சென்னையில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்று ஒரு கூத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் தலைமையில். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற புதுப் பெயரில் நேற்றைக்கு அரங்கேற்றியிருக்கிறார்கள். பழைய கள் தான்! ஆனால் புது மொந்தையாம்! அதில் இசுடாலின் வாய்ஸ் கொடுத்ததை முந்தைய பதிவில் சுட்டி கொடுத்திருந்தேன். இருந்தாலும் இங்கேயும் ஒரு தொடர்ச்சிக்காக. ஹிந்து என் ராம் பேசுவதை இந்த 25 நிமிட வீடியோவில் பார்க்கலாம்.
இங்கே CAA குறித்து எதிர்க்கட்சிகள்,உதிரி அமைப்புக்கள், இடதுசாரிக் குறுங்குழுக்கள் எல்லாமாகச் சேர்ந்து திரும்பத் திரும்ப ஒரே பல்லவி, பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். CAA என்பது அண்டைநாடுகளில் இருந்து கொடுமைக்குள்ளாகி இங்கே வந்த அகதிகளுக்கு, சுமார் 38000 பேருக்குக் குடியுரிமை வழங்குவதைப் பற்றி மட்டுமே. எந்த ஒரு இந்தியக்குடிமகனுக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிற போதிலும் இங்கே திமுக, காங்கிரஸ் மற்றும் உதிரிகள் தொடர்ந்து பொய்யான பரப்புரை செய்து கொண்டே இருக்கின்றன. அரசியல் சாசனத்துக்கு எதிரானது, அடிப்படை உரிமைகளில் கைவைக்கிற மாதிரி இருக்கிறது, சட்ட விரோதம் என்று முதலில் இருந்து என் ராம் ஆரம்பிப்பதன் உள்நோக்கம் என்ன? நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மூன்றில் இருபங்குக்கும் அதிகமான மெஜாரிட்டியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை சட்டவிரோதம் அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றால் அதைக் கேள்விக்குள்ளாக்கவேண்டிய இடம், தங்களுடைய அச்சம் நியாயமானது என்பதைஎடுத்து வைக்க வேண்டிய இடம் நீதிமன்றம். தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவதில் அல்ல என்பது என் ராம் மாதிரியான இடடதுசாரித் தறுதலைகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அரசுக்கு எதிராக எதையாவது கிளப்பிக் கலவரத்தைத் தூண்டுவது ஒன்று தான் அவர்களுடைய புரட்சிகரமான நடவடிக்கை! பாமரனுக்கும் புரிகிற மாதிரி ஒரே வார்த்தையில் சொல்வதானால் அராஜகம்! வன்முறைக் கலவரம்!
சரி, அரசியல் கட்சிகள், சார்புநிலை எடுக்கும் உதிரிகள் இவர்கள்தான் இப்படியென்றால், இவர்கள் சொல்கிற திகில் சித்திரத்தை அப்படியே நம்பித்தான் இஸ்லாமியர்கள் ஷாஹீன் பாக், வண்ணாரப்பேட்டை இப்படிப்பல இடங்களிலும் கலவரத்தீ உண்டாகிற அளவுக்குப் போராட்டங்களில் இறங்கி இருக்கிறார்களா? இல்லை என்பது தெளிவு. அவர்கள் ஒரு தெளிவான அஜெண்டாவுடன் இயங்குகிற மதக் குழுக்களின் பின்னால் அணி திரள்கிறார்கள். பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகளுடைய முகங்கள் வெளியே அவ்வளவாகத் தெரிவதில்லை.
கழகங்களுக்கு இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுடைய ஆதரவை அப்படியே பெறவேண்டும் என்கிற நோக்கம் அப்பட்டமானது. பெரும்பான்மையினரை ஜாதி ரீதியாகப் பிரித்து வாக்குகளைப்பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை, இப்படி வெளிப்படையாக ஆதரவுக் கரம் நீட்டப்படுகிறது.
இங்கே தேசநலன், ஜனநாயகம், உண்மை பேசுவது,மக்கள் நலன் சார்ந்து செயல்படுவது இவையெல்லாம் காற்றில் பறக்கவிடப்படுவது தொடர்ச்சியாக இந்த தேசத்தை அரித்துக் கொண்டே வருகிறது. இங்கே ஜனங்களுடைய குரலை எதிரொலிக்கப் பிரதிநிதிகளும் இல்லை! ஜனங்களே நேரடியாகப் பங்குகொள்ளும் விதமும் ஆரம்பத்தில் இருந்தே இல்லை. ஜனங்கள் சும்மா இருக்கிறார்களே என்று அலுத்துக்கொள்வகிலும் பொருளில்லை.
எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்? மீண்டும் சந்திப்போம்.
ஆங்காங்கே உதிரி உதிரியாய் விழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தமாய் விழித்துக் கொள்ளவேண்டும்!
ReplyDeleteகருணாநிதியின் கனல்கக்கும் வசனத்தில் குறவஞ்சி படத்தில் ஒரு பாட்டு வரும் ஸ்ரீராம்!
Delete" ஒனக்கும் புரியுது எனக்கும் தெரியுது சிங்கி - ஊருக்குப் புரியலைடி சிங்கி" அந்த மாதிரியா?