Showing posts with label கார்டூன்கள். Show all posts
Showing posts with label கார்டூன்கள். Show all posts

Thursday, June 24, 2021

ஒண்ணுமில்ல ச்சும்மா! அரசியலைப் படம் பிடித்துக் காட்டப் போறேன்!

பர்கா தத்தின் Mojo Story சேனலில் அவருடைய அரசியல் சொற்பொழிவு, விவாதத்தைக்  கேட்கையில் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?


53 நிமிடங்கள் என்பது இந்த சப்ஜெக்டுக்கு மெய்யாகவே நெம்ப ஓவரு ரகம் தான்! இந்த ஒரு விஷயத்துக்காகத் தான் சதீஷ் ஆசார்யா, மஞ்சுள் போன்ற கார்டூனிஸ்ட் அறிவுஜீவிகள் தேவலையே என்று தோன்றும். சாம்பிள் ஒன்று பார்த்துவிடலாமா?


சதீஷ் ஆசார்யா, பிரசாந்த் கிஷோரை சௌகரியமாக இதில் தவிர்த்துவிட்டார் என்பதில் நுண்ணரசியல் எதுவும் இருக்கிறதா?


கார்டூனிஸ்ட் மஞ்சுளுக்கு நரேந்திர மோடியைத் தவிர வேறெதுவுமே  பிரச்சினையில்லை!பொருட்டுமில்லை! ஜம்மு காஷ்மீர் அரசியலில் ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி வகையறாக்கள் செய்துவந்த அட்டூழியங்கள் எதுவுமே பொருட்டில்லை என்கிறபோது எரிச்சல் வரத்தான் செய்கிறது.


இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று அந்தநாட்களில் காமராஜர் சலிப்புடன் சொன்ன வார்த்தைகள் தான் ஞாபகம் வருகிறது.


திமுக அடக்கமுடியாத யானை என்று சட்டசபையில் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். வீடியோ  40  நிமிடம் என்று சொன்னால் ஸ்ரீராமுக்கு ஒவ்வாமை வந்துவிடுமே என்பதால் ஸ்க்ரீன் ஷாட் மட்டும்! பார்க்க விரும்பினால் நீலக்கலரில் சுட்டி.


அடக்கமுடியாத யானை எப்படியிருக்கும் என்பதை கார்டூனிஸ்ட் அமரன் கோடுகளில் வரைந்து காட்டி இருக்கிறார்! திருத்தங்கள் நிறையச் சொல்லலாம்! 

இந்த யானைக்கு ஒவ்வொரு அவயமும் வெவ்வேறு மிருகத்தின் அவயமாக வரைந்திருந்தால் கனப்பொருத்தம்!

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, February 25, 2020

இன்று பார்த்தவை! #சுவாரசியமானவிவாதங்கள் #கார்டூன்கள்

டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்ததனால் இந்தியாவுக்கு என்ன கிடைக்கப்போகிறது? கேள்வி என்னமோ சிம்பிளாகத்தான் தோன்றும்! ஆனால் இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருப்பதும், கொஞ்சம் கவனமாகக் கேட்பதுடன் சுயமாக சரிதானா என டோதித்துப் பார்க்கவும் தெரியாவிட்டால் வண்டிவண்டியாக காதில் பூவை ஏற்றிவிடுவார்கள் என்பதையும் எச்சரிக்கையாக முதலிலேயே சொல்லி விடுகிறேன்!


முதலில் சேகர் குப்தா! சூட்டோடு சூடாக ஒரு 33 நிமிட வீடியோவை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் நேரலையில் ஒளிபரப்பி முடித்திருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் வருகையினால் இந்திய அமெரிக்க உறவுகளில்  மாற்றம் வந்துவிட்டதா என்று ஒரு அசட்டுத்தனமான கேள்வி வேறு! ராஜீய உறவுகள் இந்தமாதிரியான அரசு முறைப்பயணங்களால் மட்டுமே தீர்மானிக்கப் படுவதில்லை என்பது அனுபவமுள்ள பத்திரிகையாளருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! இங்கே பூடகமாகச் சொல்ல வருகிற விஷயத்தை ஆகர் படேல் என்கிற Amnesty Indiaவின் தலைவர், இதுமாதிரி NGOக்கள் வெளிநாட்டு நன்கொடைகளில் கொழுத்துக் கொண்டிருந்ததற்கு நரேந்திர மோடி ஆப்பு வைத்ததில் செம காண்டுடன்  தொடர்ந்து கடித்துக் குதறிக் கொண்டிருப்பவர்தான்! நேற்றைக்கே காங்கிரசின் National Herald  இதழில் வாந்தியெடுத்துவிட்டார்!

The last thing is that Trump may or may not be president at this time next year. The US elections are in November, and it is possible that we may have a Democrat in the White House. If that is the case, then we will have to write off all the personalised investment in the Trump-Modi chemistry. A Democrat in the White House will mean greater scrutiny of our actions in Kashmir and over the CAA and National Register controversy. The best thing that Modi can hope for in this visit is that he is able to mobilise Indians in America to vote Republican and try and help Trump return to power. இப்படி ஆரூடம் வேறு!

காந்தி பிறந்த மண்ணில் வன்முறையா? சோனியா கண்டனம் என்கிறது செய்தி. ஒரிஜினல் காந்தியைப் பற்றிக் கொஞ்சமும் தெரியாத டூப்ளிகேட்டுகள் இப்படிப் பொங்குவதைப் பார்க்கையில் சிரிப்பதன்றி வேறென்னதான் செய்ய முடியுமாம்?

      
சதீஷ் ஆசார்யாவுக்கும் கவலை வந்துவிட்டது! தூரிகை ட்ரம்பை நக்கல் செய்வதாக நினைத்துக் கொண்டு ஒரிஜினல் காந்தியை நக்கலடிக்கிற மாதிரி! சரிதானா?

  
தேசப்பிதா என்று ஒரிஜினல் காந்திக்கு அபிமானிகள் தான் பெயர்வைத்தார்கள்! மாமா நேரு என்பதையும்! இந்திரா,சோனியா இருவருக்கும் அன்னை பட்டம் சூட்டியவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை ட்ரம்ப் கேட்பதாக சதீஷ் ஆசார்யா வரைந்திருப்பது சும்மா வெறும் கொழுப்பல்ல! அசல் சோனியா காங்கிரசு கொழுப்பு! சரிதானே!

   
ஆதன் தமிழ் மாதேஷுக்கு தமிழக அரசியலே புரியாது! ரவீந்திரன் துரைசாமியிடம் தொடர்ந்து குட்டு வாங்கிக் கொண்டும் இருக்கிறவருக்கு மோடி-ட்ரம்ப் உறவால் இந்தியாவிற்கு பலன் இருக்கா?  இந்தக்கேள்விக்கு பானு கோம்ஸ் பொறுமையாகப் பதில் சொன்னால் மட்டும் புரிந்துவிடப் போகிறதா? வீடியோ 21 நிமிடம் 

ஆக டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்தார். மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றார். இந்தியக் கடற்படை வலிமையைப் பெருக்கும் 24 ரோமியோ MH 60, மற்றும் 6 அப்பாச்சே ஹெலிகாப்டர்களை 21600 கோடிரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதுடன் 3 புரிந்துணர்வ் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கின்றன. H1B விசாபிரச்சினை உட்பட விரிவான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடக்கும் என்ற அளவோடு ட்ரம்ப் விஜயம் நிறைவுபெற்று இன்றிரவே ஊர் திரும்புகிறார்.

மீண்டும் சந்திப்போம். 

Sunday, February 2, 2020

கொஞ்சம் படங்கள்! படங்கள் பேசும் அரசியல்!

நிறைய கார்டூனிஸ்டுகள் தங்களை சூப்பர் ஸ்பெஷல் ஜார்னலிஸ்ட்டாக நினைத்துக் கொள்வதில் பெரும்பாலான நேரங்களில் கொஞ்சம் வில்லங்கம், விவகாரமான படங்களை வரைவது வாடிக்கை தான்! யார் இந்தக் கோளாறைச் சரிசெய்வதாம்?

    இது சதீஷ் ஆசார்யாவின் ஒரிஜினல் கார்டூன் 


அதே கார்டூனைக் கொஞ்சம் மாற்றி, ஒரு சரியான தகவலைச் சொல்கிற மாதிரி ஒரு 24 வயது இளைஞர் திருத்தம் செய்திருக்கிறார்! OpIndia தளத்தில் இவரைப் பற்றிய செய்தியைப் படித்துவிட்டு, இவருடைய ட்வீட்டர் பக்கத்துக்குப் போய்ப் பார்த்ததில்  இதுபோல இன்னும் நிறையத் திருத்தங்கள் செய்திருப்பார் போலத் தெரிகிறது! ஒரிஜினல் vs திருத்தம் இரண்டில் எது மிகவும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறது?

அசுரன் படம் பார்த்துவிட்டு இசுடாலின் கருத்துக் சொன்ன விதத்தில் முரசொலி இடம் பஞ்சமி நிலமா என்று தொடங்கியது  மூலப் பத்திரம் எங்கே என அடுத்த  கேள்வியாக மாறி நூறு நாட்களைத் தாண்டியும், இன்னும் பல துணைக்கேள்விகளுடன் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முடிவே இல்லையா?

   
மதன் ரவிச்சந்திரன் வின் நியூசுக்குப் போன பிறகு அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சருமாக அடித்துத் தள்ளுகிறார்! முரசொலி சர்ச்சையைமட்டும் விட்டு விடுவாரா?

  
இசுடாலினாக இருந்தும்கூட சமாளிப்பது எத்தனை கடினமாக இருக்கிறது! போதாக்குறைக்கு மருத்துவர் ராமதாசு வேறு கேள்விக்கு மேல் கேள்வியாக அடுக்குகிறார்!

   
 அவருக்கென்ன கொளுத்திப் போட்டுவிட்டார்! அகப்பட்டுக்கொண்டு  விழிப்பது இசுடாலின் தானே!  

