அண்ணா வழியில் இன்றும் நடப்பது அதிமுகவா? திமுகவா? இப்படி ஒருதலைப்பில் நியூஸ் 7 சேனலில்
விவாத அக்கப்போர் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. சி என் அண்ணாதுரைக்கு அப்படி என்ன கொள்கை, வழி என்றெல்லாம் இருந்ததாக சும்மா கூவிக் கொண்டிருக்கிறார்கள்? இதுமாதிரி நிறைய போலித்தனங்களை காலமே கழித்துவிடும் என்பதில் ஈவெரா அண்ணாதுரை போன்ற அரசியல் பிம்பங்கள் காலாவதியாகிப் போய்விட்டன என்பது இன்னமும் இவர்களுக்கெல்லாம் தெரியாதா? தெரியாத மாதிரி நடிக்கிறார்களா?
விவாத அக்கப்போர் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. சி என் அண்ணாதுரைக்கு அப்படி என்ன கொள்கை, வழி என்றெல்லாம் இருந்ததாக சும்மா கூவிக் கொண்டிருக்கிறார்கள்? இதுமாதிரி நிறைய போலித்தனங்களை காலமே கழித்துவிடும் என்பதில் ஈவெரா அண்ணாதுரை போன்ற அரசியல் பிம்பங்கள் காலாவதியாகிப் போய்விட்டன என்பது இன்னமும் இவர்களுக்கெல்லாம் தெரியாதா? தெரியாத மாதிரி நடிக்கிறார்களா?
என்னதான் இணையத்தில் அதிகநேரம் இயங்கி கொண்டே இருந்தாலும் இப்படி ஒரு மாத இதழ் வெளிவருகிற செய்தி எனக்கு இன்றைக்குத் தான் தெரியவந்தது. அட்டைப்பட நையாண்டி பற்றித் தனியாக எதையும் சொல்வதாக இல்லை! ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி அரசியல் செய்த மாதிரியே இனிமேலும் செய்தால், முதல்வர் நாற்காலி எப்போதுமே கிடைக்காது என்ற ஞானம் வந்து விட்டதால் தானே பாவம், இசுடாலினுக்கும், பிரசாந்த் கிஷோர் மாதிரியான data manipulation செய்யத் தெரிந்த வித்தைக்காரரிடம் போய், ஒண்ட வேண்டி வந்ததே!
CAA குறித்த இந்தப்பகிர்வைப் படித்ததும், Robert Frost கவிதை ஒன்றை இங்கே பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது. மேலே உள்ள பகிர்வு இன்னும் செப்பம் செய்யப் படவேண்டும்.
முதலில் ஆரம்பித்த தலைப்புக்கே வருவோம்! அண்ணா வழியில் இன்றும் நடப்பது அதிமுகவா? திமுகவா?
இரண்டுகட்சிகளும் இல்லை! அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தும் ஆம் ஆத்மி கட்சி தான்!
எதனால் சொல்கிறீர்கள்?
அண்ணா (ஹஸாரே)விடம் இருந்து பிரிந்து தனிக்க!ட்சி ஆரம்பித்தபிறகு அண்ணாவை அவர் தொந்தரவு செய்வதே இல்லை! அண்ணாவுக்கு நாமம் போடுவதும் இல்லை! அதனால் தான்!
மீண்டும் சந்திப்போம்.
// அண்ணா வழியில் இன்றும் நடப்பது அதிமுகவா? திமுகவா?// அண்ணா சாலையிலா அல்லது அண்ணா நகரிலா அல்லது அண்ணா சமாதி அருகேவா?
ReplyDeleteகௌதமன் சார்!
Deleteஇப்படியெல்லாம் சந்தேகம் வருமென்றுதான் கழகங்கள், தாங்கள் போகிற வழியெல்லாம் அண்ணா வழிதான் என்று சொல்லிக் கொள்கிறார்களோ? முதலில் அந்த அண்ணாதுரைக்கே தான் போகும் வழியென்ன என்பது தெரிந்திருந்ததா என்பதல்லவா 99 ரூபாய் நோட்டு மாதிரியான கேள்வி!
அண்ணா வழி, தம்பி வழி, அண்ணாதம்பி வழி - இப்படீல்லாம் ஏதேனும் இருக்கா என்ன?
ReplyDeleteஇந்த ஊடகங்களுக்கு வேற வேலை இல்லை
நெ.த.சார்! உங்கள் கேள்விக்கு தங்கப்பதக்கம் படத்தில் சோ காமெடியிலேயே பதில் சொல்லியிருக்கிறார் தெரியும் இல்லையா? :-)))
Delete