தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிற போர்வையில் இடதுசாரிகளும் ஒருசில இஸ்லாமிய அமைப்புக்களும் சேர்ந்து ஆரம்பித்திருக்கிற ஒரு அமைப்பு சென்னையில் நடத்திய CAA எதிர்ப்பு அரசியல் மாநாடு நடத்தியதில் விசிகவின் திருமாவளவனும், மதிமுகவின் வைகோவும் கலந்து கொள்ளவில்லை. திமுக சின்னத்தில் நின்று ஜெயித்த எம்பி ரவிக்குமாரும், மதிமுக பேச்சாளர் மல்லை சத்யாவும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. திமுகவின் இசுடாலின் கலந்து கொண்டதால் கூட்டம் திரட்டப்பட்டதாகவும் தெரிகிறது. ஹிந்து என்.ராம் ஸ்பெஷல் பேச்சாளர்! ரஜனிகாந்தைப் பற்றி என்.ராம் பேசியதைத் தொடர்ந்து சிலவிஷயங்கள் பின்னணியில் அரங்கேறி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்றும் கூட சொல்வதில்லையா? அதுபோல இந்து தமிழ்திசை தளத்தில் பாஜகவை கழற்றி விடுகிறாரா ரஜனி என்ற தலைப்போடு இன்று ரவீந்திரன் துரைசாமி பேட்டி! இங்கு எதையும் நான் ஊகமாகவோ பூடகமாகவோ சொல்ல முற்படவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!
இதற்கெல்லாம் தமிழருவி மணியன் போன்ற ஒருத்தர் தான் விளக்கம், பொழிப்புரை சொல்ல முடியும். ஆனால் முந்தைய பேட்டிகளில் ஏற்பட்ட சந்தேகத்தை பாலன்ஸ் செய்வதற்கு ரஜனிகாந்த் முயற்சிப்பதாகச் சொல்வதும் கூடத் தேவையே இல்லாத ஆணிதான்!
பொருட்படுத்தக் கூடிய அளவுக்கு இங்கே தமிழகத்தில் பிஜேபி களத்திலேயே இல்லை. ஆனால் திமுக அதிமுக அணிகளில் இருக்கும் கட்சிகளுக்கு ரஜனிகாந்த் ஒரு ஆப்ஷன் கொடுத்து, மூன்றாவது அணியை உருவாக்க நினைக்கிறார் என்பதை ரவீந்திரன் துரைசாமி கொஞ்ச காலமாகவே சொல்லிவருகிறார்.
குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தால் என்னவாகும் என்பது மாதிரியான ஆராய்ச்சி இங்கே டிவி சேனல் விவாதங்களில் பரபரப்பான விவாதமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில் செமகாமெடியாக இருக்கிறது. ரஜினிகாந்தை விமரிசித்துக் கோவையில் ஒரு அதிமுக கூட்டத்தில் பேசிய இயக்குனர் ஆர். சுந்தர ராஜனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று ஏகப்பட்ட வதந்தீ!
2020 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்படியாக! மார்ச் மாதம் எப்படியோ?
மீண்டும் சந்திப்போம்.
குருட்டுப் பூனை விட்டம் வரைக்கும் போனதே...
ReplyDeleteஇதில் குறுக்கே தாவுவது எப்படி!..
!?...
வாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteவிட்டம் வரை போனதா என்ன? சரி, அப்புறம் என்ன ஆகும்?
50 வயது தொடங்கும் நினைப்பதில் பாதி தான் பேச வேண்டும். 60 வயதில் கால் வாசி தான் பேச வேண்டும். 70 ல் 10 சதவிகிதம் தான் பேச வேண்டும். சுந்தர்ராஜன் நல்ல உதாரணம்.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Deleteசுந்தரராஜன் பேசியதை நான் கேட்கவில்லை. ஆனால் ரஜனி ஆதரவாளர்கள், அந்தநாளைய கருணாநிதி, MGR ஆதரவாளர்கள் தரத்தில்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.