அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடைய பேச்சோ அரசியலோ எனக்குப் பிடித்தமானது அல்ல தான்! ஆனால் நரேந்திர மோடி அமெரிக்காவுடன் ஒரு இணக்கமான உறவையே விருப்புவதில், டொனால்ட் ட்ரம்புக்கும் பிடித்தமானவராக மோடி ஆகிப்போனது இங்கே நிறையப்பேருக்குக் கண்ணை உறுத்துகிறது. கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுக்கு ரொம்பவமே அது உறுத்துகிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை! அதற்குமுன்னால் வேறொரு முக்கியமான செய்தியைப் பார்த்துவிடலாம்!
According to people familiar with the matter, the ship, intercepted on February 3, is undergoing a detailed inspection at Kandla Port in Gujarat. They added that the Defence Research and Development Organisation (DRDO), which has been examining the ship, is sending a second team of nuclear scientists this week to check the large autoclave on board என்று நான்குநாட்களுக்கு முன்னால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தகவல் சொல்கிறது வேறுசில ஊடகங்களிலும் வந்திருக்கக் கூடும். ஆனால் ஷாஹீன் பாக், வண்ணாரப்பேட்டை போன்ற ஆகாவரிக் குப்பைகளுக்குக் கொடுக்கும் கவனம் இதுமாதிரி நாட்டுப்பாதுகாப்பு சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு கிடைப்பதில்லையே! இப்போது மேலே வீடியோவில் ரிஷப் குலாடி நடத்துகிற விவாதத்தில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. என்னதான் உலகநாடுகளுடன் நல்லுறவைப்பேண இந்தியா விருப்பம் கொண்டிருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் நம் கையே நமக்குதவி என்பதுதான் யதார்த்தம். FATF விவகாரத்தில்கூட பாகிஸ்தான் பயங்கர வாதத்தை இந்தியாவுக்கு மட்டுமல்ல வேறுபலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது தெரிந்திருந்தாலும், பாகிஸ்தானைக் கறுப்புப் பட்டியலில் வைக்காமல் இருப்பது, காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்க முடியுமா எனக்காத்திருப்பது, இப்போது சீனாவிலிருந்து கள்ளத்தனமாக கண்டம்விட்டுக்கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்பதற்கான பாகங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருப்பது பற்றியும் கூட வெளியே ஒரு அசைவையும் காணோம்.
டொனால்ட் ட்ரம்ப் வருகிற 24 ஆம் தேதி திங்களன்று இந்தியா வரவிருப்பதும், ஒரிஜினல் காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு வருகைதரவிருப்பதும் சதீஷ் ஆசார்யாவுக்குப் பொறுக்கவில்லை! அதற்குக் காரணம் சொல்லக் கூட முடியவில்லை! எந்தச்சுவர் தடுக்கிறதாம்?
கார்டூனிஸ்ட ஏதோ சுவரை வைத்து இப்படி Make in India திட்டத்தைப் பழிப்பானேன்? காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெரும் தொழிலதிபர்கள் சம்பாதித்ததெல்லாம் சலுகைகளில், வரி ஏய்ப்பில் தானே! இந்தத் தொழிலதிபர் ஆராய்ச்சிக்காகப் பெரும்பணத்தை முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்களாம்? எதற்கெடுத்தாலும் சீன இறக்குமதியையே குறைசொல்பவர்கள் யோக்கியதை என்னவாம்? சீன இறக்குமதியையே நம்பியிருக்கிற இந்தியத் தொழில்துறை கரோனா வைரஸ் விவகாரத்தால் 17.3% சரிவைச் சந்திக்கும் என்று தகவல்கள் வருகிறதே!
டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வரும்போதே நிறையப் பொருமலோடு தான் வருகிறார். இந்தியா அமெரிக்காவுக்கு உரிய கவனத்தைத் தரவில்லை. எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று வாஷிங்டனில் டீசர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். அவர் எதிர்பார்க்கிற அளவுக்குப் பெரிய அளவில் அமெரிக்க ஆயுதங்களை வாங்க இந்திய அரசு தயங்குகிறதோ என்னவோ? ஆனால் இந்திய அரசு வெளியுறவு விவகாரங்களை மிகக்கவனமாக கையாண்டு வருகிறது, நாட்டின் நலன்கள் பாதுகாக்கப் படுகிறது என்பது ஆறுதல்.
ஷாஹீன் பாக் காமெடி!
வீடியோ 52 நிமிடம்
AIMIM கட்சியின் வாரிஸ் பத்தான் இந்தியாவின் 15 கோடி இஸ்லாமியர்கள் 100 கோடி ஹிந்துக்களை சமாளிப்பார்கள் என்று பீற்றிக் கொளகிறார். டில்லி ஷாஹீன் பாக், சென்னை வண்ணாரப்பேட்டை கலகங்களில் அரசு பொறுமையாக இருப்பது இவரைப்போன்றவர்களுக்குக் கேலியாகத்தான் இருக்கும்! ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் இரு வழக்கறிஞர்களை நியமித்து அனுப்பியதற்கு என்ன பலன் கிடைத்ததாம்?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment