Sunday, May 26, 2019

கார்ட்டூன்களோடு கொஞ்சம் அரசியலும் பேசுவோமா?

பக்தாள் நிலைமையென்ன? ஒரு பின்னூட்டக் கவலை! இப்படி முந்தைய பதிவுக்கு என்னுடைய குறுக்கீடு அவசியமில்லாமல் நண்பர்களே விவாதத்தை நன்கு  நடத்திக்கொண்டு போகிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம். எழுத்துக்கு எழுத்து வார்த்தைக்கு வார்த்தை என்று பதில்கள் இல்லாமல் அவரவர் முதலில் சொல்லப்பட்ட ஆறுவிஷயங்களுக்கு மனதில் பட்டதை சொல்லியிருப்பது மிகவும் சிறப்பு.என்னுடைய மனமார்ந்த நன்றிகளைப் பங்கு கொண்ட நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதோடு இனிமேலும் பங்குகொள்ள விரும்புகிறவர்களுக்கு அந்த விவாதக்களம் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலையும்!
அடடே! மதி இங்கே சொல்லியிருக்கிறபடி திமுகவுக்கு வெற்றிக் கோப்பையை ஜனங்கள் தந்திருக்கிறார்கள் என்றால் எதை நம்பி? ஒப்புக்கு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகளை நம்பியா? அல்லது கிட்டத்தட்ட மூன்றாண்டு காலமாக, தமிழகத்தை ஒரு கொந்தளிப்பான பிரதேசமாகவே வைத்திருந்தார்களே அதற்காகவா?   அல்லது ........



ஜெயித்தும் பிரயோசனமில்லை என்கிறமாதிரியாகக் கோப்பையைத் தலைமேல் கவிழ்த்திருக்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தமாம்? தயாநிதி மாறன் உளறிக் கொட்டியிருக்கிற மாதிரி எடப்பாடி பழனிச்சாமி உடனே ராஜினாமா செய்யவேண்டும் என்கிற மாதிரித் தீர்ப்புச் சொல்லியிருக்கிறார்களா என்ன? இந்த வாதத்தின் படி 2014 இல் திமுக வாஷ் அவுட் ஆனபோது திமுக சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் ராஜினாமா செய்துவிட்டார்களா என்ன?  
     

இப்படி ஒரு நண்பர் முகநூலில் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியிருந்ததைப் பார்த்தேன். ஆசை என்னவோ நியாயமானதுதான்! இதில் சேரவேண்டிய உதிரிக்கட்சிகள் எண்ணிக்கை அதிகம், திமுகவோடு ஒட்டிக்கொண்டு விசிக மதிமுக இடதுசாரிகளோடு இன்னும் மூன்று உதிரிகள் நாடாளுமன்றத்த்துக்குள் நுழைகிறார்கள்! ஆனால் அங்கே போய் என்ன சாதிக்கப்போகிறார்கள்?  

 
வருகிற செய்திகளைப்பார்த்தால், வைகோவுக்கு திமுக உறுப்பினராகத்தான் ராஜ்யசபா சீட் என்று இசுடாலின் நிபந்தனை விதிப்பதாக! இந்தத் தேர்தலோடு மதிமுக என்கிற உதிரியும் காணாமல் போகப்போகிறது போல!

இத்தனை கார்டூன்களைப் போட்டுவிட்டு அபிமான கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவை விடமுடியுமா?
    
ராஜினாமா! நாடகம்! 
நடந்ததென்னவோ நடந்ததுதான்! 

உபதேசங்களுக்கா பஞ்சம்? !! 

மீண்டும் சந்திப்போம்.
 

6 comments:

  1. இனிமேல் மதிமுக என்ற கட்சிக்கு என்ன வேலை? தனியாக நின்றால் மாநிலம் முழுவதும் 1 லட்சம் வாக்குகள் வாங்குமா என்று தெரியவில்லை. காலம் போன காலத்தில், ஸ்டாலினைத் திட்டியதற்கு மனதார மன்னிப்புக் கேட்டுக் காலில் விழுந்தாலும், ஸ்டாலின், மதிமுகவை திமுக சின்னத்தில்தான் நிற்கவைத்தார். அதனால் வைகோ திமுக உறுப்பினராக ஆகி, ராஜ்யசபா சீட்டைப் பெறுவார் (இதை 15 ஆண்டுகளுக்கு முன்னாலேயே செய்திருக்கலாமே என்று கேட்டால் அதற்கு அவரிடமும் என்னிடமும் பதில் இல்லை)

    ReplyDelete
    Replies
    1. அப்படிப்பார்த்தால் திமுக என்ற கட்சிக்குத்தான் இங்கே என்ன வேலை? கொஞ்சம் சொல்லுங்களேன் நெல்லைத்தமிழன் சார்! மதிமுக உருவான காலத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் கொஞ்சம் ஆச்சரிமாகத்தான் இருக்கிறது. வெறும் பேச்சிலேயே இளைஞர்களைக் கிளர்ந்தெழச் செய்ய முடியும், அந்த அளவுக்குத் தமிழ்ச் சூழல் பலவீனமானது என்பதை வெளிக்காட்டிய தருணமும் கூட! திராவிட அரசியல் எப்படி ஏதோ ஒன்றைத் வெறுக்கச் சொல்லி தன்னை நிலைநாட்டிக் கொண்டே வந்திருக்கிறது என்பதற்கான அடையாளமும் அது.

      திராவிட வெறுப்பு அரசியலின் வீழ்ச்சி தொடங்குகிற நேரம் இது.

      Delete
  2. ப.சி. பேசினதைப் படித்தீர்களா? ராகுல் ராஜினாமா செய்தால் தீவிர காங்கிரஸ் தொண்டர்கள் தீக்குளிப்பார்கள் என்று பேசினாராம். தானோ தன் மகனோ தீக்குளிக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னாரா? உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. திமுகவோடு ஐக்கியமானபிறகு பானாசீனா வேறெப்படிப்பேசுவார் நெ.த. ?!! ஆனால் காசுகொடுத்துத் தீக்குளிக்க வைக்கிற அளவுக்கு காங்கிரசில் தொண்டர்கள் இருக்கிறார்களா என்ன? சும்மா விருதாப் பேச்சு!

      Delete
    2. இது நல்ல சந்தர்ப்பம். ராகுல் ராஜினாமா செய்தால் ப சி தீக்குளிக்கத் தயாரா என்று யாராவது சவால் விடவேண்டியது. ஜெயித்தாலும் தோற்றாலும் தமிழகத்துக்கு லாபம்!

      Delete
    3. ராஜினாமாவே ஒரு நாடகம்தான் என்று தெரிந்துதானே பானாசீனா அத்தனை உருக்கமான வசனம் பேசியிருக்கிறார் பந்து! அப்புறம் எங்கேயிருந்து நீங்கள் நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்பது?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)