Wednesday, January 29, 2020

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடரும் வரலாற்றுப் பிழைகளும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாய்கிழிய மார்க்சீயம் பேசிக் கொண்டிருந்த காலம் போயே போய்விட்டது தானா? அடுத்த கட்சியின் வரலாற்றுப் பிழைகளை தம்பட்டம் அடிப்பவர்கள்தொடரும் தங்களுடைய வரலாற்றுப் பிழைகளை அறிந்திருக்கிறார்களா? தாங்களே (இடதுசாரிகள்) சரியான அரசியல் மாற்று என்று மார்தட்டிக் கொண்டிருந்தவர்கள், இன்றைக்கு கூனிக் குறுகிப்போய், திமுக / காங்கிரஸ் பல்லக்கில் பவனி வர உதவி செய்யும் சுயநலம் அற்ற NGOவாக ஆகி விடச் சித்தமாகிக் கொண்டிருக்கிறார்களா? எதற்கும் இந்தப்பதிவில் இரண்டாவது வீடியோவை ஒருமுறை பார்த்துவிடுங்கள்!
     

ஹிந்துஸ்தான் டைம்ஸில் இன்றைக்குப் பார்த்த இரண்டு செய்திகள், மார்க்சிஸ்டுகள் ஒரு அரசியல் கட்சியாக இயங்குகிற வேகத்தையும் சக்தியையும் இழந்து விட்டார்களோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிற விதமாக இருந்ததைப் பார்த்தேன். முதலில் ஆட்சி அதிகாரத்தையும் மக்கள் செல்வாக்கையும் இழந்து நிற்கிற மேற்குவங்கச் செய்தியைப் பார்த்துவிடலாம்! சௌபத்ரா சாட்டர்ஜீயின் அலசல் இங்கே  

வருகிற ஏப்ரலில் மேற்குவங்கத்தின் 5 ராஜ்ய சபா இடங்கள் காலியாவதில், இப்போதிருக்கிற கட்சிகளின் பலத்தை வைத்துப்  பார்த்தால் திரிணாமுல் காங்கிரஸ் 4 இடங்களில் சுலபமாக ஜெயித்து விடும். மீதமிருக்கிற ஒரு இடத்தை சீதாராம் யெச்சூரிக்காக, மேற்கு வங்க மார்க்சிஸ்டுகள் மறுபடியும் முயற்சிக்கிறார்களாம்!
2017 ஆம் ஆண்டு  யெச்சூரியின் ராஜ்யசபா பதவிக் காலம் முடிந்ததை ஒட்டி காங்கிரசே முன்வந்து அந்த இடத்தை யெச்சூரிக்கு விட்டுத்தர முன்வந்ததை, கட்சிக்குள் கை ஓங்கியிருந்த கேரள மார்க்சிஸ்டுகள், காங்கிரசோடு ஓட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று தத்துவார்த்த நிலை (?) எடுத்துக் காலி செய்தது நினைவுக்கு வருகிறதா? அதைத்தான் சௌபத்ரா சாட்டர்ஜீ மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து வரலாற்றுப்பிழைகளைச் செய்து கொண்டே வருவதில் வல்லவர்கள் என்று வர்ணிக்கிறார். மேற்குவங்க மார்க்சிஸ்டுகளுக்கு லோக்சபாவிலும் இடமில்லை, ராஜ்யசபாவிலும் ஆளில்லை! அதற்காக? இப்போதும் காங்கிரஸ் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்க முன்வருமா? காங்கிரஸ் தன்னுடைய வேட்பாளரைத் தான் நிறுத்துவேன் என்று முடிவெடுத்தால், ஒருவேளை அதற்கே கிடைக்கலாம் அல்லது திரிணாமுல் காங்கிரசுக்கே 5 இடங்களும் என்றாகிவிடலாம்! 

ஆனாலும்  மேற்கு வங்க மார்க்சிஸ்டுகளின் குரலாக ஒலிக்க, மீண்டும் யெச்சூரி என்று மறைமுகமாகஅங்கே உள்ள தோழர்கள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்! மல்லுதேச தோழர்கள் இப்போதாவது ஒப்புக் கொள்வார்களா, மறுபடியும் தத்துவார்த்த நிலையெடுத்து கட்டையைக் கொடுப்பார்களா என்பது கடைசி நேரத்தில் தான் தெரிய வரும்! But the CPI(M) lived up to its reputation of committing blunders, bigger blunders and historic blunders. The party didn’t field Yechury on the ground that he has already enjoyed two terms in the House. There’s a party rule that no member can be given more than two terms in Rajya Sabha. என்று மார்க்சிஸ்டுகளின் தப்பு தவறுகள் தொடர்கதையாக இருப்பதைப் புட்டுவைத்திருக்கிறார். அது மட்டுமா?

So, if the CPIM wants to remain as a political party and not become a political NGO (selflessly helping other parties to prosper) it has little option but to nominate Yechury.Moreover, Yechury is the general secretary of the party and if he represents Bengal - where the party’s vote bank has seen the biggest shift towards the BJP in the last Lok Sabha polls, he can possibly be the best voice of the state CPI(M) in Parliament என்றும் சொல்வதில் மேற்கு வங்க மார்க்சிஸ்டுகள் மீதான பாசம் பீறிட்டுக் கிளம்புகிறது! 

மேற்குவங்கத் தோழர்கள் கதை தான் அப்படிப் போகிறதென்றால் மல்லுதேச மார்க்சிஸ்டுகள் கதை மல்லாந்து படுத்து விம்மிக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கிறது! ஹிந்துஸ்தான் டைம்சில் இன்று ரமேஷ் பாபு எழுதியிருக்கிற இந்தச் செய்திக் கட்டுரை  படம் பிடித்துச் சொல்கிறது. 
The House witnessed uproarious scenes as the Governor entered the hall. Angry Congress-led opposition legislators blocked his way, raising slogans and placards. With his entry blocked, he stood there for ten minutes. When Speaker P Sivaramakrishanan’s repeated pleas failed to deter them, security personnel forcibly removed agitating law-makers to make way for him.
But the opposition Congress said it was the darkest day in the history of the assembly. “It proved beyond doubt the government is supporting the Governor who day in and out criticises the assembly. It seems Pinarayi Vijayan has entered into an agreement with the Modi government to save him from the Lavalin graft case,” said opposition leader Ramesh Chennithala. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய பரிதாப நிலை குறித்து இரண்டு செய்திகளும் சொல்லாமல் சொல்வது ஒன்றே ஒன்றுதான்! கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தொடர்ந்து தவறிவருகிற எந்த ஒரு இயக்கமும் பிழைத்திருப்பதற்கான தகுதியை இழந்து விடும் என்பது தான் அது! 
மீண்டும் சந்திப்போம்.   

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)