Showing posts with label ஊடகப் பொய்கள். Show all posts
Showing posts with label ஊடகப் பொய்கள். Show all posts

Monday, April 6, 2020

எல்லாம் ஒரு தகவலுக்காகத்தான்! ஆனால் கற்றுக்கொள்வதில் ஏன் மந்தமாக இருக்கிறோம்?

இங்கே திராவிடங்கள் அடித்த கூத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி இன்னபிற வார்த்தைகளுக்கான சரியான பொருளே மாறிப்போய்விட்டதில், இந்தவார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தமென்ன என்பதை மீட்டெடுக்க, ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதைவிளக்க பெரிய அளவில் தீசிஸ் எல்லாம் எழுதிப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை! நடப்பு நிகழ்வுகளை, செய்திகளை சரியானமுறையில் புரிந்துகொண்டாலே போதுமானது. உதாரணமாக TOI நாளிதழில் வெளியான செய்தி இது.

படத்தைப் பெரிதாக்கிப் படிப்பது, செய்தி ஆங்கிலத்தில் இருக்கிறதே என்றெல்லாம் தட்டிக் கழிக்க முடியாதபடி எழுத்தாளர் மாலன் நாராயணன் தமிழ்ப்படுத்தி கொடுத்திருப்பதை கொஞ்சம் வாசித்துத்தான் பாருங்களேன்! அவரது முகநூல் பக்கங்களுக்கு நன்றியுடன்! 

கோவிட் -19 தொற்று உலகெங்கும் பரவிய நிலையில் மார்ச் மாதம் தில்லி நிஜாமுதீனில் கூட்டப்பட்ட மாநாட்டை ரத்து செய்யுமாறு முஸ்லீம் துறவிகள், முஸ்லீம் சிந்தனையாளர்கள், ஏன் அவரது நெருங்கிய உதவியாளர்கள் கேட்டுக் கொண்டும் கூட தப்லிகி ஜமாத் தலைவர் மெளலானா முகமது சாத் அதற்கு இணங்கவில்லை.என்று கூறப்படுகிறது.

அவரது பிடிவாதம் அவர் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அவரது சீடர்களின் வாழ்வை மட்டுமல்ல, முஸ்லீம்களின் இமேஜையும் சீர்குலைத்துவிட்டது என்று அந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் கூறுகிறார்கள்.

அவரது நிகழ்வில் (மார்கஜ்) கலந்து கொண்ட பலர் கொரானா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மெளலானா சாத் முஷீர்கள் எனப்படும் தனது ஆலோசகர்களுடன் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் கொரானா தொற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களில் 30% பேர் தப்லிகி ஜமாத்தோடு தொடர்புடையவர்கள். உத்தர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 50% ஆக உயர்ந்துள்ளது ( இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத செய்தி தமிழ்நாட்டில் இது ஏறத்தாழ 80-90%) தில்லி துர்க்மான் கேட்டில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் தப்லிகி ஜமாத்திலிருந்து பிரிந்த இன்னொரு அமைப்பான ஷுரா -இ- ஜமாத், தொறு நோய் பரவும் செய்தி கிடைத்ததுமே தனது எல்லா நிகழ்சிகளையும் ரத்து செய்து விட்டது. ஆனால் அந்தச் செய்தி குறித்துச் சற்றும் கவலைபடாத மெளலானா சாத் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். வைரலாகப் பரவிய அவரது டேப் ஒன்றில் அவர் " மசூதியில் இறப்பது உயர்ந்த சாவு" என்று போதித்துள்ளார்.

மும்பையில் வசித்து வரும் தப்லிகி ஜமாத்தின் மூத்த உறுப்பினர் முகமது ஆலம் "சாத்திற்கு எல்லாம் தெரியும். அவரது பிடிவாதம் அப்பாவி தப்லிகிகளை (முஸ்லீம்களை) கொள்ளை நோயின் வாயில் தள்ளிவிட்டுவிட்டது" என்கிறார். "தன்னை முஸ்லீம் உலகின் அமீராக (அரசனாக்)க் கருதிக் கொள்ளும் ஒருவர். மெக்கா, மதீனாவிற்கு அடுத்தாற்போல் தப்லிகி மார்கஜ்தான் புனிதமான இடம் எனச் சொல்லும் ஒருவர் எப்படி கொள்ளை நோய் பற்றி அறியாதவராக இருந்திருக்க முடியும்?" எனக் கேட்கிறார் அவர்.

