Showing posts with label திராவிடப் புரட்டு. Show all posts
Showing posts with label திராவிடப் புரட்டு. Show all posts

Tuesday, March 10, 2020

இடுக்கண் வருங்கால் நகுக! சொல்லிவச்சார் வள்ளுவரும் சரிங்க!

சென்ற வாரம் கொஞ்சம் களையிழந்து கிடந்த அரசியல் களம் மறுபடியும் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது! மார்ச் மாதம் முதலிரண்டு வாரங்கள் முடிவதற்கு முன்னாலேயே நம்மூர் பங்குச்சந்தை ஒரேயடியாகப் படுக்க ஆரம்பித்துவிட்டது! கரோனா வைரஸ் பீதி உலகப் பங்குச் சந்தைகளை ஆட்டி வைத்ததோடு இந்தியபங்குச் சந்தையையும் ஆட்டிப் படைத்துவிட்டது. போதாக்குறைக்கு ரஷ்யாவும் சவூதி அரேபியாவும் போட்டிபோட்டுக் கொண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்ததில் எண்ணெய் விலை 30% வரை குறைந்ததும், இங்கே யெஸ் பேங்க் விவகாரமும் சேர்ந்து இந்தியப் பங்குச் சந்தையை ரொம்பவுமே அசைத்துப் பார்த்ததைக்  கூட  மோடி எதிர்ப்பாளர்கள் கொண்டாட முடியாதபடி மத்தியப்பிரதேச அரசியல்  காங்கிரசை அடியோடு புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

வீடியோ 21 நிமிடம் 


#Yesபேங்க்பரிதாபங்கள். ராணா கபூர் ராஜீவ் படத்தை 2கோடிக்குப் பிரியங்காவிடம் வாங்கியதோடு மட்டுமல்லாமல் ராகுல் காந்தியின் படத்தையும் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
புரொபசர் ஆநந்த் ரங்கநாதன்: 'நிச்சயமாக ராகுலின் படத்தை எம்.எப். ஹுசைன் வரைந்திருக்க முடியாது. அவர் குதிரைகளை வரைபவர், கழுதையை வரைந்திருக்க முடியாது.'
ராகுலையும் கழுதையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது சரியா? ஒரு வேளை ராஜீவின் படத்தை விட ராகுலின் படம் அதிகமாக விலை போயிருந்தால் ராஜீவின் மதிப்பு கழுதையை விடக் குறைவானதா? எப்படி எல்லாம் கேள்விகள் எழும்? 


 இது இன்றைய ஹிந்து ஆங்கிலநாளிதழில் சுரேந்திரா வரைந்திருக்கிற கார்டூன்  


  
மெஜாரிட்டியை இழந்து நிற்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தாலும், கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுகிற வரை காங்கிரஸ்காரன் எவனும் நாற்காலியை விடவே மாட்டான் என்பது மத்தியப்பிரதேசத்தில்  மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.


மேலே கமல்நாத் மாதிரியே கப்பல் கவிழ்ந்த மாதிரிக் கையை வைத்துக் கொண்டிருப்பவர் யார் தெரிகிறதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி! The polit buro of the CPM - currently dominated by the Kerala faction of the party - shot down the proposal of sending Sitaram Yechury to the Rajya Sabha with the help of the Congress. The West Bengal faction was earlier said to have been keen on nominating Sitaram Yechury to the Rajya Sabha. இரண்டாவது முறையாகவும் கேரள சகாவுக்கள் சீதாராம் யெச்சூரியின் ராஜ்யசபா உறுப்பினராகும் கனவுக்குத் தடை போட்டு விட்டார்களாம்! ஒருவரே இருமுறைக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது என்பது கொள்கைப்படியானதுதான் என்று சென்ற முறை போலவே சொல்லப்பட்டாலும், காங்கிரசோடு ஒட்டுறவு இல்லை என்ற கேரள காம்ரேடுகளின் கட்டளை மேற்குவங்கத் தோழர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தத்துவார்த்த, கொள்கை சாயம் பூசிக் சொல்வது காம்ரேடுகளின் வழக்கம்.

