தமிழிசை பேசாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இப்படிப் பார்க்கிறவர்களைப் புலம்ப வைக்கிற அளவுக்கு டாக்டர் யக்கோவ் பேச்சு இருக்கிறது! #உளறல்
ஆபத்தில்லாத உளறலுக்கும் விஷம்கலந்து பேசுகிற பேச்சுக்கும் தமிழகத்தில் எவரும் மெனெக்கெட்டு வித்தியாசம் பார்ப்பதில்லை என்பதால் பீட்டர் அல்போன்ஸ் இஷ்டத்துக்கும் கலந்துகட்டி அடித்து விடுகிறார்.
காங்கிரஸ் திமுக கூட்டணியைத் தவிர்த்து, தமிழ்நாட்டுக்கு வேறெங்கிருந்து ஆபத்து வரப்போகிறதாம்? பீட்டர் அல்போன்ஸ் அளந்துவிடுகிறார். காங்கிரஸ் ஏழைகளின் கட்சியாகி விட்டதா என்ன? சோனியா குடும்பத்திடம் இல்லாத பணமா? சரிக்கு சமமாக அப்பச்சியிடம் இல்லாத பணமா?
உளறல், கிறுத்திருவம் தவிர இவைகளை ஊதி ஊதிப் பெரிதாக்குகிற ஊடகப்பொய் முகங்களை என்ன செய்வதாக இருக்கிறோம்?
என்ன சொல்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
பொய் முக ஊடகங்களைப் புறக்கணிக்க வேண்டும்...
ReplyDeleteவாருங்கள் துரைராஜு சார்! ஊடகப் பொய்களை இனம் கண்டு புறக்கணிப்பது எப்படி என்பதையும் சேர்த்தே சொல்லியிருக்கலாமே!
Deleteபாஜக தமிழகத் தலைமையை மாற்றவேண்டிய நேரம் வந்து விட்டது!!!!!!
ReplyDeleteபாஜகவின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்துச் செயல்படுகிற தலைமை இல்லை என்பது தமிழிசை தேர்ந்தெடுக்கப்பட்டபோதே தெரிந்ததுதான்! பழைய தலைவர்களுக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கும் சரியான understanding இல்லாமலேயே ஓடிக் கொண்டிருந்ததும் கூட!
Deleteஆனால் கட்சிக்குச் சம்பந்தமில்லாத என்போன்றவர்களுக்கே புரிந்த பலவிஷயங்கள் கட்சியினருக்குத் தெரியாதா? ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் பிஜேபி இன்னொரு காங்கிரசாகி வருகிறது என்று சிலபோக்குகளைக் சுட்டிக் காட்டிப் பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்தேன்.
தமிழாய்ந்த தமிழறிஞராய் மேடைப் பேச்சு வல்லுனராய் அவர் இருந்தால் நல்லது. அவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராய் இருந்தால் இன்னும் நல்லது.
ReplyDeleteஜீவி சார்! ஒரு கட்சியின் மாநிலக்கிளையைத் தலைமை தாங்கி வழிநடத்த தமிழாய வேண்டாம் மேடைப்பேச்சு முத்தண்ணாவாக இருக்க வேண்டாம் தலைமைதாங்குகிறவர் சிறுபான்மையா அல்லவா என்பதுகூட முக்கியமில்லை.
Deleteகட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தாலே போதுமென்று நான் நினைக்கிறேன். பிஜேபியும் ஒரு cadre based party அதில் குறுகிய கால ஆதாயத்துக்காக வெளியாட்கள் நுழைக்கப்படும் போது தொண்டர்களுடைய ஆதரவு, நம்பிக்கையைப் பெறுவது மிகவும் கடினம்.
யரை நியமித்தாலும் கட்சித் தொண்டர், ஆதரவாளர்கள் என்ன பெரிசாய் சொல்லி விடப் போகிறார்கள்.
Deleteதமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய (அல்லது அவர்களைக் கவரக் கூடிய) தலைமையைச் சொல்லியிருக்கிறேன். இதெல்லாம் நடக்கப் போவதில்லை என்பதைத் தெரிந்து தான் சொன்ன நேயர் விருப்பம் இது.