மாவைச் சேர்ந்த இன்னொரு மூத்த தப்லிகி உறுப்பினர் லியாகத் அலி கான், " பொறுப்புள்ள முஸ்லீம் சிந்தனையாளர்களின் அறிவுரைகளை ஏன் மெளலானா சாத் குப்பைத் தொட்டியில் போட்டார்? ஏன் தனனை வைரஸ் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளாமல் ஒளிந்த்திருக்கிறார்?" எனக் கேட்கிறார்.மெளலானா சாத்தின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய பெயரை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர், நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு அவர் செவிமடுக்கவில்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்தார். "இப்போது அவர் தனது சீடர்களையே அபாயத்தின் விளிம்பிற்குத் தள்ளிவிட்டார்!" என்கிறார்

மீம் அஃப்சல் என்ற காங்கிரஸ் தலைவரும், ஜாபர் சரேஷ்வாலா என்ற முஸ்லீம் தலைவரும், மெளலானாவிற்குப் பல முறை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு தகவல் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்

"ஜனவரி -பிப்ரவரியில் கோவிட்-19 பற்றிய தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கியதும் நாங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தோம், இந்தியாவிற்கு வருகைதரயிருந்த அயல் நாட்டினரைத் தடுத்து நிறுத்தினோம். ஊரடங்கு இருக்கும் என எதிர்பார்த்தோம். அதனால் கூட்டங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டோம்" என்கிறார் மருத்துவரும் ஷுரா பிரிவின் மூத்த உறுப்பினருமான டாக்டர் எம்.எஸ் கித்வாய்

என்றாலும் மெளலானா சாத்தின் நெருங்கிய மற்றொரு உதவியாளர் மெளலானா ஹாரிஸ், " அயல்நாடுகளிலிருந்து வந்த ஜமாத் உறுப்பினர்கள் இந்தியாவில் நுழைய இந்திய அரசு அனுமதித்தது. அது எப்படி எங்கள் தவறாகும்?" என்று தனது தலைவருக்கு ஆதரவாக வாதிடுகிறார்.

மற்றொரு முஸ்லீம் அமைப்பான தியோபந்த் துறவி அப்துல் காசிம், " தியோபந்த் இஸ்லாமிக் செமினரி மூன்றாண்டுகளுக்கு முன்னரே தப்லிகி ஜமாத்தைத் தடை செய்து விட்டது" என்கிறார்

[ இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியின் தமிழாக்கம்]

இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஊடகக்காரருக்கும் ஏதோவொரு சார்புநிலை இருக்கிறது. அதையும் தாண்டிக் காசுக்கு கூவுவது ஊடகங்களுடைய இன்னொருபக்கமாகவும் இருக்கிறது. செய்திகளைத் தவிர்ப்பதால் ஊடகப்பொய்களிலிருந்து தப்பித்துவிடுவோம் என்பதுகூடத் தவறான அனுமானம் தான்! வருகிற செய்திகளிலிருந்து உண்மையைப் பகுத்து அறிய முடிவதுதான் உண்மையிலேயே பகுத்தறிவு! செய்திகள் உண்மையா பொய்யா என்பதை அதன் வேரைப் பிடித்துப் பார்க்கப்பழக வேண்டும். தொடர்ந்து பழகினால் எவராலும் முடிகிற விஷயம்தான்!

மீண்டும் சந்திப்போம்.           

Friday, February 28, 2020

எப்போது விஷமக்கார ஊடகங்களைக் கேள்வி கேட்கப் போகிறோம்?