காங்கிரசோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தானா? மற்ற எல்லா விஷயங்களிலும் காங்கிரசோடு தோளோடு தோள் சேர நிற்கிற மார்க்சிஸ்டுகளின் சாயம் வெளுத்து நீண்ட காலமாகிவிட்டதே! காங்கிரசுக்கு முன்னாலேயே புதைகுழிக்குப் போய்விட்டவர்கள் கம்யூனிஸ்டுகள்! ஏன் என்று தனியாக விவரித்துச் சொல்லவேண்டுமா என்ன! இடதுசாரிகள் என்று தேடிப்பாருங்கள்! இரு வலைப்பதிவுகளிலும் நிறையத் தகவல்கள் கிடைக்கும்!

துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க! சொல்லிவச்சார் வள்ளுவரும் சரிங்க என்று ராஜபார்ட் ரங்கதுரை மாதிரிப் பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா?காங்கிரஸ், கழகங்கள், இடதுசாரிகள் என்ற களைகளை எப்போது இந்திய அரசியலில் இருந்து முற்றொட்டாக, களையெடுக்கப்போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.      

            

Monday, March 2, 2020

திங்கள் மாலை! சுவாரசியமான செய்தி அலசல்!

அந்தப்பக்கம் திரௌபதி படத்தைப் பற்றி எழுதியதை வாசித்தீர்களா?  News 7 சேனலின் நெல்சன் சேவியர், திரௌபதி  படத்துக்கு ஜனங்கள் அதிக வரவேற்பளிப்பதில் நொந்து ட்வீட்டரில் பொங்கியது சேனலுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்றோ என்னவோ திரௌபதி படக்குழுவினருடன் ஒரு நேர்காணலை நடத்தி சமன் செய்திருக்கிறார்கள் போல!


நாடகக் காதல், ஆணவக்கொலைகள் என்ற பரப்புரை தாண்டி, ஒரு மிகப்பெரிய மோசடி நடந்ததும், அப்படியே அமுங்கிப்போனதுமாக இருந்த விஷயத்தை திரௌபதி படம் மீண்டும் கவனப்படுத்தி இருக்கிறது. மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், அவர்களுக்குத் துணையாக இருந்தவர்கள் மீது இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னால், அரசும், பார் அசோஸியேஷனும் ஊமைச் சாமிகளாக அப்படியே அடக்கிவாசிப்பது ஏன் என்ற கேள்விக்கு விடைதேடுவதற்குப் பதிலாக, பாமகவுக்கு அரசியல் ஆதாயம் தேடித்தருவதோடு திரௌபதி படம் நின்றுவிடுமானால், என்வரையில் அது பெருத்த ஏமாற்றம் என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டி இருக்கிறது.

  
இதை எப்படி எடுத்துக்கொள்வது? கமல் காசர் வந்து தான் பொழிப்புரை எழுதித்தர வேண்டுமோ? அப்புறம் அந்த என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் என்பதன் வரையறை என்னவோ??

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் லந்து அடிப்பதில் திமுகவின் சாயம் என்ன ஆகிறதாம்? வந்து பாருங்கள்!

‪தீமிதித்து கருணாநிதியிடம் திட்டு வாங்கிய அந்தியூர் செல்வராஜை ராஜ்யசபைக்கு நியமித்து இருப்பதன் மூலம் திமுக இந்துக் கட்சியே என ஸ்டாலின் தெள்ளத்தெளிவாய் தெரிவித்திருப்பதை, செயற்குழு லெவல் ஐடி பிரிவின் மைனாரிடி அணி உறுப்புல்லாஹ் எப்படியெல்லாம் முட்டு கொடுக்கவேண்டி இருக்கிறது😂😂😂


மதன் ரவிச்சந்திரன் வேறு நொந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்.

அப்போ இவ்ளோ நாள் பெயர் இருந்ததாக சொல்லப் பட்ட hmm hmm நிலைமை...
எசமான்: தம்பி நீங்க திறமையானவர் தான் நல்ல செல்வாக்கு இருக்கு அதுவே நாளைக்கு சின்னவற்கு பிரச்னையா வந்துட்டேனா... போ போய் வழக்கம் போல பூண்டு தட்டி போட்டு சூடா மசால் வடை வாங்கிட்டு வா...
hmm hmm : சரிங்க எசமான்🔥🔥🔥
               

இந்த முகநூல்தான் எப்படி ஒவ்வொருவருடைய மன வக்கிரத்தையும் வெளிப்படுத்துகிற கருவியாக இருந்து வதைக்கிறது!!


