பக்தாள் நிலைமையென்ன? ஒரு பின்னூட்டக் கவலை! இப்படி முந்தைய பதிவுக்கு என்னுடைய குறுக்கீடு அவசியமில்லாமல் நண்பர்களே விவாதத்தை நன்கு நடத்திக்கொண்டு போகிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம். எழுத்துக்கு எழுத்து வார்த்தைக்கு வார்த்தை என்று பதில்கள் இல்லாமல் அவரவர் முதலில் சொல்லப்பட்ட ஆறுவிஷயங்களுக்கு மனதில் பட்டதை சொல்லியிருப்பது மிகவும் சிறப்பு.என்னுடைய மனமார்ந்த நன்றிகளைப் பங்கு கொண்ட நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதோடு இனிமேலும் பங்குகொள்ள விரும்புகிறவர்களுக்கு அந்த விவாதக்களம் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலையும்!
அடடே! மதி இங்கே சொல்லியிருக்கிறபடி திமுகவுக்கு வெற்றிக் கோப்பையை ஜனங்கள் தந்திருக்கிறார்கள் என்றால் எதை நம்பி? ஒப்புக்கு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகளை நம்பியா? அல்லது கிட்டத்தட்ட மூன்றாண்டு காலமாக, தமிழகத்தை ஒரு கொந்தளிப்பான பிரதேசமாகவே வைத்திருந்தார்களே அதற்காகவா? அல்லது ........
ஜெயித்தும் பிரயோசனமில்லை என்கிறமாதிரியாகக் கோப்பையைத் தலைமேல் கவிழ்த்திருக்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தமாம்? தயாநிதி மாறன் உளறிக் கொட்டியிருக்கிற மாதிரி எடப்பாடி பழனிச்சாமி உடனே ராஜினாமா செய்யவேண்டும் என்கிற மாதிரித் தீர்ப்புச் சொல்லியிருக்கிறார்களா என்ன? இந்த வாதத்தின் படி 2014 இல் திமுக வாஷ் அவுட் ஆனபோது திமுக சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் ராஜினாமா செய்துவிட்டார்களா என்ன?
இப்படி ஒரு நண்பர் முகநூலில் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியிருந்ததைப் பார்த்தேன். ஆசை என்னவோ நியாயமானதுதான்! இதில் சேரவேண்டிய உதிரிக்கட்சிகள் எண்ணிக்கை அதிகம், திமுகவோடு ஒட்டிக்கொண்டு விசிக மதிமுக இடதுசாரிகளோடு இன்னும் மூன்று உதிரிகள் நாடாளுமன்றத்த்துக்குள் நுழைகிறார்கள்! ஆனால் அங்கே போய் என்ன சாதிக்கப்போகிறார்கள்?
வருகிற செய்திகளைப்பார்த்தால், வைகோவுக்கு திமுக உறுப்பினராகத்தான் ராஜ்யசபா சீட் என்று இசுடாலின் நிபந்தனை விதிப்பதாக! இந்தத் தேர்தலோடு மதிமுக என்கிற உதிரியும் காணாமல் போகப்போகிறது போல!
இத்தனை கார்டூன்களைப் போட்டுவிட்டு அபிமான கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவை விடமுடியுமா?
ராஜினாமா! நாடகம்!
நடந்ததென்னவோ நடந்ததுதான்!
உபதேசங்களுக்கா பஞ்சம்? !!
மீண்டும் சந்திப்போம்.
இனிமேல் மதிமுக என்ற கட்சிக்கு என்ன வேலை? தனியாக நின்றால் மாநிலம் முழுவதும் 1 லட்சம் வாக்குகள் வாங்குமா என்று தெரியவில்லை. காலம் போன காலத்தில், ஸ்டாலினைத் திட்டியதற்கு மனதார மன்னிப்புக் கேட்டுக் காலில் விழுந்தாலும், ஸ்டாலின், மதிமுகவை திமுக சின்னத்தில்தான் நிற்கவைத்தார். அதனால் வைகோ திமுக உறுப்பினராக ஆகி, ராஜ்யசபா சீட்டைப் பெறுவார் (இதை 15 ஆண்டுகளுக்கு முன்னாலேயே செய்திருக்கலாமே என்று கேட்டால் அதற்கு அவரிடமும் என்னிடமும் பதில் இல்லை)
ReplyDeleteஅப்படிப்பார்த்தால் திமுக என்ற கட்சிக்குத்தான் இங்கே என்ன வேலை? கொஞ்சம் சொல்லுங்களேன் நெல்லைத்தமிழன் சார்! மதிமுக உருவான காலத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் கொஞ்சம் ஆச்சரிமாகத்தான் இருக்கிறது. வெறும் பேச்சிலேயே இளைஞர்களைக் கிளர்ந்தெழச் செய்ய முடியும், அந்த அளவுக்குத் தமிழ்ச் சூழல் பலவீனமானது என்பதை வெளிக்காட்டிய தருணமும் கூட! திராவிட அரசியல் எப்படி ஏதோ ஒன்றைத் வெறுக்கச் சொல்லி தன்னை நிலைநாட்டிக் கொண்டே வந்திருக்கிறது என்பதற்கான அடையாளமும் அது.
Deleteதிராவிட வெறுப்பு அரசியலின் வீழ்ச்சி தொடங்குகிற நேரம் இது.
ப.சி. பேசினதைப் படித்தீர்களா? ராகுல் ராஜினாமா செய்தால் தீவிர காங்கிரஸ் தொண்டர்கள் தீக்குளிப்பார்கள் என்று பேசினாராம். தானோ தன் மகனோ தீக்குளிக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னாரா? உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?
ReplyDeleteதிமுகவோடு ஐக்கியமானபிறகு பானாசீனா வேறெப்படிப்பேசுவார் நெ.த. ?!! ஆனால் காசுகொடுத்துத் தீக்குளிக்க வைக்கிற அளவுக்கு காங்கிரசில் தொண்டர்கள் இருக்கிறார்களா என்ன? சும்மா விருதாப் பேச்சு!
Deleteஇது நல்ல சந்தர்ப்பம். ராகுல் ராஜினாமா செய்தால் ப சி தீக்குளிக்கத் தயாரா என்று யாராவது சவால் விடவேண்டியது. ஜெயித்தாலும் தோற்றாலும் தமிழகத்துக்கு லாபம்!
Deleteராஜினாமாவே ஒரு நாடகம்தான் என்று தெரிந்துதானே பானாசீனா அத்தனை உருக்கமான வசனம் பேசியிருக்கிறார் பந்து! அப்புறம் எங்கேயிருந்து நீங்கள் நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்பது?
Delete