டில்லி கலவரங்களை வைத்து ஒரு மிகப்பெரிய ஊடகப் பிரசாரம் இந்தியாவைக் குறிவைத்து, இந்தியாவைப் பற்றி  கொஞ்சமும் அறிந்திராதவர்களால், திட்டமிட்டே நடத்தப்பட்டு வருவதை அறிந்திருக்கிறீர்களா? நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற இந்திய வெறுப்பில் ஊறிய ஊடகங்களாகட்டும், டெமாக்ரட் லட்சிப் பிரமுகர்களாகட்டும். டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையை ஒட்டி வன்மம் கக்கிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கிறீர்களா?


டில்லிப் போலீஸ், உளவுத்துறை மீதே பழியைச் சுமத்திவிட்டு, அதற்காக அமித்ஷா பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று குதித்துக் கொண்டிருக்கிற சோனியா காங்கிரசு என்ன உள்நோக்கத்தோடு செய்கிறது? ஹிந்து என் ராம் உள்ளிட்ட இடதுசாரிகள் எதற்காக காங்கிரசோடு கைகோர்த்து பொய்களைத் தொடர்ந்து அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சமாவது தெரிந்து கொண்டிருக்கிறீர்களா? இந்த 40 நிமிட விவாதம் உங்களுக்குப் பலவிஷயங்களைத் தெளிவுபடுத்தக்கூடும்!


IB அதிகாரி அங்கித் ஷர்மாவைக் கொலை செய்தது உட்பட  எறிவதற்கு கற்கள், எரிப்பதற்கு பெட்ரோல் குண்டுகள் என கலவரங்களுக்கு weapon supplier ஆம் ஆத்மி கட்சியின் அமைதி மார்க்க உறுப்பினர் தலை மறைவாகிவிட்டாராம்!


டெல்லிப் போலீஸ்காரர்கள் பொய்சொல்கிறார்களா என்றறிய அவர்கள் மீது நார்கோ அனாலிசிஸ் டெஸ்ட் நடத்தவேண்டும் என்று ஒரு AAP சமஉ டில்லி சட்டசபையில் பேசியிருக்கிறார்!

விஷமக்கார ஊடகங்களையும்,  அடிப்படை ஆதாரம் இல்லாத பொய்களையே  தொடர்ந்து பரப்பிவரும் திமுக உள்ளிட்ட அரசியல்கட்சிகளையும் எப்போது கேள்வி கேட்கப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.  

  

Tuesday, January 21, 2020

தமிழக ஊடகங்களுக்கு நல்ல தீனிதான்! ஆனால் எப்படித் திரிப்பதாம்?

ஒரு சினிமா நடிகன்! ரஜனி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லிக்கொண்டே இருப்பதைத்தவிர, இன்னமும் செயல்வடிவத்துக்கு வருகிறமாதிரிக் கூட அறிகுறிகள் இல்லை! ஆனால் அவர் வந்து விடுவாரோ என்கிற அச்சம் திராவிடக்கட்சிகளுக்குப் பிடித்து ஆட்டுகிறது. கடந்த 14 ஆம் தேதி துக்ளக் ஆண்டு விழாவில் சோ ராமசாமியுடைய தைரியத்துக்கு உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போக, ஒருவாரகாலமாக திருமாவளவன் உட்பட அநேகமாக எல்லோருமே பேசித்தீர்த்துவிட்டார்கள். இன்று காலை ரஜனிகாந்த் பத்திரிகையாளர்களிடம் பேசியது வெறும் இரண்டே நிமிடங்கள் தான்! தான் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது.(ஈவெரா பற்றி) பேசியதற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க முடியாது என்று சுருக்கமாக, அதே நேரம் இத்தனை காலமாக கட்டமைக்கப்பட்ட பெரியார் என்பதான ஒரு மாயபிம்பத்தின் மீது நேரடியாகவே ஒரு தாக்குதலைத் தொடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.