இது ஒன்றுதான் பாக்கி இருந்தது! இன்றிரவு அதுவும் தீருகிறது. திருப்திதானே!

மீண்டும் சந்திப்போம்.    

Tuesday, February 4, 2020

வாலு போயிக் கத்தி வந்தது! டும்டும்டும்!!

புலி பசித்தால் பசும்புல்லை மட்டுமல்ல, வைக்கோல், புண்ணாக்கு இப்படி எதைவேண்டுமானாலும் தின்னும் என்பதற்கு நம்மூர் சிகுலர் அரசியல்வாதிகளே சாட்சி! தேர்தல் வரும்போதெல்லாம் அவர்களுக்கு ஹிந்து மத நம்பிக்கை. வந்துவிடுகிறது! சென்ற நாடாளுமன்றத் தேர்தல் சமயம் ராகுல் காண்டி தன்னை கவுல் பிராமணன், சிவபக்தன் என்று அறிவித்துக் கொண்டு கோவில் கோவிலாகப் போனது ஒரு நல்ல உதாரணம். பிரசாந்த் கிஷோர் தேர்தல் உத்தி வகுத்துக் கொடுக்கும் வேலையை ஒரு வியாபாரமாக வளர்த்துவருவதில், அவரது சேவையைப் பயன்படுத்தும் மம்தா பானெர்ஜியை சமீபநாட்களில் சிரித்த முகத்துடன் பார்க்க முடிவது ஒருவிதம்! டில்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் வேறுவிதம்! ஹனுமான் சாலிசா பாடியதோடு தன்னை ஆஞ்சநேய பக்தனாகக் காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது தேர்தல் படுத்தும் பாடு!


பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி செய்தாரோ தானாகவே ஜிந்தித்துப் பண்ணினாரோ, கேஜ்ரிவால்  என்ன கிறுக்குத்தனம் பண்ணினாலும் டில்லி மிடில் கிளாஸ் வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியை விடுவதாயில்லை! டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கேஜ்ரிவால் 54 முதல் 60 இடங்கள் வரை ஜெயித்து ஆட்சியைப் பிடிப்பார் என்று சொல்கிறது. ஆனால்  நம்மூர் முகநூல் போராளிகள்,  கேஜ்ரிவால் பாணியில் இசுடாலினை  முத்தைத் தருபத்தி என்ற திருப்புகழைப் பாடவைத்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் மிதக்க ஆரம்பித்து விட்டார்கள்! 

இந்த முட்டுக்கு 200₹யும் இரண்டு வேளை சோறும் போட்டாங்களோ!!
அதுசரி! 200 இடம் உறுதி போனஸுக்கு உழைக்கணும்ங்கிற போது கூட பிரசாந்த் கிஷோர் எதிர்த்தரப்பில் களமிறங்கினால் பின்னடைவு என்ற நிலை தான் உள்ளதா?
கிஷோர்ங்கிற பேரக் கேட்டாலே ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு ஒரு ப ப பயம் இருக்கோ 



ஆக வாலு போயிக் கத்தி வந்தது டும்டும்டும் என்ற குழந்தைப்பாடல் மாதிரி, ரஜனிகாந்த் பரபரப்பு போய் ராஜேந்திரபாலாஜி, அவரும்போய் பிரசாந்த் கிஷோர் என்று தமிழக ஊடகங்கள் வரிசைகட்டிப் பரபரப்புச் செய்திகளாக்கிக் கொண்டிருப்பதில் பேசப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள் எல்லாம் சீந்துவார் இல்லாமல் அப்படியே கிடக்கின்றன. ஆசியாநெட் தமிழில் தினத்தந்தியை மிஞ்சுகிற விதத்தில் குபீர் செய்திகளாகப் போட்டு நன்றாகச் சிரிக்க வைக்கிறார்கள். வெறுமனே சிரித்தால் மட்டும் போதுமா?


