Friday, February 7, 2020

சின்னச் சின்னதாய்! கொஞ்சம் #அரசியல்

நம்மூர் அரசியல்வாதிகள் கோமாளிகளாகவும் கொடூர வில்லன்களாகவும் எந்தெந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாதபோது, நமக்கு மட்டும் அந்த மர்மம் அவ்வளவு சுளுவாகப் பிடிபட்டு விடுமா? இடதுசாரிகளுக்கு திடீர் திடீரென்று வந்துவிடும் ஞானோதயத்தை முதலில் பார்த்து விடலாமா?


இடதுசாரிகளுக்கு இப்படி வரும் திடீர் ஞானோதயம் மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம் தெருவுக்குத் தெரு ஒரே மாதிரி இருக்காது என்பது ஒரு காலத்தில் சர்வதேசியம் பேசியவர்களுடைய சோகம்!
வீடியோ 31 நிமிடம் தான்! முந்தைய இருபதிவுகளில் சேகர் குப்தா ஒரு முக்கியமான கேள்வியை எடுத்துக் கொண்டு விடையை எங்கே தேடுவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்ததை வாசித்து இருந்தால், இங்கே நரேந்திர மோடி ஏன் தொடர்ந்து ஜெயிக்கிறார், காங்கிரஸ் தன்னுடைய அடையாளத்தை தொலைத்துவிட்டு, எழுந்திருக்கமுடியாமல் தடுமாறுவது ஏன், இடதுசாரிகள் எப்படிக் கரைந்து காணாமலேயே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கும், தேசியம், தேசியவாதம் என்பது இன்று வலதுசாரித் தன்மையோடு உலகளாவிய அளவில் வளர்ந்து வருவது ஏன் என்பதற்குமான விடைகளைக் கண்டறிவது கடினமானது அல்ல! கேள்வி கேட்டாலும் பிடிக்காது, பதிலென்ன என்பதைத் தெரிந்துகொள்ளப் பொறுமையும் இருக்காது என்பதை எப்போது விட்டொழிக்கப் போகிறோம்?  


2012 டிசம்பரில் அரவிந்தன் நீலகண்டன் எழுதி கிழக்கு வெளியீடாக வந்திருக்கிற புத்தகம்  பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்  அச்சுப் புத்தகமாக ரூபாய் 350/-  இப்போது அமேசான் கிண்டில் மின்னூலாக ரூபாய் 210/-  பற்றிய சிறு விமரிசனக்குறிப்பை இன்று பார்த்தேன். கிழக்கு வெளியீடுகளை வாங்குவதில் மனத்தடை, தயக்கம் இன்னும் நீடிப்பதால் என்னுடைய வாசிப்புப் பட்டியலில் இந்தப் புத்தகம் இல்லை. 


ஹிந்து நாளிதழ் கூட அவ்வப்போது வாசகர் கருத்தாக இப்படி படம் வரைந்து போட்டுவிடும்! தினத்தந்தி கூட சமீப நாட்களில் ரஜனிகாந்த் பேசுவதைத் தலைப்புச் செய்தியாக்குகிறதே! கவனிக்கிறீர்களா? மீம்ஸ் போடுகிறவர்களுக்கு இப்போது பிரசாந்த் கிஷோர் தான் ஹாட் கன்டென்ட் !

    
இசுடாலின் இப்படிக் கதறுகிறவரை காமெடி கலாட்டா தொடரும் போலத்தெரிகிறதோ!! 


அதெல்லாம் சரி! கிச்சன் கேபினெட் கீழே பழனி தைப்பூசப் போஸ்டருக்கு  என்ன முடிவெடுக்கப் போகிறதாம்?  

   
பாலச்சந்திரன் சு 
இன்று விற்பனைக்கு வந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ரஜினியின் அரசியல் வருகை எப்படி இருக்கும் என்று சுமார் ஒரு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஒரு சர்வே முடிவுகளில் ஒரு பகுதியை மட்டும் சுருக்கமாக வெளியிட்டுள்ளார்கள். அதாவது சர்வே எடுத்தவர்கள் சர்வே அறிக்கையின் முடிவுகளை குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு கொடுத்துள்ளனர். சில டேட்டாக்களை மட்டும் சர்வே குழுவினர் குமுதம் ரிப்போர்ட்டருக்கு வழங்கினார்கள் .
ரஜினி என்று கட்சி ஆரம்பிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னமும் வராத சூழலிலேயே ரஜினிக்கு 13.5% வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று 80% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் மத்தியில் இந்த வரவேற்பு 90% உள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் நீங்கலாக ஏனைய 34 மாவட்டங்களில் ரஜினிக்கு பேராதரவு உள்ளது. கடலோர மாவட்டங்களிலும், செமி அர்பன் பகுதிகளிலும், ரஜினிக்கு பெரிய வரவேற்பு காணப்படுகிறது.
கமலுக்கு வாக்களித்தவர்கள் அந்த வாக்குகளை அப்படியே ரஜினி பக்கம் திருப்புகிறார்கள் என்று சர்வே முடிவுகள் சொல்கின்றன.
திமுக, அதிமுக என்று தமிழக அரசியலில் அம்பது வருடங்களுக்கும் மேலாக பழம் தின்று கொட்டை போட்டுவரும் இரு பழம் பெருச்சாளிக்கட்சிகளும் , ரஜினி வரவால் தேர்தலில் பலத்த அடிவாங்கும் என்று சர்வே முடிவுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
லயோலா கல்லூரியில் பயின்று , மூளை சலவை செய்துகொண்ட தமிழக தொலைக்காட்சி நெறியாளர்கள் நாலு பேரும் எவ்வளவு தில்லுமுல்லுகளை செய்தாலும் , மக்கள் தமிழகத்தில் மிக தெளிவாக உள்ளனர். மீடியாக்கள் செய்யும் பொய்ப்பிரச்சாரங்களுக்கு மக்கள் சாவு மணி அடிப்பார்கள் என்பது மே 2021 இல் எல்லோருக்குமே புரியும்.
இது இன்றைக்கு முகநூலில் பார்த்தது ..படித்தது!. என்வரை இதை நம்பமுடியவில்லை லிஸ்டில் வைத்திருக்கிறேன்.ஏன் என்றால் நான் திமுகவோ இசுடாலினோ இல்லை!

மீண்டும் சந்திப்போம்.    

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)