இங்கே திராவிடக்கட்சிகளுக்கு, சொல்லிக்கொள்கிற மாதிரி பெரிதாக, கொள்கை கோட்பாடு என்றெல்லாம் இருந்ததில்லை. ஈவெரா ஒரு சமூக சீர்திருத்த புரட்சியாளர், சிந்தனைச்சிற்பி, தத்துவஞானி என்றெல்லாம் தொடர்ந்து பரப்புரைகளில் கட்டப்பட்ட ஒரு மாயபிம்பத்தை முன்னிறுத்தி, தங்களுடைய பித்தலாட்டங்களைச் செய்துவந்த கதை சமீபகால வரலாறுதான்! 1949 இல் மணியம்மை ஈவெரா திருமணத்துக்குப் பின்னால் அண்ணாதுரை , நெடுஞ்செழியன் ஈவிகே சம்பத் முதலானோர் திராவிட கழகத்திலிருந்து வெளியேறி திமு கழகம் என்று தனிக் கடை ஆரம்பித்த நாட்களிலிருந்து ஈவெரா திமுக இடையிலான , விரோதம் 1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்த விபத்து நடந்தபிறகுதான் கொஞ்சம் மாறியது.

ஆளுகிற தரப்பின் பக்கமே சாய்ந்து காரியத்தை சாதித்துக் கொள்கிற ஒரே ஒருவிஷ்யத்தை நிரந்தரக் கொள்கையாக வைத்திருந்த ஈவெரா-திகவுக்கு, கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் ஓவராக ஆட்டம் போட வாய்ப்புக் கிடைத்தால் என்னென்ன செய்திருப்பார்கள்? 1971 இல் சேலம் பேரணியில் அதுதான் நடந்தது. 

ஆனால் ரஜனி மாதிரி ஒரு சூப்பர் ஸ்டாரிடமிருந்து இப்படி ஒரு அதிரடி வரும் என்பதை கழகங்கள் யோசித்துக்கூடப் பார்க்கவில்லை! அடி கொஞ்சம் பலமாகவே விழுந்திருப்பது, இன்று இசுடாலின் கொஞ்சம் தணிவாக. ஈவெரா பற்றிப் பேசும்போது நண்பர் ரஜனி கொஞ்சம் யோசித்துப் பேசவேண்டும் என்று ஹீனசுரத்தில் சொன்னதிலிருந்தே தெளிவாகியிருக்கிறது.        

புதியதலைமுறை மாறிவிட்டதோ என்று சந்தேகமெல்லாம் அனாவசியம்! உண்மைக்கு 
இப்படி ஒருநிமிடம் மட்டும்  ஒதுக்குவார்கள்!
மறக்க அடிப்பதற்கு திருமாவளவன்,
லூசு அருணன் கூவுவதைத் திரும்பத் திரும்ப 
ஒளிபரப்பித் தங்கள் விசுவாசம் எங்கே என்பதைக் 
காட்டியும் கொள்வார்கள்! 

1968 கீழவெண்மணி விவசாயக்கூலிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அரைப்படி கூலி உயர்வு கேட்டுப்போராடியதில், 44 பேர் நிலச் சுவான்தார்களால் எரித்துக் கொல்லப்பட்ட சமயத்தில் கூட ஈவெரா நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாகத் தான் பேசினார் கம்யூனிஸ்டுகள் உள்ளே புகுந்து அரசுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டி விட்டார்கள் என்று பேசிய கதையை, சத்தமே இல்லாமல் ஹைஜாக் செய்து கூலிப் போராட்டத்தை தலித் மக்கள் மீதான ஆணவ ஜாதி வன்முறை என்று திசைதிருப்பிவிட்ட கதையை. எந்த மார்க்சிஸ்டுகள் மீது ஈவெரா பழிசுமத்தினரோ, அந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட ஈவெரா புகழ் ஓங்குக என்று ஜிங்சக் அடித்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய  நகைமுரண்! இந்த முகநூல் பக்கம் கொஞ்சம் நினைவு படுத்துகிறது 

பங்ச்சர் ஆனது ஆனதுதான்! இப்போது எனக்கிருக்கும் ஒரே கேள்வி, ரஜனிகாந்த் தொடர்ந்து 2வது முறையாக ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறார் என்பதில் வருகிற நாட்களில் தமிழக சேனல்கள் விவாதங்களில் என்ன மாதிரிக் கதறப்போகிறார்கள் என்பதுதான்! 

மீண்டும் சந்திப்போம்.  