பிரசாந்த் கிஷோர் தன்னுடைய வேலைகளைத் தமிழ் நாட்டில் ஆரம்பித்துவிட்டாரா என்பது தெரியவில்லை. இசுடாலினுக்கு என்ன மாதிரி image makeover செய்யப் போகிறார் என்பதும் தெரியாது. இசுடாலின் யாரை எங்கே வைக்கவேண்டுமென்பதில் என்ன ஆலோசனை சொல்லப்போகிறார் என்பதும் தெரியாது. அதிமுகவின் ஐடி விங் திறமையாகச் சமாளிக்குமா, கோட்டை விடுமா என்பதுமே தெரியாது. இப்படிக்கு கள நிலவரம் தெளிவாகத் தெரிவதற்கு முன்னாலேயே மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா அதிமுக என்பது மட்டும் தெரிந்துவிடுமா? என்னமோ ஆவுடையப்பன் கேள்வி கேட்கிறார்! ரங்கராஜ் பாண்டேவும் பதில் சொல்கிறார்! வீடியோ 16 நிமிடம்! 

வாலுபோயி கத்திபோயி ....... போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்! முற்றுப்புள்ளி வைப்பது நம் கைகளில் தான் இருக்கிறதென்பதை அறியாமலேயே ஊடகங்களும் பிரசாந்த் கிஷோர்களும் முடிவு செய்ய விட்டு விடுவோமா?

மீண்டும் சந்திப்போம்.  
              

Monday, February 3, 2020

அண்ணா வழியில் இன்றும் நடப்பது அதிமுகவா? திமுகவா?

அண்ணா வழியில் இன்றும் நடப்பது அதிமுகவா? திமுகவா? இப்படி ஒருதலைப்பில் நியூஸ் 7 சேனலில் 
விவாத அக்கப்போர் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. சி என் அண்ணாதுரைக்கு அப்படி என்ன கொள்கை, வழி என்றெல்லாம் இருந்ததாக சும்மா கூவிக் கொண்டிருக்கிறார்கள்? இதுமாதிரி நிறைய போலித்தனங்களை காலமே கழித்துவிடும் என்பதில் ஈவெரா அண்ணாதுரை போன்ற அரசியல் பிம்பங்கள் காலாவதியாகிப் போய்விட்டன என்பது இன்னமும் இவர்களுக்கெல்லாம் தெரியாதா? தெரியாத மாதிரி நடிக்கிறார்களா?


     
என்னதான் இணையத்தில் அதிகநேரம் இயங்கி கொண்டே இருந்தாலும் இப்படி ஒரு மாத இதழ் வெளிவருகிற செய்தி எனக்கு இன்றைக்குத் தான் தெரியவந்தது. அட்டைப்பட நையாண்டி பற்றித் தனியாக எதையும் சொல்வதாக இல்லை! ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி அரசியல் செய்த மாதிரியே இனிமேலும் செய்தால், முதல்வர் நாற்காலி எப்போதுமே கிடைக்காது என்ற ஞானம் வந்து விட்டதால் தானே பாவம், இசுடாலினுக்கும், பிரசாந்த் கிஷோர் மாதிரியான data manipulation செய்யத் தெரிந்த வித்தைக்காரரிடம் போய், ஒண்ட வேண்டி வந்ததே! 


CAA குறித்த இந்தப்பகிர்வைப் படித்ததும், Robert Frost  கவிதை ஒன்றை இங்கே பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது. மேலே உள்ள பகிர்வு இன்னும் செப்பம் செய்யப் படவேண்டும்.


முதலில் ஆரம்பித்த தலைப்புக்கே வருவோம்! அண்ணா வழியில் இன்றும் நடப்பது அதிமுகவா? திமுகவா? 

இரண்டுகட்சிகளும் இல்லை! அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தும் ஆம் ஆத்மி கட்சி தான்!

எதனால் சொல்கிறீர்கள்?

அண்ணா (ஹஸாரே)விடம் இருந்து பிரிந்து தனிக்க!ட்சி ஆரம்பித்தபிறகு அண்ணாவை அவர் தொந்தரவு செய்வதே இல்லை! அண்ணாவுக்கு நாமம் போடுவதும் இல்லை! அதனால் தான்!

மீண்டும் சந்திப்போம்.        

Sunday, January 19, 2020

#525 எது பொருளோ, அதைப் பேசுவோம்!

