கார்டூன்களில் அரசியல் என்று பார்த்துவந்தது நினைவு இருக்கிறதா? பிடித்திருக்கிறதா? இது 2020 இல் பகிரும் முதல் கார்டூன்களால் பேசப்படும் அரசியல் பதிவுகளில் முதலாவது! கார்டூனிஸ்டுகளுடைய உள்ளரசியலும் கூட! கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் பிள்ளையார் சுழி போடலாமா?
சிலநாட்களுக்கு முன் கர்நாடகாவில் ஒரேமேடையில் பிரதமரும் எடியூரப்பாவும் சந்தித்துக் கொண்டபோது, மாநிலத்துக்கு வரவேண்டிய வெள்ளநிவாரண நிதியை ஞாபகப்படுத்தினாராம்! குறைசொல்ல வேறெதுவும் இல்லாத நிலையிலும் கூட கார்டூனிஸ்டுகள் சாதாரண செய்தியைக் கூடக் கொஞ்சம் ஸ்பெஷலாக்கி விடுவது சகஜம்தான்!
மஹாராஷ்டிரா அரசியலில் எல்லோருமே சூப்பர் டீலக்ஸ் தான்! இதை தமிழில் நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுப்பது என்றும் சொல்வதுண்டு! தெரியுமில்லையா?
முந்தின கார்டூனில் மஞ்சுள் அஜித் பவாரை நிரந்தர துணைமுதல்வர் என்று சொன்னார். இங்கே சந்தீப் அத்வர்யு அஜித் பவாரே வழியும் ரட்சகனும் சர்வமும் ஆக இருப்பதாகச் சொல்கிறார். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதையே வைத்துக் கொள்ளலாம்!
இந்தச் செய்தி உண்மையா அல்லது சதீஷ் ஆசார்யா வழக்கமாக விடுகிற புருடாவா என்று தெரியவில்லை! ஆனால் என்னதான் புலிவேஷம் போட்டுக் கொண்டாலும் ராஜ் தாக்ரே இதுமாதிரி பங்காளி உத்தவ் தாக்ரேவைப் பகைத்துக் கொள்ள மாட்டார் என்று தான் நினைக்கிறேன்! கர்நாடகா, மஹாராஷ்ட்ரா அரசியல் களநிலவரச்செய்திகளில் நிறைய அப்டேட் செய்துகொள்ளவேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.
வெளியே இருக்கும் எதிரிகளைவிட, உள்ளேயே இருக்கும் எதிரிகளை சமாளிப்பதில் அடக்கிவைப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதை நினைவு படுத்துகிற மாதிரி அட்சய் சந்தருடைய ஒரு கார்ட்டூன் இது.
தீபிகா படுகோன் JNU வுக்குப்போனார். கலகம் செய்து வரும் மாணவர் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தது தன்னுடைய படத்தை ப்ரொமோட் செய்து கொள்கிற மாதிரி இருந்ததைக் கவனிக்காமலா? அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கும் அதே பப்லிசிட்டி தேவைப்படாதா என்ன?
சதீஷ் ஆசார்யா அனுமானத்தில் தீபிகா படுகோன் தன்னுடைய விளம்பர ஸ்டன்டில் அனேகமாக ஜெயித்து விட்டார், சரி! ஆனால் கேள்வி சதீஷ் அனுமானம் ஜெயிக்குமா இல்லையா என்பதை தீபிகா நடித்த சபாக் படம் வந்த பிறகல்லவா தெரியவரும்?
JNUSU சங்கத்தலைவி நம்மூர் கனிமொழியிடம் அவர் தான் நாடாளுமன்றத்தில் தங்களுடைய குரலாகப் பேசவேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். இதுகுறித்து உள்ளூர் சேனல்களோ ஊடகங்களோ வாயே திறக்காமல் இருப்பதில் மர்மம் எதுவுமில்லை. விடை தெரிந்த நண்பர்கள் தெரியாதவர்களுக்குச் சொல்லலாம்!
மீண்டும் சந்திப்போம்
No comments:
Post a Comment