Monday, September 30, 2019

சதீஷ் ஆசார்யா கார்டூன்! PMC Bank! திரிக்கப்படும் செய்திகள்!

சங்கடமான வங்கிவேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் சங்கீதம் பாட விடாமல் வங்கித்துறை சார்ந்த செய்திகளில் கவனம் இன்னும் விடாப்பிடியாக விட்டுப்போக மறுப்பது எனக்கு மட்டும்தானா? இதே வங்கித்துறையில் இருந்த சில பதிவர்கள் மாதிரி take it easy என்று கம்முன்னு  இருக்கமுடியாமல் வங்கிகளைப் பற்றி இங்கேயும் Consent to be ....nothing! தளத்திலும் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதை யாராவது கவனிக்கிறார்களா? அப்படியே கவனித்தாலும் என்ன செய்துவிடமுடியும் என்று சலிப்பு வருகிறதா?



சதீஷ் ஆசார்யாவுடைய இந்தக் கார்டூனைப் பார்த்தபிறகு ஏன் இப்படிப்பொறுப்பே இல்லாமல் விஷமத்தனமான கருத்தை வேண்டுமென்றே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கோபமும், கோபப்பட்டு என்ன ஆகப்போகிறதென்ற சலிப்பும் சேர்ந்தே வந்தது.  சதீஷ் ஆசார்யாஇந்தக் கார்டூனில் தொடர்பு  இல்லாத இரு விஷயங்களை முடிச்சுப்போட்டு மூன்றாவதாக ஒரு விஷமத்தனமான கருத்தைப் பார்க்கிறவர்களிடம் விதைக்க முயன்றிருக்கிறார் என்கிற விவரம் புரிகிறதா? முதலில் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் வங்கியிடம் இடைக்கால டிவிடெண்டாக 30000 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக வந்த செய்தி! இரண்டாவதாக பஞ்சாப் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மீது  ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதில் கஸ்டமர் தன் கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கமுடியும் என்பது கொஞ்சம் தளர்த்தப்பட்டு 10000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தி. இரண்டுக்கும் என்ன தொடர்பு? தொடர்பு படுத்தி என்ன சொல்ல வருகிறார் கார்டூனிஸ்ட்?      


கூகிளில் PMC Bank என்று தேடிப்பாருங்கள்! இந்த மல்டி ஸ்டேட் அர்பன் கூட்டுறவு வங்கி எப்படி ஆறேழு வருடங்களாக ரிசர்வ் வங்கிக்குத் தொடர்ந்து பொய்யான விவரங்களைக் கொடுத்து வந்திருக்கிறது, இப்போது எப்படி மாட்டிக் கொண்டிருக்கிறது என்ற விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டே இருப்பதை தேடலில் பார்க்க முடியும்.


முதல் பாராவில் ஆர்தர் ஹெய்லியின் The Money Changers நாவல் விமரிசனமாகச் சொல்லிவிட்டு இந்திய வங்கிகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருந்ததற்கான லிங்க் இருக்கிறது. PMC Bank இன் மொத்த டெபாசிட் 11000 கோடி ரூபாய்,  வங்கி கடன் கொடுத்த தொகை 8300 கோடி ரூபாய் என்பது வெறும் தகவல். வெறும் 3 கோடி ரூபாய் மூலதனம் அப்புறம் 9 கோடிரூபாய் ரிசர்வ் மட்டுமே உள்ள ஒருவங்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிற ஒரே குழுமத்துக்கு 6500 கோடி கடன் கொடுத்தது எப்படி? PMC’s annual report shows it to be a profitable lender with a capital adequacy ratio higher than the 12% minimum requirement and a bad-loan ratio of under 4% – almost respectable by the current standards of India’s banking industry. If the news reports are correct, the solidity portrayed by that document is a fiction. How did PMC’s board, its auditors and the central bank remain clueless for so long? இன்னும் விரிவாகப்படிக்க இங்கே 

Fake News வெறும் கவனக்குறைவால் உருவாக்கப்படுபவை அல்ல! அவை திட்டமிட்டு உருவாக்கப்படுகிற விதத்தை இங்கே கொஞ்சம் சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா?

