Friday, January 31, 2020

ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்! வாசித்ததும் நேசித்ததும்!

இன்று எதையோ தேடப்போக, ஜெயகாந்தன் எழுதிய உன்னைப் போnல் ஒருவன் நாவல் கைக்கு கிடைத்தது. இந்தப்புத்தகத்தை வாசித்து முப்பது வருடங்களுக்கும் மேலாகியிருக்குமே, கொஞ்சம் புரட்டிப்பார்க்கலாம்  என்று வாசிக்க ஆரம்பித்தவனை, ஜெயகாந்தனுடைய நீளமான முன்னுரை நாவலுக்குள் அப்படியே இழுத்துக் கொண்டது என்பதில், இன்றைய பகல்பொழுது வாசிப்பும் யோசனையுமாகப் போனதில் ஜெயகாந்தன் எழுத்தின் வீரியம் மீதான பிரமிப்பு இன்னமும் அடங்க மறுக்கிறது.


என்னிடமிருக்கிற இந்தப்புத்தகம் மதுரை மீனாட்சி புத்தகநிலையத்தாரால் 1964 இல் முதல் பதிப்பாக வந்ததன்  மறுபதிப்பாக 2014 செப்டெம்பரில் வந்த பிரதி. 195 பக்கங்கள். அதற்கு ஜெயகாந்தன் எழுதிய  முன்னுரையே 10 பக்கங்கள். விலை நூறு ரூபாய், இதை நான் எங்கே எப்போது வாங்கினேன் என்று யோசித்துப் பார்த்தபோதுதான் இது நான் வாங்கியதில்லை என்பதே உறைத்தது. மகன் வாங்கி வாசித்ததை இங்கே விட்டுப் போயிருக்கிறான்! புத்தகமாகுமுன் ஆனந்த விகடனில் 15 வாரம் தொடர்கதையாக வெளிவந்திருக்கிறது 

கதை தங்கம் என்கிற காதலனால் கைவிடப் பட்ட சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு பெண்மணி, தன்னுடைய 10 வயது மகன் சிட்டியோடு, தனித்து வாழ்வதிலிருந்து தொடங்குகிறது. தகப்பன் முகத்தை பார்த்திராத சிட்டி, ஆரம்பத்தில் பொறுப்பே இல்லாதவனாகத் தான் வளர்கிறான். தொண்டர் துரைக்கண்ணு என்றொரு ஐஸ் ஃபேக்டரி முதலாளியின் அறிமுகம் கிடைப்பதில் சிட்டிக்குத் தாயின் அருமை தெரிகிறது. பகலில் ஐஸ் ஃபேக்டரி வேலை, இரவில் முதலாளி நடத்தும் இரவுப்பள்ளியில் படிப்பு என்று நல்லவிதமாகப் போகிறது. இந்த நேரத்தில் மாணிக்கம் என்கிற ஒரு சோசியனுக்கும் தங்கத்துக்கும் நெருக்கமான உறவும் வயிற்றில் கருவாகவும்  வளர்கிறது. மாணிக்கம், தங்கம், சிட்டி, இவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்க வருவதில், மாணிக்கம் என்னதான் தந்தை மாதிரிப் பாசமாகப் பழகினாலும், சிட்டிக்கு மாணிக்கத்தைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. வேலைக்குப் போவதை விடுவதுடன் வீட்டையும் விட்டு வெளியேறுகிறான்  மாணிக்கம் புரிந்து கொண்டு தங்கத்தை விட்டுப் பிரிந்த செய்தி தெரிந்த பிறகுதான்  தாயுடன் வசிக்க மீண்டும் வருகிறான். தங்கத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மகனை அழைத்து, தன்னுடைய பூர்வக்கதையைச் சொல்லி, உன் தங்கையை என்மாதிரி இல்லாமல் நல்லவிதமாய் வளர்த்து ஆளாக்கு என்று சொல்லி, இறந்தும் போகிறாள். சிட்டி இப்போது, தாயையும் இழந்து நிற்கிற நிலையில் இருக்கிற ஒரே உறவு அவன் தங்கைதான்!