சார்.... இந்த பீட்டர் அல்போன்ஸ் யார்? என்ன தொழில் செய்து கல்லூரிகளுக்கு அதிபர் ஆனார்? 'மதம்' என்ற ஒன்றைக் காட்டியே பெரிய ஆளாக, பணம் சேர்த்தாரா இல்லையா? இவருக்கு 'மதச்சார்பு' பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கு? விகடனில் ஒரு முறை இவர் 'ரவுடித்தனம்' செய்தார் என்று வந்திருந்ததா இல்லையா?
ReplyDeleteகிறுத்திருவம் என்ற வார்த்தைக்கே அதுதானே அர்த்தம் நெ.த !
Deleteபாஜகவின் வாக்கு வங்கி வளரவேணும் என்றால், அதன் தலைவர்களாக ப்ராமின்ஸ் இருக்கக்கூடாது. பாஜகவின் தொண்டர்களில் இந்துத்துவ எண்ணம் கொண்டவர்கள் கணிசம், அதிலும் நாடார் சமூகத்தவர் நிறைய உண்டு. இதுதான் தமிழிசை தலைவராக இருந்ததற்குக் காரணம். பாஜக தலைவராக இஸ்லாமிய சமூகத்தவர் அல்லது கிறிஸ்துவ சமூகத்தவர் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அத்தகைய தலைவர், தமிழகத்துக்கு எதிரானவற்றை மத்திய அரசு மேற்கொண்டால் சுட்டிக் காண்பிப்பவராக இருக்கணும், ஜால்ரா தட்டக்கூடாது. தமிழிசை வெறும் பேச்சுதான். செயலில் ஒன்றுமில்லை.
ReplyDeleteநெல்லை.. அப்படி வந்தாலே போதும்.. இங்கு வேறு மாதிரி அரசியல் பண்ணுவதற்கு வேலையே இருக்காது.
ReplyDeleteஎந்த அகில இந்திய கட்சிக்கும் தமிழ்நாட்டில் மக்கள் ஏற்றுக் கொள்கிற ஒரு தலைவர் இல்லாதது ஒரு குறை.
அந்தக் குறைக்கான தீர்வு பல விஷயங்களுக்கு நிவாரணமாக இருக்கும். மக்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி என்பது முக்கியம்.
அதையாவது முன் கை எடுத்து இவர்கள் முதலில் செய்யட்டும்.
இப்படி இன்னும் சில இருக்கின்றன. பூனைக்கு மணி கட்டுவார் இல்லை.
நெல்லைத்தமிழன் சார்! பிஜேபி ஒரு cadre based party ஆக இருந்தது. இப்போதும் அப்படித்தானா என்பது புரியவில்லை. குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகளில் அதிருப்தியாளர்களை வளைத்துப் போடுவது ஒரு எல்லைக்குமேல் ஜீரணிக்கமுடியாமல் போகும்.
Deleteதமிழ் நாட்டு அரசியலுக்கு பல விஷயங்கள் நடைமுறையில் நிஜமாகவே நடந்து தான் ஆகணும்ன்னு இல்லே.
ReplyDeleteசும்மா ஷோ காட்டினா போதும். இங்கு வந்து 'வணக்கம்'ன்னு சொல்லி கைகூப்பினா போதும் ஜனங்க புளகாங்கிதம் அடைஞ்சுடுவாங்க.. பாவம், அந்தளவு மன உணர்வு கொண்டவர்கள். அப்படித் தான் இத்தனை காலமும் அ.இ.கட்சிக்காரங்க இங்கேயும் ஜனங்களைக் கவர்ந்திருக்காங்க. இதெல்லாம் கட்சிக்காரங்களுக்கு இன்னொருத்தர் சொல்லித் தான் தெரியணும்ன்னு இல்லே. இதெல்லாம் தெரிந்திருக்கவில்லை என்றால் அவங்க கட்சிக்காரங்களே இல்லை. இதான் இன்றைய அரசியல்.
ஜீவி சார்! நீங்கள் சொல்கிற மாதிரி இங்கே தமிழ்நாட்டில் திராவிடப் பம்மாத்துகள் தான் இன்னமும் எடுபடுகின்றன என்பதால் அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து மாற்று அரசியல் வளர்க்க முடியாது.
Deleteஇந்தவிஷயத்தில் தொடர்ந்து பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய இருக்கின்றன. நண்பர்கள் பங்கெடுத்தால் ஒரு விரிவான விவாதக்களமாகவே வளர்த்தெடுக்க முடியும்.