செய்திகளின் வேரைப் பிடியுங்கள் பார்த்துப்பழகுங்கள் என்று இந்தப் பக்கங்களில் அடிக்கடி சொல்வதில்  கவனம் செலுத்த முடியுமானால், ஊடகப்பொய்கள், திரிக்கப்படும் செய்திகள், அம்மாதிரிச் செய்திகளின் அரசியல் எல்லாவற்றையும் புரிந்துகொள்வதுமே கூட எளிதுதான்!

மீண்டும் சந்திப்போம்.      

Monday, July 8, 2019

தந்தி டிவி! இடியாப்பச் சிக்கல்! புதிய தலைமுறை!

ரங்கராஜ் பாண்டே வெளியேறிய பிறகு தந்தி டிவியைப் பார்ப்பது அநேகமாகக் குறைந்தே போனது. ரங்கராஜ் பாண்டே மீதான தனிப்பட்ட ஈர்ப்பு என்பது காரணமில்லை. திமுக பக்கம் சாய்வதற்காகவே தந்திடிவி எடுத்த முடிவு அது என்பது சிதம்பர ரகசியமாக இருந்தது தான் காரணம்! அது போக பாண்டேவுடன் ஒரு புதியபாணியில் செய்திகளை சுவாரசியமாகத் தருவதில் கூடவே இருந்து தந்திடிவியை ஒரு ப்ராண்டாகவும் மாற்றிய ஹரிஹரன், அசோகவர்ஷினி போன்றவர்கள் இருந்தும் கூட, முதலாளிகளுடைய ஆசைக்கு ஏற்றபடி content தரமுயற்சித்ததில் பார்வையாளர்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போனார்கள் என்பதுதான் தந்திடிவி பார்ப்பதைத் தவிர்த்ததற்கான முக்கியமான காரணம். 


செய்தி ஆசிரியர் சலீம், நிதியமைச்சர் திருமதி நிர்மலா ராமனை, பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பேட்டி காண்கிறார்.முன்னெப்போதுமில்லாத விதத்தில் இந்தக் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி வெறும் 31 நிமிடங்கள்தான் என்பது  மிகவும் ஆச்சரியம். அதைவிட  சம்பந்தமே இல்லாத விஷயங்களில் இருந்து கேள்விகள் ஆரம்பித்தது இன்னொரு ஆச்சரியம். ஆனாலும் நிர்மலா சீதாராமனை இன்னும் நெருக்கமாக அறிந்து கொள்ள உதவிய தக்வல்கள் அவை. புறநாநூறிலிருந்து ஒரு பாடலைச் சொன்னதைத்தொட்டு சிலகேள்விகள் அப்புறம்   மெதுவாக பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீதான வரி, இறக்குமதித் தங்கத்தின் மீது சுங்கவரி இவை அதிகரிக்கப்பட்டதை மட்டுமே கேள்வி கேட்டார் என்பதை விட எல்லாக் கேள்விகளுக்கும்  நிர்மலா சீதாராமன் பொறுமையாக, அதேநேரம் தெளிவாகப் பதில் சொன்னது தான் இந்தநிகழ்ச்சியை அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகப் பரிந்துரை செய்ய வைக்கிறது.  