நாத்திகம் சிலருக்குப் பொழுதுபோக்காகவும், பலருக்கு பிழைப்பாகவும் இருப்பதை 2008 இல் இங்கே பதிவுகள் எழுத ஆரம்பித்த நாட்களிலேயே நிறையப் பேசியாகி விட்டது. இங்கே திராவிடர் கழகம், அதை அடியொற்றிப் பகுத்தறிவோடு (?!!) பேசிப் பிழைப்பு நடத்திவருகிற  இவர்களை ஒரு மூன்றாம்தரக்  கோமாளிகளாக மட்டுமே பார்க்க முடிவதால், இவர்கள் பேசும் நாத்திகம், பகுத்தறிவு அனைத்தையும் பார்த்துவிட்டுக் கடந்து போகவே நினைக்கிறேன். ஆனால் என் கண்முன்னாலேயே நடந்த சில விஷயங்கள், அதைப்பற்றிய செய்திகளை நடந்த காலத்திலேயே வாசித்தவன் ஒரு சாட்சியாக இருப்பதுபோலவே இன்னும் நிறையப்பேர்கள் இங்கு இருக்கிறோம். போதாக்குறைக்கு, அவர்களுடைய வீரப்பிரதாபங்களை அவர்களே தம்பட்டம் அடித்துக் கொண்ட  ஒப்புதல் வாக்குமூலங்கள் வேறு அள்ள அள்ளக் குறையாமல் கிடைத்து வருகின்றன.

 வீடியோ 7.55 நிமிடத்திலிருந்து வீரமணி 
ஒப்புதல் வாக்குமூலம். சுபவீ கொஞ்சம் உண்மை 
நிறையப்பொய் கலந்து சமாளிப்பு!
ரங்கராஜ் பாண்டே அம்பலப்படுத்துகிறார்! 
    
அப்படி என்னென்ன ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பதை இங்கே ரங்கராஜ் பாண்டே 26 நிமிட வீடியோவில் கொஞ்சம் பட்டியலிடுகிறார். 50 வருடங்களுக்கு முன்பு போட்ட அதே ஆட்டத்தை இன்றைக்கும் ஆட நினைக்கும் மூடத்தனத்தை என்னெ,வென்று சொல்வது? துக்ளக் பொன்விழா நிறைவுக்கு கூட்டத்தில் நடிகர் ரஜனிகாந்த் போகிறபோக்கில் சொன்ன ஒரு விஷயம், சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமர் சீதை படங்களை இழிவுபடுத்திய விவகாரத்தை வேறெந்த செய்திப்பத்திரிகையும் வெளியிடவோ கண்டிக்கவோ முனையாதபோது துக்ளக் இதழில் புகைப்படங்களுடன் செய்தியும் வெளியிட்டுக் கண்டனமும் தெரிவித்தவர் சோ ராமசாமி  ஒருவர் மட்டுமே! திமுக அரசு துக்ளக் இதழைப் பறிமுதல் செய்து விஷயத்தை அமுக்கப்பார்த்ததில், அந்த இதழ் துக்ளக்கை reprint செய்து மறுபடி வாசகர்களிடம் கொண்டுசேர்த்த தைரியத்தை சிலாகித்துப் பேசியது, கழகங்களை ரொம்பவுமே சங்கடப்படுத்தியிருக்கிறது. என்னதான் மூடிமறைக்கப் பார்த்தாலும், முழுப்பூசணிக்காயை பத்திருபது சோற்றுப்பருக்கைக்குள் மறைத்து விட முடியுமா? 

பொதுவாக உலகெங்கும் நாத்திகர்கள் கடைப்பிடிக்கும் பொதுவான டெக்னிக், மதநம்பிக்கைகளைக் கேலி செய்வது, நக்கலாக கொச்சைப்படுத்துவது என்றால் இங்கே ஈவெரா நாத்திகத்துக்குப் பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி என்கிறமாதிரியான துவேஷம் மட்டுமே மூலதனம். மதநம்பிக்கைகளைக் கேலி செய்வது என்பது இழிவு படுத்துவது, வெறுப்பை விதைப்பது என்பது மிகவும் செலெக்டிவாக ஹிந்துமத நம்பிக்கைகள் கடவுளர் மீது மட்டுமே என்றால் இந்தமாதிரியான செலக்டிவ் அம்னீஷியா நாத்திகத்தை என்னவென்று மதிப்பது?