சுற்றியுள்ள மனிதர்கள் பழிக்காமல் உதவுகிறார்கள். சிட்டி மறுபடி பகலில் வேலை அப்புறம் படிப்பு, அதன் பிறகு தங்கையை எப்படி வளர்த்து ஆளாக்கலாம் என்ற கனவுகளோடு வாழ ஆரம்பிப்பதுடன் கதை முடிகிறது. அடித்தட்டு மக்களுடைய வாழ்க்கையை யதார்த்தமாக விவரிக்கிற கதைமாந்தர்கள் ஜெயகாந்தனின் இந்த நாவலில் இப்போது படித்து முடிக்கிற தருணத்திலும் வாழ்கிறார்கள்.


1964 மே மாதம் புத்தகமாக வந்த உன்னைப்போல் ஒருவன் ஜெயகாந்தன் தயாரித்து இயக்கி திரைப்படமாகவும் 1965 இல் வெளிவந்தது. பாடல்களே இல்லாமல், வெறும் ஒருலட்ச ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில், 21 நாட்களிலேயே எடுக்கப்பட்ட படம் என்பது இன்றைக்கு கொஞ்சம் நம்பமுடியாத ஆச்சரியமாகத்தான் இருக்கும்.  தேசியத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களில் மூன்றாவது பரிசைப் பெற்ற இந்தப்படத்தின் படச்சுருள் காணாமல் போய்விட்டது என்கிறார்கள்.


மீண்டும் சந்திப்போம் 
                

4 comments:

 1. நான் கூட சமீபத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன் ( ! ) இந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தேன்.  ஜெயகாந்தனின் முன்னுரைகள் மட்டுமே தனிப்புத்தகமாக வெளி வந்திருக்கிறது தெரியுமோ? விலை அதிகம்!  கவிதா பப்ளிகேஷன்ஸ் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஸ்ரீராம்! நாம் வாசித்தோம் என்பதைவிட நம்முடைய மகன்களும் / அடுத்த தலைமுறையினரும் வாசிக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்டே!

   ஜெயகாந்தனுடைய முன்னுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமா? நான் வாசித்ததில்லை.

   Delete
 2. மறக்க முடியாத ஜெயகாந்தன் நாட்கள்.
  இன்னும் சகமனிதர்களைக் கவனிக்கும் போது அவரது எழுத்து மின்னி மறையும்.
  யுகசந்தி, சேஷாத்ரி,மைத்ரேயி
  சிட்டி இவர்கள் அந்த பதினைந்து வயதில் பாதிப்பை
  மிகுவாக உண்டாக்கியது.
  வயதுக்கு மீறிப் படிப்பதாக என் தந்தை சொன்னதே இல்லை.
  அந்த சுதந்திரத்துக்கு என்றும் நன்றி.
  தீர்க்க தரிசி ஜெயகாந்தன்.
  மிக மிக நன்றி ஜி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வல்லியம்மா!

   என்தந்தை அதிகம் படித்தவரல்ல என்பதால் எனக்கு என்னுடைய அண்ணன்கள் தான் வாசிப்பதில் ஒரு ஆர்வத்தை உண்டாக்கினார்கள்! தடை கட்டுப்பாடு எதையும் விதித்ததில்லை. 14 வயதிலேயே Harold Robins . நாவல்களையும் படித்திருக்கிறேன். Fountainhead மாதிரி மண்டைகாயவைக்கிற Ayn Rand உம் கூட! அந்த வயதுக்கு மீறிய புத்தகங்கள்தான்! ஆனால் Perry Mason நாவல்கள் என்றால் ஒரேமூச்சில் படித்துவிடுவேன்.
   .
   தமிழில் ஜெயகாந்தன் ஒரு தனிரகம். இன்றைக்கும் கூட அவருடைய இடத்தை நிரப்ப எவரும் இல்லை. இந்தப் புத்தகத்தில் தன்னுடைய வாசகர்களுக்காக ஒரு 10 பக்க முன்னுரையை எழுதியிருக்கிறார். பிரம்மோபதேசம் எழுதியவரா இப்படி உன்னைப் போல் ஒருவன் கதையையும் எழுதியிருக்கிறார் என்ற கேள்விக்கு விரிவான பதில் சொல்லியிருக்கிறார். விமரிசனம் ஒரு கலையாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதையும் சொல்லி இருக்கிறார். சகமனிதர்களைப் புரிந்துகொண்ட எழுத்து. வாசகனுக்கு, புரிந்து கொள்ள உதவும் எழுத்து.

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

ஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா? ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி!

புதிய தமிழகம் கட்சி யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம்? அவரை அரசியலில் எந்த இடத்தில் ...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (322) அனுபவம் (252) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (87) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)