார் மம்தா பானர்ஜி என்பது தான் விஷயம் நெல்லை.

      Delete
  2. இன்றைய அரசியல் என்பது காட்டு ராஜா தர்பார். எதுவுமே சரிப்பட்டு வராது.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார், சரி! காட்டுராஜாக்களை என்ன செய்வதாக உத்தேசம்? அதைச் சொல்ல மாட்டேன் என்கிறீர்களே!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)