வீடியோ 48 நிமிடம் 

திராவிட சாயம் வெளுத்துப்போச்சு என்பது தெரிந்துமே கூட, இங்கே உள்ள பல ஊடகங்கள் விஷயத்தை எப்படி திரித்து ரஜனி ஈவெராவை  அவதூறாகப் பேசினாரென கூவுகின்றன பாருங்கள்! இந்த விவாதத்தில் வீரமணியை விமரிசிக்க முனைந்த கராத்தே தியாகராஜனை வீரமணி பேரை சொல்லவிடாமல்  குறுக்கே விழுந்து மறித்த நெறியாளரைக்  கொஞ்சம் பாருங்களேன்! தீயன்னா கழகம்போல இந்த சேனலும் மூஞ்சி சுருங்கித்தான் போய்க்கொண்டே இருப்பதும் வாடிக்கையாகிப் போன வேடிக்கை!    

ஈவெரா பெயரில் பிழைப்பு நடத்தி வரும் சில அமைப்புக்கள், ரஜனி மீது வழக்குப் பதிவதற்கு முனைந்திருக்கிறார்கள். ஆக்டிவ் அரசியல் செய்ய இன்னமும் தயங்குகிற ஒரு நடிகனை இவர்களே அரசியலுக்கு இழுத்துவந்து, கிரீடத்தையும் சூட்டி விடுவார்களோ என்று எனக்குப் பெரும் கவலை! எனக்கு ரஜனியை ஒரு நடிகனாகப் பார்ப்பதற்கே விருப்பம் இருந்ததில்லை! ஒரு அரசியல்வாதியாகப் பார்ப்பது என்றால்....?      

எது பொருளோ, எது பொருட்படுத்தப்பட வேண்டியதோ, அதைத் தயங்காமல் பேசுவோம்! கேள்வி கேட்போம்! என்கிற ஞானம் மட்டும் நமக்கு வந்துவிட்டால், அப்புறம் வேறென்ன வேண்டும்?  

மீண்டும் சந்திப்போம்.              
       

Thursday, April 25, 2019

செந்தமிழர் சீமான் உதவியாளர் செந்தமிழில் ...!

செந்தமிழர் சீமான் உதவியாளரோடு யாரோ ஒருவர் பேசுகிற ஆடியோ வைரலாகி வருசிறதாம்! நல்ல செந்தமிழில் இருப்பதாக பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கம் முகநூலில் பட்டியல் போட்டு சொல்கிறார். சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் ஒன்றிரண்டைக் கேட்டதில் திராவிடங்கள் என்ன செய்தனவோ அதையேதான் தமிழ்த் தேசியமும் பின்பற்றி வருகின்றன என்பது தெளிவாகப் புலப்படுகிறது.  


இந்தமாதிரி  அருவருப்பான உரையாடல்களுக்கு இந்தப் பக்கத்தில் இடம் கொடுத்திருப்பதற்காக உண்மைலேயே வருத்தப்படுகிறேன். ஆனால் எப்படிப்பட்ட சீரழிவில் சிக்கி இருக்கிறோம் என்பதைச் சொல்வதற்காக, இதற்கும் இடம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது.
   
#நாடகத்தமிழ் என்று சங்கரதாஸ் சுவாமிகளும் அவரது அடி ஒற்றி வந்தவர்களும் வளர்த்த தமிழும்  வள்ளிதிருமணம் மேடை நாடகமும்  இவர்களிடம் சிக்கிக் கொண்டு என்ன பாடு படுகிறது என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!


ஆடியன்ஸ் ரசித்துச் சிரிக்கிறார்கள் என்பதற்காக இவ்வளவு கொச்சையாகப் பேசவேண்டுமா என்ன? குற்றம் அவர்களிடம் இல்லை, இதையெல்லாம் சகித்துக் கொண்டு அல்ல, ரசிக்கவே பழகிவிட்ட நம்மிடமல்லவா இருக்கிறது! எப்போது இதை நாம் புரிந்துகொள்ளப் போகிறோம்?

செய்திகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை அறியாமல் அப்படியே நம்பிவிடுவதோ, ஆவேசப்படுவதோ இல்லாமலிருக்கப் பழகுவது முதல்படி!  #திராவிடமாயை #திராவிடப்புரட்டு களிலிருந்து முழுமையாக விடுபடுவது அடுத்த  படி!  
பிரதமர் நரேந்திரமோடியுடன் நடிகர் அக்ஷய் குமார் நடத்திய நேர்காணலின் வீடியோ இப்போதுதான் கிடைத்தது. இதன் தமிழ்வடிவத்தை இன்று இன்னொரு வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தென்ன என்பதைச் சொல்லுங்கள்!    





இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)