பட்ஜெட் பற்றி கமல் காசர் கூடக் கருத்து சொல்லி விட்டார்! இசுடாலின் கூட ஏதோ சொல்லியிருப்பதாக! மயில்சாமி அண்ணாத்தே என்று திடீர் பொருளாதார மேதைகளை நக்கல் செய்வதில் சமூக ஊடகங்கள் குறியாக இருக்கின்றன. கார்டூனிஸ்டுகள் பார்வையில் பட்ஜெட் எப்படியாம்? ட்வீட்டரில் சுசேதா தலால் போட்டிருந்த ஒரு செய்தி மிக்க கடுமையாக இருந்ததை, மஞ்சுள் கொஞ்சம் பக்குவமாக சொல்லி இருக்கிறாரோ?

   
பார்த்தவற்றுள் சந்தீப் அத்வர்யுவின் கார்டூன் கிளாஸ்! 

மீண்டும் சந்திப்போம். 
       

Thursday, January 9, 2020

கார்டூன்கள் பேசும் அரசியல்! கார்டூனிஸ்டுகளுடைய உள்ளரசியலும் கூட!

கார்டூன்களில் அரசியல் என்று பார்த்துவந்தது நினைவு இருக்கிறதா? பிடித்திருக்கிறதா? இது 2020 இல் பகிரும் முதல் கார்டூன்களால் பேசப்படும் அரசியல் பதிவுகளில் முதலாவது!  கார்டூனிஸ்டுகளுடைய உள்ளரசியலும்  கூட! கர்நாடக  முதல்வர் எடியூரப்பாவுடன் பிள்ளையார் சுழி போடலாமா?

   
சிலநாட்களுக்கு முன் கர்நாடகாவில் ஒரேமேடையில் பிரதமரும் எடியூரப்பாவும் சந்தித்துக் கொண்டபோது, மாநிலத்துக்கு வரவேண்டிய வெள்ளநிவாரண நிதியை ஞாபகப்படுத்தினாராம்! குறைசொல்ல வேறெதுவும் இல்லாத நிலையிலும் கூட கார்டூனிஸ்டுகள் சாதாரண செய்தியைக் கூடக்  கொஞ்சம் ஸ்பெஷலாக்கி விடுவது சகஜம்தான்!


மஹாராஷ்டிரா அரசியலில் எல்லோருமே சூப்பர் டீலக்ஸ் தான்! இதை தமிழில் நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுப்பது என்றும் சொல்வதுண்டு! தெரியுமில்லையா?  


முந்தின கார்டூனில் மஞ்சுள் அஜித் பவாரை நிரந்தர துணைமுதல்வர் என்று சொன்னார். இங்கே சந்தீப் அத்வர்யு அஜித் பவாரே வழியும் ரட்சகனும் சர்வமும் ஆக இருப்பதாகச் சொல்கிறார். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதையே வைத்துக் கொள்ளலாம்!

இந்தச் செய்தி உண்மையா அல்லது சதீஷ் ஆசார்யா வழக்கமாக விடுகிற புருடாவா என்று தெரியவில்லை! ஆனால் என்னதான் புலிவேஷம் போட்டுக் கொண்டாலும் ராஜ் தாக்ரே இதுமாதிரி பங்காளி உத்தவ் தாக்ரேவைப் பகைத்துக் கொள்ள மாட்டார் என்று தான் நினைக்கிறேன்! கர்நாடகா, மஹாராஷ்ட்ரா அரசியல் களநிலவரச்செய்திகளில் நிறைய அப்டேட் செய்துகொள்ளவேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.

        
வெளியே இருக்கும் எதிரிகளைவிட, உள்ளேயே இருக்கும் எதிரிகளை சமாளிப்பதில் அடக்கிவைப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதை நினைவு படுத்துகிற மாதிரி அட்சய்  சந்தருடைய ஒரு கார்ட்டூன் இது.


தீபிகா படுகோன் JNU வுக்குப்போனார். கலகம் செய்து வரும் மாணவர் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தது தன்னுடைய படத்தை ப்ரொமோட் செய்து கொள்கிற மாதிரி இருந்ததைக் கவனிக்காமலா? அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கும் அதே பப்லிசிட்டி தேவைப்படாதா என்ன?


சதீஷ் ஆசார்யா அனுமானத்தில்  தீபிகா படுகோன் தன்னுடைய விளம்பர ஸ்டன்டில் அனேகமாக ஜெயித்து விட்டார், சரி! ஆனால் கேள்வி சதீஷ் அனுமானம் ஜெயிக்குமா இல்லையா என்பதை தீபிகா நடித்த சபாக் படம் வந்த பிறகல்லவா தெரியவரும்?

JNUSU சங்கத்தலைவி  நம்மூர் கனிமொழியிடம் அவர் தான் நாடாளுமன்றத்தில் தங்களுடைய  குரலாகப் பேசவேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். இதுகுறித்து உள்ளூர் சேனல்களோ ஊடகங்களோ வாயே திறக்காமல் இருப்பதில் மர்மம் எதுவுமில்லை. விடை தெரிந்த நண்பர்கள் தெரியாதவர்களுக்குச் சொல்லலாம்!

மீண்டும் சந்திப்போம்        

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)