தற்போதைய செய்திகளின் படி கர்நாடக அரசியல் நிலவரம் இன்னமும் குழப்படியாக ஆகிக் கொண்டே வருகிறது. பிஜேபி மீது பழியைப்போட்டு காங்கிரஸ் திசைதிருப்ப முயற்சித்தாலும் இப்போதைய சிக்கலுக்குப் பிரதான காரணம்  காங்கிரசின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தான் என்கிற வதந்திக்கு இப்போது சித்தராமையாவும் கே சி வேணுகோபாலும் கூட்டாக நிருபர்களிடம் பேசியது, வலு சேர்ப்பதாக இருக்கிறது.  இன்று காங்கிரசின் எல்லா 22 அமைச்சர்களும், பதவியைத் தியாகம் செய்து ராஜினாமா கொடுத்துவிட்டார்கள். அதிருப்தியில் ராஜினாமா செய்து வெளியே போனவர்கள் அவசரப்பட வேண்டாம், மந்திரிசபை மாற்றம் வரும் என்று சொல்வதிலிருந்தே இது பதவிக்கான குடுமிபிடிச் சண்டை ப்ளஸ் சித்தராமையா திரிசமன் என்பது ஈயென்று இளித்து நிற்கிறது. எண்ணிக்கை தொலைந்து போனதில் நம்பிக்கை இழந்து வீட்டா குமாரசாமி, காங்கிரஸ் அமைச்சர்களுடைய ராஜினாமா தியாகம் எந்த அளவுக்கு எடுபடுகிறது என்பதை இன்று  ஒருநாள் பொறுத்திருந்து  பார்த்துவிட்டு, தன்னுடைய ராஜினாமா முடிவை நாளை அறிவிப்பாராம்! 


தமிழக அரசியல்களம் மட்டும்  குறைந்ததா என்ன? வைகோவின் ராஜ்யசபா வேட்புமனு நிராகரிக்கப்படுமா அல்லது ஏற்கப் படுமா என்பது இன்னும் முடிவாகாத நிலையில் என் ஆர் இளங்கோ திமுக சார்பில் 4வது வேட்பாளராக களம் இறங்குகிறாராம்! அனால் இவர் வைகோவுக்கு மாற்று வேட்பாளர் ஒன்றும் இல்லை, 4வது வேட்பாளர்தான் என்கிறது புதியதலைமுறை!

   
திமுகவுக்கு   சொம்பு தூக்குவதில் பச்சமுத்துவின் புதிய தலைமுறை நம்பர் ! தான்! யாரும் மறுக்கப்போகிறீர்களா என்ன?

மீண்டும் சந்திப்போம்.
           

Saturday, June 15, 2019

கீச்சுக்களில் கொஞ்சம் உலா! #அரசியல்

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்துக்குப் போன இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கடந்த 2 நாட்களில் ஒரேஅறையில் 9 மணிநேரத்துக்கும் மேலாக இருந்தபோதிலும் மரியாதை நிமித்தம் கை கொடுத்துக் கொண்டதற்கு மேல் வேறெந்த உரையாடலும் நடக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் SM குரேஷி இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டதாகவும் பரஸ்பர மரியாதை நல்லெண்ணங்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சமாளித்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் நகைப்புக்குரியதாக ஆகியிருக்கிறது. 
நம்மூர் புரட்சிகரமான அரசியல்வாதிகளுடைய உண்மையான முகமும் கூட அங்கே ட்வீட்டரில் இப்படிக் கிடந்து நாறுகிறதே, என்ன செய்ய?

சிவன் காப்பாற்றவில்லை , விஷ்ணு காப்பாற்றவில்லை , மதுரை மீனாட்சி காப்பாற்றவில்லை என்னும் போது இயேசப்பா வை நோக்கி செல்வதில் என்ன தவறு - திருமாவளவன் M.P அப்படியே மதம் மாறியவர்களை இயேசு காப்பாற்றினாறா???  
கிருஸ்தவ மதத்தில் சாதி இல்லையா???  

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மூலதனம் திரட்டுவதில் முறைகேடுகள் செய்ததற்காக NDTV சேர்மன் பிரணாய் ராய் மேனேஜிங் டைரக்டர் ராதிகா ராய் இருவர்மீதும் SEBI நடவடிக்கை எடுத்திருப்பதில் கணவன் மனைவி இருவரும் NDTV இயக்குநர் குழுவில் தலைமைப் பொறுப்பில்  இனி தொடரமுடியாது, 2 வருடங்களுக்குப் பங்குச்சந்தையை நினைத்தும் பார்க்க முடியாது என்றாகியிருக்கிறது.


SEBI on Friday also barred the Roys and RRPR Holdings, the company through which they own a stake in NDTV, from accessing, or even associating with, the capital markets for two years. The duo cannot exit any of their equity or mutual fund holdings during the period, as these assets will remain frozen. SEBI passed these strictures against the Roys for their alleged failure to disclose material information to the markets.என்ற செய்திக்குப்பின்னால் 2009 இல் நடந்த முறைகேடுகள் மீதான பல்வேறு விசாரணைகள் இருக்கின்றன. டாக்டர் சுப்ரமணியன் சுவாமி வேறு இப்படிச் சொல்கிறார் 

  • There is some fear expressed to me that NDTV boss Prannoy Roy and wife may migrate Cape Town in South Africa. I am sure CBI and ED will have put out a Lookout Notice If suspected to do so
    4:07 PM · Jun 15, 2019 · TweetCaster for iOS
    என்டிடிவியா மோசடியா என்னவிவரம் என்று புரியாமல் முழிக்கிறீர்களா? உங்களுக்காகவே பழைய கதையெல்லாம் எடுத்துத் தருகிற ஒரு ட்வீட் 

  • NDTV juggles funds, shares abroad, avoids tax. NDTV, through its foreign subsidiaries, is suspected to be indulging in gross violations of Indian tax and corporate laws. Dr web.archive.org/web/2011031121…
    7:54 AM · Jun 15, 2019 · Twitter for iPhone


    இணையத்தில் எல்லாத்  தகவல்களுமே கொட்டிக் கிடக்கின்றன என்பதில்  வரலாற்றை இஷ்டத்துக்குத் திருத்தி எழுதிவிட  முடியாதே! என்ன செய்ய? 

    Radhika and Prannoy Roy, the founders of NDTV, believe the SEBI order asking them to step down as directors and to not hold any management positions in NDTV is outrageous, bad in law and against all procedures. It is, for example, unheard of that the order contains false decisions on issues that were not even mentioned in the show cause notice. They will challenge the SEBI order in the courts as advised within the next few days.என்கிறது NDTV செய்திக்குறிப்பு.முழுப்பூசணிக்காயை சோற்றில்தான் மறைக்கமுடியாது ஆனால் கோர்ட்டுக்குப் போனால்  மறைத்துவிடலாம் என்கிறார்களா?  

    அங்கே இங்கே சுற்றினாலும் தமிழகத்துக்குத்தானே திரும்பி வந்தாகவேண்டும்! இங்கே என்ன ரணகளமாம்?  


  • இன்று மத்திய இரயில்வே அமைச்சகத்தினை தொடர்புகொண்டு..தென்னக இரயில்வேசார்பில்..வெளியிட்டுருப்பத்தாக...உள்ள அறிவிப்பு..(ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில்தான்..கருத்துகள்பரிமாற்றிக்கொள்ளவேண்டும்)என்ற அறிக்கையை திரும்பப்பெறவேண்டும்..என வலியுறுத்தப்பட்டது....எந்தவகையிலும்..இந்திதிணக்கப்படாது..
    இது நேற்றைக்கு. எப்படி பதிலடி வருகிறதென்று பாருங்களேன் இங்கே!

  • Replying to
    நீங்க Phone ல பேசி வாயிலயே வடை சுடுங்க! அங்க நேரா சம்பந்தப் பட்ட அதிகாரியையே முற்றுகையிட்ட, அறிவிப்பை வாபஸ் பெற வச்சிட்டாய்ங்க
    😂
    😂
    Quote Tweet
    ·
    Southern Railway GM agrees to withdraw the circular issued, which makes station masters and control room officials to communicate either only in Hindi or English. #StopHindiImposition
    Show this thread
    />
    0:16 / 0:45
    2:20 PM · Jun 14, 2019 · Twitter for Android
    வீடியோ வேலை செய்யவில்லையா? இங்கே
    டாக்டர் யக்கோவ்! வாயை மூடிக்கொண்டிருப்பது அவருடைய உடல்நலத்துக்கு நல்லது. தமிழ்நாட்டில் ஜெயித்த 37 எம்பிக்களும் போர் வெறியில் இருக்கிறார்களாம்! காலக் கொடுமை, தயாநிதி மாறன் கூடப் போராட்டத்தில்!!
    மீண்டும் சந்திப்போம்.



    இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

    #கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

    செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

    முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

    இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

    அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)