தமிழருவி மணியன் ஒரு நல்ல பேச்சாளராக இருக்கலாம்! 50 ஆண்டுகளாக அரசியல் களத்தில் எங்கெங்கோ யார்யார்பின்னாலோ நின்றிருக்கலாம். காந்தி மக்கள் இயக்கம் என்று தனிக்கடை போட்டு அதற்குத் தலைவராகக் கூட இருக்கலாம்! ஆனால் இதெல்லாம் சேர்ந்து இவரை பெரிய அரசியல் வித்தகர் என்றாக்கிவிடாது என்பதை நேற்று ஒருநாள் அனுபவமே கற்றுக் கொடுத்திருக்கும்! நுணலும் தன்வாயால் கெடும் என்கிற அனுபவமொழிக்கேற்ப இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டி தமிழருவி மணியன் வெற்றிகொண்டான், நெல்லை கண்ணன் மாதிரி மேடைப்பேச்சாளராக மட்டுமே இருக்க லாயக்கானவர், இரண்டாவது, மூன்றாவது வரிசைத் தலைவராகக் கூட வரமுடியாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
எங்கிருந்து என்னமாதிரி , டோஸ் விழுந்ததோ, மனிதர் புதியதலைமுறை சேனலுக்கு இப்படி 8 நிமிடப்பேட்டி கொடுத்ததில் கூட, தன்னுடைய அதிகப்பிரசங்கித் தனத்தை புரிந்துகொண்டமாதிரித் தெரியவில்லை. ஆக, ஈறைப் பேனாக்கி, பேனைப்பெருமாளாக்கும் வியாபாரம் செய்கிற ஊடகங்களுக்கு ஒரு பரபரப்பான செய்தியாக விவாதமாகக்கிடைத்தால் விடுவார்களா?
நியூஸ் 7 சேனலில் நேற்றைக்கு கேள்விநேரம் நிகழ்ச்சி தமிழருவி மணியனை, வைத்துச் செய்கிற விவாதமாக ரஜினிகாந்தையும் கொஞ்சம் பங்ச்சர் செய்கிற மாதிரி, ஒரு 55 நிமிடம்! ஊடகங்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
பாட்டாளி மக்கள் கட்சியின் ஜி கே மணி, இப்போது தாங்கள் அதிமுக கூட்டணியில் இருப்பதாகச் சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாலும், தமிழருவி மணியன் loose talk இன்னும் சிலகாலத்துக்குப் பேசுபொருளாக இருக்கும். அதற்குமேல் மறக்கடிக்கப்பட்டுவிடும்! அவ்வளவுதானே!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment